ஒரு ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி…
ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னுடைய குடும்பத்துல,
என் அம்மா கிட்ட அந்த மாதிரி பேசுறதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா அத பத்தி எனக்கு இப்போ பேச விருப்பம் இல்ல,
சின்ன வயசுல இருந்து என்னுடைய அம்மா எங்களை பார்த்து கேட்டது இல்லை. நான் அவங்களுக்கு ஒரே ஒரு பையன்.
என்ன பெத்ததுக்கு அப்புறம் அவங்க எப்போதும் போல பிசினஸ் என்று கிளம்பிட்டாங்க, இது என்னோட அப்பாவுடைய பிசினஸ் தான்.
அப்பாவ டாமினேட் பண்ணிட்டு அம்மா முன்னேற ஆரம்பிச்சுட்டாங்க, அது அவங்களுடைய ஓன் திறமை அத பத்தி நான் பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை.
அப்பாவுக்கு அதனால எக்கச்சக்கமான மன உளைச்சல் யாரா இருந்தாலும் அதை ஏத்துக்க முடியாது இல்லையா… ஹீரோவை பார்த்த எல்லாரும் அவர் ஜீரோவா பார்க்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு முக்கியமான காரணம் அம்மா அப்பாவை கையோடு இழுத்துட்டு போகாம அவங்க தான் பெருசு என்ற தற்பெருமையோடு இருந்தாங்க.
அதனால தான் அப்பா மனசு உடைஞ்சு போனாரு….
அதனால முன்ன மாதிரி ஆபீஸ் போறதுக்கு கிடையாது. அதிகமா வீட்ல தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு அதுவும் என் கூட,
என்ன பாத்துக்க என்னோட சித்தி அது என்னோட அம்மாவுடைய சொந்த தங்கச்சி தான்.
அவர்களுக்கு கல்யாண வாழ்க்கை நல்லா இல்ல, அவங்க ஹஸ்பண்ட் கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே இறந்து போயிட்டாங்க.
அந்த வீட்டில அவங்கள ரொம்ப அசிங்கப்படுத்த ஆரம்பிச்சதுனால, என்னுடைய அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டாங்க. அக்காவும் பிசினஸ் பிசினஸ் ஓடுறதுனால நீ போய் அவங்க குழந்தைய பார்த்துக்க ன்னு சொல்லி கை குழந்தையோட பொறுப்பு எல்லாத்தையும் அவங்க கைல ஒப்படைச்சுட்டாங்க.
அம்மா பிசினஸ் பாக்க கிளம்பிடுவாங்க, அப்பா குடி குடின்னு அது பக்கமே போயிட்டாரு…
ஆனா என்ன ஒரு அம்மாவை வளர்த்தது எல்லாமே என்னோட சித்தி தான்.
என்னோட சித்தி எனக்காக எல்லாமே பண்ணி இருக்காங்க அவங்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையும் எனக்காக விட்டுக் கொடுத்தாங்க.
என்னோட சித்தி இருக்கிறதுனால அதிகமா அப்பா வீட்டுக்கு வர மாட்டாரு… அவங்களுடைய வாழ்க்கை ஏதாவது மாறிடும் அதனால,
ஆனா அம்மாவுக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்லை. அவங்க வெளிநாடு சுற்றுவதுலயே குறியா இருந்தாங்க பிசினஸ் பெரிசாக்கணும்னு பெருசு ஆச்சு.. ஆனா வீட்டுக்குள்ள அவங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பும் ரொம்ப பெருசா மாறிடுச்சு.
ஏதோ பல நாளைக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கே வருவாங்க. இப்படித்தான் நான் இருந்தேன்.
ஒருநாள் ஒரு மிகப்பெரிய ஹைவேஸ்…
அங்கு ஒரு இளநி கடை கிட்ட நீயும் உன்னோட அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் நின்னுட்டு இருந்தீங்க…
அன்னைக்கு தான் நான் உன்னை முதல் முறையா பார்த்தேன்.
