கார்லா இருந்து கொஞ்சம் பேரு, இறங்க கணபதி கெளசல்யா வும், வாசல்ல வந்து நின்னு வரவேற்குறாங்க..
அபி ஜன்னல் வழியா பாக்குறா..
“மாப்பிள்ளை யாரு டி ??”
ப்ரியா:” அக்கா மாப்பிள்ளையை காணோம் கா”.
அபி: “என்ன டி சொல்ற..நீ போட்டோ கொடு.. நான் பாக்கமா ஓகே சொல்ல மாட்டேன்”.
ப்ரியா: “போட்டோ எங்க வைச்சேன்… ஆ !! என் புக் ல வைச்சேன்.ன்னு போய் பாக்குறா”.
அச்சோ அக்கா !! என் புக்கை என் ப்ரண்டுக்கு கொடுத்துட்டேன். இப்போ போட்டோ கிடைக்காது.
அபி:” உன்ன கொல்லப் போறேன் டி..என்ன விளையாடுறீயா ?? உன்னன்னு அடிக்க போறா”.
கௌசல்யா:” அபி..அபி என்ன டி பண்ற”!!
அபி : “அம்மா மாப்பிள்ளை வந்து இருக்கான்னா இல்லையா”??
கௌசல்யா: “ஏய்?! மரியாதை யா பேசு டி..ஏன் இப்போ கோவமா இருக்க”.
அபி :”மா உனக்கே தெரியும் எனக்கு வர மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு. கல்யாணம் உங்களுக்காக இப்போவே பண்ணிக்குறேன். ஆனா மாப்பிள்ளை எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும். இல்லன்னா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”.
கௌசல்யா:” மெதுவா பேசு டி.அவங்களா
வந்துட்டாங்க ஆனா மாப்பிள்ளை தான் வரலை”.
அபி: என்ன மா ??” இவ போட்டோவை அவ ப்ரண்டு கிட்ட தந்துட்டா.. இங்க மாப்பிள்ளை வரலை..என்னால மாப்பிள்ளையை பாக்கமா ஓகே சொல்ல முடியாது”.
கௌசல்யா: “ஏய் போட்டோவை எதுக்கு டி உன் ப்ரண்டு கிட்ட தந்த”…
ப்ரியா :”அம்மா புக்ல வைச்சேன் மா. மறந்து போய் அவகிட்ட படிக்க தந்துட்டேன்”.
கௌசல்யா: “அபி.ப்ளீஸ் டி கொஞ்சம் சரிச்ச மாதிரி வா டி.. அப்பறம் பேசிக்கலாம்”.
கணபதி: கெளசல்யா !! “அவங்களை அங்க உட்கார வைச்சுட்டு இங்க என்ன பண்ற!! அபியைக் கூட்டிட்டு வா”..
கௌசல்யா: வா அபி..”தயவு பண்ணி மூஞ்சியை சிரிச்ச மாதிரி வைச்சுட்டு வாடி”.
அபி : “அவங்க போகட்டும்.. இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்”.
ப்ரியா:🤪🤪🤪
அபி கையில காஃபி கொடுத்து அனுப்புறாங்க கெளசல்யா.
குனிச்ச தலையோடு போய் தரா…
அதுலா ஒரு குரல் : “அண்ணி நிமிர்ந்து பாக்கலாம். எங்க அண்ணா இங்க இப்போ இல்ல”.
அபி: (அண்ணியா முடிவே பண்ணிட்டாங்களா)
எல்லாரும்:😃😃😃
காஃபி தந்துட்டு அபி ஓரமா நிக்குறா.
இப்படி வந்து உட்காரு மா.. மரியாதை மனசுல இருந்தா போதும்.
சம்மந்தி நீங்களும் உட்காருங்க பேசலாம்.
ப்ரியா : முடிவே பண்ணிட்டாங்க போல..இது சும்மா பார்மாலிட்டிக்கு தான் போல (அபி காதுல குசுகுசுன்னு சொல்றா )
கணபதி: “உட்காரு மான்னு உட்காருராங்க”.
சுந்தர்: சாரி சாரி… “லேட்டா வந்துட்டேன்”.
கணபதி:” நீயே லேட்டா வந்தா எப்படி டா”..
மோகன் :” அவன் எப்பவுமே அப்படிதான் சம்மந்தி”..(மோகன் அர்ஜூன் ஓட அப்பா).
(சுந்தர் கணபதி கூட ஸ்கூல் லா ஒன்னா படிச்சவாரு,அப்பறம் காலேஜ் ல சுந்தரும் மோகனும் ஒன்னா படிச்சவங்க..இவரலாதான் இந்த சம்மந்தமே நடக்குது )
சுந்தர்: “டேய் ரொம்ப பண்ணாதீங்க..அதா சரியான நேரத்துல வந்துட்டேன் இல்ல”..
ஆமா எங்க அர்ஜூனை காணோம்.
