ஆடி வரும் வண்ண மயிலே-07

அத்தியாயம்:07 

சாரதா தன்னை அணைத்த மயூரியை திரும்ப அணைத்து கொண்டவர்…அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தார்.  

சாரதா “ அப்படி என்னாலும் சட்டென போக முடியாது மயூ மா…உன் கல்யாணத்தை நான் கண் குளிர பார்க்க வேணாமா..? 

அது மட்டுமா உன் பெண்ணுக்கு சலங்கை பூஜை… செய்யாமல் நான் போக மாட்டேன் என்ன சரியா..? என கேட்டார்…மயூரி சின்ன சிரிப்போடு தலை அசைத்தாள்.  

மயூரி “ என்ன ஆன்ட்டி இவங்க இந்த டைம்க்கு வந்திருக்கிறாங்க…? காலேஜ் லீவு கூட இல்லை என்ன விசேஷம் ஆன்ட்டி..? என கேட்டாள்.  

சாரதா “ ஓ! இதுவா மா இவங்க காலேஜில் கலை விழா வருகிறதாம்…இவங்க காலேஜ்க்கு மட்டுமல்ல எல்லா காலேஜ்யும்… அதில் கலந்து கொள்ள போகிறது.  

இந்த ஏற்பாட்டை கவர்மெண்ட் மாணவர்கள் மத்தியில் பாரம்பரிய கலையை ஊக்குவிக்க…ஏற்பாடு பண்ணும் நிகழ்ச்சி அது தான் அதில் கலந்து கொள்ள போகும் இவங்க…ஏதும் புது வகையான டான்ஸ் சொல்லி தாங்க மிஸ் என வந்தாங்க.  

நானும் சில முத்திரைகளை மாற்றி… வித்தியாசமாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறேன்…” என்றார்.  

மயூரி “ ஓ! நல்ல விஷயம் தான் ஆன்ட்டி…நான் கூட உங்களை பார்க்க வந்த காரணம் அடுத்த மாதம்… தஞ்சாவூரில் டான்ஸ் புரோகிராம் ஒன்று இருக்கு. 

எல்லா டான்ஸர்களும், டான்ஸ் ஸ்கூலும் பங்குபற்றுகிறது…முறையாக எனக்கும் உங்களுக்கும் மெயில் வந்தது…அது தான் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தான் கொரியோகிராபி அமைத்து தர வேணும்…” என்றாள்.  

கொரியோகிராபி என்பது நடன அசைவுகள், படிகள், வடிவமைக்கும் கலை ஆகும்…இசை உடன் கரு பொருளுடனும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்க வேணும்.. 

சாரதா “ ம், நானும் அது பற்றி சிலதை யோசித்து வைத்திருக்கிறேன்…நீ முதலில் நடராஜனுக்கு பூஜை செய்து அவரை மகிழ்வித்து வா… 

அதற்குள்ளாக இவங்க டான்ஸை பார்த்து விட்டு வருகிறேன்…” என்றார்.  

மயூரி சரியென சொல்லி விட்டு அங்கே பிரமாண்டமாக ஒற்றை காலை தூக்கி…நடனம் புரிந்து கொண்டு இருந்த நடராஜருக்கு பூஜை செய்தவள்…அவரை மகிழ்விக்க நடனம் ஆட தொடங்கினாள்.  

அதற்குள்ளாக சாரதா காலேஜ் பெண்ணுங்களுக்கு…நடனம் சொல்லி கொடுத்தவர் அவர்களை பயிற்ச்சி செய்ய சொல்லி விட்டு…மயூரியின் நடனத்தை எப்பவும் போல இப்பவும் ரசித்து கொண்டு இருந்தார்.  

சாரதா அவளின் குரு மட்டுமல்ல முதல் ரசிகை கூட…சாரதா கண் முன்னே மயூரி தெரியவில்லை சியாமளா தான் தெரிந்தாள்…அவளை நடனத்தில் அடித்து கொள்ள ஆளே இல்லை.  

அப்படிப்பட்டவளை காதல் என்ற ஒன்று வந்தது…மொத்தமாக அவள் வாழ்க்கையை மாற்றி அமைத்தது…அவள் நடனம் ஆட கூடாது என ராகவன் கட்டளை போட்டான்.  

