அவளை மறக்கத்தான்

பாகம்.6. 

அவளை மறக்கத்தான்.

 

ஜெனியை பிரசாத்   டேட்டிங்  அழைத்துச் சென்றான். அவன் செய்த தவறு. அவன் நண்பர்களை வரவழைத்தது தான். ஒரு திரையுலக நண்பன் இவளிடம் தாறுமாறாக பேச, இவள் தினேஷை வரவழைத்து அவனுடன் வந்து  விட்டாள்.

 

வீட்டிற்குள்  ராஜம்மாவுடன் 

போனதும்,  அவரை  உள்ளே போகச் சொன்னாள் சுதா.

 

மறுபேச்சு பேசாமல், ராஜம் உள்ளே சென்று விட்டாள்.

 

ஜெனியிடம்  பாசமாக ,”பிரசாத் உன்னை நன்றாக கவனித்துக் கொண்டாரா…….

மனம் விட்டு பேசினீர்கள் அல்லவா..உன் முடிவை இப்போது சொல்ல வேண்டாம். காலையில் சொல்லு” என்றாள்.

“நாளை அவனை விருந்துக்கு வரச் சொல்கிறேன்”.

“இந்த மாதத்திலே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்.’

ஜெனி பேசாது  தன் தாயை  பார்த்தாள்.

 

“நீ  நாளை யிலிருந்து.ஆபீஸ்  போக வேண்டாம். பிரசாத்திற்கு பிடிக்கவில்லை’.

 

“போதும் நிறுத்தறியா . நீ பாட்டுக்கு நான் – ஸ்டாப்பா பேசற.” ஜெனி வெகுண்டாள்.

 

சுதா என்னவென்று புரியாமல்  முழித்தாள்.

 

“பிரசாத்தெல்லாம் ஒரு  ஆளு என்று  என்னை போக கட்டாயபடுத்தின. இதில் டிரஸ் .வேறு  “.

 

சுதாவிற்கு உடம்பெல்லாம் வெலவெலத்தது. இந்த நேரம் பார்த்து  அந்த கடங்காரி மது  எங்கே போனாள்.

இவள் எதோதோ சொல்கிறாள்.

 

முரளி வந்தான்.

‘என்ன நடந்தது என்று   சொல்”.  தன் தங்கையை பார்த்து கேட்க

இவளும் சொல்லலானாள்.

 

ஐ.டி.சி சோழாவிற்கு அழைத்துச் சென்றான்.

மெர்குரி கஃபேயில்  அமர்ந்தோம்.

 

அவன் பேசியதை அப்படியே சொன்னாள்.

 

முரளியின் முகம் மாறியது. ஆனால், எதுவும் பேசவில்லை.

 

அவளே எல்லாம் சொல்லட்டும் என்று பேசாது  இருந்தான்.

 

“ஐந்து நிமிடங்கள் கூட பேசவில்லை .அதற்குள் அவனது   பணக்கார நண்பர்கள் வந்தார்கள்.

இவன் வரவழைத்து இருப்பான் போலும்.”

 

இதைக் கேட்டதும், சுதாவின் முகத்தில் ஈயாடவில்லை.  

 

முரளி  அம்மாவை பார்த்தான்.

 

“அடிப்பாவி, மது இதைக் தெரிந்துக்  கொண்டு தான் தூங்க போய்ட்டியா.

.என்ன காரியம் பண்ணி வைத்து இருக்கிறான்.”

 

“சே… இவர்களை நம்பினது தப்பா போயிற்றே.’

 

‘நண்பர்கள் உன்னிடம்’ … என்று  முரளி.   இழுத்தான்.

 

பல்லை கடித்துக் கொண்டாள்.

 

கோபத்தில் முகம் ஜிவுஜிவு என்று இருந்தது.

 

முரளி அவளருகில் போய், கையை பற்றிக் கொண்டு “சொல்லுமா”….என்றான்.

 

“அந்த ஹீரோ ஷிபு இருக்கிறானே, அவன் தான் மட்டமாக பேசியது.”

