கணபதி கதவை உடைச்சுட்டு உள்ள போறாரு..
அபி பேட்ல படுத்து இருக்கா..
கணபதி கௌசல்யா ப்ரியா வேகமா அபி பக்கத்துல வந்து எழுப்புறாங்க..
அபி கண்ணைத் திறக்கவே இல்ல..
ப்ரியா ரொம்பவே அழுகுறா..
அப்பா அக்காக்கு என்ன ஆச்சு பா..
கணபதி : ஒன்னும் இல்ல மா..அந்த தண்ணீ பாட்டில் எடுன்னு..சொல்ல
ப்ரியா ஓடிப்போய் எடுத்துக் கிட்டு வந்து தரா…
கௌசல்யா சாமியைக் கும்பிட்டு திருநீறு வைச்சு விடுறாங்க..
கணபதி தண்ணீயை முகத்தில் தெளிக்குறாரு..
அபிக்கிட்ட எந்த ரியாக்ஷன் ன்னும் இல்ல..
கௌசல்யா தலை தலையா அடிச்சுட்டு அழுகுறாங்க..
ப்ரியா : அப்பா… ஹாஸ்பிடல் போலாம் பா..வாங்க பா..
கௌசல்யா : ஹா..ஆமாங்க.. தூங்குங்க போலாம்…
கணபதி அபியை தூக்கிட்டு காருக்கு போறாரு…
அப்போ அபியோட ஃபோன் அடிக்குது..
ப்ரியா எங்க சத்தம் வருதுன்னு பாக்குறா…
அபி அவ இடது கை ல தான் ஃபோன் வைச்சுட்டே இருந்து இருக்கா..
ப்ரியா ஃபோனை அவ கையில இருந்து பிடிங்கி பாக்குறா..
அர்ஜூன் காலிங்…
கால் கட் ஆய்டுச்சு…
கணபதி அபியை காரில் பின் சீட் ல கௌசல்யா மடியில படுக் வைச்சுட்டாரு..
ப்ரியா : அப்பா நானுன்னு முன்னாடி உட்கார வரும் போது..
கணபதி : நீ இங்கேயே இரு மா..நாங்க மட்டும் போய்ட்டு வரோம்ன்னு விட்டுட்டு கிளம்புறாரு..
ப்ரியா அழுதுகிட்டே வாசல்ல இருந்த சோஃபாவில் உட்காருறா..
மறுபடியும் அர்ஜூன் கால் பண்றான்..
ப்ரியா அட்டன் பண்றா..
அர்ஜூன் : ஹே… லூசா நீ எத்தனை தடவை கால் பண்றேன்..ஏன் எடுக்கமா இருக்க..நீ கால் பண்ணணும் போது நான் மீட்டிங் ல இருக்கேன்..
ப்ரியா : 😭😭😭
அர்ஜூன் : ஹே..அபி எதுக்கு அழுகுற… ரொம்ப திட்டிட்டேன்னா ??
ப்ரியா : மாமா.. நான் அபி இல்ல..
அர்ஜூன் : ப்ரியா வா ?? எதுக்கு டா அழுகுற…
ப்ரியா : அது..
அர்ஜூன் : என்ன ஆச்சு ?? ஏதாவது சண்டையா ?? உனக்கும் உங்க அக்காக்கும்..அபி எங்க ??
ப்ரியா : இப்போ தான் அம்மாவும் அப்பாவும் அக்காவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாங்க..
அர்ஜூன் : ஹாஸ்பிடல் லா..எதுக்கு ?? என்ன ஆச்சு அபிக்கு.
ப்ரியா : தெரியலை மாமா… ரொம்ப நேரமா போன் அடிச்சுட்டே இருந்தது..அவ என்ன பண்றான்னு அம்மா போய் கதவை தட்டினாங்க..அக்கா திறக்கலை.. அப்பறம் அப்பா கதவை உடைச்சு தான் திறந்தாரு..
அங்க அக்கா..மூச்சு பேச்சு இல்லமா கிடந்தா.. எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கலை..அதா ஹாஸ்பிடல் க்கு போய் இருக்காங்க..
அர்ஜூன் : ஹோ சேட்…எந்த ஹாஸ்பிடல்..
ப்ரியா : தெரியலை மாமா..
அர்ஜூன் : சரி நான் மாமாக்கு கால் பண்ணி கேட்டுக்குறேன்..நீ பாத்திரமா இருன்னு..அவன் ட்ரஸ் லா பேக் பண்ணிட்டு ஏர் போர்ட் வரான்.
அதுக்குள்ள அபியை ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிட்டாங்க..
கணபதியோட ஃபேமிலி டாக்டர் ஹாஸ்பிடல் தான்..
டாக்டர் மனோகர் : டேய் !! என்ன டா சொன்னீங்க.. நான் உன்கிட்ட அன்னைக்கு என்ன டா சொல்லி அனுப்பின..
