அர்ஜுன் நேரா அவன் வீட்டுக்கு போறான்.
அப்போ விடிய காலை 5 மணி இருக்கும்.
அவன் அப்பா அம்மா அவனை நலம் விசாரிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.
அர்ஜூன்:” இல்லப்பா.. அதுக்குள்ள டைம் இல்ல. நான் இன்னைக்கே பெங்களூர் கிளம்பானும். அதானால நான் போய் அந்த பொண்ணை பாத்துட்டு வந்துடுறேன்”.
மோகன்:” சரி பா”…
அர்ஜூன் போய் குளிச்சுட்டு வரான்…
நளினி :” தம்பி. இந்த காஃபி, பொண்ணு உனக்கு பிடிச்சு இருக்கு தானே பா”..
அர்ஜூன் : “உங்களுக்கு பிடிச்சு இருக்கா மா’.
நளினி : “எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பா..தேதி கூட பார்த்தாச்சு. வர மாசத்துல 27 ம் தேதி. உனக்கு சம்மதம் தானே. பத்திரிகை எல்லாம் அடிக்க கொடுத்துடலாம் தானே”.
அர்ஜூன் :”எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல மா.அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு”.
நளினி : “அவ ரொம்ப அமைதியான பொண்ணு பா எங்க முன்னாடி பேச கூச்சப்படுறா நீ வேணும்னா பாரேன் அவளை பாத்ததும் உனக்கு பிடிச்சு போய்டும்”.
அர்ஜூன் :”சேரி மா. நான் போய்ட்டு வரேன் அவங்க வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிருங்க”.
மோகன் கணபதிக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறாரு.
அர்ஜூன் அவனோட கார்ல போரான்…
கௌசல்யா: “அபி… சீக்கிரம் ரெடி ஆகு டி. மாப்பிள்ளை வராரு”…
அபி : “எல்லாம் ரெடியா தான் இருக்கேன்”.
கௌசல்யா: ஏய் !! “புடவை கட்டுடி”.
அபி: “டென்ஷன் பண்ணாதா மா. எனக்கு தான் புடவையே கட்டத் தெரியாது இல்ல.சும்மா புடவை கட்டு ன்னு எரிச்சல் பண்ணாதா”..
கௌசல்யா: “அதுக்கு இல்ல மா.. டென்ஷன் ஆகாதா.. டி. நான் கட்டி விடுறேன்”. “முறைன்னு ஒன்னு இருக்கு இல்ல”.
அபி எதுவும் சொல்லாமா அவ அம்மாவையே பாக்குறா.
கௌசல்யா: “ஏன் மா அப்படி பாக்குற”.
அபி: “இல்ல 2 நாள்லா உங்கிட்ட நான் கத்திட்டே இருக்கேன் இல்ல. ரொம்ப வாய்க்கு வந்ததுலா பேசிட்டேன்”.
கௌசல்யா :”இதுலா என்ன இருக்கு. என் பொண்ணு தானே பேசுறா.. அதுவும் உன் கோவம் நியாயம் தானே”.
அபி: “சாரி மா”…
கௌசல்யா: “பரவால்ல மா.. நாங்க பண்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்.. எல்லாம் உனக்கு பின்னாடி தெரியும்”.
அபி:”ம்ம்.. ஆனா மாப்பிள்ளை பிடிக்கலைன்னா”??
கௌசல்யா:” எல்லாம் மனசு தான் காரணம் அபி..நீ மாப்பிள்ளையை பிடிக்கும்ன்னு பாரு கண்டிப்பா பிடிக்கும். நீ பிடிக்காதுன்னு நினைச்சு பார்த்தா பிடிக்காது”.
அபி:அம்மா. “எனக்கு வர மாப்பிள்ளை தாடி வைச்சு இருக்கக்கூடாது மா. நல்லா சிரிச்ச முகமா இருக்கணும். ஜாலி டைப்பா இருக்கணும் என்கிட்ட ப்ரண்லியா இருக்கணும். அப்பறம் என்னை எப்போ வேணாலும் உங்களை பார்க்க விடணும்”.
