ஆடி வரும் வண்ண மயிலே-02
அத்தியாயம்: 02
கல்யாணி சக்ரபாணி மயூரிகாவின் நடனத்தை பார்க்க வராத கரணம் அவள் தான் என்றார்.
மயூரி “ என்ன பாட்டி பேசுகிற நான் காரணமா..? எப்படி எனக்கு உன் பதில் புரியவில்லையே…” என சொன்னாள்.
கல்யாணி சுவரில் சிரித்து கொண்டு இருந்த… மகளின் புகைப்படத்தை வருடியவர்.
“ நீ உன்னை கண்ணாடியில் பார்த்து இருக்க தானே பாப்பா…அப்போ உன் கேள்விக்கான பதிலும் அதில் அடங்கி இருக்கு.
நீ உன் அம்மா போல உருவத்தில் மட்டுமல்ல… குணத்தையும் கொண்டு இருக்க…உனக்கு ஒன்று தெரியுமா பாப்பா..?
உன் அம்மாவின் முதல் ரசிகன் யாரென்று..? அது உன் தாத்தா தான் அவள் பயிற்ச்சி செய்யும் போதும் சரி…மேடையில் ஆடும் போதும் சரி உன் தாத்தா முன் வரிசையில் அமர்ந்திருந்து… அவள் நடனத்தை ரசித்து கை தட்டி கொண்டு இருப்பார்.
அவருக்கு எத்தன் மீட்டிங், வேலை வந்தாலும்…அவர் பி.ஏ வெங்கட் அண்ணனிடம் பார்த்து கொள்ள சொல்லி விடுவார்.
அவருக்கு தன் பெண்ணு தான் உலகமே…அவள் போன பிறகு அந்த உருவத்தில் இருக்கும் நீ… அவர் கண் முன்னே நடனம் ஆடினால்…அவர் எதை மறக்க நினைக்கிறாரோ அது தான் அவர் ஞாபகத்திற்க்கு வரும்.
அதற்க்கு பிறகு அதற்க்கு காரணமானவர் மேலே…கோபம் வரும் அந்த கோபம் உன்னை பாதித்து விட கூடாது என்பதால் தான்…அவர் உன் நடனத்தை நேரில் பார்க்க வருவது இல்லை.
ஆனால் அவரை பற்றி எனக்கு தெரியும்…அங்கே வர மாட்டார் தான் ஆனால் இங்கே லைவ் வீடியோவில்… உன் நடனத்தை பார்த்து ரசித்து கொண்டு இருப்பார்…” என்றார்.
மயூரி “ புரிகிறது பாட்டி தாத்தாவும், நீங்களும் தானே எனக்கு எல்லாமே…உங்களை விட்டால் எனக்கு வேறு யாரு இருக்கிறாங்க..? என கேட்டாள்.
கல்யாணி பேத்தியை அணைத்து கொண்டவர் …
“ எங்களுக்கும் நீ தானே பாப்பா எல்லாமே…எங்க சந்தோஷம் நீ பாப்பா சரி நம்ம கிளம்ப வேணும்… உன் சாரதா மிஸ் யசோ கிட்ட கால் பண்ணி இருக்கிறார்.
நீ கிளம்பி விட்டாயா என்று நீ தானே சொல்வ…தெய்வத்தையும் ரசிகர்களையும் காக்க வைக்க கூடாது பாட்டி என்று…” என சொன்னார்.
மயூரி தாயின் போட்டோவை தொட்டு தடவி விட்டு…
“ நான் போயிட்டு வருகிறேன் மா…உன் ஆசீர்வாதம் எனக்கு எப்பவுமே வேணும் இன்று உன் பெண்ணின் நடன நிகழ்ச்சி…வழமை போல சிறப்பாக இருக்க வேணும் என்று ஆசீர்வாதம் செய் மா…” என சொன்னவள்.
ஒரு நிமிஷம் தாயின் போட்டோவுக்கு முன்னே…தலை குனிந்து நின்றவள்… பிறகு கல்யாணி கூட கிளம்பி கீழே வந்தாள்.
