ஆடி வரும் வண்ண மயிலே-04

அத்தியாயம்:04 

மீனாட்சி பவதீப்பை சாப்பிட அழைக்க அவன் சட்டென வரவில்ல… 

காரணம் அவன் என்ன தான் குடும்பத்தோடு நல்ல உறவில் இருந்தாலும் கூட…குருமூர்த்தி தமிழ் நாட்டின் முதல்வர் அவர் கூட…அவரின் பிரதான பாடி கார்ட் எப்படி ஒன்றாக அமர்ந்து சேர்ந்து சாப்பிட முடியும்.  

அதனால் தான் அவன் மீனாட்சி, புவனா ஏன் குரு மூர்த்தி அழைத்தால் கூட…நேரடியாக மறுத்து விடுவான் அவனுக்கு தன் எல்லையின் அளவு தெரியும்.  

குரு மூர்த்தி “ நீ எப்படி விதம் விதமாக மிரட்டல் விட்டாலும்…அவன் சாப்பிட வர மாட்டான் மீனா காரணம் நான்… என் கூட ஒன்னாக சேர்ந்து சாப்பிட மாட்டான்.  

அது எனக்கு மட்டுமல்ல உனக்கு கூட தெரியும்…அவன் என்னை முதல்வராக தான் பார்க்கிறான் ஒரு மனுஷனாக பார்க்கவில்லை…அட்லீஸ் அவனுக்கு தெரிந்தவர் என்றும்.  

பவன் நீ உன் உயிரை கூட பொருத்படுத்தாது என்னை ஒரு தடவை அல்ல… பல தடவை காப்பாற்றி இருக்க காப்பாற்றி கொண்டும் வருகிற.  

எனக்கு சாவுக்கு பயம் இல்லை ஆனால் என்னை நம்பி உள்ள என் குடும்பம்… 

அதை விட என் நாட்டு மக்கள் அவங்களுக்கு நன்மை செய்யாது…சுயநலம் மிக்க கரங்களில் கொடுத்து விட்டு நான் போக விரும்பவில்லை பா… 

அரசியலுக்கு நான் வந்ததே என்னால் முடிந்ததை….மக்களுக்கு செய்ய தான் நான் முதல்வர் நாற்காலிக்கு ஆசைபடவில்லை மக்கள் தான்… என்னை வலுக்கட்டாயமாக இதில் அமர வைத்தார்கள்.  

காரணம் அவர்களுக்கு என் மேலே உள்ள நம்பிக்கை…அதை பாதியில் சரியாக முடிக்காது நான் போக விரும்பவில்லை.  

எனக்கு தெரியும் நீ எதையுமே எதிர்பார்த்து கடமையை செய்வது இல்லை என்று…உன் கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தால்… அதை உன் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவ என்று.  

அதனால் தான் உன்னை என் கூட வா என கெஞ்சி அழைத்து வந்தேன்…உன் மேலே உன்னை விட எனக்கு நம்பிக்கை இருக்கு பவா… 

நான் இல்லை என்றால் கூட என் குடும்பத்திற்க்கு.. பாதுகாப்பாக இருப்ப என்று.  

உன் வயது என் அனுபவம் உன்னை முதல் பார்வையில் நான் …உன்னை பற்றி தெரிந்து கொண்டேன் அதனால் தான் உன்னை என் புள்ளையாக பார்த்தேன்…  

இது ஆம்பள பசங்க இல்லாத வீடு என் மகள் இந்த வயதில் தன் துணையை இழந்து…இரண்டு குழந்தைங்க கூட தனி மரமாக நிற்கிறாள் மீனா வயதானவள்.  

இவங்களை எல்லாம் தனியாக உறவுகளை நம்பி விட்டு போக முடியாது…எதிரிங்களை விட கூடவே இருந்து குழி பறிப்பது இவங்க தான்…அதை விட என் மக்கள். 

