ஆடி வரும் வண்ண மயிலே-03
அத்தியாயம்:03
காலை சூரியன் உதயமாகி வழமை போல தன் மக்களை அணைத்து கொண்டான்.
சென்னையில் பல ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக அந்த பங்களா காட்சியளித்து…
அந்த பங்களாவுக்கு முன் வெள்ளை வேட்டி சட்டையில்…பலர் குவிந்து இருந்தார்கள்.
அவர்கள் அனைவருமே தொண்டர் படை ஆனால் யாருமே கோஷம் போடவில்லை…என்பதை விட கோஷம் போட கூடாது என்பது அங்கே எழுதா சட்டம்.
அந்த சட்டத்தை இது வரைக்கும் யாருமே மீறியது இல்லை…மீற நினைப்பதும் இல்லை காரணம் அந்த சட்டத்தை போட்டவன் மேலே உள்ள பயம்.
அவனை சாதாரணமானன் என நினைத்தால் பிறகு விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்….ஏன் தலைவர் கூட அவனுக்கு எதிராக பேச மாட்டார்.
அது அவன் மேலே உள்ள பயத்தில் அல்ல…அவன் மேலே உள்ள நம்பிக்கையில் அவன் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என நினைப்பார்…அவனும் இந்த நொடி வரைக்கும் அப்படி தான் நடந்து கொள்கிறான்.
கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்த கறுப்பு படை வெளியே வந்தது…இப்போ இந்த படையை கமாண்டோ படை என அழைக்கின்றார்கள்.
இவர்களின் வேலை நாட்டின் பிரதமர், முதல்வர் மந்திரிகள் அது போல…முக்கிய விவிஐபிங்களுக்கு தங்கள் உயிரை கூட.. பொருத்படுத்தாது பாதுகாப்பு கொடுப்பது.
மொத்தம் இருபத்தைந்து பெயர் இருக்கும்…அனைவரும் இரு பக்கமும் வரிசையாக வந்து நின்றார்கள்…அதை பார்த்த அனைவருக்குமே புரிந்தது வருவது யாரென்று.
கொஞ்ச நேரத்தில் கறுப்பு கலர் ஜீப் ஒன்று அந்த பங்களாவுக்கு வந்து நின்றது…அதி்ல் இருந்து இறங்கியவனை பார்த்து அனைவருமே ராணுவ பாணியில் வணக்கம் வைக்க….அதை அவன் ஏற்று கொண்டான்.
அவன் தான் தமிழ் நாட்டு முதல்வர் குரு மூர்த்தியின் பர்ஷனல் பாடி கார்ட் பவதீப் ரவீந்திரன்… முன்னால் ராணுவ மேஜர் அவன் சேவையை பார்த்து குரு மூர்த்தி தன்னிடம் வேலைக்கு வர சொன்னார்.
முதலில் அவன் மறுக்க அவர் சில மறுக்க முடியாத காரணங்கள் சொல்ல…அவன் அதை ஏற்று கொண்டவன் மேஜர் பதவிக்கு ஓய்வு கொடுத்து விட்டு…இங்கே வேலையில் வந்து சேர்ந்தான்.
அவன் வயது முப்பது இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை…பெண்ணு அவனுக்கு கிடைக்கவில்லை என்று இல்ல பெண்களை மட்டுமல்ல…. காதல், கல்யாணத்தை கூட வெறுத்தான்.
ஆறடி உயரம், தேன் நிறம் கட்டுகோப்பான எய்ட் பேக் பாடி, கிளீன் சேவ் முகம்…அதில் துளியும் சிரிப்பு இல்லை அடர்ந்த சிகை… அதை அதீத கோபம் வரும் போது கையால் கோதி கொள்வான்…
அவன் நடை வேகமாகவும் கம்பீரமாகவும் இருக்கும்…அவன் நடந்து வர தொண்டர் படை அமைதியாக நகர்ந்து நின்றது…அப்போது மேஜர் என அழைத்து கொண்டு வந்தான்.
