ஆடி வரும் வண்ண மயிலே-15

அத்தியாயம்:15 

சக்ரபாணி கையில் தட்டோடு மயூரின் ரூம்க்கு வந்தார்…அவரை கண்டதும் கல்யாணி மடியில் படுத்து இருந்த மயூரி எழுந்தவள்…முகத்தை தூக்கி வைத்து கொண்டே.  

“ பாட்டி யாரும் என் கிட்ட பேச வேணாம்…நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன் என் மேலே யாருக்குமே பாசம் இல்லை…பாசம் இருந்து இருக்க என் டான்ஸ் பார்க்க வந்து இருப்பாங்க.  

இதுவே அவங்க பெண்ணாக இருந்து இருக்க மறுக்க தோணி இருக்குமா…? நான் பேத்தி தானே அது தான் இப்படி நடந்து கொள்கிறாங்க…” என சொன்னாள்… 

கல்யாணி பதறி போய் பேச வர கல்யாணி என்று அழைத்தவர்…அவரிடம் கண் காட்டி விட்டு மயூரியின் மறு பக்கமாக வந்து அமர்ந்தார்.  

சக்ரபாணி “ உனக்கு ஒன்று தெரியுமா பாப்பா..? எல்லா தாத்தா, பாட்டிக்கும்…அவங்க பெத்த புள்ளைங்களை விட பேரபசங்களை தான் பிடிக்கும்… 

காரணம் அவங்க தானே அவங்க வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும்.  

காலம் போன கடைசியில் அவங்க கூட தான்…நேரம் செலவழிக்க விரும்புவாங்க அவங்களுக்கு ஒரு சின்ன பழம் என்றாலும் கூட…எடுத்து வைக்காது சாப்பிட மாட்டாங்க பேரபசங்களும் கூட அப்படி தான்.  

தங்களை பெத்தவங்க விட ஸ்கூல், காலேஜ் லீவு விட்டால் தாத்தா, பாட்டியை…பார்க்க போகிறேன் என்று முதல் ஆளாக பையை தூக்கி கொண்டு கிளம்பி விடுவாங்க… 

ஏன் தெரியுமா..? அங்கே அவர்களுக்கு கிடைப்பது எதையுமே எதிர்பார்க்காத அன்பு.  

நீ கேட்ட தானே உங்க பெண்ணாக இருந்து இருக்க… இப்படி வர முடியாது என மறுத்து இருப்பீங்களா என்று…உனக்கு ஒன்று தெரியுமா பாப்பா..? 

உன் அம்மாவை விட நான் உன் மேலே தான் அளவுக்கதிகமாக பாசம் வைத்து இருக்கிறேன்… 

உன் அம்மா எங்களுக்கு தந்த பரிசு நீ நாங்க வாழ்வதே உனக்காக தான்…நான் எதற்காக உன் டான்ஸ் புரோகிராமுக்கு வருவது இல்லை தெரியுமா..? 

நீ மேடையில் ஆடும் போது உன் அம்மா ஆடுவது போல எனக்கு தெரியும்…அதை தொடர்ந்து என் பெண்ணின் ஞாபகம் என்னை விரட்டி வரும்… 

இதை எல்லாவற்றையும் விட என் கண்ணு… என் ஒரே வாரிசான பேத்தி மேலே பட்டு விட கூடாது என நினைப்பேன்.  

என் பெண்ணு நாட்டியத்தை நான் முதல் ஆளாக இருந்து ரசித்தவன்…அவள் முதல் ரசிகன் நான் தான் என் கண் தான் என் பெண்ணு மேலே பட்டு அவள்…வாழ்க்கை பாதியில் அழிய காரணமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.  

எங்கே அது போல என் பேத்தியின் வாழ்க்கையும்…ஆகி விட கூடாது என்று தான் நான் உன் கூட அதிகமாக புரோகிராமுக்கு வருவதில்லை…இது மூட நம்பிக்கை என்று தெரிகிறது ஆனா மனசு அதை கேட்க வேணுமே… 

நான் நேரில் வரவில்லை என்றால் என்ன..? என் மனசு பூராகவும் உன் ஞாபகமாக தான் இருக்கும்… 

வெங்கட் கிட்ட உன் டான்ஸை வீடியோ பண்ணி கொண்டு வர சொல்வேன்…அவனும் கொண்டு வந்து தருவான் தூக்கம் வராத போது எத்தனை தடவை… 

என் பேத்தியின் நடனத்தை பார்த்து…தூக்கத்தை தழுவி இருக்கிறேன் நான் தூங்கி பல நாட்களாகி விட்டது பாப்பா… 

கண் மூடினால் உன் அம்மாவின் ரத்தம் படிந்த முகமும்…அவள் அருகில் நீ அம்மா என அழுது கொண்டே இருந்ததும் தான்… எனக்கு ஞாபகம் வரும்.  