எங்க சித்தியும் அப்பாவும் ஒரு பிரச்சனை காரணமா என் கூட கார்ல தான் வந்தாங்க.
சொல்லப்போனா என் கூட கார்ல வரல நான் தான் என் சித்தி கூட கார்ல போனேன். அவங்களுக்கு நல்ல டிரைவிங் தெரியும்.
ஒரு பிரச்சனை காரணமா சித்தி கோவத்துல கார் எடுத்துட்டு போக ட்ரை பண்ணும்போது அப்பா சமாதானப்படுத்தணும்னு என்கிட்ட சொன்னாரு.. அதனால ரெண்டு பேரும் சேர்ந்து கார்ல ஏறிட்டோம்.
நான் டிரைவிங் செட்டில் உட்கார்ந்துக்கிட்டேன் என் பக்கத்துல சித்தி எனக்கு பின்னாடி அப்பா.
அன்னைக்கு நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல,
நீ நல்லா அலங்காரம் பண்ணி இருந்த, ஆனா எல்லாரும் சொல்ற மாதிரி பயங்கரமான மேக்கப் அப்படி எல்லாம் இல்ல உனக்கு அது ரொம்ப பெரிய அலங்காரம்.
உன்னோட அப்பா நடுரோட்டில் வைத்து அந்த இளநீர் கடையில உன் தலையில பயங்கரமா அடிச்சாரு உன் அம்மா ஒரு பக்கம் உன்னை கிள்ளி வச்சாங்க உன் தங்கச்சி என் உயிரை போட்டு வாங்குறேன்னு சொல்லி உன்ன கேவலமா பேசினா..
இது எல்லாத்தையும் மன்னிக்க நான் பார்த்தேன் நான் மட்டும் இல்ல நாங்க எல்லாரும் பார்த்தோம். அப்போ இறங்கி நான் தான் என்னோட சித்திக்கும் அப்பாவுக்கும் இளநீர் வாங்கிட்டு வந்தேன் நீங்க பேசுற எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தேன் அவங்கள உள்ளே உட்கார சொல்லிட்டு இளநீரை கையில் கொடுத்த போ,
ஏன்டா இந்த பொண்ணு அடிக்கிறார்கள் என்று என் சித்தி என்கிட்ட கேட்டாங்க… ஏதோ அடி வாங்குற பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பாங்க போல அது வெளியில மீட் பண்ணலாம்னு பேசி இருக்காங்க.. ஆனா அங்க ஏதோ சொதப்பிடிச்சுன்னு சொல்லி அந்த பொண்ணு போட்டு பயங்கரமா வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுறாங்கன்னு நான் என்னோட சித்தி கிட்ட பேசிட்டு இருந்தேன்.
பேசாம இந்த பொண்ணு உனக்கு பார்த்துருவோமாடா விக்ரம்… அப்படின்னு அவங்க தான் உன்ன பத்தி சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு என்ன குறை சொல்லி எதுக்கு அந்த பொண்ண இப்படி நடத்துறாங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல,
இந்த மாப்பிள்ளை இல்லனா இன்னொரு மாப்பிள்ளை, அந்த பொண்ணு மாப்பிள்ளை கிட்ட சரியா பேசலையாம். அதுக்கு தான் இப்படி அடிச்சிட்டு இருக்காங்க அசிங்கப்படுத்திட்டேன்னு சொல்லி..
இங்க பாரு விக்ரம் இப்படி ஒரு பொண்ணு மிஸ் பண்ணிடாத, பாக்க நல்லா தானே இருக்கா, என்ன கொஞ்சம் ஓல்டா டிரஸ் பண்ணி இருக்கா அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்லையே,
ரொம்ப லட்சணமா இருக்காடா..
பேசாம நீ கட்டிக்கிறியா?…
சித்தி சும்மா இருக்க மாட்டீங்களா?..
