அர்ஜூன் : “எனக்கு நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது டோன்ட் ஓரி. நீ படிச்சு முடிக்குற வரைக்கும் உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”.
அபி : “தேங்க்ஸ். ஒரு வருஷம் மட்டும் தள்ளி போடலாம்..அப்பறம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல”.
அர்ஜூன் :” இல்ல இல்ல!! நீ எம்.பி.ஏ கம்ப்ளீட் பண்ற வரைக்கும் நான் உனக்கு நல்ல ப்ரண்டா மட்டும் தா இருப்பேன். அப்பறம் தா ஹஸ்பன்ட்”..
அபி: “ரொம்பவே தேங்க்ஸ்”..
அர்ஜூன் :” இப்போ தானே சொன்னேன்.. தேங்க்ஸ்லா வேண்டாம்னு”.
அபி: “ம்ம்..சாரி.. இனி சொல்லல”..
அர்ஜூன் : “பாரு டா..சாரி க்கு தனியா சொல்லணும்மா”??
“அபி வெட்கத்தோடு முகத்தை முடிக்கிட்டா”..
“அர்ஜூன் அவளையே பாத்துட்டு இருக்கான்”.
“க்ரிஷ் கால் பண்றான்”…
அர்ஜூன் :” ஒரு நிமிஷம்..ப்ரண்டு தான்னு அட்டன் பண்றா”..
சொல்லு டா..
க்ரிஷ்: “மச்சா ?? போன வேலை எல்லாம் முடிஞ்சா தா டா”..
அர்ஜூன் : “ம்ம்…முடிஞ்சாது டா. நைட் கிளம்பிடுவேன்..ஏன்டா”??
க்ரிஷ் :” இல்ல மச்சா ஹெ.ச்.ஆர் கேட்டாரு.. ஏதோ மீட்டிங் அது இதுன்னு”…
அர்ஜூன் : “என்ன மீட்டிங் ?? எங்க” ??
க்ரிஷ் : “மும்பைல டா…இரண்டு நாளைக்கு அப்புறம்.. அங்க ஒரு 10 நாள் ஸ்டே பண்றா மாதிரி இருக்கும்மாம்ம்”…
அர்ஜூன் : “10 நாள்லா ?? டேய்.. அப்பறம் என் கல்யாணத்துக்கு தான் டா நான் நேர வர மாதிரி இருக்கும்”.
“அபி என்ன பேசுறாங்கன்னு புரியமா பாக்குறா”…
க்ரிஷ்:” மச்சா புரியுது டா..ஆனா நான் என்ன பண்றது டா”…
அர்ஜூன் : “சரி வை.. நான் வந்து பாத்துக்குறேன்”.
அபி :” என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு டென்ஷன்”..
அர்ஜூன் :” இப்போ போய் மீட்டிங் வைச்சு இருக்காங்க.. அதுவும் 10 நாளாம். அங்க போனா நம்ம கல்யாணத்துக்கு 2 நாள்முன்னாடி தா வர மாதிரி இருக்கும்”.
வீட்டுல அம்மா ஒரு வாரம் முன்னாடியே லீவ் போட சொன்னாங்க. கோவிலுக்கு போகணும் நழுங்கு வைக்கணும்ன்னு …ஆனா இப்ப என்ன பண்றது.
அபி: “பாத்துக்கலாம் விடுங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீங்க ஏதும் நினைக்கமா போய்ட்டு வாங்க மீட்டிங் சீக்கிரமே முடியும் ன்னு நம்புங்க”.
அர்ஜூன் க்கு நம்பிக்கை இல்லைன்னாலும் அபி சொல்றது ஆறுதலா இருந்தது.
அர்ஜூன்:” ம்ம்.சேரி வா.. உன்ன வீட்டுல விட்டுட்டு நான் போறேன்”.
அபி : “போறேன்னு சொல்லக் கூடாது”.
அர்ஜூன்: “வேற எப்படி சொல்றது”..
அபி : “கிளம்பறேன்னு சொல்லலாம்..போறேன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்குல”..
அர்ஜூன் சிரிச்சுட்டேம்ம் ன்னு தலை ஆட்டுறான்.
அபியும் சிரிச்சுட்டே எழுந்து நடக்குற.அவ பின்னாடியே அர்ஜூனும் நடக்குறான்.
அங்க வெளியே ஒரு அம்மா பூ வித்துட்டு இருக்காங்க..
பூக்கார அம்மா:” பாப்பா பூ வாங்கிக்கோ மா”…
அபி :” அக்கா.. நான் காசு எடுத்துக் கிட்டு வரலை… வேண்டா மா”..
பூக்கார அம்மா பொண்ணுங்க பூவை வேண்டாம்னு சொல்லக்கூடாது மா.காசு வேண்டா நீ இப்போ வாங்கிட்டு போமா….
அர்ஜூன் : “வாங்கிக்கோ அபி நான் இருக்கும் போது நீ எதுக்கு காசு பத்தி பேசுற…அம்மா இன்னும் 2 முழம் சேர்த்து தாங்க”..
அபி லைட்டா சிரிக்குறா குனிஞ்சுட்டு.
அபி கையில் பூவை தராங்க அவளும் வாங்கிட்டு காருல ஏறுறா.
அர்ஜூன் :” தலையில வைக்கலாமே”.
அபி :” இல்ல அப்பறம் வைச்சுக்குறேன்”.
அர்ஜூன் :” இப்போ வைச்சா நான் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்”.
அபி: “ம்ம் சேரின்னு பூவை பாதியா கட் பண்ணி வைக்குறா”..
அர்ஜூன் “: பூ வைச்சா அப்பறம் இன்னும் அழகா இருக்க”..
அபி :” ம்ம்”..
