ஆடி வரும் வண்ண மயிலே-29

அத்தியாயம்:29 

கிருபாகர், ராகுல் மயூரிகா, பவதீப்பை காணவில்லை என்று… மண்டபத்துக்கு ஓடி போக புகையில் தள்ளாடி கொண்டே…மயூரியை தூக்கி தோளில் போட்டு கொண்டு பவதீப் வெளியே வந்தான்.  

மயூ, பாஸ் என்று கிருபாகர், ராகுல் அழைத்தடியே அவர்கள் அருகே ஓடி போனார்கள்…கிருபா பவதீப் தோளில் இருந்த மயூரியை வாங்கி தூக்கி கொள்ள…ராகுல் பவதீப்பை பிடித்து கொண்டான். 

கிருபா தன் கையில் பூ போல அரை மயக்கத்தில் இருந்த மயூரியை பார்த்தவன்… 

“ மயூ குட்டி எழுந்திரு மா என்ன டா ஆயிற்று…” என அவள் கன்னத்தை தட்டினான்…பவதீப் இறுமி கொண்டே.  

“ கிருபா அண்ணா அவங்களுக்கு இந்த புகையை தாங்கி கொள்ள முடியவில்லை…கூடவே அதிர்ச்சி வேறு அது தான் மயக்கத்தில் இருக்காங்க…சீக்கிரமாக அவங்களை டென்ட்க்கு அழைத்து போங்க.  

ராகுல் சி.எம் சார் எங்கே..? அவருக்கு ஏதும் ஆபத்து இல்லை தானே…நான் அவரை பார்க்க வேணும் எந்த டென்ட்டில் இருக்கிறார்…? என கேட்டான்.  

ராகுல் “ சி.எம் சார் அவர் பேமிலி எல்லாம் சேப்பாக தான் இருக்கிறாங்க பாஸ்…முதலில் நீங்க சீக்கிரமாக வாங்க ஹெவி ப்ளட் லாஸ்ட் ஆக முன்னே…ட்ரீட்மெண்ட் செய்ய வேணும் பிறகு சி.எம் சாரை பார்க்க போகலாம்…” என்றான்.  

கிருபாகர் “ பவா ராகுல் சொல்வது தான் சரி…முதலில் நீ ஆரோக்கியமாக இருந்தால் தான் சி.எம் சாரை பாதுகாக்க முடியும்… 

நீ கிளம்பு நான் மயூவை அவள் குடும்பம் இருக்கும் டென்ட்டில் விட்டு வருகிறேன்…” என சொல்லி விட்டு நகர போக… அவனால் நகர முடியாதபடிக்கு ஏதோ தடை இருந்தது… 

என்ன என்று பார்த்தால் இவர்கள் பேசி கொண்டே இருக்கும் போது…மயூரி கை பவதீப் சட்டையை இறுக்க பற்றி இருந்தது…அவள் வாய் வேறு ஏதோ முணு முணுத்து கொண்டு இருந்தது.  

கிருபாகர் மெல்ல அவள் கையை அவன் சட்டையில் இருந்து விலக்க…மயூரி கண்கள் மெல்ல திறக்க அவள் தீப் என அழைத்தாள்…அது கிருபாகர், ராகுலுக்கு கேட்டது.  

பவதீப்புக்கு ரத்தம் வெளியேறி கொண்டு இருப்பதால்…அவனுக்கு மயூரி அழைத்தது சரியாக கேட்கவில்லை…கிருபாகர், ராகுல் கூட அந்த அழைப்பை தப்பாக நினைக்கவில்லை.  

அவர்கள் ஒன்றும் பட்டுக்காடு இல்லையே…அது மட்டுமல்ல அவளை மரணத்தில் இருந்து காத்தவன் பவதீப்…அவனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தப்பு இருக்க முடியும்.  

கிருபாகர் அவளை தூக்கி கொண்டு குரு மூர்த்தி, சக்ரபாணி இருக்கும் டென்ட்க்கு போக…ராகுல் பவதீப்பை தங்கள் ராணுவத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட டென்ட்க்கு… கைதாங்கலாக அழைத்து கொண்டு போனான்.  

மயூரி அரை மயக்கத்தில் போகும் பவதீப்பை பார்த்து கொண்டு இருந்தவள்…திரும்ப மயக்கத்தில் ஆழ்ந்தாள் . 