 

சுதாவிற்கும், என் மகளிடம்  என்ன    பேசினானோ…இவளுக்கு  ஒரு அவமானத்தை நானே தேடி தந்து விட்டேனே…என்று உண்மையிலே கவலைப்பட்டாள்.

 

“மேலே சொல்லு” என்றான்.

 

ஷிபு என்னருகில் வந்து, “ரொம்ப அழகா இருக்க.  செயற்கை முகங்களை பார்த்து பார்த்து அலுத்து விட்டது. இவ்வளவு பிரஷ்ஷா இருக்க நீ வெர்ஜினாத்தான் இருக்கணும்.”

“ஆம் ஐ கரெக்ட்.”

நான் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் விலக பார்த்தேன்.

என் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

“உனக்கு  பிரசாத் வேண்டாம்  இவனால் உன்னை சந்தோஷமாக வைத்து  கொள்ள முடியாது. என்னுடன்   வா . நான் படுக்கையில் கில்லாடி, லிங்  இன் ல இருப்போம்”  என்றதும்,

நான் அவன் கையை உதறிவிட்டு  செருப்பை  கழற்றியதும்    கூல் கூல் என்று   ஓடிவிட்டான்.

 

முரளிக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது. 

 

மதி என்று  கத்தினான்.

 

அவள் கதவருகில் நின்று  எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்

 

இவன் மதி என்று கத்தியதும், இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.

 

“அண்ணா  ப்ளீஸ்.

அண்ணியை எதுவும் சொல்லாதே.

அவர் என்ன செய்தார்.”

 

“பிரசாத் அவன் நண்பர்க ளை கூப்பிடாமல்  இருந்து இருக்க வேண்டும். “

 

“அவர் என்னை புரபோஸ் பண்ணி யிருந்தால் நான் அதை மறுக்க  விளக்கம் கொடுத்துவிட்டு வந்து இருப்பேன். அவரோ ஒரு தலையாக முடிவு பண்ணி விட்டு, நிர்பந்த படுத்துவது போல் பேசினார் –

எனக்கு அவருக்கு விளக்கம்  கொடுக்க அவசியமுமில்லை. அதற்கான அவகாசமும் 

கொடுக்கப்படவில்லை.”

 

“நான் அவரை ஏற்று கொண்டது போல், நண்பர்கள் முடிவு செய்து  வருங்கால மனைவி என்ற ரேஞ்சுக்கு போனார்கள்.”

 

ஷாம்பெய்ன் ஓபன்  பண்ணி கொண்டாட முயற்சி செய்தார்.

நான் வெளியேறி விட்டேன்.

அந்த சந்தர்ப்பத்தை ஷிபு பயன்படுத்திக் கொண்டான்.’

 

அவனுக்கு என்ன தைரியம் இருக்கும். ஒரு பாடம்  கற்பிக்காமல் விட மாட்டேன்.

என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.

 

“நீ போம்மா. அதற் கெல்லாம் ஒரு முடிவு கட்டறேன்.”

அம்மாவிடம் திரும்பி, ‘அவளை யாருக்கு திருமணம் செய்ய செய்ய  வேண்டும் என்று எனக்கும், அப்பாவுக்கும் தெரியும். நீங்களும், மதியும் எதாவது ஏடாகூடமாக செய்து விடாதீர்கள்”. என்று கண்டிப்பு கலந்த குரலில் சொல்லிவிட்டு சென்றான்.

 

அந்த இரவே  தன் பாரில்  தனியே அமர்ந்து யாருக்கோ போன் செய்தான்.

 

அதன் விளைவு. மறுநாளே  பேப்பரில் வந்தது.

ஷிபு பிரபல தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கம். இந்த படத்திற்காக பெரும் தொகை சம்பளமாக தர ஒப்பநதம் செய்யப்பட்டது என்பது அறிந்ததே.அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒருவர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார்.

