அர்ஜூன் வீட்டுக்கு போறான்.
நளினி:” பொண்ணு பாத்தியா டா..பிடிச்சு இருக்கு தானே”.
அர்ஜூன் : “உங்களுக்கு பிடிச்சு இருக்கா இல்லையா” ??
நளினி: “என்னாடா கேள்வி இது பிடிக்கமாலா தேதிலா பாத்து இருக்கோம்”.
அர்ஜூன் : அப்பறம் என்ன ?? “ஆகா வேண்டிய வேலையை பாரு..எப்போ வரணும் ன்னு சொல்லு வரேன்”..
மோகன் : “இப்போவே போகணும் மா டா”..
அர்ஜூன் : “இல்ல 2 நாள் இருந்தா முகூர்த்த புடவை, உனக்கு வேட்டி சட்டை எல்லா வாங்கிடலாம்”.
அர்ஜூன் : “இப்போ போகணும் பா.. நான் போய்ட்டு 2 நாள்க்கு அப்பறம் வர்றேன் பா”..
மோகன் : ம்ம்..சேரி பா.. “அதுக்குள்ள நாங்க மாத்த வேலையை பாக்குறோம்”.
அப்போ ஆர்த்தி அவ பொண்ணை எடுத்துக்கிட்டு வரா..
அர்ஜூன் : ஸ்ரீயா குட்டி….”அம்மு என்னா பண்றீங்க.. இங்க பாரு மாமா வந்து இருக்கேன்”.
பாப்பா அர்ஜூனை பார்த்து சிரிக்குறா..ஆனா அவன்கிட்ட போகலை..
ஆர்த்தி: “அடிக்கடி நேருல வந்து பாத்ததானா டா புள்ளைக்கு தெரியும்”.
அர்ஜூன் : ஏய்.. “நான் என்ன சும்மா வா இருந்தேன் வரமா இருக்க”..
அசோக் : ஆமா ஆமா..”நீ இல்லன்னா அந்த ஆப்பீஸ் கீழே விழுந்துடும் பாரு”..
அர்ஜூன் : “நீ சொன்னாலும் சொல்லானாலும் அதுதான் உண்மை டா”..
நளினி : சேரி வா பா…. சாப்பிடலாம். “இன்னைக்கு சாப்பிட்டா தான் இந்த கரி குழம்பு.. பத்திரிகை அடிக்க கொடுத்தா சாப்பிடக் கூடாது”.
அசோக்: எத்தனை நாளைக்கு மா.. “அவனுக்கு தானே கல்யாணம். நான் சாப்பிடலாம் தானே”.
நளினி : “அடி விழும் பாத்துக்கோ..யாரும் சாப்பிடக் கூடாது கல்யாணம் முடியும் வரை எல்லாரும் சரின்னு சொல்றாங்க”.
அர்ஜூனும் சாப்பிடுறான்.
அசோக் : “ஓய்..அண்ணா”..
அர்ஜூன்: “என்ன டா”..
அசோக் : “அண்ணிக்கிட்ட பேசுனீயா”??
அர்ஜூன்: “இல்ல டா”..
அசோக்: “பொய் சொல்லாதா”..
அர்ஜூன்: “நம்பலன்னா போய் கேளு டா”..
அசோக் : “சரி கேட்டுகிறேன்”.
அர்ஜூன் : எப்படி கேட்பட
அசோக் என்கிட்ட நம்பர் இருக்கே.
அர்ஜூன் : “அவங்க அப்பா நம்பரா”…
அசோக் : “இல்ல அண்ணி நம்பரே இருக்கு”.
அர்ஜூன் : ம்ம். “ஏதோ யோசிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிக்குறான்”.
அசோக் சாப்பிட்டு வர வரைக்கும் கை கழுவும் இடத்துக்கிட்ட வைட் பண்ணிட்டு இருக்கான்.
அசோக்: “என்ன டா அண்ணா. இங்க நின்னுட்டு இருக்க”.
அர்ஜூன் : “அது.அது நம்பர் வேணும்”.
அசோக்: “என்னா நம்பர்”.
அர்ஜூன் :”போன் நம்பர் தான் டா.. உன்கிட்ட இருக்குன்னு சொன்னீயே”.
