இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 10

அத்தியாயம் – 10

 

​”அக்கா! உனக்கு ஒன்னும் இல்லையே? நல்லா தானே இருக்க?” என்று கேட்டாள் சரண்யா.
​அவளும் அருகில்தான் நின்றிருந்தாள்.

தன் தமக்கை தடுமாறி, யாரோ ஒருவனின் மீது தெரியாமல் மோதியதைக் கண்டு அவளுக்கும் படபடப்பாகித்தான் போனது. அவள் கவனிக்கும் முன்பே, அந்தச் சம்பவம் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிட்டது. அந்த ஆடவனுக்கும் தன் அக்காவுக்கும் இடையே பரிமாறப்பட்ட அந்தத் தீவிரமான பார்வைகளையும் சரண்யா கவனிக்கத்தான் செய்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், அங்கே ஏதோ ஒரு இறுக்கம் நிலவுவதை அவள் உணர்ந்தாள்…

​”எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன் சரண்யா,” என்றாள் அவள்…

​”அவரை உனக்கு தெரியுமாக்கா?” சரண்யா வினவ. ​”ஏன் கேட்கிற?” என்றாள் ரிதன்யா…

​”இல்ல, அவரையே பார்த்துட்டு இருந்த. அவரும் உன்னைப் பார்த்தாரு. அதான் கேட்டேன்,” என்றாள்…

​”அவரை எனக்கு தெரியாது,” ரிதன்யா கூற. ​”அப்போ ஏன் அவரை அப்படி பார்த்த?” என்றாள் அவள்…

​”நான் கேசுவலா தான் பார்த்தேன். உனக்கு ஏன் இது ஒரு பெரிய விஷயமா தெரியுது?”அவள் முகம் சிறுத்துவிட,.. ​”சரி சரி டென்ஷன் ஆகாத, ஆள் பார்க்க செமயா இருந்தாரு. அதான், பார்த்ததும் விழுந்துட்டியோன்னு ஒரு சந்தேகத்துல கேட்டேன்,” அவள் கிண்டல் செய்ய, ​”உன்ன உதைக்கப் போறேன் பாருடி!” அவள் கடிந்து கொள்ள, ​”ஓகே ஓகே கூல்க்கா! ஜஸ்ட் கிட்டிங்!” என்று புன்னகைத்தாள் சரண்யா.

​”ம்ம்… நீ வர வர ஓவரா தான் போற” என்று செல்லமாக முறைத்தவளோ,… “சரி நீ சுத்திப் பார்த்தது போதும். வா, அம்மா அப்பாகிட்ட போலாம்,” என்று அவளை இழுத்துச் சென்றாள்…

சரியாக அந்த நேரம் தான், திடீரென மேடையில் இருந்து ஒலித்த ஒலிபெருக்கியின் சத்தம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது…

​சித்தார்த்தின் குரல் கனமாகவும், கம்பீரமாகவும் ஒலிபெருக்கியில் ஒலித்தது. அந்தக் குரலைக் கேட்ட மறுகணம், ரிதன்யா இழுத்துச் சென்ற வேகத்திலேயே நிலை தடுமாறி நின்றுவிட்டாள்…

“குட்ஈவினிங் எவ்ரிவன், இந்த கிராண்ட் செலிபிரேஷன்க்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மை ஸின்சியர் தாங்க்ஸ், திஸ் இஸ் ட்ரூலீ எ ஸ்பெஷல் மோமென்ட் ஃபார் மை பேமிலி,” என்று ஆரம்பித்தான்,…

அந்தக் குரலின் சொந்தக்காரனை மீண்டும் மேடையில் பார்த்த ரிதன்யாவிற்க்கு, சிறிது நேரத்திற்கு முன் நடந்த அந்த எதிர்பாராதத் தொடுதலின் உணர்வு மீண்டும் உள்ளுக்குள் மின்னி மறைந்தது…

அவன் பேசி முடிக்கவும், அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய உருளை மேடை வண்டியில், ஒரு பிரம்மாண்டமான கேக் மெதுவாகத் தள்ளப்பட்டு வந்தது. வெள்ளைக் கிரீமில், அழகிய எழுத்துகளில் திருமண வாழ்த்துக்களோடு அவனின் பெற்றோரின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன…