செகண்ட் கமாண்டோ ராகுல் இவனும் ராணுவத்தில் இருந்தவன் தான்…முதல்வரின் பாதுகாப்புகான தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களில் இவனும் ஒருவன்.
பவதீப் அவனை ஒரு பார்வை பார்க்க…
ராகுல் “ மேஜர் எவரி திங் இஸ் ஓகே…ஒன்றுக்கு இரண்டு தடவையாக செக் செய்து விட்டேன்…
எந்த பிரச்சனையும் இல்லை அது போல நாங்களும் அலர்ட்டாக இருக்கிறோம்…சார் உங்களுக்காக தான் வெயிட் பண்ணுகிறார்…” என்றான்.
அவன் சரியென தலை அசைத்து விட்டு உள்ளே வர…
“ஹேய் அங்கிள் வந்தாச்சு “ என சொல்லி கொண்டே ஆறு வயது பையன் ஒருவன்…ஓடி வந்து பவதீப் காலை கட்டி கொண்டான்…
பவதீப் முகம் மென்மையாக மாறியது…அவனை குனிந்து அவனை தூக்கி கொள்ள அவன் பவதீப் கழுத்தை கட்டி கொண்டு…அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“ தர்ஷா எங்கே இருக்க சீக்கிரமாக வா ஸ்கூல் கிளம்ப வேணும்…தாத்தா ரெடியாகி விட்டார் “ என அழைத்து கொண்டே வந்தாள்… குரு மூர்த்தியின் ஒரே மகள் புவனா.
பவதீப்பை விட ஐந்து வயது பெரியவள்…அவள் ஒரு விதவை அவள் கணவன் பரத் பிசினஸ் மேன்…அவனை குரு மூர்த்தியின் அரசியல் எதிரிங்க தான் போட்டு தள்ளி விட்டார்கள்.
புவனா, பரத்தின் மூத்த வாரிசு தான் தர்ஷன்…இரண்டாவது ஒரு பெண் குழந்தை மூன்று வயது அவள் வயிற்றில் ஏழு மாத கருவாக… இருக்கும் போது தான் பரத் இறந்தது அவளுக்கு தந்தை முகம் தெரியாது.
புவனா “ வா பவன் இப்போ தான் வந்தாயா..? சரி முதலில் சாப்பிட வா அப்பா பூஜையில் இருக்கிறார்…அம்மா எங்கே உன்னை காணோம் என கேட்டாங்க…
ஏன் நீ இன்று லேட் டிராஃபிக் ஜாம்மா..? என கேட்டாள்…பவதீப் தன் பேண்ட் பாக்கெட்டியில் இருந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்தவன்… அதை தர்ஷன் கையில் கொடுத்தான்.
“ பொதுவாக இருப்பது தான் மேடம்…அதற்காக தான் நான் கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பி விடுவேன்…நேற்று தர்ஷன் கலர் பென்சில் பாக்ஸ் தொலைந்து விட்டது என்றான்.
அது தான் கடை திறந்ததும் வாங்கி வர லேட்டாகி விட்டது…பாப்பா எங்கே மேம் எழுந்து விட்டாளா..? நர்சரி கிளம்ப வேணும் இல்லையா..? என கேட்டான்.
புவனா அவனை பாசமாக பார்த்தாள்…இந்த நான்கு வருடங்களில் அவன் அன்பு காட்டுவது ஏன் பரிசு வாங்கி கொடுப்பது…புவனாவின் குழந்தைகளிகம் மட்டும் தான்.
குரு மூர்த்தி அவள் தாய் மீனா, ஏன் அவளிடம் கூட அதிகமாக நெருங்கி பழக மாட்டான்…குரு மூர்த்தி கூட அடிக்கடி சொல்லும் வசனம்.
“ அவன் ரோபோ மீனா நான் அவனிடம் நெருங்க நினைக்கிறேன்…விலகி போகிறான் இவனை என் புள்ள போல தான் பார்க்கிறேன்.