அந்த பொண்ணு ஏற்கனவே வருத்தத்தில் இருக்கு நீங்க கிண்டல் பண்றதெல்லாம் காதுல விழுந்துச்சுனா இன்னும் சங்கடப்படும்.
நம்ம கிளம்பலாமா இப்படி நான் சொல்லிட்டு காரை எடுத்துட்டேன்.
ஆனா நான் எடுக்கும் போது ஒரு வார்த்தை மட்டும் என் காதில் விழுந்துச்சு.
நீ எக்கேடு கட்டும் போ, நாங்க கிளம்புறோம்.
நீ எப்படி வீட்டுக்கு வருவியோ வந்தா வா இல்லன்னா அப்படியே சேர்த்து தொல அப்படின்னு அவங்க சொல்லிட்டு ஆட்டோவில் கிளம்பினாங்க நீ அதே இடத்தில் நின்னு அழுத,
அப்போ தோணுச்சு…
ஆனா அது ஒரு இரக்கம் தான். எனக்கு அப்போ உன்னை பார்க்கும்போது பாவமா இருந்துச்சு.
அப்புறம் நாங்க கிளம்புனதும், உங்க வீட்ல இருக்குறவங்க ஒரு ஆட்டோவில் கிளம்பிட்டாங்க,
அப்போ உன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருந்தேன் பேசாம இந்த பொண்ணு கூட்டிட்டு போகலாமா நீ எங்க சித்தி கிட்ட கேட்கும் போது,
டேய் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்க என சொல்லி என்னடா நீ உண்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாய் போல என்று என்னை கிண்டல் பண்ணாங்க.
அதுக்கு சொல்லல அவங்க விட்டுட்டு போயிட்டாங்க அதான் அப்படின்னு யோசிச்சுக்கிட்டு நான் வண்டியை ஸ்லோ பண்ணிட்டு இருந்தேன்.
அங்கேயே ஒரு ஓரமா நிப்பாட்டி உன்ன பின்னாடி திரும்பி பார்த்தபடியே. நான் ஸ்லோ பண்ண ஆரம்பிச்சேன்
மாமா இங்க பாருங்க உங்க பையன, உண்மையிலேயே அந்த பொண்ணு புடிச்சிருச்சு போலயே பேசாம கட்டிடுவோமா இதான் உன் வீட்டு மருமகள் ன்னு பேசிக்கொண்டே என்னுடைய சித்தியும் திரும்பி பார்த்தாங்க எங்க அப்பாவும் சிரிச்சிட்டு இருந்தாரு நல்லாதானே இருக்கு பொண்ணு பேசாம கட்டிடுவோமா?…
வீடு எங்கனா நான் விசாரிக்கவா இப்படி என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க,
அப்போ,
ஒரு மிகப்பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு உனக்கு ஞாபகம் இருக்கா?…
என் பையன் உன்னோட பொறுப்புன்னு சொல்லு ஒருத்தவங்க உன் கைய புடிச்சு சொல்லிட்டு இறந்து போனாங்க அது உனக்கு ஞாபகம் இருக்கா?..
இப்படி கேட்கும் போது தான் அவளுக்கு ஒரு விஷயம் புரிஞ்சது… அன்னைக்கு என்ன நடந்துச்சுனு?…
அவள் கண்ணீரோடு…
அது நீங்களா?..
ஆமா…
அது நான்தான்.
அன்னைக்கு நீ தான் எனக்கு உயிர் கொடுத்த, என் சித்தியோட கடைசி ஆசையும் நீதான். நீ அப்பாவோட கடைசி ஆசையும் நீதான் என்னோட சித்தி உடைய உயிர் உனக்குள்ள தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.
அவங்க கடைசியா பார்த்தது உன்னைத்தான். எனக்கு நீ எல்லாவுமாக வேண்டும்.
அன்னைக்கு நான் உன்னை பார்த்து அச்சச்சோ பாவம் இந்த பொண்ணு நினைச்சேன்.
ஹாஸ்பிடல் இருந்து ரெக்கவர் ஆகி நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்னை பயங்கரமாக தேடி அலைந்தேன்.
