அத்தியாயம்:18
தஞ்சை பெரிய கோவில் பிரகதீசுவரர் என்று அறியபடும் தலம்…தஞ்சாவூரில் சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள.. திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோவில் ஆகும்.
உலகப் பாரம்பரிய சின்னமும் திகழும் இக் கோவிலின்… மூலவர் எம் பெருமான் சிவன் ஆவார் இன்று… இக் கோவிலில் சாதாரண நாட்களை விட கூட்டம் இன்று அலை மோதியது…அதை விட பாதுகாப்பு அதிகமாக இருந்தது.
கிட்ட தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று தான் மிக பெரிய அளவில்…நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது அதுவும் வெளி மாநில ஆளுங்களும்.. இதில் கலந்து கொள்ள போவது தான் சிறப்பு அம்சம்.
நடனம் நிகழ்ச்சி நிரல் படி சரியாக.. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்து இருந்தார்கள்… அதற்க்கு முன்னே சிவனுக்கு சிறப்பு பூஜை நடை பெற இருப்பதால் …அதில் அனைவருமே கலந்து கொள்ளும்படி கேட்டு கொண்டார்கள்.
பூஜைக்காக அனைவருமே கோவிலில் கூடி இருக்க…எதிர்கட்சி தலைவர் கனகராஜ் அவர் தம்பி ராஜவேலு வந்தார்கள்…அவர் வந்து முடிய அடுத்தாக ராகவன், மாலதி, சரிகா கூடவே பாண்டி வந்தார்கள்…
இன்னும் குரு மூர்த்தி வரவில்லை… வரும் வழியில் மக்கள் அவரை சந்திக்க கொளுத்தும் வெயிலில் காத்து நிற்க…
அவர்களை அலட்சியப்படுத்தாது அவரும் இறங்கி…ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு வர லேட்டாகி விட்டது…அது போல வெளியூர் கலைஞர்கள், உள்ளூர் கலைஞர்களில் சிலர் வந்து விட்டனர்…
இன்னும் சிலர் வரவில்ல அதில் மயூரியும் அடக்கம்…அவள் நேரத்துக்கு தான் கிளம்பி இருந்தாள்.
ஆனால் இன்று அதிகமாக டிராபிக் இருந்ததால் அவளால் வர முடியவில்லை…எதிர்கட்சி தலைவர், ராகவனை கோவில் கமிட்டி…மாலை, மரியாதை எல்லாம் செய்து பூஜைக்கு அழைத்து சென்றது….ராகவனை கண்டதும் கனகராஜ்.
“ என்ன ராகவா அதிசயமாக இருக்கு உனக்கு கூட அழைப்பு வைத்திருக்காங்க போல…இதை ஏன் கேட்கிறேன் என்றால் உன் பெரியப்பாவுக்கு தானே… இது வரை எல்லாம் கிடைத்து கொண்டு இருந்தது அதற்காக தான்…
என்ன இன்னும் உன் பெரியப்பாவை காணோம்…? நீ வருவதை கேள்விப்பட்டதும் இது நம்ம போக தகுதியான இடம் இல்லை என்று…வரவில்லையா..? என கேலி பண்ண ராஜவேலு கூடவே எதிர்கட்சி தொண்டர்கள் சிரித்தார்கள்.
ராகவனின் முகம் மாற அவன் ஏதோ பேச வாய் எடுக்க..பாண்டி அவன் கையை பற்றி அழுத்தி விட்டு.
“ என்ன தலைவரே நீங்களே இப்படி எல்லாம் தெரிந்து இருந்தும் கேலி, கிண்டல் பண்ணினால் எப்படி..? என் மாப்பிள்ளை திறமை பற்றி அரசியலில் அவருக்கு உள்ள அறிவு, பற்றி உங்களுக்கு தெரியாததா..?
நம்ம எல்லாம் ஒரே ஜாதி அரசியல்வாதி என்ற ஜாதி…நம்ம அடித்து கொண்டால் யாருக்கு லாபம் சொல்லுங்க…? அதை விட இந்த மக்கள் நம்மை நம்பி ஓட்டு போடுங்களா..? என கேட்டான்.