இதை எல்லாம் நீ வர முன்னே நைட்டில் யோசித்து யோசித்து…எனக்கு பிரஷர் கூடி தூக்கம் பறி போய் விட்டது.. இப்போ தான் நான் நிம்மதியாக தூங்குகிறேன்… 

காரணம் நீ …நீ வந்த பிறகு தான் எல்லாமே கட்டுக்குள்ளே இருக்கிறது…அப்படிப்பட்ட உன்னை என் மகனாக நான் பார்க்கிறேன் ஆனால் நீ விலகி நிற்கிற…” என வருத்தோடு சொன்னார்.  

அவர் பேசி முடிய அங்கே கடும் அமைதி நிலவியது…அதை கலைத்தது தர்ஷன், தியாவின் சத்தம்…இருவருமே விளையாடி கொண்டு இருந்தனர்.  

பவன் “ ரொம்ப பெரிய வார்த்தை பேச வேணாம் சார்…நீங்க என்னை வைத்திருக்கும் இடம் ரொம்ப பெரிய இடம் சார்…என் உயிரை கொடுத்தாவது உங்களை பாதுகாப்பேன்.  

உங்களை போல ஒருவர் தான் இந்த நாட்டுக்கு தேவை …இந்த முதல்வர் நாற்காலிக்கு பொருத்தமானவர்… நீங்க மட்டும் தான் அதை யாராலும் மாற்ற முடியாது.  

எந்த அப்பா முன்னாடியும் பையன் சமமாக உட்கார மாட்டான்…அது எனக்கும் பொருந்தும் நீங்க டைம்க்கு மாத்திரை போட வேணும்… முதலில் போய் சாப்பிடுங்க நான் பிறகு சாப்பிடுகிறேன்…” என்றான்.  

இதற்க்கு மேலே அவனிடம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்…அவன் பிடிவாதம் அப்படி அதனால் குரு மூர்த்தி சாப்பிட எழ ….மேஜர் என அழைத்து கொண்டு ராகுல் வந்தான்.  

பவன் அவனை கேள்வியாக பார்க்க…குரு மூர்த்திக்கு சலூட் அடித்து விட்டு.  

ராகுல் “ மேஜர் பொக்கே ஷாப்பில் இருந்து பொக்கே ஒன்று வந்திருக்கு…நான் ஒன்று இரு தடவையாக செக் பண்ணி விட்டேன்… 

புவனா மேடம் தான் ஆடர் கொடுத்தாக… டெலிவரி பையன் சொன்னான் அது தான் அதை வாங்கி கொள்ளவா..? என கேட்க வந்தேன்…” என்றான்.  

புவனா “ அட! பொக்கே வந்து விட்டதா..? இப்போ தான் இன்னும் காணவில்லை கடைக்கு… கால் பண்ணி பார்க்க வேணும் என நினைத்தேன் நல்ல காலம் வந்து விட்டது.  

ராகுல் அது நான் ஆடர் பண்ணிய பொக்கே தான்…எடுத்து வா ஜாக்கிரதையாக கொண்டு வா பூ ஒன்றும் உதிர கூடாது…” என்றாள்.  

குரு “ யாருக்கு மா பொக்கே..? உன் ப்ரண்ட்ஸ்க்கா..? இல்ல உன் பார்ட்னர்ஸ் யாருக்கும் பிறந்த நாளா..? என கேட்டார்.  

புவனா “ என்னப்பா மறந்து விட்டீங்களா..? குட்டி உங்களுக்கு கால் பண்ணி இருந்தாள்…தன் டான்ஸ் புரோகிராமுக்கு வாங்க தாத்தா என்று.  

நம்மை எல்லாம் இன்வைட் பண்ணி இருந்தாள் …நேற்று மினிஸ்டர் ராஜன் பெண்ணு ரிசப்ஷன் என்பதால்…நம்மால் போக முடியவில்லை நம்ம கூட கோபத்தில் இருப்பாள்.  

அது தான் அவளை சமாதானப்படுத்த இந்த பொக்கே எடுத்து போகிறேன்…” என்றாள்.  