எந்த பிரதிபலனும் அவன் என் கிட்ட எதிர்பார்ப்பது இல்லை…சம்பளத்தை கூட்டி தா என கூட கேட்பது இல்லை மற்ற கமாண்டோஸ்காக தான் கேட்பான்…அதுவும் நியாயமாக இருந்தால் மட்டும்.
வயசு பெண்ணுகளை சுத்தமாக நெருங்க விட மாட்டேன் என்று இருக்கிறான்…அவங்களை ஏதோ அருவருப்பான பொருளாக பார்க்கிறான்…
இவன் இப்படி இருந்தால் எப்படி அவனுக்கு கல்யாணம் நடக்கும்…” என புலம்புவார்.
புவனா “ முதலில் நீ சாப்பிட்டு விட்டாயா பவன்…?எங்களுக்கு தெரியும் வேலை என வந்து விட்டால்.. நீ சாப்பாடு, தூக்கத்தை பார்க்க மாட்ட என்று…
போய் முதலில் சாப்பாடு மற்றவங்க எல்லாம் சாப்பிட்டு விட்டாங்க…தர்ஷா உனக்கு இந்த வாரத்தில் மட்டும் பவன் நான்கு தடவை… கலர் பெட்டி வாங்கி கொடுத்து இருக்கிறான்.
அதுவும் என் கிட்ட சொன்னால் நான் திட்டுவேன் என தெரிந்து கொண்டு…அவனிடம் நைசாக பேசி வாங்கி கொள்ளுகிற உனக்கு… ஒரு பொருளை பத்திரமாக வைத்து கொள்ள தெரியாதா..? என கேட்டாள்.
பவனுக்கு தெரியும் எவ்வளவு தான் பரம்பரை பணக்காரங்களாக இருந்தாலும்…ஏன் சி.எம் பெண்ணாக இருந்தும் கூட புவனா ஆடம்பரமாக இருக்க மாட்டாள்…அந்த ஒன்றை பார்த்து பிடித்து தான் பரத் அவளை பெண்ணு கேட்டு வந்தது.
அது போல அப்பா இல்லை என்று தர்ஷன் அவள் பெண்ணு தியாவுக்கு கூட…அதிக செல்லம் காட்ட மாட்டாள்.
அவர்களுக்கு செல்லம் கொடுப்பது குரு மூர்த்தி, மீனா அடுத்து பவன் தான்.
“ மம்மி நான் ஜாக்கிரதையாக தான் கலர் பாக்ஸ் வைத்து இருந்தேன்…ஆனா பாவம் மம்மி தினேஷ் கிட்ட கலர் பாக்ஸ் இல்லையா..?
அவன் என் கலர் பாக்ஸை பார்த்து கொண்டு இருந்தான் மம்மி…
அது தான் அவனுக்கு கொடுத்தேன் நீ திட்டவே என்று தான்… அங்கிள் கிட்ட தொலைஞ்சு போயிட்டு என சொன்னேன்…” என்றான்.
பவன் “ தர்ஷா தப்பு நீ யாரு..? குரு மூர்த்தி பேரன்…உன் தாத்தா போல நேர்மையை பேசி நடக்க வேணும் அம்மா எப்பவுமே…
நீ சமூகத்தில் மற்றவங்க மதிக்கும் இடத்தில்… இருக்க வேணும் என்று தானே உன்னை திட்டுகிறாங்க.
அம்மா என்பது கடவுள் கொடுக்கும் வரம்…அது அவ்வளவு சீக்கிரமாக யாருக்குமே கிடைப்பது இல்லை…உனக்கு அந்த வரம் கிடைத்து இருக்கு அதை நீ எப்பவுமே அலட்சியப்படுத்த கூடாது.
உண்மையை சொல்லி நேர்மையாக உன் தாத்தா போல வாழ வேணும்…” என்றான்.. தர்ஷனுக்கு அவன் வயதுக்கு பவதீப் சொன்னது பாதி புரியவில்லை என்றால் கூட..
அம்மா கிட்ட பொய் சொல்ல கூடாது என அங்கிள் சொல்கிறார்…என புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.
