அவளை மறக்கத்தான்

பாகம் 4 அவளை மறக்கத்தான்.

பிரசாத் தன் போர்ஷே காரை எடுத்துக் கொண்டு சரியாக மாலை 7 மணிக் கெல்லாம் வந்துவிட்டான்.

 

வெளியே  இருந்து ஹார்ன் அடிக்காமல்  காரை போர்டிக்கோவில் நிறுத்தி விட்டு, உள்ளே வந்தான். நீலகலரில்  விலையுயர்ந்த   சூட் போட்டு இருந்தான்.அவன் போட்டுயிருந்த பர்ப்யூம் மணம் ஹாலில் பரவியது.

 

மாடியிலிருந்து Lilac கலரில் ( Lavender)

ஈவ்னிங் கெளன் போட்டுக் கொண்டு இறங்கினாள்.

 

அதை அவளை போட வைப்பதற்குள் சுதாவிற்கும்  மதுவிற்கும் போதும் போதும் என்றாகி விட்டது.

 

ஓவர் சைஸ்டு டாப்பும், ஜீன்னும்  காதில் பெரிய வளையம் போட்டு இருந்தவளை பார்த்து அம்மாவும், அண்ணியும்    முகம் சுளித்தனர்.

 

அம்மா அவளிடம், “என்னம்மா இந்த உடை போட்டு இருக்கிறாய். எங்களுடன் வரும் போதுதான் இந்த மாதிரி வருவாய். இப்போதும் கூடவா.”

அண்ணி தன் பங்குக்கு  “ஈவினிங் கெளன் போட்டு கொஞ்சமாவது மேக்கப் போட்டு போ..”

 

அவளே பரபரவென்று வார்ட்ரோப்பில் தேடி, இந்த கெளளை எடுத்துக் கொடுத்தாள் .அது மதுவே அவளுக்கு வாங்கி கொடுத்தது.  உனக்கு உன்   அண்ணன்  ஆசையாக டிசைனர் கிட்ட சொல்லி   தைத்தது.

“அய்யோஅண்ணி..என்னை சின்ன பொண்ணு மாதிரி டிரீட் பண்ணாதீர்கள்., இவ்ளோ காஸ்ட்லி டிரஸ் வேண்டாம். நான் கேஸுவலா இருக்கேன்.”

 

சுதா   ஒரு  அதட்டல்  போட்டார்.

 

“உன் அண்ணி பேச்சை  கேள். பிரசாத் எப்படி வருவான் என்று பாரு.அவனுக்கு சரிசமமா நீ இருக்க வேண்டாமா . போட்டு இருக்கிற உடை தான் நம்மை உயர்த்தி காட்டும். “

சரி. இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது”  என்று அந்த உடையை போட சம்மதித்தாள்.

 

அந்த கெளனுக்கு ஏத்த மாதிரி அணிகலன் களை எடுத்து போட்டுக் கொண்டாள்.

மதிவதனி தனக்கு மேக்கப் போட்டுக் கொள்வதற்காக  பியூட்டிஷின் கோர்ஸ் படித்தவள்.

ஜெனிக்கு அளவா மேக்கப் போட்டு, அழகுக்கு அழகு சேர்த்தாள்.

 

மதிக்கு எப்போதும், ஜெனியின் கண்கள், நீண்ட  வளைந்த புருவங்கள் மீது  பொறாமை  இருக்கும். எவ்வளவு அழகு.”என்று ஏக்கப்படுவாள்.

 

அவளை பார்த்ததும் சுதா  கட்டி பிடித்து  நெற்றியில் முத்தமிட்டார்.

 

அம்மாவின் அணைப்பு அவளுக்கு இதமாக இருந்தது. இதுவரை இப்படி அணைத்ததில்லை.

 

+2 வில் ஸ்கூல் பர்ஸ்ட் வந்த போதும் சரி கல்லூரியில்  கோல்ட் மெடல் வாங்கிய போதும் சரி.  அவளை இப்படி அணைத்ததில்லை.

அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக பட்டதும் இல்லை:

 

அம்மாவிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்.

 

ராஜம் மாமிடருந்த நெருக்கம் கூட அம்மாவிடம் இருந்தில்லை.

 

தன் மகளுக்கு என்ன பிடிக்கும், என்ன தேவை , எதெல்லாம் பிடிக்காது என்று  கூட தெரியாது.