கணபதி : டேய்…என் பொண்ணுக்கு இப்போ என்ன டா ஆச்சு..அவ உயிருக்கு ஒன்னும் இல்லையே..அவ தான் டா என் குலத்தெய்வமே…அவ இல்லன்னா சத்தியமா நானும் இருக்க மாட்டேன் டா…
மனோ : டேய்..நீயே இப்படி பேசுனா கௌசல்யா க்கு யாரு டா ஆறுதல் சொல்லுவா ??
கௌசல்யா அப்போதான் டாக்டர் ரூம்க்கு வராங்க..
கௌசல்யா : ஆறுதல் எதுக்கு அண்ணா…அபிக்கு ஒன்னும் இல்ல தானே அண்ணா… நீங்க சொன்னீங்க ன்னு தான்..உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணோம் .. இப்போ போய்… இப்படி ஆய்டுச்சு..
மனோ : இரண்டு பேரும் முதல்ல உட்காருங்க..
ரெண்டு பேரும் உட்காருறாங்க..
மனோ : இப்போ அபி உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல..அவ சாப்பிடலை , இன்னோன்னு அவ ரொம்ப நேரம் அழுது இருக்கா..
கணபதியும் கௌசல்யா வும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காறாங்க..
மனோ : நான் என்ன சொன்னேன் உங்ககிட்ட..அபி எக்காரணத்துக்காகவும் கவலைபடவோ இல்ல அழுகவோ கூடாதுன்னு சொன்னேன் இல்ல..
கணபதி : நாங்க ஊருக்கு போய்ட்டு இப்போ தான் டா வந்தோம்.
மனோ : ஏய் சின்ன குழந்தை மாதிரி காரணம் சொல்லதா டா… உங்களுக்கு சீரியஸ்னாஸ் புரியுதா இல்லையா ?? இது மாதிரி அவ அழுகும் போதும் லா அவளோட நாட்கள் வேகமா குறையும் ன்னு எப்படி டா புரிய வைக்குறது..
கௌசல்யா : அண்ணா ?? எப்படியாவது அபியை சரி பண்ணி தாங்க அண்ணா..
மனோ : ஏம்மா ?? இந்த வியாதிக்கு மருந்து இருந்து இருந்தா இந்நேரம் நான் இப்படி தான் உட்கார்ந்து பேசிட்டு இருப்பேன்னா…இதுக்கு ஒரே வலி ஸ்டெம் செல் தா.. அதுக்கு அபி அவ ஒரு குழந்தையை பெத்து எடுக்கணும்.
கௌசல்யா : ஆனா ?? இப்போ கல்யாணம் ஆனா கூட அவ உடனே கர்ப்பம் ஆனா தானே அண்ணா …
மனோ : ஆமா மா…நமக்கு இருக்க அதிகப்பட்சமா நாட்கள் 2 வருஷம் தான்.. அதுக்குள்ள அபி ஒரு குழந்தை க்கு அம்மா ஆகணும். ஆனா அது வரைக்கும் தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்குன்னு அபிக்கு தெரியவும் கூடாது..
கணபதி : எப்படி டா மறைக்குறது…
மனோ : கஷ்டம் தான் என்ன பண்றது.. அவளுக்கு தெரிஞ்சா அவ ஃபீல் பண்ண மாட்டாளா ?? அப்போ இன்னும் சீக்கிரமே அவ செல்ஸ் லா டேத் ஆகா ஆரம்பிக்கும் டா.. அப்பறம் 2 வருஷம்ன்னு சொன்னது மாச கணக்கு தான் வரும்.
கௌசல்யா : அண்ணா… இப்படி லா சொல்லாதீங்க அண்ணா..
மனோ :அம்மா அப்பா வா நீங்க படுற கஷ்டம் புரியுது மா..ஆனா அபியோட நிலைமை என்னன்னு நான் சொல்லி ஆகணும் தானே.
கணபதி : ஏன் டா !! இங்க எத்தனை குழந்தைங்க பிறக்குது..அவங்க ஸ்டெம் செல் வைச்சு அபியை காப்பாத்தா முடியாதா..
மனோ : டேய்…எல்லா ஸ்டெம் செலும் எல்லாருக்கும் மேட்ச் ஆகாது தானே டா…அபியோட டி என் ஏ ஓட மேட்ச் ஆகணும். அதுக்கு ஒரே வழி அவ குழந்தை தான்.
அப்போ அர்ஜூன் கணபதிக்கு கால் பண்றான்.
கணபதி : மாப்பிள்ளை தான் கால் பண்றாரு..
மனோ : பேசு…ஆனா அபியை பத்தி ஏதும் சொல்ல வேண்டா..
கணபதி : ம்ம்…கால் அட்டன் பண்றாரு..
சொல்லுங்க மாப்பிள்ளை..
அர்ஜூன் : மாமா…எந்த ஹாஸ்பிடல் லா இருக்கீங்க ??
கணபதி : உங்களுக்கு எப்படி தெரியும் மாப்பிள்ளை ??
அர்ஜூன் : ப்ரியா தான் சொன்னா மாமா..அபி எப்படி இருக்கா.. அவளுக்கு என்ன ஆச்சு மாமா..
