ஆடி வரும் வண்ண மயிலே-08

அத்தியாயம்:08 

ராகவன் இப்படி பணத்தை செலவு செய்தால்…தலையில் துண்டு போட்டு கொண்டு நடு தெருவில் நிற்க வேணும்…என்று சொன்னார்.  

மாலதி “ நாங்க எதற்காக நிற்க வேணும்…நீங்க இப்போ யாரு என்று ஞாபகம் இருக்கா..? மினிஸ்டர் ராகவன்… 

அரசாங்கமே உங்க கையில் அது மட்டுமல்ல உங்க பெரியப்பா தானே தமிழ் நாட்டு சி.எம் பிறகு என்ன..? 

அது மட்டுமா அவருக்கு ஆண் வாரிசு இல்ல…ஒரே மகள் அவளும் மூளியாக நிற்கிறாள் அவர் சொத்தில்… அது உங்க தாத்தா சொத்தும் கூட அதில் உங்களுக்கும் உரிமை இருக்கு… 

இதை விடுங்க உங்க மூத்த தாரம் சியாமளா…அவங்க வரதட்சணை கூட பல கோடிக்கு மேலே இருக்கும்… 

அது மட்டுமா! உங்க பெண்ணு அது தான் நாட்டிய தாரகை என்று ஊரே சொல்லும்…மயூரிகா அவளும் நாட்டியம் மூலம் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறாள். 

இப்படி பல வழிகளில் உங்களுக்கு பண வரவு இருக்கும் போது…நீங்க எதற்காக நடு தெருவில் நிற்க வேணும்…அவங்க கிட்ட உங்க பணத்தை கேட்டு வாங்கி கொள்ளுங்க …” என்றாள்.  

சரிகா “ அப்பா அம்மா சொல்வது தான் சரி…நீங்க முதலில் அந்த மயூரி கிட்ட பணத்தை கேளுங்க…அவள் டான்ஸ் மூலமாக நிறைய சம்பாதிக்கிறாள் என்று…என் ப்ரண்ட் கூட சொன்னாள் பா.  

அவளுக்கு எதற்க்கு எவ்வளவு பணம்…சும்மா தானே பூட்டி வைத்திருக்கிறாள் நீங்க இப்போ மினிஸ்டர்… 

அவளை அழைத்து மிரட்டினால் போதும் …பயந்து போய் பணத்தை தந்து விடுவாள் அது மட்டுமல்ல அவள் புரோகிராம் செய்யும் பாதி பணம்… இனி உங்களுக்கு வேணும் என சொல்லுங்க பா…”என்றாள்.  

ராகவன் பின்னால் நின்றிருந்த அவரின் வலது கை பிளஸ் பி.ஏ நாதன்…மனதில்  

“ அட! சண்டாளிங்களா நேரடியாக ஐயாவை பரலோகத்துக்கு… பேக் பண்ண திட்டம் போட்டு விட்டாள்கள் போல இருக்கே… 

குருமூர்த்தி ஐயா பற்றி இன்னும் இவங்களுக்கு சரியாக தெரியவில்லை…அவர் அமைதி தான் அவரின் ஆயுதமே அது போல… சக்ரபாணி ஐயா ஏற்கனவே ராகவன் ஐயா மேலே…கொலை வெறியில் இருக்கிறார்.  

சியாமளா அம்மா சாவுக்கு இவர் தான் காரணம் என்ற எண்ணம் அவருக்கு…இதில் அவங்க வரதட்சணை பணத்தை கேட்டால் அவ்வளவு தான்.  

லைன்ஸ் வாங்கி வைத்திருக்கும் துப்பாக்கியை தூக்கி விடுவார்…இந்த சரிகாவுக்கு ஆசையை பாரு மயூரி பாப்பா… அது தன்னை வருத்தி கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறது.  

