அத்தியாயம்:22
பாரம்பரிய நடனம் முடிந்ததும்,அடுத்து குழு நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது…இன்னும் இரண்டு குழுக்கள் நடனம் ஆடி முடிந்தால் அடுத்து…தனி நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
சக்ரபாணி மடியில் இருந்த தர்ஷனுக்கு போரடித்தது…மயூரியை வேறு காணவில்லை அவன் சக்ரபாணியிடம்.
“ தாத்தா சித்தி எங்கே அவளை இன்னும் காணோம்…நீ தானே சொன்ன அவள் டான்ஸ் பண்ண வருவாள்…நான் கிளாப் பண்ண வேணும் என்று…” என கேட்டான் பேரனின் தலையை தடவி அதில் முத்தம் வைத்தவர்.
சக்ரபாணி “ இப்போ சித்தி வருவாள் டா…இந்த அக்காக்கள் டான்ஸ் பண்ணி முடிய அவள் வருவாள்…” என்றார்.
தர்ஷன் “ அப்போ நான் சித்தியை பார்க்க போகவா..? என்று கேட்டான்…சக்ரபாணியின் அருகில் இருந்த குரு மூர்த்தி
“ கண்ணா அங்கே எல்லாம் போக கூடாது டா அதுவும் தனியாக…சித்தியை தொந்தரவு பண்ண கூடாது கொஞ்ச நேரம் பொறுத்து கொள்ளு சித்தி இப்போ வருவாள்…” என்றார்.
தர்ஷன் “ போ தாத்தா எனக்கு போரடிக்குது….நானும் பாப்பாவும் விளையாட போகவா..? என கேட்டான்… குழந்தைங்க தானே அவர்களை ஒரு இடத்தில் வைத்திருப்பது கஷ்டம்.
குரு “ அப்படி எல்லாம் தனியாக போக கூடாது பா…இது தெரியாத இடம் உன்னையும் பாப்பாவை பூச்சாண்டி வந்து தூக்கி கொண்டு போய் விடுவான்…பிறகு நீ அம்மா, தாத்தா, பாட்டி, சித்தியை எல்லாம் பார்க்க முடியாது.
அதனால் கொஞ்ச நேரம் அமைதியாக இரு…சக்ரா இவனுக்கு பசியெடுத்து விட்டது போல…மீனா கிட்ட அனுப்பலாம் அவனை இங்கே கொடு…” என்றவர்… பேரனை தூக்கி தன் அருகே இருந்து…கல்யாணி கூட பேசி கொண்டு இருந்த மனைவியிடம் கொடுத்தார்.
குரு “ ரொம்ப காலமாகி விட்டது டா இந்த கோவிலுக்கு வந்து…முன்னே எல்லாம் பையனுக்கு வேண்டுதல், பெண்ணுக்கு வேண்டுதல் வாங்க என்று…மீனா வற்புறுத்தி அழைத்து வருவாள்.
அடுத்து சியாமளா ஆடும் போது நீங்க எல்லாம் கட்டாயமாக வர வேணும் அங்கிள் என்று…அழைப்பு விடுப்பாள் அவள் அழைப்பை தட்டாது வருவேன்…பிறகு அவள் பிறந்த நாளைக்கு.
அவள் போன பிறகு இங்கே வர எனக்கு விருப்பம் இல்லை…மக்கள் சந்திப்புக்கு இங்கே வந்தால் கூட வெளியே இந்த பரமேஸ்வரை வணங்கி விட்டு போவேன்.
இப்போ விதி பாரு வர மறுத்த என்னை அவர் நம்ம பேத்தியை வைத்து… வரவழைத்து விட்டார் மயூ டான்ஸ் பண்ணவில்லை என்றால்… நான் ஏதும் ஒரு காரணத்தை சொல்லி வராது இருந்து இருப்பேன்…” என்றார்.