எப்படி எல்லாம் வளர்த்த என் பெண்ணு…சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்காதால் அவள் மொத்த வாழ்க்கையும் பலி கொடுத்து விட்டாள்… 

இந்த கன்றாவி காதலுக்கு அவள் கொடுத்த விலை அவள் உயிர்.  

உன் அப்பனை நான் விட்டு வைத்த காரணம்…நீ பாப்பா அவனை நான் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் விட்டால்… 

உன்னை யாரு பார்த்து கொள்வாங்க… உன் பாட்டியால் ஒரளவுக்கு மேலே…உன்னை பார்த்து கொள்ள முடியாது.  

அதற்காக தான் நான் அமைதி காப்பது…என் பெண்ணை விட என் பேத்தியை தான் நான் அதிகமாக நேசிக்கிறேன்…” என சொன்னவரின் தோளில் மயூரி தலை சாய்த்தவள்…அவரை இறுக்க அணைத்து கொண்டாள்.  

அங்கே காற்று வீசும் சத்தத்தை தவிர கடும் அமைதி நிலவியது…மயூரி தலையை உயர்த்தி சக்ரபாணியின் முகம் பார்த்தவள்.  

“ ஐ யம் ஸாரி தாத்தா நான் அப்படி பேசி இருக்க கூடாது தான்…நீங்க ஒரு நாள் கூட என் புரோகிராமுக்கு வரவில்ல என்ற கோபத்தில்…அப்படி பேசி விட்டேன் எனக்கு தெரியும் அம்மா மேலே நீங்க வைத்திருக்கும் அன்பு.  

நானும் அவங்க போல இருப்பதால் தான்…நீங்க என் புரோகிராம் எதற்க்குமே வருவதில்லை என்று…பாட்டி சொன்னாங்க அது எனக்கு இப்போ தான் புரிகிறது.  

தாத்தா நான் ஒன்று கேட்பேன் நீங்க உண்மையை சொல்ல வேணும்…நான் எப்போ இது பற்றி கேட்டாலும் என் கிட்ட நீங்க மட்டுமல்ல யாருமே எதையுமே சொல்வதில்லை… 

ஏன் குரு தாத்தா வீட்டில் கூட தான் நான்… இந்த பேச்சை எடுத்தாலே…வேறு பேச்சை மாற்றி விடுவாங்க.  

தாத்தா அம்மா சாவுக்கு காரணம் அப்பாவா தாத்தா..? அவரா அவங்களை கொலை செய்தார்… 

நான் ஸ்கூல் படிக்கும் போது மற்ற பெண்ணுங்க அம்மா எல்லாம்…என்னை பரிதாபமாக பார்த்தபடியே  

“ பாவம் இந்த குழந்தை என்ன தப்பு செய்தது…இதன் அப்பனே தாயை கொலை செய்து விட்டேன்…எல்லாம் எதற்காக தன் ஆசை நாயகி அந்த பாண்டி தங்கச்சிக்காக… 

சியாமளா என்ன சாதாரண பெண்ணா..? நாட்டிய தாரகை சக்ரபாணியின் ஒரே பெண்ணு…அழகின் இருப்பிடம் இப்படிப்பட்ட பெண்ணு கூட வாழ தெரியாதவன் எல்லாம் ஒரு மனுஷனா..?  

என நான் பிளஸ் டூ முடிக்கும் வரைக்கும்… இந்த பேச்சு என் காதில் விழுந்து கொண்டே இருக்கும்.  

உங்க கிட்ட கேட்க நினைப்பேன் ஆனால் தயக்கம் வரும் கேட்க மாட்டேன்…அது போல அப்பாவின் முகம் கூட எனக்கு சின்ன வயதில் சரியாக ஞாபகம் இருந்தது இல்லை… 

எனக்கு அப்பா என்றால் அது நீங்க தான் தாத்தா…இப்போ சொல்லுங்க அவங்க சொன்னது எல்லாம் உண்மையா..? என கேட்டாள்.  