 

தன் அம்மாவிடம், “அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்னால் பிரச்சனை வரக்கூடாது என்பதால் போகிறேன். .ஆனால்,அவர் என்ன பேசப் போகிறார் என்பதை  பொறுத்து தான் என் செயல்பாடு இருக்கும்.” என்று சுதாவை எச்சரிக்கை செய்யும் விதமாக சொல்லி விட்டு அவனுடன் செல்ல  தயாரானாள்.

 

பிரசாத் உள்ளே வந்ததும்  இவளை பார்த்து பிரம்பித்தான் .

 

வாவ். …வாட் ஏ பியூட்டி..

 

“உன் டிரஸ் எனக்கு ரொம்ப மேட்சாகிறது .”

பியூட்டிபுல். 

 

‘அங்கிள் இல்லையா ஆண்டி” என்று சுதாவிடம் கேட்க

“இல்லப்பா. அவர் கிளப்புக்கு போய் இருக்கிறார்’.

 

“என் மாமாவையும் காணோம்.’

 

“அண்ணா   அவர் ஜிம்மில் இருக்கிறார்”

 

ஓகே.  ஜெனியிடம் “லெட்ஸ் கோ”

என்றான்.

 

தன் காரின் கதவை திறந்து,  இவள் ஏறியதும் சாத்தினான்.

 

அம்மாவுக்கும், அண்ணிக்கும் கையசைத்து விட்டு கிளம்பினர்.

அவர்கள்   கார்  போனதும்,பெருமூச்சு விட்டபடி “ ஏண்டி  இவள் நல்லபடியா  உன் அண்ணனிடம் நடந்து கொள்வாளா. …..?

 

“என்ன அத்தை இப்படி சொல்லிடீங்க. அவர் எத்தனையோ பிஸினெஸ் டீல் நல்லபடியா முடித்து இருக்கிறார். கோடி கணக்கில் புராஜெக்ட் நடந்துட்டு இருக்கு. இவள் சின்னப் பெண். இவளை சமாளிப்பதா  கஷ்டம். பாருங்களேன். வெட்கப்பட்டு கொண்டு தான் வருவாள்.அதெல்லாம் என் அண்ணன் பார்த்துக் கொள்வார்.”

 

“எதோ நல்லபடியா முடிந்தால், தட புடலா ஒரு கல்யாணத்தை முடித்து விடலாம்.”

 

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ராஜம்மா  கடவுளின் கணக்கு  என்னவோ என்று  நினைத்தபடி,அவர்களை சாப்பிட அழைத்தாள்.

 

ஜ.டி.சி. சோழாவில் கார் நின்றது.

மெர்காரி கஃபேயில் டேபிள் ரிசர்வ் செய்து இருந்தான்.

 

பிரசாத், லட்சக்கணக்கான   விலை உயர்ந்த தனது  கை கடிகாரத்தை பார்த்தபடி ஆர்கானிக் பிளாக் காபியை சுவைத்தான்.

.எதிரே ஜெனி விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்.

 

 அவளிடம்” நான் ஏன் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று தெரியுமா”…….?

“ உன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். என் ஸ்டேட்டஸ் என்னவென்று உனக்கு காண்பிக்க வேண்டும்”.

 ஜெனி அதிர்ந்தாள்.

 

 ‘எனக்கு அதில் விருப்பமா என்று கூட 

 இவன்  கேட்கவில்லையே’….

.’இவன் ஸ்டேட்டஸ் எனக்கு எதற்கு’ …? 

என்ன   இவன் என்பது போல பார்த்தாள்.

“ இப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் கேட்பது கூட ஏதோ உன்னை பிடிச்சிருக்கு என்ற சாதாரண காரணத்துக்காக மட்டுமல்ல. உன்னோட அப்பாவுக்கு பெங்களூர்ல இருக்க அந்த ரியல் எஸ்டேட் லேண்ட், என்னுடைய புது சாப்ட்வேர் ப்ராஜெக்ட்  பார்க்  பக்கத்துல இருக்கு. 

நாம இணைஞ்சா அந்த இண்டஸ்ட்ரி நம்ம கைக்கு வரும். யோசித்துப் பார். இது சாதாரண கல்யாணம் இல்ல. இது ஒரு ஸ்டிராஜெடிக் மெர்ஜர். 

 

 ஜெனி “எல்லாத்தையும் பிசினஸா பார்க்கக் கூடாது பிரசாத். சில விஷயங்களுக்கு உணர்வுகள் முக்கியம்.”