அவளின் கொலுசு சத்தம் கேட்க சக்ரபாணி நிமிர்ந்து பார்த்தவருக்கு…வழமை போல நெஞ்சு வலித்தது அவர் எதை மறக்க நினைக்கிறாரோ…அதுவே தினம் தினம் அவர் கண் முன்னே வந்து நிற்கிறது.
தாத்தா என அழைத்து கொண்டே…சக்ரபாணி காலில் போய் மயூரி ஆசீர்வாதம் வாங்க குனிந்தாள்…பேத்தியை மனதார ஆசிர்வதித்தவர் அவளை தூக்கி அணைத்து கொண்டு…
“ உன் தாத்தா ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும் மா…இன்றும் இந்த உடையில் ரொம்ப அழகாக இருக்க சரி கிளம்பு மா…உன் வரவுக்காக பலர் காத்திருக்கிறாங்க.
வெங்கட் பாப்பாவை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளு…அவள் தான் என் உயிரே எங்கே அசோக்கை காணோம்…? என கேட்டார்.
வெங்கட் கல்யாணின் ஊர் ஆளு சக்ரபாணியின் முன்னால் பி.ஏ…விசுவாசத்தின் மறு பெயர் சக்ரபாணியின் வயது தான்…இப்போ அவர் ஓய்வுபெற்று விட்டார்.
அதற்க்கு பதிலாக தான் அவர் மகன் அசோக்…சக்ரபாணியின் பி.ஏவாக இருக்கிறான் கடின உழைப்பாளி தந்தை போல விசுவாசமானவன்.
சக்ரபாணி இடத்தில் இருந்து மயூரிகாவுக்கு துணையாக போவது வெங்கட் தான்…கூடவே சக்ரபாணி பேத்திக்கு என தனியாக பாடி கார்ட்ஸ் மூவரை வைத்திருக்கிறார்.
வெங்கட் “ அசோக் கார், பாடி கார்ட்ஸ் எல்லாம் திரும்ப… ஒரு தடவை செக் பண்ண போய் இருக்கிறான் சக்ரா…
எப்பவுமே நம்மை விட பாப்பா பாதுக்காப்பு விஷயத்தில்… அவன் நூறு மடங்கு ஜாக்கிரதையாக இருப்பான் இதோ வந்து விட்டான்..” என்றார்.
வெளியே இருந்த வந்த அசோக் மயூரியை பார்த்தவன்…சின்ன புன்னகை ஒன்றை கொடுத்தவன்.
“ பாப்பா எல்லாம் சரியாக இருக்கு…உனக்கு ஏதும் சந்தேகம் வந்தால் அண்ணாவுக்கு ஒரு மிஸ் கால் கொடு…மற்றதை நான் பார்த்து கொள்வேன் ஆல் தே பெஸ்ட் மா…” என்றான்.
மயூரிகா அவனுக்கு நன்றி சொல்லி விட்டு… கல்யாணி, வெங்கட், யசோதா, கண்மணி கூட…மண்டபத்திற்க்கு கிளம்பி போனாள்.
மயூரிகா மண்டபத்தின் பிரதான வாயில் வழியாக போகாது…பின் பக்கமாக உள்ள வாயில் வழியாக போய் அங்கே உள்ள மேக்கப் ரூம்மில்…திரும்ப டச் அப் செய்து கொண்டு இருக்க மயூ என அழைத்து கொண்டு வந்தார்….
அவளின் நாட்டிய குரு சாரதா அவர் மயூரியின் அன்னைக்கு சீனியர் மாணவி…சியாமளா மேலே அவருக்கு நல்ல அன்பும் நட்பும் இருந்தது…
அதனால் தன்னிடம் உள்ள நாட்டிய கலையில் உள்ள நுணுக்கங்களை…மயூரிக்கு முழுமையாக கற்று கொடுத்தார்.
அவருக்கு ஒரு பையன் அவன் ராணுவத்தில் பணியாற்றி கொண்டு இருக்கிறான்…சாரதாவின் கணவன் வாத்தியார் அவர் இறந்து ஆறு வருடமாகின்றது.
சாரதா வர மயூரிகா எழுந்து நின்றாள் அவளை ஒரு தடவை பார்த்தவர்… சில அலங்காரங்களை சரி பார்த்து விட்டு …
“ கண்மணி எப்பவுமே நடனங்களுக்கு கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட வேணும்…அப்போ தான் ஆடியன்ஸ்க்கு பார்க்க அழகாக தெரியும்.
