இதயத்தின் மொழி _14

லஷ்மி:” அர்ஜூன் ஃபோட்டோ வை பாத்துட்டு சூப்பரா இருக்காரு டின்னு மெஸேஜ் பண்றா”..

அபி:” சேரி சேரி கண்ணு வைக்காதா ஒழுங்கா கல்யாணத்துக்கு வந்து சேருன்னு சிப்ளே பண்றா”.

லஷ்மி:” ஓகே. மேடம் வந்துடுறேன் ன்னு சொல்றா”.

அபி: “சரி நாளைக்கு பாக்கலாம் ன்னு அவ வேலையை பாக்குறா”.

அர்ஜூனும் மீட்டிங் காக மும்பை போறான்.

மீட்டிங் டைம் போக அபிக்கூட பேசிட்டே இருக்கான்.

கௌசல்யா: “இவ பேசுற பாத்தா மாப்பிள்ளையை ஏற்கனவே தெரியும் போல இருக்கே”..

ப்ரியா: “பாத்தியா !! உனக்கே தோணுது எம்மா??  ஒருவேளை இவ ஏற்கனவே மாமாவை லவ் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி பொண்ணு கேட்டு வரச் சொல்லி இருப்பாளோ” ??

“இதை அபி கேட்டுட்டா”..

“ஆனா அர்ஜூன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதும் வாயைத் திறக்க வேண்டான்னு அமைதியா இருந்தா”.

கெளசல்யா:” ஏய் !! ரொம்ப யோசிக்காதா மாப்பிள்ளையை அபிக்கு தெரியாது இது முழுக்க முழுக்க உங்க அப்பா ஏற்பாடு பண்ண கல்யாணம்,அவளுக்கு பொண்ணு பார்க வத அப்போதான் விஷயமே தெரியும். எல்லாம் மறந்துப் போச்சா நீ போட்டோ வை உன் ப்ரண்டு புக்ல வைச்சு, அவ பண்ண ஆர்ப்பாட்டம் லா”..

ப்ரியா: “அதுலா ஒரு வேளை நடிப்பா இருந்தா”..

அபி : “அர்ஜூன் ஒரு நிமிஷம். இரு நானே பண்றேன்னு வைச்சுட்டு ப்ரியா பக்கத்துல வரா” ..

ப்ரியா: “என்ன வைச்சுட்ட”..

அபி : “ஏய்!! என்ன பிரச்சினை உனக்கு தேவை இல்லமா பேசிட்டு இருக்க”..

ப்ரியா: “அது சும்மா தா”…

அபி: “சும்மான்னா ?? அவன்கிட்ட பேசுனா தானே அவனை பத்தி தெரிஞ்சுக்க முடியும்”..

ப்ரியா: “தெரிஞ்சு என்ன பண்ண போற..அதா கல்யாணம் ஆகா போது இல்ல..அப்பறம் பேச வேண்டியது தானே.. எப்போ பாரு மாமா கிட்டயே பேசுற.. என்னை கண்டுக்கவே மாட்டிக்குற..எ
னக்கு கஷ்டமா இருக்காதா”.

அபி :” அதுக்கு நேர என்கிட்ட சொல்ல வேண்டியது தானே..அதுக்கு ஏன்டி இப்படி பண்ற.. எருமை நான் உன்ன விட்டுல போக மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் நான் இங்கதான் இருப்பேன்”.

“கௌசல்யா என்ன டி சொல்ற”!.

அபி:” ஆமா மா நாள் எம்.பி.ஏ. இங்க இருந்து தான் படிக்கப் போறேன் அர்ஜூன் கிட்ட கூட சொல்லிட்டேன்”.

கெளசல்யா:” அதுவ நல்ல இருக்காது அதின் வாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை கூடத் 
 

கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை கூடத் தான் இருக்கணும்”.

அபி:” போமா. நான் இங்க இருந்து தான் படிப்பேன்னு உள்ள போய் அர்ஜூன் கிட்ட பேசுறா”..

ப்ரியா: “ஐய்யா !! ஜாலி. அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் இங்க தான் இருப்பா.ஹே..ன்னு குதிக்குறா”..

கௌசல்யா: “இவ ஒருத்தின்னு அவங்க வேலையை முடிச்சிட்டு கணபதிக்காக வைட் பண்றாங்க”.

கணபதி வந்ததும் சாப்பிட்டு எல்லாரும் படுக்குறாங்க.