சக்ரபாணி “ நீ சொன்ன அதைய காரணத்திற்காக தான் நானும் இங்கே வருவது இல்லை…கல்யாணி என்னை தஞ்சைக்கு போகலாம் வாங்க என்று நச்சரிப்பாள்…நான் அவளிடம் மறுத்து விடுவேன்.
மயூவையும் பெரிதாக இங்கே நான் வர விடுவதில்லை…எனக்கு மனதில் ஒரு பயம் டா என் பெண்ணு வாழ்க்கையும் இங்கே தான் திசை மாற தொடங்கியது…அது போல என் பேத்திக்கும் ஏதும் ஆகிவிடும் என்ற பயம்.
இப்போ பாரு எப்பவுமே என் கிட்ட பிடிவாதம் பிடிக்காத என் பேத்தி …கண்ணை கசக்கி நீ தஞ்சை வர வேணும் தாத்தா என்றாள்…என் பேத்தியை எதற்காகவும் அழ விட கூடாது என்ற வைராக்கியமாக இருப்பவன் நான்.
அது தான் மறுக்க முடியாமல் வந்தேன்…இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது என் பெண்ணு இந்த அப்பாவை பார்க்க…தன் பெண்ணு மூலமாக வரவழைத்தது இருக்கிறாள் என்று.
இதோ அவள் ஆடிய கோவிலில், மேடையில் அவள் உருவில் இருக்கும்…அவள் பெண்ணு ஆட போகிறாள் அதை பார்த்து… ரசிக்க என் பெண்ணு இல்லை மூர்த்தி.
இதை விட எனக்கு வலி என்ன தெரியுமா..? என் பெண்ணு சாவுக்கு காரணமானவன் என் அருகில் என் குடும்பம் கூட உட்கார்ந்து இருக்கிறான்…
என்னால் ஏதுவுமே செய்ய முடியாமல்… கை கட்டி வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறது…” என வலியோட சொல்ல… குரு மூர்த்தி அவர் கையை பற்றி அழுத்தியவர்.
“ சக்ரா சியாமளா என் வீட்டு மருமகள் இல்ல மகள்…புவனாவும் அவளும் எனக்கு வேறு வேறு அல்ல நம்ம சில நேரம் …உண்மை என நினைப்பது ஏதுவுமே உண்மை அல்ல சக்ரா…அது கானல் நீர்
நான் இப்போ உனக்கு சொல்வது ஏதுவுமோ புரியாது…ஒரு நாள் நிச்சயமாக உண்மை வெளிவரும் போது இன்று… நான் உனக்கு சொன்னது அப்போ புரியும்.
ராகவன் என் பையன் தான் ஏன் தடம் மாறி போகிறான் தான்..சுயநலகாரன், நம்பிக்கை துரோகி இதை எல்லாம் நான் ஏற்று கொள்கிறேன்…ஆனால் அவன் கொலைகாரன் இல்லை அதை… இப்போ என்னால் உன் கிட்ட நிரூபிக்க முடியாது.
ஒரு நாள் உனக்கு மட்டுமல்ல அவனுக்கும் சில உண்மைகள் தெரிய வரும்…அப்போ தான் அவன் எதை எல்லாம் இழந்து இருக்கிறான் என்று தெரிய வரும்…
இப்போ இது பற்றி பேச வேணாம்… நம்ம பேத்தியின் நடனத்தை ரசிக்கலாம்…” என்றார்.
காசிப், மஸ்தி இருவருமே மேக்கப் ரூம்மில் காத்திருந்தும்…மயூரியை காணவில்லை பொறுமை இழந்த மஸ்தி.
“ காசிப் பய்யா என்ன இன்னும் அந்த லடுக்கியை காணோம்…ஒரு வேளை அது டான்ஸ் முடிந்ததும் கிளம்பி விட்டதா…? இல்லையே அது குடும்பம் எல்லாம் இங்கே தானே நிற்கிறாங்க.
ஆ ‘ வேற ஒன்றுமில்ல பய்யா இப்போ உள்ள பையன், பெண்ணுங்களுக்கு…கையில் ஒரு மொபைல் போன் இருந்தால் போதுமே…உலகத்தையே மறந்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாது இருப்பாங்க.