மீனா “ யாரு மயூவா கோப்படுவாள்…ஏன் புவி இப்படி பொய் சொல்கிற..? பூமிக்கு வலிக்க கூடாது என்று நடக்கும் பெண்ணு அவள்… 

அவள் கோபக்காரியாக இருந்து இருக்க…அவள் அப்பனை கிழித்து தோரணமாக தொங்க விட்டு இருப்பாள்…அவள் அம்மா போல தான் அவளும் சியாமளா பொறுமையின் வடிவம்.  

ம் இந்த கண்றாவி காதல் வந்து அந்த பெண்ணு வாழ்க்கையை அழித்து விட்டது…சக்ரபாணி அண்ணன் உடைந்து போய் விட்டார் மீனுவும் அவரும் இல்லை என்றால் மயூ பாப்பா கதி… 

குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல இருக்கும்…நாட்டியத்துக்கு என பிறந்த பெண்ணு அவள்.. பெயர், புகழ் எல்லாம் அவளுக்கு கடவுள் கொடுத்த வரம். 

அவளை கட்டிக்க போகிறவன் கொடுத்து வைத்தவன்…முக்கியமாக அவள் அப்பன் ராகவன் போல இருக்க கூடாது…நம்பிக்கை துரோகி அவன்…” என கோபமாக சொன்னார்.  

குரு “ ஓ! மறந்தே போய் விட்டேன்…சக்ரா கூட எனக்கு ஞாபகப்படுத்தவில்லை இல்ல என்று இருக்க…நம்ம பாதியில் அவள் நடனத்தை பார்க்க போய் இருக்கலாம்.  

சென்னையில் டான்ஸ் புரோகிராம் நடந்தால் கட்டாயமாக நான் வர வேணும் என சொல்வாள்… நம்ம மேலே ரொம்ப அன்பு அவளுக்கு . 

சக்ரபாணிக்கும் எனக்கும் ஒரே பெண்ணை தந்த கடவுள்…அவங்க வாழ்க்கையில் விளையாடி விட்டான் அவன் பெண்ணை பறி கொடுத்தான்…என் பெண்ணு துணையை இழந்து நிற்கிறாள்.  

என்ன செய்வது எல்லாம் நிறைவாக கொடுத்தால்…தன்னை மறந்து விடுவான் என்று கடவுளுக்கு தெரிந்து தான்.. ஏதோ ஒரு குறையை கொடுக்கிறான்.  

மீனா மயூ பாப்பாவுக்கு பொக்கே கூட அவளுக்கு பிடித்த டிரஸ், நகை, ஸ்வீட் ரெடி பண்ணி…புவி கிட்ட கொடுத்து அனுப்பு இந்த சனிக்கிழமை சக்ரா வீட்டுக்கு நம்ம போய் விட்டு வரலாம்.  

அவன் இங்கே வர மாட்டான் காரணம் ராகவன்…என் தம்பி மகன் தான் அவன் ஆனால் செய்வது எல்லாம் அயோக்கியதனம்… 

என்னையே போட்டு தள்ள பார்க்கும் ஆளு… அவன் சேர்ந்து இருக்கும் கூட்டம் அப்படி.  

அதை விட என்னை ஜெயிக்க வேணும் என நினைத்து…இப்போ சேர கூடாத கூட்டத்தில் சேர்ந்து இருக்கிறான்…என்ன செய்வது என் குடும்பத்து பெயரை கெடுக்க என்று ஒருவன். 

இவன் கிட்ட இந்த சியாமளா பெண்ணு ஏமாந்து விட்டாளே…என்று தான் எனக்கு வலியை கொடுக்கிறது எனக்காக தான்.. அவனுக்கு தன் பெண்ணை கட்டி கொடுத்தான் சக்ர.  

நானும் தம்பி மகன் நல்லா இருக்க வேணும்…என்ற பாசத்தில் பெண்ணு கேட்டு போனேன் மறு வார்த்தை கூட கேட்காது…என் தம்பி மகன் என்பதால் கல்யாணம் பண்ணி கொடுத்தான்.  

இப்போ அவனை பார்க்கவே எனக்கு குற்ற உணர்வாக இருக்கு மீனா…மயூ வாழ்க்கையை நிச்சயமாக நல்லபடியாக நான் அமைத்து கொடுப்பேன்… 

அது தான் நான் செய்த தவறை சரி செய்வதற்கான… ஒரு பாவ மன்னிப்பு…” என்றார்.  