 

ஷிபு  அவனை யாரோ இரவோடு இரவாக கடத்தி, நன்றாக அடித்துபிரபல மருத்துவ மனையில் சேர்த்து   இருந்தார்கள்.

 

மருத்துவ மனை அளித்த சிகிச்சையில் கண்களை  திறந்தான்.

 

மூக்கு சில்லு உடைப்பட்டு, கண்கள் வீக்கமாக இருந்தது. கைகள் முறித்து  கட்டு போடப்பட்டு இருந்தது.

 

அவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.   அவனது பங்களா E.C.R.ரோட்டில் உள்ளது.   ITC யிலிருந்து அவனது வீட்டிற்கு போக  3 மணி 

ஆனது. யாரோ அவன் முகத்தில் துணியை போட்டு  கடற்கரையில் ஒரு படகில் நடு கடலுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு வைத்து அவனுக்கு பூஜை செய்தார்கள். அவன் போதையில் இருந்ததால் எதையும்  போலீசாரிடம் கூற முடியவில்லை.  

 

அவனுக்கு முரளி சார்பாக பொக்கே அனுப்பப்பட்டது.” Get well soon” என்று.

 

காலை  எப்போதும் போல் சூரியன்  தன் கடமையை செய்ய விழைந்தது.

 

மதி எழுந்தவுடன் முதல் வேலையாக தன் அம்மா வீட்டிற்கு சென்றாள்.

 

அவளைப் பார்த்ததும்  அவளின் அம்மா, ‘என்னடி   இவ்வளவு நடு இராத்திரியில் வந்து இருககே.’

 

“உன் ஜோக்கை ரசிக்கிற  மூடில் நானில்லை.%

 

“என்ன  இவ்வளவு கோவம். என்பது போல் பார்க்க, எங்கே உன் சீமந்திர புத்திரன். தடிமாடு. “

 

‘உன் அண்ணன்டி . மரியாதையா பேசு”.

“அவன் பண்ண காரியத்திற்கு அவனுக்கு மரியாதை தான் கேடு.’

 

“ஒரு பெண்ணிடம் எப்படி புரபோஸ் பண்ண வேண்டும் என்று கூட தெரியல.

இவனெல்லாம்   என்ன பிஸினெஸ்ஸில் கிழிக்கப் போகிறான்.’

 

இரவு  ஜெனி போன அவமானத்தால் அளவுக்கு அதிகமாக குடித்து  எழாமல் இருந்தான்.

 

மதிவதனி போட்ட சத்தத்தில் கண்களை இடுங்கிக் கொண்டு   பார்க்க நன்றாக விடிந்து விட்டு இருந்தது.

ஐய்யோ… இன்று காலை ஒரு முக்கியமான மீட்டங் இருக்கே… என்ற ஞாபகம் வர,போனை பார்த்தான்.

அவனது பி.எ  ரிமைண்டர் கொடுத்து இருந்தாள்.

 

மதி குரல் போல் இருக்கே. இப்ப கீழே போகக்கூடாது. 

 

பாத்ரும் போய் ஷவரை நன்றாக திறந்து விட்டு குளித்தான். இரவு ஏற்பட்ட குடிமப்பு குறைந்து இருந்தது.

“அம்மா  ஜெனி  முரளிக்கு ஈக்குவலா ஷேர்ஸ்  வைத்து இருக்கிறாள்.  பாரம்பரிய நகைகள் முழுவதும் அவள் வசம். அதன் மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா . ஆண்ட்டிக்கு கூட அந்த நகைகள் மீது உரிமையில்லை. அங்கிள் அம்மாவின் நகைகள். முழுவதும் தன் பேத்தி கே எழுதி வைத்து விட்டார்.

அவள் ஒரு தங்க சுரங்கம்மா.. 

இப்படி உன் பிள்ளை அவளை கோட்டை விட்டு வந்திருக்கான்.’

 

“முதலில் ஆண்ட்டிக்கும்  பிரசாத்தை திருமணம் செய்ய விருப்பமில்லை. 