சக்ரபாணி, கல்யாணி எழுந்தவர்கள்…முதலில் பேத்தியை காணோம் என்று  பதறி போனார்கள்… 

கண்மணி, யதோதா மயூரி போல அல்ல…நல்ல ஆரோக்கியமான பெண்ணுங்க என்பதால்… சீக்கிரமாக எழுந்து விட்டாங்க.  

 அவர்கள் இருவருமே சக்ரபாணி, கல்யாணி அருகில் தான் இருந்தார்கள்…. 

கல்யாணி “ யசோ, மணி உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை தானே…மயூ பாப்பா எங்கே காணோம் அவளை அந்த தீவிரவாதி ஒன்றும் செய்யவில்லை தானே.  

அந்த பவதீப் தம்பி தானே அவளை காப்பாற்றினான்…எங்கே என் பேத்தி…” என பதறி கொண்டே கேட்டார்… 

சக்ரபாணி தன் கண்களை கசக்கி விட்டு எழ போனவர்…அவரால் முடியாமல் தடுமாற யசோதா அவரை பிடித்து கொண்டவள்.  

“ சார் இப்போ எதற்காக இந்த அவசரம்…கொஞ்சம் அமைதியாக இருங்க மெது மெதுவாக எழுந்து கொள்ளலாம்…ஜூஸ் ஏதும் சாப்பிடுகிறீங்களா..? என கேட்டாள்.  

சக்ரபாணி “ இல்ல யசோ என் பேத்திக்கு என்ன நடந்தது என தெரியாமல்…இங்கே என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாது… 

நீங்க இரண்டு பேருமே நல்லா தானே இருக்கிறீங்க..? வெங்கட் எங்கே இருக்கிறான்…? என கேட்டார்  

யசோதா “ வெங்கட் சார் எழுந்து விட்டார்…மயூரி மேடத்தை தேடி போய் இருக்கிறார் சி.எம் சார், மீனா மேடம் கூட எழுந்து விட்டாங்க… 

அவங்க அடுத்த டென்ட்டில் இருக்கிறாங்க…” என சொல்லி கொண்டு இருக்கும் போதே… சக்ரா என அழைத்து கொண்டே குரு மூர்த்தி வந்தார்.  

அவர் கண்கள் எல்லாம் புகை எரிச்சலால் சிவந்து போய் இருந்தது…நண்பன் அருகில் வந்து அமர்ந்தவர் கைகளை சக்ரபாணி பற்றி கொண்டார்.  

“ சக்ரா உனக்கு ஒன்றுமில்ல தானே டா நான் பயந்து போய் விட்டேன்…உன்னை, கல்யாணியை காணோம் என்றதும்….மயூ பாப்பா எங்கே.? பவதீப்பை கூட காணோம்…” என கேட்டவாறே அந்த டென்ட்டை சுற்றி பார்க்க… 

அந்த நேரம் மயூரியை தூக்கி கொண்டு கிருபாகர் வர…அவன் பின்னால் ஒரு டாக்டர் வந்தார் அங்கே காலியாக கிடந்த ஒரு கட்லில் மயூரியை கிருபாகர் படுக்க வைக்க…டாக்டர் அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க ஆரம்பித்தார்.  

அவளை கண்டதும் பாப்பா என அழைத்து கொண்டே …குரு மூர்த்தி, சக்ரபாணி, கல்யாணி அவள் அருகே போக போக…அவர்களை தடுத்தவன் கிருபாகர்.  

“ சார் பீளிஸ் அங்கிள், ஆன்ட்டி கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருங்க…மயூவுக்கு முதலில் ட்ரீட்மெண்ட் பார்க்கட்டும் பிறகு அவள் கூட நீங்க பேசலாம்…” என்றவனை… சக்ரபாணி நிமிர்ந்து பார்த்தவர்…சிறிது யோசனைக்கு பிறகு. 

சக்ரபாணி “ தம்பி நீங்க என்றவர்…பிறகு “ நீ கிருபா தானே சாரதா பையன் மிலிட்டரில் கூட பெரிய பதவியில் இருக்க…எப்போ ஊருக்கு வந்த.  

குரு இவன் தான் நம்ம பேரனை காப்பாற்றியவன்…இவன் சாரதாவின் ஒரே பையன் எனக்கும் பேரன் தான்…மயூவுக்கு அண்ணன்…” என சொன்னவர் கிருபாகரை அணைத்து கொண்டார்… 

அவனும் அவரை அணைத்து கொண்டவர்… 

“ இப்போ தான் அங்கிள் வந்தேன்…உங்களுக்கு எல்லாம் சப்பிரைஸ் தரலாம் என்று வந்தால்… 

எனக்கே இங்கே பல சப்பிரைஸ் காத்திருக்கு… அம்மா கால் பண்ணி பேசும் போது சொன்னாங்க…மயூ பெரிய காம்பிடேஷன் ஒன்றில் கலந்து கொள்கிறாள் என்று.  