என்னோடு நினைவில் இருந்தது உன்னோட முகம் மட்டும் தான்.
இன்னும் ஒவ்வொரு இடமாக தேடி அலைஞ்சு கடைசியாக மேட்ரிமோனியில் கண்டுபிடிச்சேன்.
உங்க வீட்ல வரன் பாக்குறாங்கன்னு தெரிஞ்சதுனால தான் எப்படியும் இந்த மாதிரி வெப்சைட்ல போட்டு இருப்பாங்கன்னு அந்த மாதிரி இடத்துல போய் தேடினேன்.
அங்க இருந்ததா உன்னோட அட்ரஸ் கண்டுபிடிச்சு உன்னை பார்க்க வந்தேன். நான் வெறும் தேங்க்ஸ் சொல்ல தான் அங்கே வந்தேன்.
அன்னைக்கு நீ உன்னுடைய அப்பார்ட்மெண்டுக்கு கீழே தனியாக உட்கார்ந்து அழுதுட்டு இருந்த,
அங்க வந்து வாட்ச்மேன் உன்னை கிண்டல் பண்ணிட்டு போனாரு…
உன்னோட அழுகையை பாத்ததுமே எனக்குள்ள ஏதோ ஒன்று பண்ணுச்சு.
நான் பார்த்த இரண்டாவது தடவையும் நீ அழுதுட்டு தான் இருந்த,
அழுகாத சொல்லனும்னு ஆசை.
உன்னோட கண்ணுக்குள்ள நான் ஏதோ ஒரு விஷயத்தை உணர ஆரம்பிச்சேன்.
நீ தனிமையில் இருக்கிறதை பார்த்ததுமே ஏதோ நானே நீயாக இருக்கிற மாதிரி உணர்ந்தேன்.
உன்னை விட்டு போக கூடாதுன்னு எனக்கு அப்போ தோணுச்சு. உடனே அந்த அப்பார்ட்மெண்டுக்கு நான் குடி வந்துட்டேன்.
ஆனா நான் குடி வந்ததுல இருந்து நீ ஒரு நாள் கூட என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
உனக்காக நான் எப்போதுமே லிஃப்ட் பக்கத்துல நிப்பேன் அப்படி இல்லன்னா நீ வர வழியிலேயே உன்னோட பார்வை படுற மாதிரி நின்னுட்டு இருப்பேன் உன்கிட்ட பேச எவ்வளவு ட்ரை பண்ணேன்.
ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
நீ நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாய்,
உன்னோட ஒத்த பார்வைக்கு நான் பல நாட்களாக ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னோட ஆபீஸ்ல வேலைக்கு உன்னை சேர்த்தது நான்தான்.
உனக்கு வச்ச டெஸ்ட்ல நீ பாஸ் ஆகிட்ட ஆனா இண்டர்வியூல ஃபெயில் ஆகிட்ட,
அப்போவே உன்னை சேர்க்க வேண்டும் என்று சொல்லி பெரிய பிரச்சனை பண்ணினேன்.
இப்படி எல்லாம் தான் நான் உன்னை காதலிக்கிறேன் கிட்டத்தட்ட ஒரு வருஷம் நாலு மாசம் உன் கூட தான் நான் பயணிச்சிட்டு இருக்கேன் அது தெரியாம நீ என்ன இப்படி யோசிச்சிட்டு இருக்கியா?..
இப்படி சொல்லும் போது அங்கேயே உடைந்து அவள் அழுதாள்.
அந்த இடத்துல என்ன ஆச்சு என்பதை நேரில் பார்த்த நிலா அதை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தபடி அழுது கொண்டிருந்தாள்.
அது சாதாரண ஆக்சிடென்ட் இல்ல உங்களை கொலை பண்றதுக்காக வேணும்னே செட்டப் பண்ண ஒரு விஷயம் தான் அதுன்னு…
அப்படி என்ன நடந்தது?…
