ஆடி வரும் வண்ண மயிலே-09

அத்தியாயம்:09 

நீங்க ஆரோக்கியமாக இருந்தால் தான்…உங்க வீடும் நாடும் நல்லா இருக்கும் என சொல்லி கொண்டு பவதீப் வந்தவன்…அவருக்கு சலூட் அடித்தான்.  

அவனை கண்டதும் குரூமூர்த்தியின் மடியில் இருந்து…இறங்கியவன் அங்கிள் என அழைத்தவாறே தர்ஷன் ஓடி போனான்.  

அது போல புவனா மடியில் இருந்த தியாவும்…. கை, காலை அசைத்து பவதீப் கிட்ட போக வேணும் என சொன்னாள்.  

மீனா “ அப்படி சொல்லு பவன் உன் சார் கொஞ்சம் வாயை கட்டுப்படுத்த வேணும்…எங்கே டாக்டர் தொடக்கம் நான்,புவனா சொன்னால் கேட்டால் தானே..? 

நீ சொன்னால் தான் கேட்பார் நீ அவருக்கு ஸ்பெஷல் மட்டுமல்ல மகன் போல…” என்றார்… 

தன்னை நோக்கி ஓடி வந்த தர்ஷனை தூக்கியவன்…அவன் வாயில் ஓட்டி இருந்த பால்லை துடைத்தான்.  

பவன் “ சார் நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ண கூடாது…அதற்க்கு உரிமையும் இல்லை ஆனால் நீங்க சிறந்த வீட்டு தலைவர் மட்டுமல்ல நாட்டு தலைவரும் கூட… 

உங்களால் தான் இன்று ஏழ்மையில் உள்ளவங்களுக்கு…சலுகைகள் கிடைக்கிறது அவங்க பிள்ளைங்க படிக்க, அவங்க வசிக்க வீடு தொடக்கம்…கட்டி கொடுக்க சொல்லி இருக்கிறீங்க.  

உங்களுக்கே தெரியும் உங்களுக்கு பிறகு அடுத்த இடத்தில் இருப்பது…உங்க தம்பி மகன் மினிஸ்டர் ராகவன் என்று… அவர் கூட இருப்பவன் பக்கா அயோக்கிய குள்ளநரி பாண்டியன்.  

அவங்க ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு வறுமையின் பிடியில் போய் விடும்…பாரின் உதவி பணம் எல்லாம் அவங்க சட்டை பையை நிறைத்து விடும்… 

வறுமையின் நிறம் சிவப்பாக மொத்தமாக மாறி விடும்…அப்படி நடக்க கூடாது என்றால் நீங்க ஆரோக்கியமாக இருக்க வேணும்… 

எனக்கு பிடித்த தலைவர் நீங்க அதற்காக தான் இதை சொன்னேன்…நான் பேசியது தப்பு என்றால் என்னை மன்னித்து விடுங்க…” என்றான்.  

குரூமூர்த்தி எழுந்து அவன் அருகில் வந்தவர்…அவன் தோளில் தட்டி விட்டு.  

“ எனக்கும் எல்லாம் தெரியும் பவன்…நீ சொன்னது ஏதுவுமே தப்பு இல்லை எனக்கு பையன் இருந்து இருக்க கூட…இப்படி என் ஆரோக்கியத்தை பற்றி பேசி இருப்பானோ தெரியாது..? 

அதை விட நாட்டு பற்று அவனுக்கு இருக்குமா..? என்பது சந்தேகம் தான் சம் டைம் ராகவன் மாதிரி அவன் மாறி விட்டால்… 

என்னால் அதை தாங்கி கொள்ளவே முடியாது…நீ சொன்னது உண்மை என் நாட்டுக்கு நான் செய்யும் கடமை…அதை கயவர்கள் கையில் சிக்க விடாது காப்பாற்ற வேணும்…” என்றார்.  

புவனா “ பவா உனக்கு பிடித்த வெங்காய பக்கோடா அம்மா செய்து இருக்கிறாங்க…வெயிட் வெயிட் அது ஆயில்… என் பிட்னஸ்க்கு சரி வராது என காரணம் சொல்லாதே.. 