அசோக்:” என்கிட்ட நிறைய நம்பர் இருக்கு. அதுல எந்த நம்பர்”.. (வேணும்னே டென்ஷன் பண்றான்)
அர்ஜூன்: “ஏய் யாருது கேட்குறேன்னு தெரியாதா மாதிரி பேசாதா.. செமயா கோவம் வருது”.
அசோக் : “நிஜமா புரியலை டா”..
அர்ஜூன் : “அபி நம்பர் தா டா”..
அசோக்: “அண்ணி நம்பர் உன்கிட்ட இல்லையா”..
அர்ஜூன்: “இல்லன்னு தானே கேட்குறேன்”.
அசோக் : “சரி இந்தா.நீயே நோட் பண்ணிக்கோன்னு தரான்”.
அதுல அண்ணின்னு அபி நம்பரை சேவ் பண்ணி இருந்தா..
அர்ஜூன் அவன் ஃபோன்ல காஃபி பண்ணிக்கிட்டான்.
தேங்க்ஸ் டா.இந்தா.
அசோக்: ஹா.. இருக்கட்டும்.. “கல்யாணம் அப்போ எனக்கு 2 ட்ரஸ் எக்ஸ்ரா வேணும்”.
அர்ஜூன் : “எதுக்கு”??
அசோக்;” நம்பர் தந்து ஹேல்ப் பண்ணி இருக்கேன்”.
அர்ஜூன் : “ஏன் டா இதுக்கு கூட லஞ்சம் மா டா”..
அசோக்: ஆமா..”இப்படி வாங்குனாதா.. வேற எதுக்கு நீ தரப்போற”..
அர்ஜூன் : “சரி வாங்கிக்குவ..ன்னு கொஞ்ச நேரம் எல்லார்கிட்டயும் பேசிட்டு கிளம்பாறான்”.
இங்க அபி வீட்டுல எல்லாரும் அபியை ஒரே கலவரத்தோடு பாத்துட்டு இருக்காங்க.
அபி : “எதுக்கு இப்படி பாக்குறீங்க”.
கணபதி: அம்மாடி!! “மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கு தானே பா”.
அபி : அப்பா !! “எனக்கு தாடி பிடிக்கலை பா..
கணபதி:” தாடி தானே மா. சேவ் பண்ணா போய்டும்”.
அபி :” மத்தப்படி எனக்கு எதுவும் தோணாலை பா உங்க இஷ்டம். பண்ணுங்க”.
கௌசல்யா உனக்கு முழு சம்மதம் தானே மா.
அபி : “ம்ம் ன்னு எழுந்து ரூம்க்கு போறா”…
ப்ரியா: “அக்கா”…
அபி: “சொல்லுன்னு சொல்லிட்டு நோட் எடுத்து பெயிண்ட் பண்ண ஸ்டார்ட் பண்றா”..
ப்ரியா : “மாமாவை பிடிச்சு இருக்கா உனக்கு”.
அபி : “ஏன் டி சும்மா அது பத்தியே கேட்குறீங்க. என்ன வேணும் உனக்கு.. நானும் அவரும் பேசவே இல்லன்னு அங்க நடந்ததை சொல்றா”.
ப்ரியா: “அப்போ பேசவே இல்லையா.. நான் வேணும்னா அப்பா கிட்ட சொல்லி நம்பர் வாங்கி தராட்டா”..
அபி : “ஒரு நிமிஷம் யோசிக்குறா… அப்பறம் வேண்டாம்னு சொல்றா”..
ப்ரியா: “இரு நான் வரேன்னு ஓடி போய் அவங்க அப்பா போன் எடுத்துக் கிட்டு வரா”..
அக்கா..” இங்க பாரு அப்பா ஃபோன்ல மாமா நம்பர் இருக்கு..ன்னு அபி போன் எடுத்து அர்ஜூன் நம்பரை டயல் பண்றா”..
அபி: “என்ன டி பண்ற”…
ப்ரியா:”மாமாக்கு கால் பண்றேன்”.
அபி: ஹே…”வேண்டா டி..பண்ணாதா… ன்னு ஃபோன் வாங்க ஓடுறா”..
ப்ரியா :” ரிங் போகுது”..
அபி : கட் பண்ணுப்ரியா விளையாடாதே.
அர்ஜூன் போன் அடிக்க அவன் எடுக்கிறான்.
அபி காலிங்…
தொடரும்…