சக்ரபாணி பேத்தியின் கையை பற்றி தன் கைக்குள்ளே வைத்து கொண்டவர்…எதிரே தெரிந்த இருளை பார்த்து கொண்டே.  

“ சில நேரம் சில உண்மைகள் கசப்பானவை பாப்பா…அதை நம்ம மறக்க நினைப்பது தான் சரியாக இருக்கும்… 

நம்ம இது பற்றி இன்னொரு நாள் பேசலாம் ஆ ‘…உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை… தாத்தா இப்போ சொல்ல போகிறேன்.  

நாளை என் தங்க பேத்தி கூட நானும் தஞ்சாவூர் வர போகிறேன்…என் பேத்தி ஆசைபட்டபடியே அவள் நடனத்தை முதல் வரிசையில் இருந்து… 

ரசித்து பார்த்து கை தட்ட போகிறேன் என்ன பாப்பா  இப்போ சந்தோஷம் தானே..? இப்போ நீ சாப்பிடலாம் தானே தாத்தா இன்று உனக்கு ஊட்டி விட போகிறேன்…” என்றார்.  

மயூரி அவரை அணைத்து கொண்டவள்…ஐ லவ் யூ தாத்தா என சொன்னவள் அவர் ஊட்டுவதற்க்கு வாயை திறந்தாள்…சக்ரபாணி அவளுக்கு பிடித்த நெய் தோசையை சட்னியில் தொட்டு ஊட்டி விட ஆரம்பித்தார்.  

குரு மூர்த்தி, பவதீப் தஞ்சை நிகழ்ச்சி குறித்து…பாதுகாப்பு ஏற்பாடுகளை பற்றி பேசி கொண்டு இருக்க… மீனா, புவனா அவரை பார்க்க வந்தார்கள்… 

குழந்தைகளை வேலையாட்கள் அவர்களின் ரூம்மில் வைத்து… விளையாட்டு காட்டி கொண்டு இருந்தார்கள்….பவதீப்பை கண்டால் விட மாட்டார் பிறகு பேச வந்த விஷயமும் மறந்து போய் விடும். 

மீனா “ என்னங்க ஏதும் முக்கிய வேலையாக இருக்கிறீங்களா..? உங்க கிட்ட ஒரு விஷயம் பேச வேணும் மயூ பாப்பா…பற்றிய விஷயம்…” என்றார்.  

குருமூர்த்தி “ பேசி முடித்து விட்டோம்…என்ன மா விஷயம் பாப்பாவுக்கு என்ன அவளை யாரும் தொந்தரவு பண்ணுகிறார்களா..?  

அங்கே அசோக் இருக்கிறானே அப்படி நடக்க விட மாட்டான்…விஷயம் அவன் கை மீறி போய் விட்டதா..? என கேட்டார்.  

புவனா “ அப்படி ஏதும் இல்லை பா மயூ…கண்ட மாதிரி வெளியே சுற்றும் பெண்ணு இல்லை படிப்பு, டான்ஸ் பிராக்டீஸ் என இருப்பவள்… 

கல்யாணி ஆன்ட்டி கூட தான் கோவில், இல்லங்களுக்கு கூட போய் வருவாள்…அவள் கூட தானே யசோ, கண்மணி இருக்கிறாங்க. 

உங்களுக்கு மறந்து விட்டதா பா..? மயூவும் தஞ்சைக்கு புரோகிராம் செய்ய வருகிறாள் அவள் இல்லாமல் பரநாட்டியமா..? சென்னை சார்பாக அவள் தானே டான்ஸ் பண்ண போகிறாள்.  

எங்களை எல்லாம் கட்டாயமாக வர வேணும் என சொல்லி விட்டாள்…வரவில்ல என்றால் எங்க கூட பேச மாட்டாளாம் நாளை தஞ்சை கிளம்புகிறாள்…சக்ரா அங்கிள் கெஸ்ட் ஹவுஸ் தஞ்சையில் ஒன்று இருக்கு தானே.  

அங்கே தன் தங்க போகிறாங்க நீங்க வர மாட்டீங்க…என்னை, அம்மாவை, பாப்பாக்களை தன் கூட வர சொன்னாள்… 

உங்க புரோகிராம் பற்றி எனக்கு சரியாக தெரியாது…அது தான் உங்க கிட்ட கேட்டு சொல்கிறேன் என்றேன்…” என்றாள்.  