நீ தான் டெய்லி மூன்று மணிநேரம் ஜிம்மில் கழிப்பவன் ஆயிற்றே…பிறகு என்ன ஒரு நாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.  

கூடவே உன் ஆளுங்களுக்கு எல்லாம் இருக்கு…ராகுலை வர சொல்லி இதை எல்லாம் கொண்டு போய் கொடுக்க சொல்லு… 

நீங்களும் நம்ம குடும்பம் போல தான்.. உங்க உயிரை பணயம் வைத்து எல்லையை காத்து நின்றீங்க.  

இப்போ நாட்டின் தலைவரை காத்து நிற்கிறீங்க…அதற்க்கு நாங்க பதில் மரியாதை கொடுக்க வேணாமா..? மறுப்பு சொல்லாதே பவா.  

இன்று நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்…என் தங்கச்சி வருகிறாள் அதுவும் ரொம்ப நாள் கழித்து…அது தான் இந்த விருந்து ஏற்பாடு எல்லாம் அதில்… நீங்க எல்லோருமே கலந்து கொள்ள வேணும்.  

அதற்காக தான் இந்த சின்ன விருந்தை ஏற்று கொள்ளு…நீங்க எங்க வேலையாட்கள் இல்ல எங்க உறவுகள் அதை விட ராணுவ வீர்கள்…” என்றாள்.  

பவன் ஏதோ சொல்ல வர பாஸ் என அழைத்து கொண்டே ராகுல் வந்தான்…வந்தவன் குருமூர்த்திக்கு சலூட் அடித்து விட்டு புவனிடம்.  

“ பாஸ் சாரை பார்க்க என்று அவங்க ரிலேடிவ் யாரோ வந்து இருப்பதாக…கேட் செக்யூரிட்டி எனக்கு கால் பண்ணி இருந்தார்.  

அவங்க நேம் கூட மயூரிகா சக்கரபாணி பேத்தி…. என சொல்ல சொன்னதாக சொன்னார்.  

அது தான் கன்பார்ம் பண்ண வந்தேன் பாஸ்…அவங்களை உள்ளே விடவா..? என கேட்டான். மயூரியின் பெயரை கேட்டதும்…பவன் கையில் இருந்த தர்ஷன்.  

“ ஹேய்! மயூ சித்தி வந்து விட்டது…அங்கிள் அங்கிள் அது என் சித்தி அவளை உள்ளே விட சொல்லு…” என்றான்.  

குரு மூர்த்தி “ ராகுல் அவள் என் பேத்தி தான்…என் மகன் ராகவனின் பெண்ணு அவள் எப்போ வந்தாலும் என் வீட்டு கேட்…அவளுக்காக திறக்க வேணும் இதை நீ கேட் செக்யூரிட்டி கிட்ட சொல்லி விடு…” என்றார்.  

ராகுல் தகவல் சொன்ன அடுத்த செக்கன் குரு மூர்த்தியின் பங்களா கேட் திறக்க… மயூரின் வண்டி அதை தொடர்ந்து அசோக் அவர்களின் பாதுகாப்புக்காக அனுப்பிய…நான்கு கார்ட்ஸ் அவர்களின் ஜீப் உள்ளே வந்தது.  

குரு மூர்த்தி, மீனா, புவனா தியாவை தூக்கி கொண்டு வாசலுக்கு விரைய…பவதீப் தர்ஷனை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் வந்தான்.  

மயூரியின் கார் கதவை அவளின் கார்ட் திறந்து விட…முதலில் இறங்கியது கல்யாணி அடுத்து இறங்கினாள் மயூரிகா.  

இன்று பவதீப் இருப்பான் என்பதால் அவள் கொஞ்சம் விஷேசமாகவும்…அதைய வேளை சிம்பிளாகவும் தன்னை அலங்கரித்து கொண்டாள்.  