அவளும் எனக்கு கால் பண்ணி இருந்தால் போல….எல்லையில் சிக்னல் கிடைப்பது கஷ்டம் நாங்க எல்லாம்…குடும்பம் கூட பேச வேணும் என்றால் சிட்டிக்கு வந்து தான்… பேச முடியும்.  

சரி நானும் அம்மா கூட உங்க கூடவும் பேசி சில முடிவுகளை எடுக்க வேணும் என்பதால்…லீவு சொல்லி விட்டு வந்தேன் இங்கே வந்தால் விஷயம்… வேறு மாதிரியாக இருக்கு.  

நான் குளத்தில் கால் கழுவி விட்டு படியேறி கொண்டு இருக்கும் போது தான்..தர்ஷனை கடத்தி போவதை கண்டேன் அவன் வேறு அப்பாவை பார்க்க… போகிறேன் என சொல்லி கொண்டு இருந்தான்… “ என்றான்.  

குரு மூர்த்தி அவன் கையை பற்றி கொண்டவர்… 

“ நன்றி என்ற ஒற்றை வார்த்தை உனக்கும், பவனுக்கும் போதாது பா…நீங்க இரண்டு பேருமே என் பேரன், பேத்தியை காப்பாற்றி தந்து இருக்கின்றீங்க… 

தர்ஷன் அப்பா தவறி விட்டார் பா முன்னே எல்லாம் அப்பா சாமி கிட்ட போய் விட்டார்…என சொன்னால் கேட்டு கொள்வான் இப்போ வளர்ந்து விட்டான் ஸ்கூல் வேறு போகிறான்… 

அங்கே வரும் பசங்களின் அப்பாவை பார்த்து…அவனுக்கு அப்பா வேணும் வர சொல்லு என தினமும் கேட்கும் கேள்வி இது…அதை காரணமாக வைத்து தான் அவங்க கடத்தி இருக்கிறாங்க…” என்றார்.  

“என்ன பரத் இறந்து விட்டானா…? எப்படி சார் அவன் ஆரோக்கியமான பையன்…இல்ல உங்களுக்கு வைத்த குறியில் அவன் மாட்டி கொண்டானா.? என அதிர்ச்சியாக கேட்டான்.  

குரு மூர்த்தி சக்ரபாணி கிருபாகரை ஆச்சரியமாக பார்த்தார்கள்…இவனுக்கு பரத்தை தெரியுமா…?என்று அதை வாய் விட்டு கேட்டார் சக்ரபாணி.  

“ கிருபா உனக்கு பரத்தை தெரியுமா..? எப்படி உன் கூட படித்தவனா..? என கேட்டார்…கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன்…பிறகு  

கிருபா “ என் கூட எல்கேஜியில் இருந்து பிளஸ் டூ வரை படித்தான்…பிறகு நாங்க வேறு வேறு காலேஜ் போனாலும்.. போன் மூலமாக எங்க நட்பு தொடர்ந்து… 

அதற்க்கு பிறகு நான் ராணுவத்துக்கு போன பிறகு…அவனை சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை…அவன் மேரேஜ்க்கு கூட எனக்கு அழைப்பு அனுப்பி இருந்தான்…என்னால் அப்போ வர முடியாத சூழ்நிலை.  

தர்ஷனை முதலில் பார்த்த போது எங்கோ பார்த்த உணர்வு எனக்கு வந்தது…அப்போ இருந்த சூழ்நிலையில் அதை பற்றி யோசிக்க முடியவில்லை…” என்றான்.  

குரு “ மாப்பிள்ளை தான் தன் பையனை காப்பாற்ற…உன்னை அனுப்பி இருக்கிறார் போல அவருக்கு தெரிந்து இருக்கு… 

தன் குடும்பத்தை நீ பாதுகாப்ப என்று…” ஏதோ நினைவில் சொல்ல… கிருபாகர் கண்களில் சின்ன வலி எழுந்தது.  