கணபதி :” கௌசல்யா !! நாளைக்கு நாமா
 

ரெண்டு பேரும் நம்ம சொந்த ஊருக்கு போய் பத்திரிகை வைச்சுட்டு வந்தா வேலை முடிஞ்சது மா.. ரெண்டு நாளுக்கு அப்புறம் சம்மந்தி அவங்க கோவிலுக்கு வரச் சொல்லி இருக்காங்க..கல்யாண புடவை வேட்டி தாலி எல்லாம் குல தெய்வம் முன்னாடி வைச்சு கும்பிடணும்மா”…
 

கௌசல்யா: “அதுக்கு என்னாங்க.. தரலாமா போய்ட்டு வரலாம்”…

கணபதி: “அது சரி. நீ ஏன் ஒரு மாதிரி இருக்க”.

கௌசல்யா: அபி…

கணபதி : “அபிக்கு என்ன ?? மறுபடியும் ஏதாவது கல்யாணம் வேண்டா அது இதுன்னு சொல்றாளா ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம் இல்ல”.

கௌசல்யா: “அது லாம் ஒன்னும்
 

இல்லாங்க அவ மாப்பிள்ளை கிட்ட நல்லா தான் பேசுறா..எப்ப பாரு போனும் கையுமா தான் இருக்கா. பார்த்தா நாமா பாத்து கல்யாணம் பண்ணி வைக்குறா மாதிரி இல்ல… அவங்களே பாத்து பேசுன மாதிரி இருக்கு”.
 

கணபதி: “ஓ.. அப்பறம் என்ன”??

கௌசல்யா: “அவ கல்யாணத்துக்கு அப்புறம் இங்கதான் இருந்து படிக்க போறாலாம். மாப்பிள்ளை கூட போக மாட்டளாம்”.

கணபதி: “இது என்ன மா இப்படி சொல்ற?? சம்மந்தி வீட்டுல என்ன நினைப்பாங்க”..

கௌசல்யா: “அவங்களை விடுங்க…நாமா எதுக்கு இவ்வளவு அவசர அவசரமா கல்யாணம் பண்றோம்மோ அது நடக்காதுங்க”..
 

கணபதி: “ஆமா மா..என்னா பண்றது இப்போ”.

கௌசல்யா: “அவகிட்ட பேசி புரிய வைக்க முடியாதுங்க… கல்யாணம் ஆகட்டும்.அப்பறம் அவளுக்கு கொஞ்சம் கோவம் வரமாதிரி பேசிதான் அனுப்பனும்”.
 

கணபதி: “பாவம் டி என் பொண்ணு.. எவ்வளவு கஷ்டம் தான் தரது”..

கௌசல்யா:” என்னாங்க பண்றது.. எல்லாம். நம்ம நேரம். இப்படிலா நடக்கரும்ன்னு இருக்கு எப்படியோ அவ தீர்க்க ஆய்சோட எந்த குறையும் இல்லமா நல்லா இருந்தர் அதுவே நமக்கு  போதும் தானுங்க”.
 

கணபதி : “ஆமா மா….ன்னு கண்ணு கலங்குறாரு”.
 

கௌசல்யா:” என்ன அழக்கூடாது ன்னு சொல்லிட்டு நீங்க அழறீங்க இப்போ”..

கணபதி:” நானும் எவ்வளவு தான் மா மறைக்குறது..முடியலை”..

“மாத்திரை எல்லாம் தினமும் தந்துட்டு தானே இருக்க”.

கௌசல்யா :”ம்ம்.. இங்க நான் தரேன். கல்யாணம் ஆகி அங்க போய்ட்டா..என்ன பண்றது”.

கணபதி : “மாப்பிள்ளை கிட்ட சொன்னா என்ன”??

கௌசல்யா:” அதுலா வேண்டாங்க… இது பத்தி யாருகிட்டயும் சொல்ல வேண்டாங்க..அவ வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சினை வந்தா”..

கணபதி: “மாப்பிள்ளை புரிஞ்சுப்பாருன்னு நினைக்குறேன் மா”..

கௌசல்யா: “இப்போதைக்கு சொல்ல வேண்டாங்க”..

கணபதி : “சரி மா… எப்படியோ அந்த சாமி நம்ம பொண்ணை நம்மகிட்ட இருந்து பிரிக்கமா இருக்கணும்”.

கௌசல்யா:” அவ நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது ங்கன்னு கணபதியோட தோள் மேல சாஞ்சிக்குறாங்க”..

“அப்படியே ரெண்டு பேரும் தூங்கியும் போறாங்க”..
 

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page