ஆடி வரும் வண்ண மயிலே-06

அத்தியாயம்:06 

சக்ரபாணி கல்யாணியிடம் குழந்தைகளுக்கு வாங்கி வந்த பொருட்களை…எல்லாம் நீயும் அசோக்கும் கொடுத்து விட்டு வாங்க என சொன்னார்.  

கல்யாணி “ என்னங்க இது அது நல்லாவா இருக்கும்..? குரு அண்ணன் உங்க நண்பர் மட்டுமல்ல என்ன இருந்தாலும் கூட சம்பந்தி… 

சியாமளா போய் விட்டாள் தான் அதற்காக…அவள் புகுந்த வீட்டு உறவு இல்லை என்று ஆகி விடுமா..? 

நமக்கு பிறகு பாப்பாவுக்கு உறவு வேணாமா..? அவளை தனிமரமாகவா நிற்க சொல்கிறீங்க…நீங்க சொல்வது புரிகிறது மாப்பிள்ளை பற்றி தானே சொல்கிறீங்க.  

உங்களுக்கே தெரியும் நம்மை விட சியாமளா விஷயத்தில்…மாப்பிள்ளை மேலே குரு அண்ணன் தான் அதிக கோபமாக இருந்தார்…இப்போ வரைக்கும் அவர் கூட அண்ணன் சரியாக முகம் கொடுத்து பேச மாட்டார்.  

தன் ஒரே தம்பி மகன் என்று கூட அவர் பார்க்கவில்லை…புவனா போல தான் சியாமளாவையும் நினைத்தார்… 

மாப்பிள்ளைக்கு அண்ணன் கூட கோபம் மட்டுமல்ல… அரசியலில் அவரை விட மேலே வர வேணும் என்ற வெறி.  

அதனால் அதிகமாக அவர் வீட்டுக்கு வருவதில்லை…ஏன் பேச கூட மாட்டார் இத்தனைக்கும் ஒரே கட்சி…அது மட்டுமல்ல மாப்பிள்ளை செய்த தப்புக்கு அண்ணன் என்ன செய்வார்.  

அவரும் சந்தோஷமாக தானே மாப்பிள்ளை சொன்னதை நம்பி கல்யாணத்தை நடத்தி வைத்தார்…தன் நண்பன் பெண்ணு தன் வீட்டு மருமகள் என ரொம்ப பெருமையாக சொல்வார்.  

அவருக்கு என்ன தெரியும் இவர் இப்படி மாறுவார் என்று…இன்னும் ஒரு விஷயம் பரத் தம்பி சாவுயில் கூட இவருக்கு… தொடர்ப்பு இருப்பதாக ஊர் பேசி கொண்டது.  

ஆனால் போதுமான சாட்சி இல்லை….கூடவே தன் தங்கச்சி தாலியை எந்த அண்ணன் அறுப்பான் என்ற எண்ணம் குரு அண்ணன் குடும்பத்துக்கு…அது தான் அந்த வதந்தியை இப்போ வரைக்கும் அவர் நம்பவில்லை.  

ஏன் அவரை கூட இரண்டு மூன்று தடவை…போட்டு தள்ள பார்த்தாங்க நல்ல காலம் அவர் பாடி கார்ட் அந்த தம்பி பெயர் கூட … 

ஆ! ஞாபகம் வந்து விட்டது பவதீப் தம்பி தானே காப்பாற்றினார்…இதை எல்லாம் கொஞ்சம் யோசித்து பாருங்க தப்பு யார் மேலே என தெரியும்… 

நான் சொல்வேன் நீங்க கூட வீம்பு பிடித்து கொண்டு அண்ணன் வீட்டுக்கு… வராது இருப்பது எனக்கு சரியாக படவில்லை.  

பாப்பாவும் பெரிதாக வெளியே எங்குமே போவதில்லை…டான்ஸ் ஸ்கூல் இல்ல என் கூட கோவிலுக்கு வருவாள்… பிறகு பாரினில் நிகழ்ச்சிக்கு போவாள்… 

அதுவும் புரோகிராம் முடிய அடுத்த நாளே கிளம்பி விட வேணும்…என்று நீங்க சொல்வீங்க பிறகு எங்கே சுற்றி பார்ப்பது… அவள் அடுத்த சியாமளாவாக உருவாக வேணாம்.  