அர்ஜூன் : “ம்ம்..போலமா”..
அபி: “ஹா.. போலாம்”.
அர்ஜூன் அபியை வீட்டுல விட்டுட்டு பேசிட்டு கிளம்பறான்..
அபி வாசல் வரைக்கும் கூடவே வரா..
அர்ஜூன் : “நான் வராட்டா”..
அபி: “ம்ம்.. போய்ட்டு வாங்க.. ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க”.
அர்ஜூன் ஆர்வமா பாக்குறான்..
அபி: “ஊருக்கு வந்துட்டேன் ன்னு”..
அர்ஜூன் :” ஹோ… நான் கூட பேசத்தான் சொல்றேன்னு நினைச்சேன்”.
அபி: “பண்ணா.. நான் என்ன வேண்டாம்னா சொல்லப் போறேன்”.
அர்ஜூன்: “அப்போ கால் பண்ணா வா”??
அபி:” ம்ம்”..
அர்ஜூன்: “அப்போ ஓகே..வைட் பண்ணிட்டே இரு பண்றேன்”.
அபி :” ம்ம்”.
அர்ஜூன் : “ஓகே..பாய்ன்னு கார்ல ஏறிட்டான்.. அப்பறம் ஏதோ சொல்ல அபியை திரும்பி பாக்குறான்”.
அபி: “என்ன ஆச்சு”??
அர்ஜூன் : “நைட்டைம் தா கால் பண்ணுவேன். ப்ளீஸ் தூங்கிறாதா”….
அபி மொத்த பல்லும் தெரியுற அளவுக்கு ஒரு சிரிப்பு… அப்படியே… ம்ம் சரி ன்னு சொல்றா..
அர்ஜூன் : “ம்ம்…போய்ட்டு கால் பண்றேன்”.
அபி:” ஓ.ஐம் வைட்டிங்”..
அர்ஜூன் :” ம்ம்… சீக்கிரம் பண்ணிடுவேன்”..
அபி : “ம்ம்..ன்னு பாய் சொல்றா”..
அர்ஜூனும் கிளம்பிட்டா…
அபி முகம் முழுக்க ஒரே சந்தோஷம் தான்… அப்படியே கையில பூவோடு திரும்புறா”…
கதவுல சாஞ்சிட்டு ப்ரியா அபியை பாத்துட்டு இருக்கா…
அபி: “என்ன லூக்கு”….
ப்ரியா:”இங்க யாரோ மாப்பிள்ளையை பிடிக்கலை.. கல்யாணம் வேண்டாம்னு சொன்னாங்க.. அவங்களை தேடிட்டு இருக்கேன்”.
அபி : “ஏய்!! நான் எப்போ டி பிடிக்கலைன்னு சொன்னேன். பிடிச்சா தா பண்ணிப்பேன்னு சொன்ன”..
ப்ரியா: “ஓ… அப்போ ரெண்டும் வேற வேற மீனிங்கா”…
அபி :” ஆமா…அம்மா இந்தாங்க பூ”…
நீயும் அவளும் வைச்சுக்கோங்க..
கௌசல்யா: “ஏது டி பூ”…
அபி : “உன் மருமகன் தா வாங்கி தந்தாங்க”..
கௌசல்யா:” ஓ..அப்படியா.. இந்தா இத நீயே வைச்சுக்கோ”..
அபி : “இங்க பாரு என் தலையில ஏற்கனவே வைச்சுட்டேன். இவ்வளவு எப்படி வைக்குறது”..
கௌசல்யா:” முதல் தடவை வாங்கி கொடுத்து இருக்காரு.. நீயே வை.. அவளுக்கு கொஞ்சம் எடுத்து வைச்சுக்குறேன். மீதியை நீயே சாய்ந்திரம் வைச்சுக்கோ”..
அபி : “ம்ம்…ன்னு லஷ்மி க்கு கால் பண்றா”..
லஷ்மி: “ஏய் என்ன டி ஆச்சு…ஒரு போன் கூட பண்ண மாட்டிக்குற”..
அபி: “ஏன் நீ பண்றது”..
லஷ்மி :” இல்ல டி நான் ஊருல இருக்கேன்..அதா டைம் இல்ல. சரி சொல்லு மாப்பிள்ளை பாத்தியா ?? பேசுனீயா… உனக்கு பிடிச்சு இருக்கா”..
அபி: “ம்ம். பிடிச்சு இருக்கு கல்யாணத்துக்கு இன்னும் 2 வாரம் தான் டி இருக்கு. அதுக்குள்ள இங்க வந்து சேரு”…
லஷ்மி:” ஏய்…சூப்பர் டி.. நான் மாப்பிள்ளையை பாக்கலாமா.. ஃபோட்டோ இருக்கா”..
அபி:” இல்லையே”!!
லஷ்மி: “பொய் சொல்லதா”…
அபி: “நிஜமா இல்ல டி”..
லஷ்மி : “சரி அவருக்கிட்ட கேளு”..
அபி : “ஓகே… அவரு இப்போ தான் போறாரு.. நான் அவரு கால் பண்ணும் போது கேட்டு அனுப்பறேன் உனக்கு”.
லஷ்மி :”ம்ம்”…
அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு அபி ப்ளவுஸ் தைக்க கொடுக்க போய்டு வர சாய்ந்திரம் ஆய்டுச்சு..
வீட்டுக்கு வந்து கை கால் முகம் கழுவிட்டு மீதி இருந்த பூவை வைக்குறா…
அர்ஜூன் கால் பண்ணுவான்னு சீக்கிரம் சாப்பிட்டு அவ ரூம்ல கைல ஃபோன் வைச்சுட்டு பார்த்துட்டே இருக்கா…
தொடரும்…