இதற்க்கு அது பணம் மொத்தமும் வேணும் என்ற ஆசை…அது சியாமளா அம்மா போல அந்த பணத்தை எல்லாம் இல்லங்களுக்கும்…ஏழ்மையில் உள்ள நடன கலைஞர்களுக்கும் கொடுக்குது. 

அது தான் இந்த மாலதியின் அண்ணன்..அந்த லொடுக்கு பாண்டி இருக்கிறான் தானே அவன்.. கஞ்சா விற்ற பணமே கோடி இருக்கும்..அதை வாங்கி செலவு செய்ய வேண்டியது தானே.  

அவன் தான் ஓண்டிக்கட்டை கல்யாணம் செய்யாமல்…தினம் ஒரு பெண்ணு கூட உல்லாசமாக இருக்கிறான்…நல்ல காலம் ராகவன் ஐயாவை அந்த சாக்கடைக்குள்ளே தள்ள நினைக்கவில்லை அவன்.  

தங்கச்சி புருஷன் என்பதால் அதை எல்லாம்…அவரிடம் இருந்து தள்ளி நிறுத்தி விட்டான்… 

ம் ‘என்ன சொல்ல ராகவன் ஐயா அவராக போய் சாக்கடைக்குள்ளே விழுந்து விட்டார் “ என” மனதில் நினைத்தான். 

ராகவன் “ மாலதி உனக்கும் உன் பெண்ணுக்கும் மூளை ஏதும் பிசகி விட்டதா..? ஏன் நான் நல்லா இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா..? இப்போ எலக்சன் வேறு வருகிறது.  

இப்போ நீ சொன்னது போல நான் செய்தால்…பொம்பளைங்க ஒத்த வோட்டு கூட எனக்கு கிடைக்காது…உனக்கு அது தான் வேணுமா..? சியாமளாவின் வரதட்சணையை நான் கேட்க போனால்.  

என் பெரியப்பா முதல் ஆளாக என் மேலே வரதட்சணை கேஸ் போட்டு….உள்ளே தள்ளி விடுவார் அதை விட சக்ரபாணி மாமா… என் மேலே இருக்கும் கோபத்தில் இன்னும் சேர்த்து இரண்டு மூன்று கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவார்.  

இது தான் உனக்கு இப்போ வேணுமா..? உன் அண்ணகாரன் மூளையில் பாதி கூட உனக்கு இல்லை…அங்கே இருப்பது வெறும் களிமண் அது போல தான் உன் பெண்ணும் இருக்கிறாள்.  

சரிகா உன் போல தான் மயூரியும் என் பெண்ணு…அவளை நான் எப்பவுமே விட்டு கொடுக்க நினைத்து இல்லை… 

சியாமளா கூட எனக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும்… அவள் நான் காதலித்து கல்யாணம் பண்ணிய என் முதல் மனைவி.  

என் உறவு தொடக்கம் ஊர் கூட நினைக்கிறது…நான் உன் அம்மாவை கல்யாணம் செய்ய சியாமளா தடையாக இருக்கிறாள் என்று…அவளை போட்டு தள்ளி விட்டேன் என்று.  

ஆனால் உண்மை கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்…நான் எனக்கு கல்யாணமானதை மறைத்து… உன் அம்மாவை கல்யாணம் செய்யவில்லை…ஊர் அறிந்த உண்மை உன் அம்மாவுக்கு தெரியாமலா இருக்கும்…? 

உன் மாமா எனக்கு செய்த உதவிக்கு நன்றியாக தான்…அவன் கேட்டதும் உன் அம்மாவை கல்யாணம் செய்து கொண்டேன்.  

அதுவும் நான் சியாமளாவை எக் காலத்திலும் விவகாரத்து செய்ய மாட்டேன்…என்று சொல்லி தான் இந்த கல்யாணத்தை செய்தேன்.  

உனக்கு நான் அப்பா என்ற முறையில் செய்தை போல மயூரிக்கு நான்…இது வரைக்கும் எதுவுமே செய்தது இல்லை… அப்படி இருக்கும் போது எதற்காக அவள் எனக்கு பணம் தர வேணும்.  

