இதயத்தின் மொழி -9

அடுத்த இரண்டு நாள் அர்ஜூன் க்கு வேலை அதிகமா இருந்தது.

யாருக்கிட்டயும் பேசக்கூட டைம் இல்ல.

அபி அர்ஜூன் கிட்ட பேசலாமா வேண்டாமான்னு யோசிட்டே இரண்டு நாள் ஓட்டுறா..

இரண்டு நாளைக்கு அப்புறம்… எல்லாரும் ட்ரஸ் எடுக்க போறாங்க.

மோகன் : “வாங்க.. வாங்க. எப்படி இருக்கீங்க”.

கணபதி”: நல்லா இருக்கோம்”.

அபி அர்ஜூன்னை தேடுறா..

ஆர்த்தி : “என்ன அர்ஜூனை தேடுறீயா”??

அபி : “இல்ல கா”.

நளினி : “இவ உனக்கு அக்கா இல்ல மா..அண்ணின்னு கூப்பிடணும்”.

அபி :”ம்ம் சரிங்க”..

நளினி: “அத்தைன்னு உரிமையா பேசு மா.. இன்னும் என்ன தயக்கம் உனக்கு”.

அபி :” அப்படிலா இல்ல அத்தை. இனி இப்படியே கூப்பிடுறேன்”.

நளினி : “சரி வா..உனக்கு பிடிச்ச புடவையை பாரு” ..

அபி புடவையை எடுத்துப் போடுறாங்க..

அபி பாத்துட்டு இருக்கா.

அசோக்: “அப்பா அண்ணா வந்துட்டான்”.

அபி தான் டக்குன்னு நிமிர்ந்து பாக்குறா.

ஆர்த்தி”: யாரோ தேடலைன்னு சொன்னாங்க”.

அபி லைட்டா சிரிக்குறா

அர்ஜூன் வந்ததும் எல்லாரும் அவனை மறைச்சி நின்னு பேசுறாங்க.

அபியால அவனை பாக்கவே முடியலை.

நளினி: “சரி வா பா.உன் பொண்டாட்டிக்கு புடவையை பாரு”..

அர்ஜூன்:” நான் என்ன மா பாக்க போறேன். நீங்களே பாருங்க.. நான் வேடிக்கை பாக்குறேன்”.

அபி ஒவ்வொரு புடவையை எடுத்து அவ மேல போட்டுக்கிட்டு அர்ஜூனை பாக்குறா..

அர்ஜூன்:” இது வேண்டா”..

அபி: “இதுன்னு பச்சை கலர் எடுக்குறா”.

அர்ஜூன்: “வேற”..

அபி இப்படியே ஒரு 10 புடவை மேல வைச்சு பாக்குறா.

அர்ஜூனுக்கு எதுவும் பிடிக்கலை.

கடைசியா அவனே கோல்டு கலர் புடவை பார்டர் ரோஸ் கலர்ல எடுக்குறான்.

இது உனக்கு பிடிச்சு இருக்கா

அபி: “ம்ம்… பிடிச்சு இருக்கு”.

அர்ஜூன் புடவையா?? இல்ல ??

அபி ரெண்டுமே தா பிடிச்சு இருக்கு-

ப்ரியா: “எந்த ரெண்டும் கா”.

அபி :” கம்முன்னு போடி”..

அர்ஜூன் லைட்டா சிரிக்குறான்.

நளினி : “இன்னும் ரெண்டு எடுங்கடா”..

அபி அர்ஜூன் சேர்ந்து தேவையான ட்ரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு.. தாலி செயின் சேலக்ட் பண்ணிட்டு சாப்பிட ஹோட்டல் போறாங்க.

அங்க எல்லாரும் சாப்பிட.. ஆர்த்தி பொண்ணு சிணுங்குறா..

அபி ஓடனே எழுந்து குழந்தையை வாங்குறா..

ஆர்த்தி:”பரவால்ல..அபி நீ சாப்பிடு”.

அபி : “இல்ல அண்ணி நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் பாத்துக்கிறேன்”.

ஆர்த்தி சாப்பிடுறா..

அபி அப்படியே அர்ஜூன் ப்ளேட்ல இருந்து கொஞ்சம் எடுத்து பாப்பாக்கு ஊட்டி விடுறா..

அர்ஜூன் சாப்பிடமா அபியையே பாக்குறான்.

அபி:” நீங்க சாப்பிடுங்க”.

அர்ஜூன் : “நீ வர வரைக்கும் வைட் பண்றா”..

அபி : “அதுக்குள்ள ஆறிப் போய்டும்”.

அர்ஜூன் :” பரவால்ல”.

ஆர்த்தி :” தேங்க்ஸ் அபி..தா..நீ போய் சாப்பிடு”.

அபி:” ம்ம் சரிங்க அண்ணி”.

அபி அர்ஜூன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்குறா.

அர்ஜூனும் சாப்பிடுறான்..

அர்ஜூன்: “நான் ஊருக்கு போன அப்பறம் ஒரு தடவை கூட பேச தோணாலையா” ??

அபி : “தோணுச்சு. ஆனா நீங்க வேலையா இருப்பீங்க.அதா”..

அர்ஜூன் : “நான் உன்கிட்ட நிறைய பேசணும். அதுவும் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி”..

அபி : “பேசுங்க”.

அர்ஜூன் :” தனியா தான் பேசணும். இங்க வேண்டா”.

அபி :” இப்போ தனியா மீட் பண்ண முடியாது இல்ல”.

அர்ஜூன் : “நான் நைட் கால் பண்றேன். நீங்க தூங்கமா கொஞ்சம் வைட் மட்டும் பண்ணு”.

அபி:” ம்ம்..சரி”.

அப்பறம் ரெண்டு குடும்பமும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்டுறாங்க.

நைட் ஒரு 10 மணி இருக்கும்..

அர்ஜூன் அபிக்கு கால் பண்றான். ஆனா அபி எடுக்கலை.

பாவம் அபி காலையில அங்க இங்க சுத்துனாதுல டயர்டு ஆகி தூங்கிட்டா.

அர்ஜூன் : “கால் பண்றேன்னு சொல்லி இருந்தேன்.ஆனா எடுக்கவே இல்ல..ஒரு வேளை தூங்கிட்டாளா”??

தொடரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page