இந்த பெண்ணும் அப்படி தான் போல…யாருக்கு தெரியும் இந்த லடுக்கி தன் பாய் ப்ரண்ட் கூட தனியா அரட்டை அடித்து கொண்டு இருக்குதோ என்று …அங்கே இருந்தால் அவன் கூட பேச முடியாது தானே அது தான் தனியாக… போய் பேசி கொண்டு இருக்கும்…” என்றான்.
காசிப் “ உனக்கு பொறுமை என்பது ரொம்ப கம்மி மஸ்தி…அது நம்ம பார்க்க போகும் வேலைக்கு சரி வராது…அந்த பெண்ணு யார் கூட என்றாலும் பேசட்டும் அது நமக்கு தேவையில்லாத ஒன்று.
முதலில் நீ போய் அந்த பெண்ணு எங்கே இருக்கு…என்ன செய்கிறது என்று பார்த்து வா அதற்க்கு பிறகு தான்… பிளான் பண்ண வேணும்…” என்றான்.
தர்ஷனுக்கு உண்மையில் போரடித்தது…தியா வேறு ராகவனின் மடியிலே தூங்கி இருந்தாள்…ராகவனுக்கும் தியா போல குழந்தையாக இருந்த போது…மயூரியை இப்படி தூக்கி வைத்திருந்து ஞாபகம் வந்தது.
தியாவை மயூரியாக நினைத்தவன்…அவளை தூக்கி அணைத்து கொண்டான் குழந்தைகளும் அன்பு காட்டும் இடத்தில் தானே ஒட்டி கொள்ளும்…தியாவும் மாமன் கூட ஒட்டி கொண்டாள் தர்ஷனுக்கு சக்ரபாணி போதும்.
அவரும் தன் சொந்த பேரனாக நினைத்து…அவனுக்கு தனிப்பட்ட சலுகை எல்லாம் கொடுத்தார்…தர்ஷனுக்கு மீனாவும்,கல்யாணியும் வீட்டில் இருந்து செய்து கொண்டு வந்த ஸ்நாக்ஸ், பாட்டில் ஜூஸை… மாறி மாறி ஊட்டி விட அவனுக்கு வயிறு நிறைந்து விட்டது.
வயிறு நிறைந்தால் அடுத்து விளையாட்டு தானே…அவன் விளையாட தங்கையை பார்க்க அவள் தூங்கி இருக்க…சுற்றி பார்த்தவன் பார்வையில் பட்டார்கள்… நாட்டிய நிகழ்ச்சி பார்க்க பெத்தவங்க கூட வந்த அவன் வயதை ஒத்த சிறுவர், சிறுமிகள்.
அவர்களுக்கும் போராடிக்க காவல் இருப்பதால் அசம்பாவிதம்…ஏதும் நடக்காது என்பதால் பெத்தவங்க விளையாட அனுமதி கொடுத்தார்கள்..அதுவும் பார்வை அவர்கள் பக்கமாக தான் வைத்திருந்தார்கள்.
இந்த காலத்தில் யாரை நம்புவது…இப்போ நாட்டில் நடக்கும் கேவலங்களால் அறுபது வயது கிழவி கூட…தனியாக வெளியே போக பயப்படும் காலம் இது.
புவனாவுக்கு என்ன தான் கோபம் இருந்தாலும் கூட…சேர்ந்து வளர்ந்த பாசம் உந்தி தள்ள தமையன் கூட பேசி கொண்டு இருந்தாள்…கல்யாணியும், மீனாவும் பழங் கதைகள் பேசி கொண்டு இருக்க தர்ஷன்… மீனா மடியில் இருந்து நழுவி போனதை யாருமே கவனிக்கவே இல்லை.
மூர்த்தி, சக்ரபாணி அவர்கள் பேச்சில் மும்முரமாக இருந்தனர்…பவதீப்புக்கு ராகுல் கால் பண்ணி இருக்க அவனும் பேசி கொண்டு இருந்தான்…தர்ஷன் வெளியே போனதை கண்ட இருவர் அவன் பின் தொடர்ந்து போனார்கள்.