மீனா “ நீங்களும் தெரிந்தா இதை எல்லாம் செய்தீங்க…சக்ர அண்ணன் உங்க ஊர், உங்க நண்பர் வேறு ராகவன் உங்க தம்பி மகன்… 

அவன் சியாமளாவை காதலிக்கிறேன் பெரியப்பா…நீங்க வந்து பெண்ணு கேளுங்க என கெஞ்சி அழைத்தான்.  

நீங்களும் அவன் மேலே உள்ள பாசத்தால் பெண்ணு கேட்டீங்க… 

அவன் இப்படி மாறுவான் என யார் கண்டது இப்போ கூட… உங்க கிட்ட பட்டும் படாமலும் தானே நடந்து கொள்கிறான். 

சரி விடுங்க இது பற்றி நிறைய பேசி விட்டோம்…மயூவுக்கு நம்ம இருக்கிறோம் தானே அவளை பார்த்து கொள்ளலாம்..” என்றார்.  

குருமூர்த்தி அவர் சாப்பிட முன்னே வழமை போல பேரனுக்கு ஊட்டி விட்டார்… 

பவன் எவ்வளவு சொன்னாலும் தங்கள் கூட சாப்பிட மாட்டான்…என்பதால் மீனா ராகுலிடம் அவனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டார்.  

அவர்கள் சாப்பிட்டு முடிய குருமூர்த்தி பேரன், பேத்தியை அழைத்து கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினார்…பவன், ராகுல் அவர் பாதுகாப்புக்கு போனார்கள்.  

தர்ஷன், தியா படிப்பது கோ எஜுகேஷன் ஸ்கூல்…அந்த ஸ்கூலில் பல விவிஐபிங்க புள்ளைங்க படிப்பதால்…பாதுகாப்பு அதிகம் தர்ஷன் அங்கே முதலாம் வகுப்பில்  படிக்க தியா எல்கேஜியில் படித்தாள்.  

பவன் தர்ஷனை தூக்கி கொண்டு அவன் வகுப்புக்கு போக…குரு மூர்த்தி பேத்தியை தூக்கி கொண்டு எல்கேஜி வகுப்புக்கு போனார்.. 

ஸ்கூல் முடிய புவனா கார்ட்ஸ் கூட வந்து இருவரையுமே… அழைத்து வீட்டில் விட்டு விட்டு தன் கம்பெனிக்கு போவாள்.  

பரத் கம்பெனியை தான் அவள் இப்போ நடத்தி கொண்டு வருவது…அவன் ஓரே வாரிசு தந்தை இறந்து விட்டார் தாய் தன் சொந்த ஊருக்கு போய் விட்டார்…கடைசி காலத்தை நிம்மதியாக அங்கே கழிக்க என்று.  

புவனா தான் மாதத்தில் இரு தடவை தர்ஷன், தியாவை அழைத்து கொண்டு…அவரை பார்த்து ஒரு வாரம் அவர் கூட தங்கி விட்டு வருவாள்.. புவனா சக்ரபாணி வீட்டுக்கு போன போது… 

அவர் இல்லை கம்பெனிக்கு கிளம்பி இருந்தார்…கல்யாணி தான் அவளை சந்தோஷமாக வரவேற்று கட்டி கொண்டு.  

கல்யாணி “ புவி மா உன்னை பார்த்து இரண்டு மாதம் இருக்கும்… குரு அண்ணன் ,மீனா எல்லாம் எப்படி இருக்கிறாங்க…முக்கியமாக என் தங்க பேர பசங்க..? என கேட்டார்.  

புவனா “ நாங்க எல்லாம் நல்லா இருக்கிறோம் ஆன்ட்டி…எங்கே அங்கிள், மயூவை காணோம்..?  

நேற்று அவள் டான்ஸ் புரோகிராமுக்கு வர முடியாமல் போய் விட்டது…அது தான் அவளை பார்க்க வந்தேன்…” என்றாள். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
634 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page