அது மட்டுமல்ல நம்ம லைட் மேக்கப் போட்டால் …அது மேகரா போகஸ் லைட்டில் அதை விட… மேடையை அலங்கரித்து உள்ள லைட்டில் நம்ம தோலுக்கு பாதிப்பு வரும்…நீ பியூட்டிசன் கோர்ஸ் படித்தவள் தானே பிறகு என்ன..?
நீ தொழில் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்து இருக்க வேணும் மா…
நீ இன்னும் இந்த துறையில் வளர வேணும் என நினைக்கிறேன்…அதற்காக தான் இதை எல்லாம் சொல்கிறேன்.
மயூரி உனக்கு நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை…நீ ஒரு டான்ஸர் இது எல்லாம் உனக்கு நன்றாக தெரிந்து இருக்கும்…
என் சியாமளா பெண்ணு நீ என் பிரதான சிஷ்யை…உன் நடனத்தில் மட்டுமல்ல உன் அலங்காரத்தில் கூட எந்த குறையும் இருக்க கூடாது…சரி ஷோவுக்கு டைம் ஆகிவிட்டது ரெடியாக இரு…” என்றார்.
மயூரிகா சாரதாவுக்கு குரு வணக்கம் வைக்க…அவளை ஆசிர்வதித்தவர் அவள் நெற்றில் சின்னதாக திருநீறு வைத்து… அவரே அவள் காலில் சலங்கையை கட்டி விட்டார்.
அவர் அடவு தட்ட மேடைக்கு போக…கொஞ்ச நேரத்தில் மயூரியின் நடனம் ஆரம்பம் என அறிவிப்பு செய்தார்கள்…
மேடை திரை மூடி இருக்க மயூரி மேடையில் போய்… நாட்டிய நிலையில் நின்றிருந்தாள்.
திரை விலக சாரதா அடவு தட்ட தொடங்க…அவர்களின் குழு பெண் பாட மயூரியின் நடனம் ஆரம்பம் ஆனது…வழமை போல அங்கே குண்டு ஊசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவுக்கு அமைதி இருந்தது.
மக்கள் கூட்டம் அவள் அழகுக்கும், நடனத்திற்க்கும் கட்டுபட்டு இருந்தார்கள்…அன்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது…
நடனம் முடிய அவளிடம் ஆட்டோகிராப் ,போட்டோ எடுக்க என கூட்டம் அலை மோதியது…அதை எல்லாம் வெங்கட், அவள் பாடி கார்ட்ஸ், யசோதா எல்லாம் சமாளித்து ஒழுங்குபடுத்தினார்கள்.
எப்பவும் மயூரிக்கு நடனம் களைப்பை கொடுத்தது இல்லை…அவள் உயிரோடு கலந்து இருக்கும் ஒன்று அது எப்படி அவளுக்கு களைப்பை கொடுக்கும்..?
ஒரு சிறந்த கலைஞனுக்கு அவன் கலை எப்பவுமே களைப்பை, சலிப்பை கொடுக்காது…அந்த வகையை சேர்ந்தவள் மயூரி.
ஆட்டோகிராப் போட்டு கொடுத்து, போட்டோவுக்கும்… போஸ் கொடுத்து விட்டு அவர்கள் கிளம்பி விட்டார்கள்…
சாரதாவை அவர் வீட்டில் இறக்கி விட்டு மயூரி தன் பங்களாவுக்கு வர…அவள் வீட்டு வேலையாள் செங்கமலம் ஆரத்தி தட்டோடு வாசலில் காத்திருந்தாள்.
கல்யாணி அதை வாங்கி பேத்திக்கு சுற்றி பொட்டு வைத்தவர்… செங்கமலத்தை வாசலில் அதை கொண்டு கொட்ட சொல்லி விட்டு… உள்ளே வர சக்ரபாணி அவள் வருகைக்காக காத்திருந்தார்.
மயூரி தாத்தா என அழைத்தவாறே ஓடி போய் அவரை அணைத்து கொள்ள…அவரும் பேத்தியை அணைத்து கொண்டவர் சுமதி என அழைத்தார்.