காசிப் மஸ்தியை மயூரி எங்கே என பார்த்து விட்டு வர சொல்லி அனுப்பி விட்டு…அவனுக்காக காத்திருக்க மஸ்தி வேகமா அவனை நோக்கி வந்தான்.
காசிப்” என்ன மஸ்தி போனால் எவ்வளவு நேரம் எடுப்ப வந்து சேர…கடைசி நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று அறிவித்து விட்டார்கள்…
அந்த லடுக்கி எங்கே அவள் டான்ஸ் பண்ணி விட்டாளா..? இல்ல இனி தான் ஆட போகிறாளா..? என்று கேட்டான்.
மஸ்தி “ பய்யா காவல் ரொம்ப அதிகமாக இருக்கு…சந்தேகம் வராது நான் விசாரிக்க வேணும் இல்லையா.? பய்யா அந்த லடுக்கி இங்கே மேக்கப் போட வராது…
அதற்கு மேக்கப் போட தனியாக ஒரு பெண்ணு இருக்கு…கூடவே பி.ஏ போல ஒரு பெண்ணும்.
அந்த லடுக்கி மேடைக்கு பின் இருக்கும் ரூம்மில் தான் இருக்கு…அங்கே கூட்டம் ஜாஸ்தியாக இருக்கு நான் உள்ளே போகாது…
ஒரு பெண்ணு கிட்ட மயூரி இருக்கா..? ஆட்டோகிராப் வாங்க வேணும் என்று கேட்பது போல கேட்டேன்.
அந்த பெண்ணு தான் மயூரிகா உள்ளே இருக்கிறாள்…இனி அவளின் நடனம் அவள் டான்ஸ் பண்ணி முடிய நீங்க வந்து…ஆட்டோகிராப் வாங்கி கொள்ளுங்க என்றாள்.
இப்போ என்ன பய்யா செய்வது நம்ம மிஷன் பெயிலியரா..? நம்ம தலைவருக்கு என்ன பதிலை சொல்ல போகிறோம்…அவங்க நம்ம உயிரை வாங்கி விடுவாங்க.
பேசாமல் பாம் போட்டு விடுவோமா..? எல்லோருமே போய் சேரட்டும் அப்போ நம்ம இயக்கத்தின் மேலே ஒரு பயம் வரும்…அதனால் நம்ம கேட்பதை அவங்க கொடுத்து விடுவாங்க…” என்றான்.
காசிப் “ அரே ‘ முட்டாள் போல பேசாதே…அதனால் நம்மளுக்கு ஒன்றுமே பயன் இல்லை துட்டு கிடைக்காது…நம்ம தோழர்களுக்கும் விடுதலை கிடைக்காது…இந்திய கவர்மெண்ட் அவங்களை நேரடியாக தூக்கில் போட்டு விடும்.
மற்ற நாடுகள் கேள்வி கேட்டால் கூட தீவிரவாதிகள்…பல உயிர்களை எடுத்தவங்க அது தான் தூக்கில் போட்டோம்…என காரணம் சொல்லி தப்பித்து கொள்ளும்… கூடவே நம்ம காஷ்மீ்ர் எல்லையில் மொத்த ராணுவத்தையும் கொண்டு வந்து குவிக்கும்.
இப்போ சொல்லு நம்ம தப்பி விட்டாலும் எந்த பயனும் இல்லை…அதனால் நான் வேற ஒரு பிளான் போடுகிறேன் நீ அதை நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி விட்டு வா… மயூரி மேடையில் இருந்து இறங்கிய அடுத்த செக்கன் அவள் நம்ம பணய கைதி.
யாருமே இந்த கோவிலை விட்டு போக கூடாது…அதையும் நம்ம ஆளுங்க கிட்ட சொல்லு…” என்றான்.
மயில் ஆடி வரும்….