அது அவள் உழைப்பு மூலம் வந்த பணம்…அதற்க்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை சியாமளாவின்.. வரதட்சணை பணம் கூட மயூவுக்கு சீராக நான் கொடுத்து விட்டேன்.  

என் கையால் அவளை அவள் தாத்தா எதனையுமே வாங்க விட மாட்டார்…என் பெரியப்பா கூட அப்படி தான் எனக்கு இப்போ… நீங்க கேட்ட பணத்தை தர முடியாது.  

எலக்சனுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்தால் தான்…எனக்கு வோட்டு கிடைக்கும் எனக்கு முதலில் அரசியல் அதற்க்கு பிறகு தான் குடும்பம்…அரசியலுக்காக நான் எது வேணும் என்றாலும் செய்வேன்…” என்றார்.  

மாலதி “ என்ன தீடிரென போதி தர்மர் போல மாறி விட்டீங்க…அதுவும் உங்க முதல் தாரம் அவள் பெத்த பெண்ணு மேலே பாசம் பொத்து கொண்டு வருகிறது.  

என்ன பழசு எல்லாம் மறந்து போய் விட்டதா..? இப்போ உங்களுக்கு கிடைத்த இந்த மந்திரி பதவி என் அண்ணன் போட்ட பிச்சை…அந்த சியாமளா உங்களை துளி கூட மதிப்பது இல்லை.  

பணக்காரி என்ற கர்வம் தன் பணத்தை கூட உங்க கிட்ட கேட்காது…ஊருக்கே வாரி இறைத்து கொண்டு இருந்தாள்…நீங்க தான் அவளை காதலித்ததாக பீத்தி கொண்டு இருக்கிறீங்க.  

அவளுக்கு உங்களை போல ஒன்றுக்கும் உதவாத புருஷன் தான் தேவையாக இருந்தது…அப்போ தான் அவள் கண்டவன் கூட ஊர் சுற்ற முடியும் நாட்டியகாரி இல்லையா..? 

உங்க பெரியப்பா வேணும் என்று தான்… உங்களுக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறார் …அவர் நண்பர் பெண்ணு தானே அவள்.  

அவளை வைத்து உங்க அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் எண்ணம்…அவள் சொன்னால் நீங்க கேட்பீங்க அதற்காக தான் நீங்க கேட்டதும்… 

அந்த சக்ரபாணி கிட்ட பேசி… இந்த கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.  

உங்க நல்ல காலம் என் அண்ணன் அறிமுகம் உங்களுக்கு கிடைத்தது…நீங்க பணம் கொடுக்கா விட்டால் என்ன..? நான் அண்ணன் கிட்ட கேட்கிறேன்.  

நான் கேட்டால் அவர் எதையுமே மறுக்க மாட்டார்…சரிகா வா நம்ம ஷாப்பிங் போகலாம்…” என சொல்லி விட்டு மகளை அழைத்து கொண்டு கிளம்பினாள்.  

ராகவனுக்கு லேசாக நம்ம தவறு செய்து விட்டோமே என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது…ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பலன்… 

அன்று சனிக்கிழமை கல்யாணி கேட்டு கொண்டதால்…சக்ரபாணியும் அதில் உண்மை இருப்பதால் பேத்தியை….அழைத்து கொண்டு குருமூர்த்தி வீட்டுக்கு போய் வருமாறு கல்யாணியிடம் சொன்னார்.  

அவருக்கு கொஞ்சம் வேலை இருப்பதால்…வர முடியவில்லை இன்னொரு நாள் வருகிறேன் என சொன்னார்…கல்யாணிக்கும் அவர் இவ்வளவு இறங்கி வந்து போதும் என்ற எண்ணம்.  

அதனால் சனிக்கிழமை குரு மூர்த்தியின் வீட்டுக்கு வருவதாக மீனாவிடம் தகவல் சொன்னார்…பொதுவாக ஞாயிறு சக்ரபாணி வீட்டில் இருப்பதால் கல்யாணி, மயூரி வெளியே போக மாட்டார்கள்.  