“ உன்னை போல என்னை இது வரைக்கும் யாருமே பாராட்டியது இல்லை பவன்….என் நேர்மையை முட்டாள் தனம் என்று தான் சொல்வாங்க…” என சொல்லி கொண்டே தமிழ் நாட்டு முதல்வர் குரு மூர்த்தி வந்தார்.
வழமையான அரசியல் வாதி போல வெள்ளை வெட்டி சட்டை…இடது கையில் தங்க நிற கடிகாரம் வலது கையில் கல்யாண மோதிரம்…
நெற்றியில் பூஜை முடிந்து வந்த அடையாளமாக பட்டை திருநீறு போட்டு இருந்தார்.
“ அங்கிள் என்னை இறக்கி விடு தாத்தா கிட்ட நான் போக வேணும்…” என தர்ஷன் சொன்னதும்… பவன் அவனை இறக்கி விட்டவன் குரு மூர்த்திக்கு சலூட் அடித்தான்.
“ வாடா வா என் சிங்க குட்டி “ என சொல்லி கொண்டே… குரு மூர்த்தி பேரனை தூக்கி அணைத்து கொண்டவர்…அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தார்.
புவனா “ அப்பா பாருங்க பா இத்தோடு இந்த வாரம் மட்டும்…பவன் இவனுக்கு நான்காவது தடவையாக கலர் பாக்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறான்.
காரணம் கேட்டால் யாரோ ஒரு பையனுக்கு கொடுத்து விட்டேன் என…கதை சொல்கிறான் கொஞ்சம் என்ன என்று கேளுங்க பா…” என புகார் சொன்னாள்.
“ உனக்கு அவன் மேலே புகார் சொல்லாமல் இருந்தால் தூக்கம் வராதே…முதலில் நீ கம்பெனிக்கு கிளம்ப ரெடியாகு நாங்க…
எங்க பேரபசங்களை பார்த்து கொள்வோம் கூடவே பவன் இருக்கிறான்…” என சொல்லி கொண்டே… பேத்தியை தூக்கி கொண்டு மீனாட்சி வந்தார்.
தியா பவனை பார்த்தும் மழலை மொழியில்…அங்கி என அழைத்து அவனை தூக்க சொல்லி… அவன் பக்கமாக கையை நீட்டினாள்.
பவன் மெல்ல நடந்து வந்து மீனா கையில் இருந்த..அவளை வாங்கி கொண்டவன் அவளின் கலைந்து இருந்த… தலையை கோதி விட்டவன்.
“ பாப்பா எழுந்து விட்டாயா..? பால் சாப்பிட்டு விட்டீங்க தானே..? நம்ம நர்சரி கிளம்பலாம் …” என சொன்னான்.. தியாவுக்கு நர்சரி போக பிடிக்கும்…
அங்கே அவள் போல நிறைய குட்டி பசங்க இருப்பதால்… விளையாட அவளுக்கு சந்தோஷமாக இருக்கும்.
மீனா “ அவள் சாப்பிட்டு விட்டாள்…முதலில் நீ சாப்பிட வா ஜோதி சாப்பாடு எல்லாம் ரெடி தானே…? என்னங்க நீங்களும் வாங்க புவனா நீ சீக்கிரமாக டிரஸ் பண்ணி விட்டு வா…” என்றார்.
பவன் “ மேடம் நான் வேலை முடிந்ததும் பிறகு சாப்பிடுகிறேன்…முதலில் சாருக்கு சாப்பாடு எடுத்து வைங்க…” என்றான்.
மீனா “ பவனா இது என் ராஜ்ஜியம்…நான் வைப்பது தான் சட்டம் முதலில் நீ மறு வார்த்தை பேசாது சாப்பிட வா…காலையில் நீ சரியாக சாப்பிடுவது இல்லை என்று.
ராகுல் கூட சொல்லி வருத்தப்பட்டான்…அல்சர் வந்தால் நீ தான் கஷ்டபடுவ பிறகு எப்படி நீ எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்ப…?அதனால் பேசாது சாப்பிட வா…” என்றார்.
மயில் ஆடி வரும்…