கௌசல்யா :”எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பாருன்னு பேசிட்டே அவளுக்கு புடவை கட்டி விட்டு தலைவாரி பூவைச்சு விடுறாங்க”.
கணபதி:” கெளசல்யா…வா மாப்பிள்ளை கார் வந்து இருக்கு”.
அபி மனசு படப்படக்க ஆரம்பிக்குது.
கௌசல்யா கீழே போறாங்க.
அர்ஜூன் உள்ள வரான்.
கணபதி: “வாங்க மாப்பிள்ள…. உட்காருங்க”.
அர்ஜூன் :” ம்ம். தேங்க்ஸ்”.
கௌசல்யா:” என்ன சாப்பிடுறீங்க டீ காஃபி எது வேணும் உங்களுக்கு”.
அர்ஜூன்:” அதுலாம் எதுக்குங்க. வேண்டா”..
கணபதி:” மாப்பிள்ளை அப்படிதான் சொல்லுவாரு நீ போய் காஃபி போட்டு அபியை அனுப்பு”.
அர்ஜூன் அமைதியாகவே உட்கார்ந்து வீட்டை சுத்தி பாக்குறான்..
சுவத்துல அங்க அங்க போட்டோஸ், இருக்கு, பெயிண்டிங் இருக்கு.
கணபதி: “இதுலா நம்ம அபி தான் மாப்பிள்ளை வரைஞ்சா.. நல்லா வரைவா”..
அர்ஜூன் :” ம்ம். ரொம்ப நல்லா இருக்கு”.
கணபதி: “இந்த மீன் தொட்டி கூட அபி வளக்குறது தான். அவளுக்கு நிறைய கலை திறமைலா இருக்கு மாப்பிள்ள”.
அர்ஜூன் :” ஓ.குட் நல்லது தான்”.
அபி கையில காஃபி ஓடவரா..
அர்ஜூன் முன்னாடி நின்னு நீட்டுறா..
அர்ஜூன் எடுத்துக் கிட்டு தேங்க்ஸ் ன்னு சொல்றான்.
அபி அப்போதான் அர்ஜூன் முகத்தை நிமிர்ந்து பாக்குறா..
அர்ஜூன் பார்க்க நல்லா அழகா காரெக்ட்டான்னா வைட்ல இருக்கான்.
ஆனா தாடியோட இருந்தான்.
அப்படியே திரும்பி கௌசல்யா வை பாக்குறா… அதிர்ச்சியோ..
கௌசல்யா:” பாவமாக முகத்தை சுளித்து அப்பறம் பேசிக்கலாம் ன்னு சொல்றா மெல்ல”.
அர்ஜூன் காஃபி குடிச்சு முடிச்சிட்டு கப்பை வைச்சுட்டு…
சார் நான் உங்க பொண்ணுகூட தனியா பேசலாமா??
கணபதி: “ம்ம் ன்னு சொல்றாரு.. ஆனா அவரு மனசுல செம பயம் வருது”. [ எல்லா அபியை நினைச்சு தான். எங்க அவ போய் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருவாலோன்னு)
அர்ஜூன் : “ம்ம் இங்க பக்கத்துல கோவில் இல்ல பார்க் ஏதாவது இருக்கா”.
கணபதி: “அடுத்த 2 தெரு போனா பார்க் இருக்கு மாப்பிள்ளை”.
கோவில் கூட பின்னாடி இருக்கு.
அர்ஜூன் :” சரி நாங்க பேசிட்டு வரோம்ன்னு எழுந்து போறான்”.
அபி அப்படியே இருக்குறா..
கௌசல்யா: “அபி போய்ட்டு வா”..
அபி:”ம்ம்ன்னு எழுந்து போறா”..
மீதி நாளைக்கு பாக்கலாம்.
தொடரும்…