நம்ம பெண்ணை தான் பொத்தி பொத்தி வளர்த்து உலகம் தெரியாமல் செய்து விட்டோம்…மயூவும் அப்படி வளர வேணாம்ங்க கொஞ்சம் யோசித்து பாருங்க… 

நீங்களும் இந்த சனிக்கிழமை குரு அண்ணன் வீட்டுக்கு வர பாருங்கள்…சரி பால் ஆறி போய் விட்டது நான் வேற எடுத்து வரேன் …” என சொல்லி விட்டு போக சக்ரபாணி யோசிக்க ஆரம்பித்தார்.  

பொதுவாக மயூரி வீட்டில் தான் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவாள்… அடவுகளில் சந்தேகம் வந்தால் மட்டும் காலையில் அவள் தாய் சியாமளா… பெயரில் நடக்கும் டான்ஸ் ஸ்கூலுக்கு போய் விடுவாள்.  

அங்கே அதை நிர்வாகிப்பது அவளின் குருவும்…சியாமளாவின் சீனியரான சாரதா தான் அவர் தான் அவளை… இன்னும் பட்டை தீட்டி கொண்டு இருப்பது.  

சாயங்காலம் தான் அவள் வகுப்பு எடுப்பது…அப்போ தானே ஸ்கூல், காலேஜ் முடிந்து பெண்ணுங்க வருவாங்க…. 

ஏழு மணிக்குள்ளே எல்லாம் சாரதா,மயூரி வகுப்பை… முடித்து அனுப்பி வைத்து விடுவார்கள்.  

அதற்க்கு காரணம் காலம் கெட்டு கிடக்குது…பொம்பள புள்ளைங்க நைட் லேட்டாக போக கூடாது என்பது தான்.  

சாரதா வீடும் டான்ஸ் ஸ்கூலில் இருந்து ஒரு தெரு தள்ளி தான் இருந்தது…அவருக்கு சீக்கிரமாக போக வேண்டிய கட்டாயம் இல்லை…வீட்டில் அவரை எதிர்பார்த்து யாருமே இல்லை.  

அவர் மகன் கிருபாகர் ராணுவத்தில்…லெப்டினன்ட் ஜெனரலாக இருக்கிறான் முப்பதெட்டு வயது… 

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை விட தனக்கு திருமணம்… தன் சேவைக்கு தடையாக இருக்கிறது என்பது அவன் கருத்து.  

சாரதா எவ்வளவு அழுது கெஞ்சி புரண்டு பார்த்தும் கூட அவன் அசையவே இல்லை…கடைசியில் கடவுள் மேலே பாரத்தை போட்டு விட்டு… அவர் நாட்டியத்திற்க்கு தன்னை அர்ப்பணித்து விட்டார்.  

மயூரி கல்யாணியிடம் சொல்லி விட்டு கண்மணி கூட டான்ஸ் ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள்…யசோதா நாட்டிய நிகழ்ச்சி என்றால் மட்டும் தான் மயூரியிடம் வேலை இருக்கும்…இல்லை என்றால் சக்ரபாணி தன் கம்பெனியில் வந்து வேலை பார்க்க சொல்வார்.  

நீ படித்த படிப்பு வீணாக கூடாது வந்து வேலை பாரு…உனக்கு தனியாக சம்பளம் தருகிறேன் என்று சொன்னவர்…அவளுக்கு தனியாக சம்பளம் வேறு கொடுத்தார்… 

யசோதாவுக்கு உண்மையில் சந்தோஷமாக இருந்தது…இரட்டை சம்பளம் அவள் குடும்பத்திற்க்கு பார்த்து கொள்ள உதவியாக இருந்தது.  

தந்தை இல்லை தாய் இத்தனை வருடமும் டெய்லரிங் செய்து தான்…தன் குழந்தைகளை பார்த்து கொண்டவர் யசோதா தான் மூத்த பெண்ணு.  

அவளுக்கு பிறகு தங்கச்சி இரண்டு இருக்கு…. குமுதா கஷ்டப்பட்டு தான் தன் மூத்த பெண்ணை காலேஜ் வரைக்கும் அனுப்பி படிக்க வைத்தார்…கல்வி தான் ஒருவரை உயர்த்தும் என்ற எண்ணம் உள்ளவர் அவர்.  