கண்ட கண்ட ஆளுங்க முன்னே நீ நிற்பதை நான் விரும்பவில்லை….என அவளை அடிமையாக்க நினைத்தான் அவள் பெயர், புகழ் பெறுவதை அவனால் தாங்கி கொள்ள…முடியவில்லை என்பது தான் உண்மையான காரணம்.  

எல்லாவற்றில் அவன் பேச்சை கேட்டு…நடக்கும் அவள் இதில் ஒன்றில் மட்டும் உறுதியாக முடியாது என மறுத்து விட்டாள்… 

என் உயிரோடு கலந்தது என் நடனம்.. அது என் உயிர் போன பின்னாடி தான் நிற்கும் என சொல்லி விட்டாள்.  

அந்த மறுப்பு தான் ராகவனை மேலும் வெறியாக்கியது…அவன் காதலித்தவள் அவன் பொண்டாட்டி… அவனுக்கு மறுப்பு சொல்வதா என்ற கோபம் வன்மாக மாறி…சியாமளா உயிரை பறித்து விட்டது. 

மயூரி தன் நடனத்தால் நடராஜரை மகிழ்வித்து விட்டு..திரும்பியவள் கண்டது கைகளை கட்டி கொண்டு அவள் நடனத்தை… ரசித்து கொண்டு இருந்த சாரதாவை தான். 

மயூரி மெல்ல ஒரு சிரிப்போடு அவளை நோக்கி நடந்து வர அக்கா என கண்மணி அழைத்தவள்…வியர்வை துடைக்க சின்ன டவல் மயூரி சாப்பிட… ப்ரெஷ் அப்பிள் ஜூஸை எடுத்து நீட்டினாள் . 

முகம், உடலில் உள்ள வியர்வையை துடைத்தவள்… 

“ இப்போ ஜூஸ் வேணாம் மணி எனக்கு தண்ணீர் மட்டும் கொடு போதும்…மிஸ்க்கு பிளாஸ்கில் உள்ள பாலை எடுத்து வந்து கொடு..” என்றாள்.  

கண்மணி “ ஆ’ நல்ல இருக்கே கதை…கல்யாணி மா பிறகு என்னை தான் திட்டுவாங்க நீங்க… இப்போ எல்லாம்சரியாக சாப்பிடுவது இல்லை…என்பதால் இந்த ஜூஸ் எல்லாம் கொடுக்க சொல்லி இருக்கிறாங்க… 

மிஸ்க்கு பால் இருக்கு கூடவே கல்யாணி மா…சாப்பிட ஸ்நாக்ஸ் கொஞ்சம் தந்து விட்டு இருக்கிறாங்க…மிஸ் நீங்களும் டயர்ட்டாக இருக்கிறீங்க வாங்க சாப்பிட…” என சொன்னாள்.  

சாரதா “ உன்னை கல்யாணி ஆன்ட்டி திட்டுவதாவது…? இதை சின்ன குழந்தை கூட நம்பாது அவங்க எப்போ பாரு…உன்னை, யசோவை, அசோக்கை பெருமையாக பேசி கொண்டு இருப்பாங்க.  

மயூரி கண்மணி சொன்னது சரி நீ இப்போ முன்னே விட மெலிந்து விட்ட…நாட்டியம் ஆட வலு முக்கியம் மா நீ உன்னை சரியாக பார்த்து கொள்ள வேணும்…வா கொஞ்சம் ப்ரேக் எடுக்கலாம் பிறகு பயிற்சியை செய்யலாம்…” என்றார்.  

காலை வேளை அந்த பங்களாவை சுற்றி…தொண்டர்கள் கூடி கோஷம் போட்டு கொண்டு இருந்தார்கள்…அதை அங்கே சோபாவில் இருந்து ரசித்து கேட்டு கொண்டே காபியை சாப்பிட்டு கொண்டு இருந்தார் ராகவன்… 

அப்போது டாடி என அழைத்து கொண்டே…வந்தாள் ராகவனின் இரண்டாவது மனைவியின் மகள் சரிகா கூடவே…அவர் இரண்டாவது மனைவி மாலதி.  

மாலதி பற்றி சொல்ல வேணும் என்றால் அது ஒரு தனி கதை தான்…ராகவனை அரசியலில் குறுக்கு வழியில் ஏற்றி விட்டது மாலதியின் அண்ணன் பாண்டியன்.  