குரு “ மை காட்’ மறந்தே போய் விட்டேன்…இன்விடேஷன் கூட எனக்கு அனுப்பி இருந்தாங்க மா பாப்பா பெயரும் அதில் இருந்தது…நல்ல காலம் நீ நினைவுபடுத்தின இல்ல அவள் என் கூட பிறகு பேச மாட்டாள்.. 

பிடிவாதக்காரி ஒருத்தர் மேலே அன்பு வைத்து விட்டால்…அதை லேசில் மாற்ற மாட்டாள் சியாமளா போல…ராகவன் என்ன தான் தப்பு செய்தாலும் விலகி இருந்தாளே தவிர… 

அவனை பற்றி குறை சொல்லவோ இல்ல விலகவோ இல்லை… ஏன் அவன் தன்னை ஏமாற்றுவான் என்று கடைசி வரைக்கும் அவள் நம்பவே இல்லை… 

அப்படிப்பட்ட அருமையான பெண்ணு அவள் தன் காதலுக்கு…அவள் கடைசி வரைக்கும் உண்மையாக தான் இருந்தாள்…இவனுக்கு தான் வாழ கொடுத்து வைக்கவில்லை.  

ஏன் தன் மூத்த பெண்ணை கூட இத்தனை வருடத்தில் அவன் பார்த்தது கூட இல்லை…இவன் எல்லாம் ஒரு அப்பன் சக்ரா, கல்யாணி இல்லை என்றால் மயூரி கதி என்ன..? 

நான் அவளை பார்த்து கொள்வேன்…அதற்க்கு யாரின் அனுமதியும் எனக்கு தேவையில்லை…இருந்தாலும் அந்த சின்ன பெண்ணு நிலை . 

சரி மா நீங்க நாளை கிளம்புங்க அசோக் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்…பக்காவாக ஏற்பாடு பண்ணி இருப்பான் நம்ம பங்களாவும் தஞ்சையில் இருக்கு.  

ஆனால் தனி தனியாக நீங்க இருப்பது சரியாக இருக்காது..நான் உங்க கூட கிளம்ப முடியாது அரசியல் காரணம்…நாளை மறுநாள் கிளம்புகிறேன் இங்கே நான் இல்லை என்றால்.  

ராகவனை தன் கைபொம்மையாக வைத்து…பாண்டி காய் நகர்த்த தொடங்கி விடுவான் எதிர்கட்சி தலைவன் கனகராஜ்… 

வேறு ஒரு மாதிரியான ஆளு அரசாங்கத்தை கவிழ்க்க… பல வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறான்…சமீபகாலமாக அடிக்கடி பாண்டி அவனை சந்திப்பதாக பவன் சொன்னான்… 

இரண்டுமே கிரிமினல் ஆளுங்க என்ன செய்ய போகிறாங்களோ தெரியாது…இப்படி இருக்கும் போது நான் இல்லை என்றால் அவ்வளவு தான்…” என்றார்.  

புவனா “ அப்பா கோப்பட வேணாம்…அண்ணன் இந்த புரோகிராமுக்கு வருகிறதா..? அண்ணன் அண்ணியை முதல் முதலாக பார்த்தது… 

தஞ்சை பெரிய கோவிலில் தானே நம்ம அண்ணன் பிறந்த நாளைக்கு… அம்மா வேண்டுதல் ஒன்று வைத்து இருக்க அதை நிறைவேற்ற போன போது தானே… பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? என கேட்டாள்.  

குரு “ அந்த அயோக்கிய பயல் எதற்காக அங்கே வர போகிறான்…அந்த பிரகதீஸ்வர் சியாமளாவை இவன் கண்ணில் காட்டி இருக்கவே கூடாது… 

அவனுக்கும் கலைக்கும் வெகு தூரம் மா… அவன் எங்கே அங்கு எல்லாம் வர போகிறான்…” என்றார்.  

இத்தனை நேரமும் இவர்கள் பேச்சில் தலையிடாது இருந்த…பவதீப்  

“ இல்ல சார் மினிஸ்டர் ராகவனுக்கு அழைப்பு வைத்திருக்காங்க…ஆனால் அவர் வருகிறாரா…? இல்லையா..? என்பது எனக்கு தெரியாது என்றான். 

மயில் ஆடி வரும்…
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
621 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page