“ இதோ வந்துட்டேன் ஐயா “ என சொல்லி கொண்டே சுமதி கையில் தட்டில் பெரிய வெள்ளி தம்பளரில்…பால் பாயசம் கூடவே பேரீச்சை லட்டு எடுத்து வந்தாள்.
அது இரண்டுமே மயூரிக்கு ரொம்ப பிடிக்கும்…அவள் ஓவ்வொரு தடவையும் நிகழ்ச்சி முடிந்து வந்ததும்…சக்ரபாணி அவர் கையால் ஊட்டிய பிறகு தான் அவளை உடை மாற்ற கூட விடுவார்.
இன்றும் அது போல ஊட்டி விட அதில் இருந்து சின்ன துண்டை எடுத்து மயூரி…சக்ரபாணி, கல்யாணிக்கு ஊட்டி விட்டாள் இருவருமே பேத்தியின்… அன்பை கண்டு அவளை அணைத்து கொண்டார்கள்.
சாப்பிட்டு முடிய மயூரி தன் ரூம்க்கு போக கூடவே கண்மணியும் போனாள்..யசோதா தன் ரூம்க்கு ப்ரெஷ் அப் போய் விட்டாள் முதல் மாடியில் தான்… கண்மணி, யசோதாவின் ரூம் உள்ளது.
அலங்காரத்தை கலைய கண்மணி மயூரிக்கு உதவி செய்து விட்டு…அவள் உடை மாற்ற தன் ரூம்க்கு போய் விட்டாள்… மயூரி உடல் வலி போக பாத் டப்பில் வென்னீர் நிரப்பி…
அதில் லாவண்டர் ஆயில் இரண்டு துளி விட்டு… அதில் கண் மூடி அமர்ந்திருக்க அழையா விருந்தாளியாக அவன் முகம்…அவள் மனகண் முன்னே தோன்றியது.
கிட்ட தட்ட அவனை நேரில் பார்த்து நான்கு வருடங்கள்…அவன் பார்க்க முடியாத தூரத்தில் இல்லை ஆனால்…அவனை அவ்வளவு சீக்கிரமாக நெருங்கி விட முடியாது.
எரிமலையை கூட நெருங்கி தொட்டு விடலாம்…இவன் எரிமலையை விட அதிக வெப்பமானவன்.. அவன் சிரித்து அவள் பார்த்தது இல்லை…
ஏன் எந்த உணர்வும் அவன் முகத்தில் பிரதிபலிக்காது…இருந்தாலும் கூட அவனை அவளுக்கு ரொம்ப அல்ல.. ரொம்ப ரொம்ப பிடித்து தொலைக்கும்.
அவனை ஆசையாக நெருங்க முடியாது…அதற்க்கு பல தளைகள் அவளை சுற்றி உள்ளது…முக்கியமாக அவன் இருக்கும் இடம் அடுத்து சக்ரபாணி.
அவர் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே… அவர் கண்களில் அக்னி தோன்றி விடும்…அவள் வயதுக்கு வந்ததும் அவர் போட்ட முதல் நிபந்தனை.
காதல் என்ற ஒன்று உன் மனதில் எப்பவும் வர கூடாது…ஏன் அந்த வார்த்தை உச்சரிக்கபடும் இடத்தில் கூட உன் நிழல் கூட இருக்க கூடாது.
மீறி இருந்தால் உன்னை இல்ல நீ காதலிப்பவனை ஒன்றும் செய்ய மாட்டேன்…நானும் உன் பாட்டியும் உன் கண் முன்னே தற்கொலை பண்ணி விடுவோம்.
பிறகு நீ எது வேணும் என்றாலும் செய் என்று சொன்னார்…அப்படிப்பட்டவரிடம் என் காதலை சொல்ல முடியுமா..?
முக்கியமாக அவள் காதலிப்பவனிடம்… ஒரு வார்த்தை இது பற்றி வாய் திறக்க முடியுமா..? என யோசித்து கொண்டு இருக்க அக்கா என கண்மணியின் குரல் கேட்டது.
மயில் ஆடி வரும்…