யசோதாவுக்கு மயூரி கூட கை நிறைய சம்பளம் கூடவே…அவள் ஊருக்கு போகும் போது அவள் தாய், தங்கைகளுக்கு டிரஸ் வாங்கி…கொடுத்து அனுப்புவாள் கல்யாணி ஸ்நாக்ஸ் வகைகள் செய்து அனுப்புவார்.  

மயூரி கண்மணி கூட தன் டான்ஸ் ஸ்கூலுக்கு வந்தாள்…சியாமளா நாட்டியாலயா என பெயர் கொண்டு கம்பீரமாக கட்டிடம் நிமிர்ந்து நின்றது.  

சக்ரபாணி தன் மகளுக்காக ஆசையாக நடு மத்தியில் வாங்கி போட்ட இடம்…அதில் சகல வசதிகளோடு மகள் பெயரில் ஆரம்பித்த ஸ்கூல் அது… 

சியாமளா  தன் உதவிக்கு வாங்க அக்கா என சாரதாவை அழைத்தது…சியாமளா போன பிறகு அதை விற்காது சக்ரபாணி…மகள் நினைவாக சாரதாவை வைத்து நடத்தி வந்தார்.  

மயூரி,கண்மணி கூட காரில் இருந்து இறங்கி உள்ளே போக…டிரைவர் ,கார்ட்ஸ் வண்டி கார் அங்கே பார்க் பண்ண போனார்கள்…மயூரிக்காவுக்கு தன் கூட கார்ட்ஸ் வருவது சுத்தமாக பிடிக்காது.  

நான் என்ன மினிஸ்டரா..? இல்ல முதல்வரா..? நான் சாதாரண நாட்டிய கலைஞர் எனக்கு சாதாரண வாழ்க்கை தான் பிடிக்கும் தாத்தா…இந்த ஏற்பாடு வேணாம் என சொல்வாள்.  

எல்லா விஷயத்திலும் பேத்தியின் விருப்பத்தை ஏற்று கொள்ளும் அவர்…அவள் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் அவள் வேணாம் என சொன்னாலும் கேட்க மாட்டார்.  

அதுவும் அசோக் மயூரிகா பாதுகாப்பு விஷயத்தில் ரொம்ப கெடுபிடியாக இருப்பான்…அவன் மயூரியை குழந்தையில் இருந்து பார்த்து வளர்ந்தவன் தானே… 

சக்கர பாணி தான் மயூரி படித்த அதைய ஸ்கூலில் அவனை படிக்க வைத்தது…அவனை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்க அவர் கேட்க மறுத்து விட்டான்.  

நீங்களும் அப்பாவும் வயதான ஆளுங்க…என்ன தான் கார்ட்ஸ் இருந்தாலும் கூட அவங்களும் மனிதர்கள் தானே… ராகவன் பணத்துக்கு விலை போய் விடும் தருணம் வரலாம்.  

மயூரியை அவர் கடத்தி வைத்து உங்களை தன் வழிக்கு கொண்டு வர கூடும்…இதில் குரு மூர்த்தியால் ஏதும் செய்ய முடியாமல் போகலாம்…காரணம் கட்சி சட்ட திட்டம் அப்படி.  

அதனால் நான் இங்கேயே மேற்படிப்பு படிக்கிறேன் என்றவன்…டெல்லி காலேஜ்ஜில் எம்பிஏ படித்து விட்டு வந்தான்.  

உண்மையில் தனக்கு மகன், பேரன் இல்லாத குறையை…அசோக் தீர்த்து வைத்து விட்டான் என சக்ரபாணி அடிக்கடி சொல்வார்.  

மயூரி வர அங்கே சில காலேஜ் பெண்ணுங்களுக்கு… சாரதா நாட்டியம் கற்று கொடுத்து கொண்டு இருப்பதை கண்டாள்… 

வழமையாக சாயங்காலம் வருபவர்கள்… இப்போ வந்து ஆச்சரியமாக இருந்தது.  