அவனை ஒரு தடவை ராஜவேலு பார்த்து விட்டு…
“ அண்ணே பாண்டி சொல்வது கூட ஒரு விதத்தில் சரியாக இருக்கு…இந்த முட்டாள் ஜனங்கள் பிறகு எப்படி நமக்கு ஓட்டு போடுவாங்க…” என்றான்.
கனகராஜ் “ ம் ‘ நீ சொல்வது தான் சரி ராஜா…முதலில் இந்த எலக்சன் நல்லபடியாக முடியும் வரைக்கும்…நம்ம அமைதியாக இருக்க தான் வேணும்…
என்ன தர்மகர்த்தா சோமசுந்தரம் பூஜைக்கான வேலையை தொடங்கி விட்டீங்களா..? இல்ல இன்னும் நாங்க காத்து நிற்க வேணுமா..? என கேட்டார்.
பாண்டி “ அது தானே நாங்க வந்து எவ்வளவு நேரமாகி விட்டது…கலைஞர்கள், மக்கள் எல்லாம் வந்து விட்டாங்க இன்னும் பூஜையை தொடங்காது என்ன செய்கிறீங்க..?
அது தான் வர வேண்டிய ஆளுங்க வந்து விட்டாங்க…சட்புட் என்று பூஜையை தொடங்கி முடித்து விட்டு…நிகழ்ச்சியை தொடங்குங்க நாங்க என்ன வேலை வெட்டி இல்லாத ஆளுங்களாக..? என கேட்டான்.
எல்லாம் தெரிந்தும் இந்த இரண்டும்…தலைவரை ஏற்றி விடுதுங்க இன்னும் முதல்வர் வரவில்ல…கூடவே ஈசனுக்கு முதல் மரியாதை செய்யும் சக்ரபாணி ஐயாவும் வரவில்ல…இப்போ என்ன செய்வது..?
வெளிமாநில ஆளுங்க இவங்களே இப்படி பேசினால் நம்மை பற்றி என்ன நினைப்பாங்க…எல்லாம் தெரிந்து கொண்டே இப்படி பேச காரணம்.. தலைவரை மட்டம் தட்ட தான் என தெரிகிறது.
அதற்க்கு இது தான் இடமா..? இது புனிதமான இடம் ஈசன் குடியிருக்கும் இல்லம்…அதில் இந்த அரசியல் என்னும் சாக்கடையை… கலக்க நினைக்கும் இதுங்க இரண்டையுமே என்ன செய்வது.
ஒன்று எதிர்கட்சி தலைவரின் தம்பி அடுத்து மந்திரி ராகவனின் மச்சான்…ராகவன் தலைவரின் மகன் ஈஸ்வரா இது என்ன சோதனை…
நான் பதில் சொல்ல முடியாத இக்கட்டான நிலையில்…என்னை நிறுத்தி விட்டாயே தெய்வமே உன் பக்தனை நீ தான் காத்தருள வேணும் பிரபு…என்று மனதில் வேண்டி கொள்ள.
பக்தர்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரும் உலகை ஆளும் பரமேஸ்வரன்…சோமசுந்தரம் குரலுக்கு செவி சாய்த்தான் அவர் பதில் சொல்ல வாய் எடுக்க…
கறுப்பு உடை அணிந்த கார்ட்ஸ் கிட்ட தட்ட இருபது பேர் முன்னே பின்னே வர…நடுவில் மீனா, புவனா, கல்யாணி, சக்ரபாணி, மயூரி குழந்தைங்க… வெங்கட், கண்மணி, யசோதா, சாரதா மற்ற பெண்ணுங்க வந்தார்கள்….சோமநாதன் முகம் மலர
“ தலைவரே இதோ முதல்வர் வந்து விட்டார் போல…சக்ரபாணி ஐயாவும் வந்து விட்டார் குருக்களே பூஜைக்கான நேரம்…இன்னும் இருக்கு இல்லையா..? நீங்க வேலையை தொடங்குங்க…” என்றார்.
