இதயத்தின் மொழி -3

ஆர்த்தி: “அர்ஜூன் வீட்டுல இருந்தா யாரும் சத்தம் கூட போட மாட்டாங்க”…

அபி :” ஏன் ?? கா”..

ஆர்த்தி: ஏன்னா?? “அவனுக்கு பிடிக்காது.. வீட்டு அப்படியே அமைதியா இருக்கணும்”.

அபி: (சரியான சிடுமூஞ்சியா இருப்பான் போல இருக்கே ன்னு நினைச்சுக்குறா )

நளினி : “ஆர்த்தி அசோக் வாங்க கிளம்பாலாம்”.

ஆர்த்தி:” வரோம் அபி… அப்பறம் பாக்கலாம்”.

அபி : “ம்ம் சரிங்க’..

கௌசல்யா: “சம்மந்தி கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம் தானே”!!

அபி: (போறாவங்களை இவங்களே விட மாட்டாங்க போல இருக்கே).

ஆர்த்தி: இல்ல அத்தை!!!” வீட்டுல பாப்பாவை விட்டுட்டு வந்து இருக்கேன்” ..லேட் ஆனா பாவம் அழுவா.

கணபதி:” பாப்பா வை கூட்டிக்கிட்டு வந்து இருக்கலாம் தானே மா”.

ஆர்த்தி :” இல்ல மாமா 1 வயசுதான் ஆகுது.. ட்ராவல் வேண்டாம்னு தான் விட்டுட்டு வந்தேன்”.

கணபதி: “சேரிங்க சம்மந்தி பாத்துப் போய்ட்டு வாங்க”.

மோகன் :” சேரிங்க சம்மந்தி!! போய்ட்டு கல்யாண தேதி குறிச்சுட்டு நாளைக்கே சொல்றோம்”.

கணபதி: “ரொம்ப சந்தோஷம் சம்மந்தி”.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வாசல் வரைக்கும் போய் வழி அனுப்பிட்டு வாரங்க.

அபி வாசல்ல நின்னு முறைக்குறா.

அபி : ஏன் பா இப்படி பண்ணீங்க!! “நான் இருக்கறது உங்களுக்கு பிடிக்கலை தானே ?? நான் என்ன தப்பு பண்ணா ?? ஏன் என்னை இப்படி தலை முழுகுறீங்க??

கணபதி : அபி !! “என்ன நல்லா நாள் அதுவா இப்படி பேசுற… எல்லாம் உன் நல்லதுக்கு தானே பண்றோம்”.

அபி:” எது பா நல்லது..இந்த நிமிஷம்
வரைக்கும் நான் மாப்பிள்ளை யை பாக்கலா… அவங்க தங்கச்சி சொல்றதுல்லா வைச்சு பார்த்தா எனக்கும் அவனுக்கும் ஒத்தே போகாது.. எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டா பா”..

கௌசல்யா: அபி !! “இப்படியே வேண்டா
வேண்டாம்னு சொல்றது நல்லது இல்ல டி.. மாப்பிள்ளையை நேருல பாத்து பேசுனா எல்லாம் சரி ஆய்டும்”.

அபி : அம்மா!! என்ன விளையாடுறீங்களா?? நாளைக்கு டேட் சொல்றேன்னு போறாங்க. அப்பறம் என்கிட்ட என்ன சொன்னீங்க ?? “இன்னைக்கு பொண்ணு தான் பாக்கா வராங்கன்னு ஆனா நிச்சயம் பண்ணிட்டு போறாங்க”.

கணபதி: இப்போ அதானால என்ன ?? நல்ல குடும்பம்!! “நல்லா வசதி இருக்கு. பையனும் நல்ல தங்கமான குணம். இதுக்கு மேல என்ன வேணும்”.