ரோஜா வண்ண சுடிதாரில் பச்சை வண்ண நூல் கொண்டு எம்பிராய்டரி செய்த பட்டு சுடிதார்… 

கழுத்தில் வழமையாக அவள் போடும்.. நீண்ட ஆரம் அதன் கூட ரூபி கல் நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல்  

ஒரு கையில் தங்க கடிகாரம் அதில் வைர கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது…மறு கையில் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட பிரேஸ்லெட்… இரண்டு கைளிலும் ஒரு ரூபி கல் பதிக்கப்பட்ட மோதிரம். 

தன் நீண்ட கூந்தலை இரு பக்கமாக எடுத்து கேட்ச் கிளிப் போட்டு விரித்து இருந்தாள்… 

முகத்தில் லைட் மேக்கப் காலில் தங்க நிற பட்டை கொலுசு… வழமையான அவள் அலங்காரமே… அவளை பேரழகியாக காட்டியது.  

அவளை கண்டதும் குருமூர்த்தி முகம் மலர…அவளை நோக்கி போக…தாத்தா என அழைத்து கொண்டு முன்னே வந்த மயூரி அவர் பாதம் தொட்டாள் … 

அவளை மனம் நிறைவாக ஆசீர்வதித்தவர்…அவளை தூக்கி அணைத்து கொண்டவர் கண்கள் பனித்தது.  

என்ன தான் இருந்தாலும் அவரின் தம்பியின் பேத்தி…ராகவன் அவருக்கு மகன் அவனின் மூத்த வாரிசு அதை விட… சியாமளாவின் அச்சாக இருப்பவள் மேலே அவருக்கு பாசம் அதிகம்.  

குரு மூர்த்தி “ எப்படி இருக்க மா..? தாத்தா உன்னை நேரில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது…உன் டான்ஸ் பற்றி தான் ஊரே பெருமையாக பேசுகிறது.  

நீ நாட்டிய கலைக்காக பிறந்தவள் என்று…நம்ம நாட்டின் பொக்கிஷம் நீ பாப்பா…” என்றார். 

மயூரி “ நீங்க தான் தாத்தா என் புரோகிராமுக்கு சரியாக வருவது இல்லை…பாட்டி,அக்கா எல்லாம் வருவாங்க நீங்க மட்டுமல்ல… 

சக்ரபாணி தாத்தா கூட வர மாட்டார்… உங்க இரண்டு பேருக்குமே என் மேலே பாசம் இல்லை…” என்று செல்லமாக குறைபட்டாள்.  

மீனா “ அப்படி இல்ல கண்ணு நீ என்ன இவங்களுக்கு எதிரியா..? எங்க வாரிசு நீ…உன் தாத்தா மட்டுமல்ல இவருக்கும் கூட தொழில் பக்தி அதிகம்…நீ வெளிநாட்டுக்கு போய் நிகழ்ச்சி செய்பவள்… 

இவங்களால் தொழிலை விட்டு போட்டு அங்கே எல்லாம் வர முடியுமா கண்ணு…? இவங்க அங்கே வந்தால் இங்கே உள்ள களவாணி கூட்டம் உள்ளே புகுந்து விடும்.  

ஆனால் உன் டான்ஸை எல்லாம் வீடியோ பண்ணி கொண்டு கொண்டு வாங்க என்று குரு தாத்தா சொல்வார்…. 

என்ன வேலை இருந்தாலும் கூட நைட் எத்தனை மணி சென்றாலும்… அதை பார்த்து விட்டு தான் தூங்க போவார்….” என்றார். 

பாட்டி என அழைத்தவாறே மயூரி அவரின் பாதம் பணிய…அவரும் நிறைவாக அவளை ஆசீர்வாதம் செய்தார்.  

புவனா “ சரி மா மற்றதை உள்ளே போய் பேசி கொள்ளலாம்…அத்தை, மயூ முதலில் நீங்க உள்ளே வாங்க…” என்றாள் . 