சியாமளா இருக்கும் போதே அவன் கூட ராகவனுக்கு பழக்கம்…அவனும் முதலில் குரு மூர்த்தியின் கட்சியில் தொண்டனாக சேர்ந்தவன் தான்.  

பதவி ஆசையில் அவன் குறுக்கு வழியில் கவுன்சிலராக வர முயற்ச்சி செய்தும் வர முடியவில்லை…காரணம் இவனை பற்றி அரசல்புரசலாக கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தெரியும்.  

பேட்டை ரவுடி ரங்கு கூட சேர்ந்து கஞ்சா விற்பது, கள்ள கடத்தல் செய்வது, ஏன் ஆளுங்களை கூட கடத்துவது…. இப்படிப்பட்ட உயர்ந்த வேலைகளை செய்து தன் கஜானாவை நிரப்பி கொண்டு இருந்தான்.  

அப்படிப்பட்டவன் கண்ணில் மாட்டினான் ராகவன்…குருமூர்த்தியின் தம்பியின் மகன் அவர் போல இவன் நேர்மையானவன் இல்லை…தன் பெரியப்பாவை தோற்கடிக்க சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருக்கிறான் என்று.  

அவனின் அந்த ஆசையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டவன்….அவனை குறுக்கு வழியில் தன் பணத்தை கொண்டு எம்.எல்.ஏ ஆக்கி விட்டான்… 

அப்போ அறிமுகமானவள் தான் மாலதி…அப்போது சியாமளா உயிரோடு இருந்தாள் மயூரி கூட பிறந்து விட்டாள்… 

சியாமளா மேலே கொண்ட பொறாமையாலும் பாண்டியன் தயவு… தேவை என்பதாலும் ரகசியமாக மாலதியை திருமணம் செய்து கொண்டான்.  

வெளிபடையாக சியாமளாவை விவாகரத்து அவன் செய்ய விரும்பாத காரணம்…அவள் தான் காதலித்த பெண் மட்டுமல்ல… சக்ரபாணியின் கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு… 

அதை விட அவள் புகழ் பெற்ற நடன தாரகை…அதன் மூலமாக வருமானம் கொட்டி கொண்டு இருந்தது… 

ஆனால் அந்த பணத்தை சியாமளா… இல்லங்களுக்கும் வசதி குறைவான நாட்டிய கலைஞர்களுக்கும்…. நாட்டிய சேவைக்கும் கொடுத்து கொண்டு இருப்பது அவனுக்கு தெரியாது.  

விஷயம் தெரிந்த போது பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது…அது மட்டுமல்ல சக்ரபாணியிடம் பணம் வாங்கி தர சொல்லி அவளை தொந்தரவு பண்ணினான்… 

விஷயம் குரு மூர்த்தியின் காதுக்கு போனதும்.  

அவனை அழைத்து வெளுத்து வாங்கி விட்டார்…அவனுக்கு சியாமளா மேலே மேலும் வன்மம் கூடியது…அவள் தான் இந்த கிழவன் கிட்ட போட்டு கொடுத்து விட்டாள் என்று.  

உண்மையில் இதை எல்லாம் சொன்னது குரு மூர்த்தியின் ஆளு…ராகவனை கண்காணிக்க சியாமளாவை பாதுகாக்க அவன் வீட்டில்…தன் விசுவாசமான ஒருவனை வேலைக்கு அனுப்பி இருந்தார்.  

அதன் பிறகு தான் அவன் சியாமளாவை அலட்சியப்படுத்த ஆரம்பித்தது…தன் கணவன் தன்னை அலட்சியப்படுத்துவது கூட.. புரியாத அப்பாவியாகவே இருந்து போய் சேர்ந்து விட்டாள்… 

அது தான் சக்ரபாணி, குரு மூர்த்திக்கு கோபம் அது மட்டுமல்ல…சக்ரபாணிக்கு தெரியாத ஒரு விஷயத்தை குரு மூர்த்தியின் வேலைக்காரன் அவரிடம் சொல்லி இருந்தான்.  

சியாமளாவை மாடியில் இருந்து தள்ளி விட்டது பாண்டியன்…காரணம் தன் தங்கையை முறையாக ராகவன் மனைவியாக சமூகத்தில் அறிமுகப்படுத்த…ஆனால் அவன் தில்லாலங்கடி.  