அபி : “எனக்குன்னு ஆசை, கனவு லா இருக்கு இல்ல பா.. அதுலா எதுவும் முக்கியம் இல்லல..எனக்கு தெரியும் பா..என்னை யாருக்குமே பிடிக்கலை. அதா என்னை தூரத்திட்டு உங்க செல்ல பொண்ணா மட்டும் நல்லா படிக்க வைச்சு அழகு பாக்கணும். அதானா உங்க எண்ணம். உங்க எண்ணம் போல பண்ணுங்க. நான் இனி எதுவும் பேசலை..ன்னு அழுதுகிட்டே அவ ரூம்க்கு உள்ள போய் லாக் பண்ணிட்டு அழுகுறா”.

கௌசல்யா:” இதுக்கு தான். அத்தனை தடவை சொன்னா.. முன்னாடியே அவகிட்ட சொல்லலாம் ன்னு.. எல்லாம் உங்களால தான்.. பாருங்க எப்படி பேசுறான்னு. ஏன் தான் இப்படி பண்றீங்களோ..நாமா பண்ணது தப்பு தான்”.

கணபதி: ஏய் ?? “அவதான் சின்ன பொண்ணு புரியாமா பேசுறா !! நீயும் கூட சேர்ந்து குதிக்காதா.போ..போய் சாமாதானம் பண்ணு”.

ப்ரியா: “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அவ கதவை திறக்க மாட்டா பா.. அப்பறம் பேசிக்கலாம் பா.. நான் பேசுறேன்”.

கௌசல்யா:” நீ உன் வேலையை பாரு
தாயே.. இந்த பிரச்சினைல மூலக்காரணமே நீதான்.. நீ மட்டும் மாப்பிள்ளை போட்டோவை அவகிட்ட காட்டி இருந்தா பிரச்சினையே இல்ல”.

ப்ரியா: “சாரி மா”..

கௌசல்யா: “சாரி சொன்னா எல்லாம் சரியா போச்சா”.

கணபதி :” ஏய் விடு..அதா மாப்பிள்ளையே நேருலா வருவாரு இல்ல. பேசிகலாம்”.

எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாக்க ஆரம்பிக்குறாங்க.

அபி: “ஏன் கடவுளே இப்படி பண்றீங்க..ஊரு உலகத்துல எவ்வளவு பேரு கல்யாணம் ஆகாமா இருக்காங்க..அவங்களுக்குல கருணை காட்டாக் கூடாதா. நான் உன்கிட்ட கேட்டேன்னா எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு நான் இப்போ தான் டிகிரி முடிச்சேன்.அதுக்குள்ள கல்யாணம்னா எப்படி”.

லைஃப் லா எவ்வளோ இருக்கு.. கல்யாணம் பண்ணா என் லைஃப் ஏ அவ்வளவு தான். டேய் அர்ஜூன் நீ எப்படி டா இருப்ப..உன்ன எனக்கு மட்டும் பிடிக்கலைன்னா நான் என்ன பண்றது.

சரி உன்ன பாத்துட்டு முடிவு பண்ணிக்குறேன்.

பெங்களூர் :🚍🚍🚍🚍

க்ரிஷ் : டேய் ?? “மச்சா என்ன டா இங்க இருக்க… இன்னைக்கு பொண்ணு பாக்க போறாங்க இல்ல”..

அர்ஜூன் : “ம்ம் ஆமா மச்சா. வீட்டுல எல்லாரும் போய் பாத்து பேசிட்டு வந்துட்டாங்க”.

க்ரிஷ்:” நீ போகலையா” ??

அர்ஜூன் :” இல்லடா.சண்டே தான் போறேன்”.

க்ரிஷ்: “ஏன் டா..அப்போ தான் ப்ரைவேசி கிடைக்குமா”??

அர்ஜூன் : “ஆமா டா.. அம்மா அப்பா கூட
போனா கண்டிப்பா என் மனசுல இருக்கிறது பேச முடியாது. அதா சண்டே வரேன்னு சொல்லிட்டேன்”.

க்ரிஷ்: “மச்சா வேண்டா டா..இந்த பொண்ணு செமயா இருக்கா.. இதையும் ஏதாவது குலறுப்படி பண்ணிடாதா”.

அர்ஜூன் : “என் மனசு இன்னும் மறலை டா”.

அப்படி என்னன்னு நாளைக்கு பாக்கலாம்.
 

                         தொடரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page