அப்போது ஜெனரல் என அழைத்து கொண்டு வந்த தர்மா…அவனுக்கு ஒரு டிசர்ட் ஒன்றை கொடுத்தான் அதை எடுத்து போட்டு கொண்டே…கிருபாகர்  

“ தர்மா பவாவுக்கு இப்போ எப்படி இருக்கு…ட்ரீட்மெண்ட் தொடங்கி விட்டாங்களா..? என கேட்டான்.  

தர்மா “ பாஸ்க்கு கத்தி குத்தால் பிளட் தான் லாஸ்ட் ஆகி இருக்கு ஜெனரல்…இப்போ பிளட் ஏந்தி விட்டு ட்ரிப் போட்டு இருக்கிறாங்க…எங்களுக்கு சட்டென உங்க ஞாபகம் தான் வந்தது.  

பாஸ் ஒரு தடவை உங்களுக்கு வார்னின் போது நீங்க…அடிபட்டு இருந்த போது பிளட் கொடுத்தார் தானே…அப்போ உங்க இரண்டு பேரின் குரூப் ரத்தமும் மேட்ச் ஆனது.  

இப்போ பாஸ்க்கு அடுத்த பாட்டில் பிளட் ஏற்ற வேணும்…டாக்டர் கால் பண்ணி பிளட் பேங்குக்கு சொல்லி விட்டார்…இப்போ ரோட் எல்லாம் பிளாக் பண்ணி இருக்கிறோம் மற்ற தீவிரவாதிங்க உள்ள வர முடியாதபடிக்கு.  

ஆம்புலன்ஸ் வர கொஞ்சம் லேட்டாகிறது…உங்களால் பிளட் கொடுக்க முடியுமா..? என கேட்க வந்தேன் ஜெனரல்…” என்றான்.  

கிருபாகர் “ என்ன கேள்வி தர்மா இது… இந்த மறு உயிர் பவன் எனக்கு  அவன் ரத்தம் மூலமாக கொடுத்தது… 

அவனுக்கு திரும்ப செய்வது என் கடமை… வா முதலில் அவனை பார்க்க போகலாம்…” என்றவன்…குரு, சக்ரபாணியிடம் சொல்லி விட்டு கிளம்பி போனான்.  

கனகராஜ், ராஜவேலு ஒரு டென்ட்டில்…பாண்டியன், மாலதி, சரிகா எல்லாம்…ஒரு டென்ட்ல் தான் இருந்தார்கள்… 

கனகராஜ், ராஜவேலுக்கு மயக்கம் தெளிய அவர்களின் கட்சி தொண்டர்கள்… அவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்தார்கள்.  

கனகராஜ் “ ய்ப்பா சாமி நல்ல காலம்…நம்ம அம்மா, அப்பா செய்த புண்ணியம் நம்ம உயிர் தப்பி விட்டோம் தம்பி…எனக்கு கொஞ்சம் நெஞ்சு எரிச்சலாக இருக்கு உனக்கு எப்படி ராஜா இருக்கு…? என கேட்டார்.  

ராஜவேலு “ எனக்கு கண்ணு இரண்டும் எரிச்சலாக இருக்கு அண்ணே…இந்த தீவீரவாத நாய்கள் நம்ம வரும் போதாதா…? இதை எல்லாம் செய்ய வேணும்.  

முதலில் அந்த பாடி கார்ட் நாயை சொல்ல வேணும்…அவனிடம் சவால் விட்டு உசுப்பேற்றி விட்டு அந்த முட்டாள் மூதேவிங்க…அவனை பழி வாங்குவதாக நினைத்து நம்மை வைத்து செய்து விட்டாங்க… 

டேய் முனியா முதலில் அந்த பாடி கார்ட் நாய் எங்கே என பாரு…அவன் நெஞ்சில் ஏறி இரண்டு மிதி மிதித்தால் தான்…எனக்கு நிம்மதியாக இருக்கும் அப்படியே அந்த சி.எம் கிழவனையும் பாரு.  

மண்டையை போட்டு விட்டானா என்று..அப்போ எலக்சனில் நம்ம தான் ஓட்டு இல்லாமலே வெற்றி பெறலாம்…” என சொல்லி கொண்டு இருக்கும் போதே.. 

“ அதற்க்கு வாய்ப்பே இல்லை ராஜவேலு…கடவுள் இன்னும் எனக்கு அழைப்பு வைக்கவில்லை…” என சொல்லி கொண்டே.. ரவி கூடவே ராகுல் சில கார்ட்ஸ் கூட வந்தார் குரு மூர்த்தி. 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page