மயூரியை கண்டதும் மயூரி அக்கா என ஒன்றாக… அனைவருமே மகிழ்ச்சியாக அழைத்தார்கள் … 

அவர்கள் அழைப்பில் பின்னால் திரும்பி பார்த்த சாரதா முகம் மலர மயூ மா…என்று அழைத்து கொண்டு மயூரியை நோக்கி வந்தார்… 

அவர் மயூரி அருகில் வந்ததும் அவள்…அவர் பாதம் தொட்டு வணங்க சாரதா அவள் தலையில் கை வைத்து…ஆசிர்வாதம் வழங்கினார்.  

சாரதா “ என்னமா அதிசயமாக இருக்கு…நீ பொதுவாக காலையில் வர மாட்ட நாட்டியம் பற்றி ரிசர்ச் பண்ணி கொண்டு இருக்க என தெரியும்…சாயங்காலம் தான் வருவ இப்போ புரோகிராம் கூட இல்லை.  

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து இருக்கலாமே மா…போன வாரம் தான் கனடாவில் இருந்து வந்த உடனே… இங்கே இரண்டு புரோகிராம் புக் ஆகி இருந்தது…அதையும் வெற்றிகரமாக முடித்து கொடுத்து விட்ட.  

தொழில் மட்டும் முக்கியம் இல்லை மா…நம்ம உடம்பையும் பார்த்து கொள்ள வேணும் பிறகு… நான் சக்ரபாணி அங்கிளுக்கு…பதில் சொல்ல வேண்டி வரும்.  

அவர் என்னை நம்பி இந்த டான்ஸ் ஸ்கூலை மட்டுமல்ல…உன்னையும் பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார்…” என்றார்.  

மயூரி அவரை அன்போடு அணைத்து கொள்ள…அவரும் பெண்ணு இல்லாத குறையை தீர்க்க…வந்தவளை பாசமாக அணைத்து கொண்டார்.  

மயூரி “ ஆன்ட்டி நீங்களும் தான் என் கூட கனடா வந்தீங்க…இங்கேயும் புரோகிராமுக்கு வந்தீங்க அப்போ உங்களுக்கு மட்டும் களைப்பு இருக்காதா..?  

இதோ இப்போ கூட இவங்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறீங்க…முக்கியமாக நீங்க தான் ரெஸ்ட் எடுக்க வேணும்… பிறகு கிருபா அண்ணா வந்து பார்த்தால்…எங்க கிட்ட தான் கேள்வி கேட்கும்…” என்றாள்.  

சாரதா “ அட! சும்மா போ பாப்பா உங்க அண்ணுக்கு தாயை விட…தாய் நாட்டை தான் அதிகமாக பிடிக்கும் அது தான் இந்த தாயை இன்னும் பார்க்க வராமல்… 

எல்லையில் இருக்கிறான் சரி கட்டாயமாக… ஒரு நாள் இந்த தாயை பார்க்க வர தானே வேணும்.  

என்ன ஒன்று அப்போ நான் நிரந்தரமாக அவனை பார்க்க முடியாமல்…கண் மூடி இருப்பேன்…” என்றவரை ஆன்ட்டி என பதறி போய் மயூரிகா அணைத்து கொண்டாள்.  

பயிற்ச்சியின் போது மட்டும் தான் அவர்கள் இருவருமே…குரு, சிஷ்யை மயூரி மேம் என்று தான் அழைப்பாள்..மற்ற நேரம் எல்லாம் சாரதா சியாமளாவின் தோழி, அக்கா என்ற உறவு தான் இருக்கும்.  

மயூரி “ என்ன ஆன்ட்டி இப்படி பேசுகிறீங்க…இதை அண்ணா கேட்டா ரொம்ப வருத்தப்படுவார் அவர் என்ன வேணும் என்றா… லீவில் வராமல் இருக்கிறார் . 

தனக்கு பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது…பொறுப்புகள் அதிகமாகி விட்டது இரண்டு மாதங்களில்…  

நிச்சயமாக உங்களை பார்க்க வருவேன் என நம்ம கனடா கிளம்பும் போது… கால் பண்ணி இருந்தார் தானே பிறகு எதற்காக இப்படி பேசுகிறீங்க..? 

அப்படி எல்லாம் நீங்க போக முடியாது…உங்களை நான் விட மாட்டேன்…” என்று சொல்லி.. அவரை இறுக்க அணைத்து கொள்ள…சாரதாவுக்கு அவள் அன்பில் கண்கள் பனித்தது. 

மயில் ஆடி வரும்….
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
631 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page