 பிரசாத் சிரித்துக் கொண்டே “உணர்வுகள் …..அது உன்னோட வளர்ச்சியை தடுக்கும் .”

ஜெனி, “ எனக்கு இதில் விருப்பமில்லை என்று தைரியமாக அவன்  கண்களை பார்த்து சொல்ல, 

அவனோ “விருப்பம் லட்சியம் இதெல்லாம் மிடில் கிளாஸ் பசங்க பேசுற வார்த்தைங்க ஜெனி,

 அதற்குள் அவனது ஸ்டேட்டஸ் உயர்த்தி காட்டுற பணக்கார நண்பர்கள் வந்தார்கள். 

ஒவ்வொருத்தரையும் அறிமுகம் படுத்தினான்.  அப்பா சேர்த்து வைத்த சொத்தில் பணக்கார போர்வையை  போர்த்திக் கொண்டவர்கள் .

இவளைப்

 பார்த்ததும் வாவ் பியூட்டிஃபுல் என்றனர்.

 

ஜெனிக்கோ முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது. 

எல்லோரும் கோடிகளைப் பற்றி பேசினார்கள். தங்களுடைய பராக்கிராமங்களை பட்டியலிட்டுக் கொண்டார்கள்.அனாவசியமாக பிரசாந்திற்கு ஜால்ரா அடித்த தொனி தெரிந்தது.

 

பிரசாத் அவ்வப்போது, பெருமையாக ஜெனியை பார்த்தான்.

 

பார்த்தாயா   இவர்களிடத்தில்   நான் எவ்வளவு உயர்ந்து இருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது…

 

அதில் ஒரு பிரபல நடிகன் ஒருவனும் இருந்தான். அவன்  ஜெனியை விழுங்குவது போல் பார்த்தான்.

வலிய பேச முயற்சி செய்தான்.ஏ ரக ஜோக்குகளை அள்ளி வீசினான்.

 விவஸ்தை யில்லாமல் அந்த பணக்கார கும்பல் சிரித்து வழிந்தது.

சிரித்து, இயல்பாக இவள் கைகளை தொட முயற்சி செய்தான்.

 

நாசூக்காக கைகளை இழுத்துக் கொண்டாள்..

 

அம்மா மேல் கோபமாக வந்தது.  இரண்டு நிமிடம் கூட இவன் என்னிடம் பேசவில்லை : இதை வீட்டிலே சொல்லி  இருக்கலாம். இங்கு வந்து இவர்கள் முகத்தை பார்த்த வேண்டி உள்ளதே என்று நொந்துக் கொண்டாள்.

பார் அயிட்டங்கள் வந்ததும் 

எழுந்து வெளியே போனாள் .

 

தினேஷ்க்கு போன் செய்தாள்.

 

சிக்னலில்  நின்றுக் கொண்டிருந்த 

தினேஷ் திரையில் வந்த பெயரைப் பார்த்ததும்  அவன் மனம் துள்ளி குதித்தது.

 

ஜெனி.

 

“ஹாய் ஜெனி.”.…

“ஹாய் தினேஷ் நீ இப்ப எங்க  இருக்கீங்க”.

“நந்தனம் சிக்னல் நின்னுட்டு இருக்கேன். இருங்க ஓரமாக வருகிறேன்’.

‘எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீர்களா.”

 

“கண்டிப்பா…  சொல்லுங்க ஜெனி.”

 

“I.T.C. சோழாவுக்கு வாங்க. வெயிட் பண்றேன்.”

“இதோ வர்றேன். தன் புல்லட்டை திருப்பினான்.”

 

பிரம்மாண்டமாய் விளக்குகள் எதோ அரண்மனையை ஞாபகப்படுத்துவது போய்  ஒளிர்ந்த  அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

தன்னால் இவர்கள் போடும் அலப்பறையை காண சகிக்காது, மெர்குரி ஹாலிருந்து மெல்ல நழுவி, 

ஹோட்டல் போர்டி கோவில் வந்து நின்றாள்.

 

தினேஷை பார்க்க வேண்டும், பேச வேண்டும் போலிருந்ததால் அவனை வரவழைத்திருந்தாள்.

 

தூரத்தில் தேவதை போல் நின்றிருந்தவளை பார்த்தான்.