ராகவன் சட்டென திரும்ப அவன் கண்களில் முதலில் பட்டவள் மயூரிகா…அதுவும் அச்சு அசலாக சியாமளா உருவில் நாட்டிய உடையில்…
நேரில் பார்த்த ராகவனால் அவன் கண்களை… அவளில் இருந்து எடுக்கவே முடியவில்லை.
அவன் வாய் சியாமி என முணுமுணுக்க அவனுக்கு…சியாமளாவை இந்த கோவிலில் கண்ட முதல் தருணம் கண் முன்னே வந்தது…அவன் சிலை போல நின்று இருக்க அவனை கண்டதும்.. சக்ரபாணியின் முகம் அதி பயங்கரமாக மாறியது.
அதை அவர் அருகில் இருந்து உணர்ந்து கொண்ட கல்யாணி…கணவனின் கையை பற்றியவர் மெல்ல அவர் கேட்கும் வண்ணம்.
“ என்னங்க இந்த ஒரு தடவை இந்த விஷயத்தில் என் பேச்சை கேளுங்க…இன்று மிக பெரிய நாள் பாப்பாவுக்கு நம்மால் அது அவளுக்கு கெட்டு போக கூடாது…
நம்ம பெண்ணு போல நடனத்தை.. உயிராக நினைக்கும் அவளுக்கு எந்த மன வருத்தமும் வர கூடாது.
அது மட்டுமல்ல குரு மூர்த்தி அண்ணன் பெயரும் கெட கூடாது…எலக்சன் வேறு வருகிறது அவர் நண்பன் சம்பந்தியால்… அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை வர கூடாது.
நம்ம எதற்காக வந்தோமே அந்த விஷயத்தை பார்த்து விட்டு கிளம்பலாம்…இது கோவில் பொது இடம் வீணாக பிரச்சனை வேணாம்…” என்றார்
கல்யாணி சொன்ன அனைத்தும்… உண்மை என்பதால் சக்ரபாணி அமைதியாக வந்தார்…
சோமசுந்தரம் பெண்களை அழைத்து மாலை, மரியாதை செய்ய சொன்னவர்…மீனாவிடம்
“ அம்மா வாங்க சக்ரபாணி ஐயா ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை இங்கே பார்த்தது…ரொம்ப சந்தோஷமாக இருக்கு முதல்வர் ஐயா வரவில்லையா..? என கேட்டார்.
பாண்டி “ அதை தானே சுந்தரம் நாங்களும் உனக்கு எடுத்து சொன்னோம்…முதல்வர் இந்த சின்ன நிகழ்ச்சிக்கு எல்லாம் வருவாரா என்று..?
அவர் போகும் இடம் எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க, தொழிலதிபர் இருக்கும் இடம் ஆயிற்றே…தேர்தல் முடிந்த பிறகு இந்த சாதாரண மக்கள் துணை அவருக்கு எதற்க்கு..? என்றவனை.. சக்ரபாணி பார்த்த பார்வையில் கொலை வெறி மின்னியது.
வெங்கட் “ பாண்டி வீணாக கலவரத்தை ஏற்படுத்த நினைக்காதே…குரு மூர்த்தி ஐயா கிளம்பி விட்டார் இப்போ வந்து விடுவார்…முதலில் உனக்கு இங்கே என்ன வேலை..?
ராகவன் தம்பி கூட எடுபிடியாக வந்தால் அதை மட்டும் பாரு…அதை விட்டு தேவையில்லாத எல்லாம் பேசி கொண்டு இருக்காதே…இது மேடை அல்ல கோவில்.
பார்த்து பேசு என்ன ராகவன் தம்பி… உங்க சொந்த ரத்தம் உங்க பெரியப்பாவை பற்றி ஒருவன் பேசி கொண்டு இருக்கிறான்…நீங்க அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறீங்க.