கணபதி : அதுலா ஒன்னும் இல்ல
மாப்பிள்ளை..சும்மா மயங்கிட்டா..
அர்ஜூன் : சரி நான் வந்துட்டு இருக்கேன் மாமா.. நீங்க ஹாஸ்பிடல் அட்ரஸ் அனுப்புங்க..
கணபதி : அதுலா எதுக்கு மாப்பிள்ளை.. உங்களுக்கு வேலை இருக்கும்..
அர்ஜூன் : அபியை பாக்குறதை விட பெரிய வேலை ஒன்னும் இல்ல மாமா..ப்ளஸ் நீங்க கொஞ்சம் அட்ரஸ் மட்டும் அனுப்புங்க..ஏதுவா இருந்தாலும் அங்க பேசிக்கலாம்…
கணபதி : சரிங்க மாப்பிள்ளை..அனுப்புறேன்….
அர்ஜூன் : தேங்க்ஸ் மாமா..வைச்சுடுறேன்..ன்னு கட் பண்ணிட்டா..
கணபதி அட்ரஸ் மெஸேஜ் பண்ணிட்டாரு..
கௌசல்யா : மாப்பிள்ளை என்னாங்க சொல்றாரு..
கணபதி : அபிக்கு உடம்பு சரி இல்லன்னு ப்ரியா சொல்லி இருக்காரு…அதா கிளம்பி வராரு..
மனோ : சரி … பரவாயில்ல கல்யாணத்துக்கு முன்னாடியே அபி மேல அக்கறை இருக்க பையனா தான் பாத்து இருக்கீங்க..நல்லது தான்.. ஆனா பையன் கிட்ட ஏதும் சொல்ல வேண்டா..அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியாது..
கணபதி : இதுனால பிரச்சினை வராது இல்ல டா..
மனோ : அதுலா ஒன்னும் வராது.. நம்ம கடவுள் கிட்ட வேண்டிக்குறது ஒன்னே ஒன்னு மட்டும் தா.. கல்யாணம் ஆனா 1 வருஷத்துல அவ கையில ஒரு குழந்தை இருக்கணும்.. அவ்வளவு தா.. குழந்தை பிறந்த அடுத்த நிமிஷமே அபிக்கு ஆப்ரேஷன் பண்ணி அவளை குணப்படுத்தி விடலாம்.
கௌசல்யா : ம்ம் சரிங்க அண்ணா..
மனோ : குழந்தை பிறக்குற வரை அவ தினமும் நான் கொடுத்த மாத்திரையை சாப்பிடணும்..
கௌசல்யா : ம்ம்..சரிங்க அண்ணா..
மனோ : போங்க போய் பாருங்க..அவ இன்னும் 1 மணி நேரத்துல கண்ணைத் திறந்துருவா..
கணபதி : கௌசல்யா.. நான் இங்க இருக்கேன். நீ வீட்டுக்கு போய் ப்ரியா வை பாத்துக்கோ..
கௌசல்யா : ம்ம்..சரிங்கன்னு கிளம்புறா..
கணபதி அபி பக்கத்துல உட்கார்ந்து அவ தலை முடியை வருடி கொடுக்குறாரு..
ஏன் மா சாப்பிடமா அழுது இருக்க…அழும் அளவுக்கு என்ன குறை வைச்சேன் உனக்கு..ஒரு வேளை மாப்பிள்ளையை பிடிக்கலையா…
என்னை மன்னிச்சுடு மா..உன் விருப்பத்துக்கு மாறாக பண்ணணும்னு நான் நினைக்கலை..ஆனா இப்போ எனக்கு உன்னை காப்பாத்தணும் அவ்வளவு தான் மா..அதுனால தான் இவ்வளவு அவசரமா கல்யாண ஏற்பாடுக்கு ஒத்து கிட்டேன்.என்னை மன்னிச்சிடு மா…ன்னு தனக்கு தானே பேசிட்டு அழுகுறாரு..
மனோ : டேய்… போதும் டா..அவ முழிக்கும் போது இப்படி அழுது நீயே காட்டிக் கொடுத்துடாதா…
கணபதி : என்னால முடியாலை டா…எப்போ என் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சாதோ அப்போவே என் சந்தோஷம் தூக்கம் எல்லாமே போச்சு டா…
மனோ : கவலை படாதே டா…எல்லாமே சரி ஆகிடும்.. நானும் என் ப்ரண்ஸ் கிட்டலா பேசிட்டு தான் இருக்கேன். இதுக்கான ரிச்சாச் போய்ட்டு இருக்கு…மருந்து கிடைச்சுட்டா கூடா ஈஸியா காப்பாத்திடலாம்…நீ தைரியமா இரு..
கணபதி : ம்ம்… ன்னு கண்களை துடைச்சுட்டு உட்காரு ராரு..
அர்ஜூன் அந்த ஹாஸ்பிடல் க்கு வந்து இறங்குறான்…
தொடரும்…