சாட்சி இல்லாது செய்து முடித்து விட்டான்…அவனுக்கு எதிராக சாட்சி ஏதும் இல்லை குருவின் ஆள் சொல்லும்… சாட்சி கோட்டில் முக்கியம் பெறாது.  

காரணம் ராகவனுக்கும் அவருக்கும் இருக்கும்…உட்பூசல்கள் ஊருக்கே தெரியும்.  

வேணும் என்று ராகவனுக்கு எதிராக சாட்சி…ஏற்பாடு பண்ணியதாக பாண்டியன் கேஸை… திசை மாற்றி விடுவான்.  

சரியான சந்தர்ப்பம் வரும் வரைக்கும் மட்டும் தான்…குரு மூர்த்தி காத்து கொண்டு இருக்கிறார்…தந்தை அருகே வந்து அமர்ந்தவள்.  

சரிகா “ டாடி நானும் மம்மியும் ஷாப்பிங் போகிறோம்…மறக்காமல் என் அக்கவுண்ட்க்கு ஒரு ஐந்து லட்சம் போட்டு விடுங்க…” என சொன்னாள்.  

மாலதி “ சரிகா மா ஐந்து லட்சம் போதாது மா…நீ நேற்று ஆன்லைனில் ஏதோ நெக்லஸ் பார்த்ததாக சொன்ன… 

இன்று அதை வாங்க வேணும் என்ற.. அதன் விலையே ஐந்து லட்சம்…என்னங்க நீங்க ஒரு இருபது லட்சம் போட்டு விடுங்க…”என சொன்னாள்.  

அவள் பேசியதை கேட்டதும் ராகவன் முகம் மாறியது…அவனின் அங்கீகாரம் பெற்ற மனைவியாக வர மட்டும்…அவனிடம் மாலதி எதையுமே கேட்டது இல்லை.  

பணம், நகை, சொத்து மேலே ஆசை இல்லாதவள் போல நடந்து கொண்டாள்…எப்போ ஊர் அறிய அவன் மனைவியாக வந்தாளோ அதில் இருந்து….  

அவள் வாய் திறந்தால் பணம், நகை, டிரஸ், சொத்து பற்றிய பேச்சு தான்.  

சட்டென அழையா விருந்தாளியாக சியாமளாவின் எண்ணம் வந்தது…அவள் காதலிக்கும் போதும் சரி கல்யாணமான பிறகும் சரி…அவள் அவனிடம் எதிர்பார்த்தது காதலை மட்டும் தான்.  

இத்தனைக்கும் அவள் பிறப்பால் கோடீஸ்வர குடும்பத்து பெண்ணு…ஆடம்பரமாக இருக்க வேண்டியவளிடம் கொட்டி காணப்பட்டது எளிமை.  

அது மட்டுமல்ல மயூரி தன் மூத்த பெண்ணு…இப்போ வரைக்கும் அவர் அவளுக்கு ஒரு ஹேர் பின் கூட வாங்கி கொடுத்தது இல்லை…ஏன் அவளை பார்த்து, பேசியது கூட இல்லை.  

அவளும் சியாமளா போல நாட்டியத்தில் ஜொலித்து கொண்டு இருப்பதாக…அவர் காதுக்கு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது…அதுவும் பாரின் போய் எல்லாம் நாட்டிய நிகழ்ச்சி செய்வதாக.  

ராகவன் “ சரிகா இரண்டு நாள் முன்னாடி தான்…ஆன்லைனில் ஏதோ நகையை பார்த்து விட்டு வாங்க பணம் வேணும் என்று… 

ஐந்து லட்சம் கேட்ட சரியென போட்டு விட்டேன் இப்போ திரும்ப வந்து பணம் கேட்கிற..? 

இங்கே என்ன பணத்தை மரத்தில் இருந்தா பறித்து கொண்டு இருக்கிறேன்…இப்படியே போனால் கடைசியில் நான் மட்டுமல்ல நீ உன் அம்மா எல்லாம்… 

தலையில் துண்டை போட்டு கொண்டு… நடு தெருவில் தான் நிற்க வேண்டி வரும்..”என கோபமாக சொன்னார். 

மயில் ஆடி வரும்….
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
629 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page