என்ன எது என கேட்க மாட்டீங்களா..? உங்க பெரியம்மா உங்க மேலே உயிரே வைத்திருக்கிறாங்க…நீங்க என்ன என்றால் ஒருவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கறீங்க…”என கோபமாக கேட்டார்…பாண்டி ஏதோ பேச வர.
ராகவன் “போதும் பாண்டி இனி நீ வாய் திறக்க கூடாது…” என சொன்னவன் மயூரியை பார்த்தவாறே மீனாவிடம் பெரியம்மா என போய் அவரின் காலில் விழ…
மீனாவும் ராகவா என்றவர் அவனை ஆசீர்வாதம் செய்து விட்டு…அவனை தூக்க அவன் எழுந்து அவரை அணைத்து கொண்டான்.
மீனா அவன் கன்னத்தை தடவி விட்டவர்…கண்கள் கலங்கியது வளர்த்த பாசத்தை அவ்வளவு சீக்கிரமாக பிரிக்க முடியாது.
மீனா “ என்னப்பா இது ரொம்ப மெலிந்து போய் விட்ட கன்னம் எல்லாம் ஒட்டி போய் இருக்கு, கருத்து வேறு இருக்க நேரத்துக்கு சாப்பிடுகிறாயா..?
நாதா நீ தானே இவன் கூடவே எப்பவுமே இருப்பவன் இதை எல்லாம் பார்க்க மாட்டாயா..? என கேட்டார்.
அவர் கையை பற்றி தன் கன்னத்தில் வைத்தவன்…
ராகவன் “ நான் நல்லா இருக்கிறேன் பெரியம்மா…எலக்சன் டைம் தானே அது தான் ரொம்ப வேலை நீங்க எப்படி இருக்கிறீங்க..?
புவனா பாப்பா நீ எப்படி இருக்க..? இது என் மருமகள் தானே மாமா கிட்ட வா டா…” என்றவன்… புவனா கையில் இருந்த தியாவை தூக்க போக அவள் முகம் புதிதாக இருக்க அழுதாள்.
புவனா “ நலம் விசாரிக்கும் அளவில் நம்ம உறவு இருக்கு இல்லையா அண்ணா..? உன் சொந்த மருமகளுக்கு நீ யாரென்று கூட தெரியாத நிலையில் இருக்கிறாள்…
உனக்கு நம்ம உறவை விட அரசியல் முக்கியமாக போய் விட்டது இல்லையா.?
இந்த இடம் ஞாபகம் இருக்கா அண்ணா..? உன் வாழ்க்கையில் ஒரு தேவதை வந்த இடம் அந்த தேவதை தந்த பரிசை கூட…நீ அலட்சியப்படுத்தி இருக்க எதை எல்லாம்… நீ இழந்து இருக்க என உனக்கு இப்போ புரியாது அண்ணா…பட்டு தெரிந்த பிறகு புரிந்து கொள்வ.
அம்மா உன் மேலே ரொம்ப அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறாங்க…அப்பா கிட்ட கூட உனக்காக சண்டை போடுவாங்க…என் மகன் திருந்தி விடுவான் திரும்ப நம்ம குடும்பத்துக்குள்ளே வருவான் என்று.
அந்த நம்பிக்கையை குலைத்து விடாதே…உண்மையை சொல்ல போனால் அம்மாவை தவிர எங்க யாருக்குமே… உன் மேலே நம்பிக்கை இல்லை…
நீ சியாமளா அண்ணி நம்பிக்கையை தான் காப்பாற்றவில்லை…உன் அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்ற பாரு…
தியா பாப்பா இது உன் மாமா டா உன் காது குத்துக்கு, பர்ஸ்ட் பர்த்டேக்கு வந்த மாமா.
பிறகு வீட்டுக்கு பக்கம் எட்டி கூட பார்க்கவே இல்லை…இப்போ தான் தனக்கு மருமகன், மருமகள் இருப்பதே அவருக்கு ஞாபகம் வந்து இருக்கு…” என்று இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த கோபத்தை கொட்டினாள்..
மயில் ஆடி வரும்…