அவருக்கு அன்று மட்டும் தான் ஓய்வு என்பதால்…அவர் கூட குடும்பமாக ஒன்றாக இருப்பார்கள்…அதனால் சனிக்கிழமை சாயங்காலம் போல தான் போனார்கள்.  

அவர்களின் நல்ல காலம் அன்று குருமூர்த்திக்கு வெளியே போகும் வேலை இல்லை…அதனால் பவதீப் அவர் கூட இருந்தான்… 

மயூரி ரொம்ப காலம் கழித்து குரு மூர்த்தி வீட்டுக்கு வருவதால்…அவளுக்கு பிடித்த டிபன் எல்லாம் கல்யாணி,புவனா செய்து வைத்து காத்து கொண்டு இருந்தார்கள்.  

அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவர்…குரு மூர்த்தி  

“ என்ன மா புவனா வீடே நெய்யில் மணக்கிறது…உன் தங்கச்சி வருகிறாள் என்று உன் அம்மா… தன் கைபக்குவத்தை காட்டுகிறாள் போல…” என விளையாட்டாக கேட்டார்.  

“ ஏன் நான் இதற்க்கு முன்னே உங்களுக்கு ஏதும் செய்து கொடுத்தது இல்லையா..? எங்கே அதற்க்கு உங்களுக்கு நேரம்…அதை ரசித்து ருசித்து கூட சாப்பிட முடியாதே…” என்று சொல்லி கொண்டே ஒரு கிண்ணத்தில் பால் போளி எடுத்து கொண்டு வந்தவர். 

அதை குருமூர்த்தியின் கையில் கொடுத்து விட்டு…தர்ஷனுக்கு ஊட்டி விட சொன்னார்.   

தியாவுக்கு இன்னும் அதை எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை….அதை விட அவளுக்கு அதை எல்லாம் சரியாக சாப்பிட தெரியாது . 

ஹாலில் கார்பெட்டியில் தங்கை கூட விளையாடி கொண்டு இருந்த தர்ஷனை…குரு மூர்த்தி அழைக்க அவன் என்ன தாத்தா என கேட்டவாறே எழுந்து வந்தான்… 

புவனா தியாவுக்கு மீனா கரைத்து கொடுத்த… சத்துமாவு கஞ்சியை குட்டி ஸ்பூன் ஒன்றால் ஊட்ட தொடங்கினாள்.  

குரு மூர்த்தி “ கண்ணா உன் சித்தி வருகிறாள்…அது தான் உன் பாட்டி ஸ்பெஷல் அயிட்டம் எல்லாம்…செய்து அசத்தி இருக்கிறாள் ஆனால் பாரு தாத்தாவுக்கு பாவம் அதில் ஒன்றை கூட கண்ணில் காட்டவில்லை…” என்றார்.  

மீனா “ தேவையில்லை டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா…நீங்க இனிப்பு, உப்பு, காரம் எல்லாம் அளவாக எடுக்க வேணும் என்று…அப்போ தான் நோய் எல்லாம் கட்டுக்குள்ளே இருக்கும்…”  என்றார். 

குரு “ அட! போ மா டாக்டர்கள் அப்படி தான் சொல்வாங்க…நானும் அளவாக தான் சாப்பிடுவேன் எனக்கு நீ செய்த… பால் பாயசத்தில் கொஞ்சம் எடுத்து வா டேஸ்ட் பண்ணி பார்க்க…” என கேட்டார்.  

“ நீங்க ஆரோக்கியமாக இருந்தால் தானே சார்…உங்களை நம்பி இருக்கும் உங்க குடும்பமும், மக்களும் சந்தோஷமாக இருப்பாங்க…” என சொல்லி கொண்டு பவதீப் வந்தான். 

மயில் ஆடி வரும்….

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
631 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page