நளினி (அர்ஜூன் அம்மா): “அவனுக்கு இன்னிக்கு லீவ் இல்ல அண்ணா.. ஞாயித்து கிழமை வருவான்”.
ப்ரியா : “அப்பாடி மாமாவே வருவாரு. அப்போ பாத்துக்கோ. இப்ப ஓகே சொல்லீடு கா”.
அபி : “வாயை மூடு கொஞ்ச நேரம்”.
சுந்தர்: என்ன மா!! “சொல்றா உங்க அக்கா”..
ப்ரியா:” மாமா வரலை இல்ல அதா ஃபீல் பண்றா” !!
அனைவரும்:😆😆😆
அபி:” ப்ரியா காலுல கிள்றா !! அப்படிலா ஒன்னும் இல்ல பா”…
ஆர்த்தி : “பரவாயில்ல அபி..நீ நார்மலா பேசு.. இந்தா பார்மாலிட்டிலா வேண்டா.. நான் உனக்கு நாத்தனார். நானும் அர்ஜூனும் ட்வின்ஸ்… எனக்கு 2 நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்து அவன் அண்ணா ஆகிட்டா”.
அபி: ம்ம்..
அசோக்: நான் அசோக் அண்ணி.. நான் தான் கடைக்குட்டி.
அபி : மம்
நளினி: “உன்ன நாங்க போன மாசம் அகிலா அவங்க வீட்டு கல்யாணத்துல பாத்தோம் மா.. ரொம்ப பிடிச்சு போச்சு”… அப்பறம் பார்த்தா நீ நமக்கு வேண்டிய பொண்ணுன்னு தெரிஞ்சாதும் உடனே உங்க அம்மா அப்பாகிட்ட பேசி முடிவு பண்ணிட்டோம். “ஜாதக பொருத்தம் கூட ரொம்ப நல்ல இருக்கு”.
அபி: “அப்படியே அவ அம்மாவை பார்வையிலே முறைக்குறா”..
கௌசல்யா: 😆😆😆
அபி ( மனசுல ) எல்லாம் முடிவு பண்ணிட்டு கடைசியா ஒரு வார்த்தைக்கு சொல்லி இருக்கீங்க.. இருக்கட்டும் வைச்சுக்குறேன்.
சுந்தர்:” அப்பறம் என்ன டா பொண்ணு பெத்தவானே”.. தட்டு மாத்தலாம் தானே.
கணபதி: தாராளமா..
அபி :🙄🙄🙄
ப்ரியா:” இது பொண்ணு பாக்குறதுதானே”.. இதுக்கு கூட தட்டு மாத்துவாங்களா??
கௌசல்யா: “ப்ரியா அமைதியா இரு”.
மோகன் :” இதுலா என்ன மா இருக்கு.. சின்ன பொண்ணு தானே”.
அம்மாடி இது பொண்ணு பாக்குறது இல்ல. நிச்சயம் தான்.
அபி: ஓ ஓ ஓ
ப்ரியா: ஹா..”மாப்பிள்ளைக்கு எங்க அக்காவை பிடிச்சு இருக்கா..அவரு இன்னும் பாக்கவே இல்ல”.
நளினி : “எங்க பையன் எங்க விருப்பத்துக்கு மாற எதுவும் சொல்லா மாட்டான். அவனுக்கு சம்மதம் தான்”.
சுந்தர்: “அப்பறம் என்ன வாங்க”..
ரெண்டு வீட்டுக்காரங்களும் சேர்ந்து தட்டு மாத்துறாங்க..
கௌசல்யா:”வாங்க சாப்பிடலாம்”.
கணபதி ப்ரியா கௌசல்யா அபி பரிமாறா அர்ஜூன் குடும்பம் உட்கார்ந்து சாப்பிடுறாங்க…பேசிட்டே
அவங்க சாப்பிட்டதும் அபி குடும்பத்துக்கு இவங்க பரிமாறுறாங்க.
அப்பறம் வீட்டை எல்லாம் சுத்தி பாக்குறாங்க.
ஆர்த்தி அசோக் அபிக்கூட பேசிட்டு அவ ரூம்க்கு போறாங்க.
ஆர்த்தி: “ரூம் நல்லா நீட்டா இருக்கு அர்ஜூன்க்கு இப்படி இருந்தா தான் பிடிக்கும். எடுத்த பொருள் எடுத்த இடத்துல இருக்கணும். இல்ல அவ்வளவு தான். ரொம்ப கோவக்காரான்”.
அபி: (சுத்தம்!! “நான் எங்க சுத்தமா வைச்சுக்காறது..எங்க அம்மா இல்ல ரூம்மா க்ளீன் பண்ணுவாங்க)” ம்ம்
அசோக்: “அப்பறம் அண்ணாக்கு பொய் சொன்னா பிடிக்காது”.
அபி :(சரி தான்..) ம்ம்
மீண்டும் நாளை பாக்கலாம்.. என்ன நடக்கும்ன்னு
தொடரும்.