ஒரே வீட்டில் பெண் எடுத்து  பெண் கொடுப்பதா என்று தயங்கினார்.

நான் தான் இதையெல்லாம் விட மனசுயில்லாமல், பிரசாத்தை பற்றி உயர்வா சொல்லி, சொல்லி ஒரு வழியா அவர் மனதில் இந்த எண்ணத்தை ஏற்றினேன். அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்றும்  பில்டப் பண்ணி வைத்திருந்தேன்.”

 

“இவனை யாரும்மா பெங்களூர் லேண்டை பற்றி கேட்கச் சொன்னது. அந்த புராஜெக்ட் முரளிக்கு சொந்தமானது. அது புரியாமல், இவன் பேராசையால்   தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டான்.”

 

மண்  என்றதும், மதியின் அம்மா விமலாவிற்கு கோவம் வந்தது.

“இதோ பாருடி. நீ பாட்டுக்கு வாய்க்கு வந்த படி பேசாதா  . இவள் இல்லனா என்ன? வேறு ஒரு  நல்ல இடமா பார்த்து கட்டிவைக்க  போறேன். நம்ம குடும்பத்திற்கும் நல்ல பேர் இருக்கு.”

 

“அது மட்டும் தான் கொஞ்சம் இருக்கும் அதுவும் உன் பையனால் போய்விடும். “

 

இவர்கள் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டே பிரசாத் வர, அவனை பார்த்து முகத்தை ஒரு வெட்டு வெட்டி திருப்பிக் கொண்டாள்.

 

“இப்ப என்ன நடந்து போச்சு. பர்ஸ்ட் அட்டெம்ட் பெயிலியர் ஆகிவிட்டது. நான் அவளை அப்படியே விட்டு விட மாட்டேன். என்னை அவமான படுத்தியதற்கு ஜெனி பதில் சொல்லியே ஆகணும். என் சுயரூபத்தை அவள் முழுசா பார்க்கல.”

 

விமலா பயந்து, “இவ தான்  புரியாமல் பேசி  உன்னை உசுப்பேற்று கிறாள் என்றால், நீ  வேறு  சுயருபம் அது இது என்று சொல்லாத . உன்  தங்கை அந்த. வீட்டில் வாழ வேண்டும். முதலுக்கே மோசம் வைத்து விடாதீர்கள்.”

 

“அதுவுமில்லாமல் பிடிக்காத பெண்ணை பலவந்தப் படுத்தி  என்ன வாழ முடியும். அவளை விட்டு விடு. நான் உனக்கு நல்ல பெண்ணாக, பார்க்கிறேன்.’

பிரசாத் பதிலேதும் சொல்லாமல் போகவே, “அண்ணா நில்’ என்றாள்.

 

என்ன என்று திரும்பினான்.

நேற்று நீ போன் செய்யும் போது, 8.30 மணி இருக்கும். அப்போது தான் பைக்  டாக்ஸியில் போனாள் என்றாய்.  இவள்  வீட்டுக்கு வந்ததோ இரவு 11.00 மணி மேலே இருக்கும். அவ்வளவு நேரமா பைக்கில் சுற்றினாள்.  அதுவும் யாரென்றே தெரியாத பைக்- டாக்ஸியில். இவள் வீட்டிற்கு வருவதாக இருந்தால் ஹோட்டலிலே கார்கள் இருக்குமே. அதில் வந்து இருக்கலாம்.

அவன் யாரென்று தெரிந்து கொள்வது அவசியம். “ என்று மதி சொன்னவுடன் பிரசாத்தும் யோசித்தான்.

 

தன் போனில் வந்த செய்தியை பார்த்தவுடன் அதிர்ந்தான். 

.

“அய்யோ ஷிபு  என்ன இப்படி அடிப்பட்டு கிடக்கிறான்.

படத்திலிருந்து நீக்கி விட்டார்கள். 

 

இது யார் வேலையாக  இருக்கும்”……?

 

தன் தங்கையை பார்த்து, முரளியா என்று கேட்டான்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page