இதயம்  பைக்கின் ஒலிக்கேற்ப தடக் தடக்கென்று அடித்தது.

 

அவளே கூப்பிட்டு இருக்கிறாள்.

மெல்ல அவளருகில் வரும்போது, என்ஜினை ஆப்  செய்த படி வந்தான்.

 

“எதாவது பார்ட்டியா…

முடிந்ததா”?…

 

“முதலில் கிளம்புங்கள் சொல்றேன்.”

 

ஏறி அமர்ந்தாள்.

 

புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

 

“எங்கே…எங்கே”….?

 

‘போகும் போது சொல்றேன்.’

 

விர்ரென்று பைக் கிளம்பியது.

 

குடிக்கும் போது, பிரசாத் ஜெனியை மறந்தான்.

 

சிறிது நேரம் கழித்து ஞாபகத்திற்கு வந்தாள்.

 

“எங்கடா உன் ஏன்ஜல் வுட் பீ.

நீ அவளுடன்  நடனமாட வேண்டும்:”

என்று நண்பன் ஒருவன் சொல்ல,

 

வேறொருவன்  முதன்முதலில் நீ  அவளை வெளியே அழைத்து வந்து இருக்கிறாய்.  கிப்ட் எதாவது…

 

“வைத்து இருக்கிறேன்.”

“ரெஸ்ட் ரூம் போய் இருப்பாள் என்று நினைக்கிறேன்”.

 

அந்த நடிகன் குடி போதையில், “உன் அழகான வுட் பீ     பின்னழகு அள்ள வெளியே போவதை பார்த்தேன் “ என்று 

சொல்ல,

 

பிரசாத் மற்றெருவனிடம் “டேய் இவனை கொஞ்சம் ஆப் பண்ணி வைங்கடா.

இரண்டு ரவுண்டு கே உளருவான்.”

 

“யார் டா உளருவது.  உன் ஏன்ஜல்  போய்ட்டா”.  :

“நான் கூட போய் கேட்டேன். எங்க போற என்று மரியாதையா கேட்டேன்”.

என்னை அலட்சிய படுத்தி விட்டு போய்ட்டா. ன்று சொல்லி மூன்றவதாக ஒரு ஷார்ட்ஸ் எடுத்து குடித்தான்.

 

பிரசாத்தும் குடித்து இருந்தான். இதைக் கேட்டதும் குடித்த குடியெல்லாம் இறங்கியது.

இப்படி சொல்லாமல் போய் விட்டாளே. நான் எப்படி தங்கை வீட்டை எதிர் கொள்வேன். 

 

நண்பர்களிடத்தும் அவமானமாகி விட்டது. 

 

டக்கென்று  ஜெனியிடம் பேசுவது போல் பேசினான்.

“சொல்லு ஜெனி:எங்க   போய்ட்ட” . 

“என்னது…என்னது”…..  ன்று அதிர்சி காண்பித்தான்.

“சரி. ரிசப்ஷனில்  சொல்றேன். காரில் கொண்டு விடுவார்கள் என்று பொய்யாக அவளிடம் பேசுவது போல் தன் ஹெட் போனில் பேசினான்.

 

“என்னடா ஆச்சு”.

 

“லேடீஸ் பிராப்ளம்.’

 

“ஓ…….. சரி”. 

 

பிரசாத் அவளுக்கு பிரசண்ட்  செய்ய வாங்கி வைத்திருந்த Jaeger – Le outre

Reverso  வாட்சை தன் கோட்டு பையிலே வைத்துக் கொண்டான்.

ஜெனி மீது ஆத்திரமாக வந்தாலும், நண்பர்களிடத்தில்  காண்பிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அங்கே தினேஷுடன் பைக்கில் கிளம்பிய ஜெனி முதலில் எதுவும் பேசவில்லை.

 

பிரசாத் மீது எந்த அபிப்பிராயமும் இல்லாமல் இருந்தாள் . இப்போது, சே…சே….ன்று இருந்தது.

இப்படியா ஒரு பெண்ணை தனியே அழைத்துக் கொண்டு வந்து

தன் நண்பர்களையும் அழைத்து  குடிக்க வேறு செய்வான்.

அப்போது   ஒரு ஆட்டோ புகுந்ததால் க்ரீக்……. …ன்று சத்தத்துடன் பிரேக் போடவே,

 

“முட்டாள்”  என்று  உரக்க வே திட்டினாள்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page