“கொஞ்சம் பொறு மா செல்வி ஆரத்தியை கொண்டு வா…” என மீனா சொன்னதும்…அவர்களின் வீட்டு வேலையாள் ஆரத்தி கரைத்து கொண்டு வந்ததும்… 

அதை வாங்கி மீனா மயூரிக்கு ஆலம் சுற்றி விட்டு…கரைசலை வாசலில் கொட்ட சொல்லி செல்வியிடம் கொடுத்தார்.  

புவனா கையில் இருந்த தியா சித்தி என… மழலையில் அழைக்க மயூரி முகம் மலர்ந்ததும்.  

மயூரி “ அச்சோ என் பட்டு பாப்பா வாங்க வாங்க சித்தி கிட்ட “ என சொல்லி புவனா கையில் இருந்த….அவளை வாங்கியவள் அவள் முகம் எங்கும் முத்தம் வைத்தாள்.  

கல்யாணி “ புவனா எங்கே மா தர்ஷனை காணோம்…? மயூவை கண்டதும் முதல் ஆளாக ஓடி வருவான்…” என கேட்டார்.  

புவனா “ இங்கே தானே இருந்தான்…இதோ பவா தூக்கி வைத்து கொண்டு இருக்கிறான் தர்ஷா… என்ன டா சித்தியை வர சொல்லு என தினமும் கேட்டு… 

தொந்தரவு பண்ணி கொண்டு இருப்ப இப்போ அமைதியாக இருக்க…என்ன விஷயம் ஏதும் சேட்டை பண்ணி விட்டாயா..? என கேட்டாள்.  

மயூரி புவனா பவா என அழைக்க சட்டென நிமிர்ந்து பார்க்க பவதீப் நின்றிருந்தான்… 

கிட்ட தட்ட ஆறு மாசம் கழித்து அவனை பார்க்கிறாள்… தினமும் அவள் நிழல் படத்தோடு பேசி கழித்தவள்…இப்போ நிஜமாக அவனை பார்த்ததும் அவள் மனசில்… பல பட்டாம் பூச்சிகள் ஒன்றாக பறந்தது.  

தர்ஷன் “ நான் சித்தி கூட டூ மா அவள் என்னை வந்து முதலில் தூக்கவில்லை…தாத்தா, பாட்டி, பாப்பாவை தான் தூக்கினாள் அவள் கூட நான் பேச மாட்டேன்…” என சொன்னவன். பவனின் தோளில் முகத்தை புதைத்து கொண்டான்.  

அவன் பேச்சு, செயல் அனைவருக்குமே சிரிப்பை வரவழைத்தது…மயூரி  

“ அச்சோ! என் குட்டி கண்ணன் என் கூட டூவா..? பாவம் இல்லையா டா உன் சித்தி பாப்பா உன்னை விட குட்டி தானே…அது தான் சித்தி அவளை முதலில் தூங்கினேன்.  

என் கண்ணன் பெரிய பையன் குட் பாய்…அவன் தானே சித்தி, பாப்பா,  அம்மா,தாத்தா, பாட்டி எல்லோரையும் பார்த்து கொள்ள வேணும்… 

நீ  டூ போட்டால் சித்தி அழுவேன் டா…” என சொன்னவள் போலியாக கண்களை கசக்க.  

“ ஆ! சித்தி நீ அழுவாத தர்ஷன் உன் கூட சும்மா தான் டூ போட்டான்…அங்கிள் என்னை இறக்கி விடு நான் சித்தி கிட்ட போக வேணும்…பாவம் அவள் அழுகிறாள் “…என்றான். 

பவதீப் அவனை இறக்கி விட அவன் மயூரியிடம் ஓடி வர…மயூரி குனிந்து அவனையும் தூங்கியவள் தடுமாறினாள்… 

காரணம் ஒரு கையில் தியா இருந்ததால்… சட்டென காற்றை விட வேகமாக வந்த பவதீப்… 

குழந்தைகள் கீழே விழுந்து விடாது இருக்க… அவங்க கூட சேர்த்து அவளையும் பிடித்து கொள்ள…. மயூரி நிமிர்ந்து அவனை பார்த்தாள். 

மயில் ஆடி வரும்….
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
635 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page