அதனை பார்த்த அவனை பெற்றவர்களின் விழிகள் மின்னியது,.. “இட்ஸ் அ ஹ்யூஜ் மைல்ஸ்டோன்! இன்று, இந்த பியூட்டிஃபுள் சோல்ஸ்யின் ரிலேஷன்ஷிப் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அவர்களுக்கு நாம் சேர்ந்து ஒரு பிக் அப்பிளாஸ் கொடுக்கலாம்,” என்று அவன் உற்சாகமாகக் கூற, அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது…

தாய் தந்தையர் இருவரும் தங்கள் கைகளைப் பிணைத்துக் கொண்டு, அந்த வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டினார்கள். அவர்களின் முகத்தில், இத்தனை வருடத் திருமண பந்தத்தின் திருப்தியும், மகனின் ஏற்பாடுகளைக் கண்ட பெருமையும் கலந்த ஒரு பேரானந்தம் ஒளிர்ந்தது…

கேக்கை வெட்டியதும், பாசமிகு அவனது தாயும் தந்தையும் ஒரு துண்டை எடுத்து, சித்தார்த்திற்க்கு ஊட்டினார்கள், பதிலுக்கு சித்தார்த்தும் ஒரு துண்டைப் எடுத்து மாறி மாறி இருவருக்கும் ஊட்டினான்…

பிறகு, சித்தார்த் மைக்கைப் பிடித்து,.. “ஐ ஜஸ்ட் வான்ட் டு யூஸ் திஸ் ஆப்பர்ட்யூனிட்டி டு எக்ஸ்பிரஸ் மை ஹார்ட்ஃபெல்ட் கிராடிட்யூட். யூ கைஸ் ஆர் மை ஃபவுண்டேஷன் அண்ட் மை பிகெஸ்ட் இன்ஸ்பிரேஷன். தாங்க்யூ ஃபார் பீயிங் த டெஃபினிஷன் ஆஃப் ட்ரூ லவ். ஐ விஷ் யூ போத் அ லைஃப்டைம் ஆஃப் ஹாப்பினஸ்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறி, அவர்களுக்கு வாழ்த்து சொன்னான், அவனை பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி பேரலையாய் அடித்தது,…

அப்போது, திரையின் பின்னால் இருந்து, நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பெரிய பெட்டி மேடைக்கு கொண்டு வரப்பட்டது. சித்தார்த் அதனைத் தன் பெற்றோர்கள் முன்னால் பிரித்தான். உள்ளே, கண்ணாடியால் பிரேம் செய்யப்பட்ட ஒரு பெரிய தத்ரூபமான ஓவியம் இருந்தது. அதில் சித்தார்த், தன் தாய் தந்தையோடு மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடி நின்றிருந்தான்.

அந்தப் பரிசையும், மகனின் பாசத்தையும் கண்டதும், சித்தார்த்தின் தந்தை வாசுதேவனின் கண்களில் நீர் திரண்டது. ஓவியத்தின் தத்ரூபமும், மகனின் அன்பும் அவரை முற்றிலுமாக உணர்ச்சிவசப்படுத்தியது.

இத்தனை நாட்கள் மகன் தன்னோடு விலகி இருக்கிறானே என்ற கவலையில் இருந்தவருக்கு, இந்த நாள் மிகவும் இனிய நாளாக, ஒரு வரமாக அமைந்தது. அவரால் பேச முடியவில்லை அவர் சித்தார்த்தைத் இறுக்க அணைத்துக் கொண்டார். அவனும் அவர் அணைப்பை ஏற்றுக்கொள்ள, அரங்கம் முழுவதும் இந்த பாசமிகு தருணத்தைக் கண்டு ஆர்ப்பரித்தது…

மாணிக்கமும் சாரதாவும் கூட, சித்தார்த் தன் தாய் தந்தை மீது வைத்திருக்குக்கும் ஆழமான அன்பையும், அதன் தத்ரூபமான வெளிப்பாட்டையும் கண்டு நெகிழ்ந்து போனார்கள்…

​”பார்த்தியா சாரதா? எவ்வளவு பெரிய பணக்காரங்க வீட்டுப் பையனா இருந்தாலும், பாசத்துக்கு முன்னாடி எதுவும் இல்ல. அவன் அப்பா அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க,” என்று சாரதாவிடம் மெதுவாகக் கூறி புன்னகையுடன் பார்த்தார் அவர்களை…

​சித்தார்த்தின் பெற்றோரின் ஆனந்தக் கண்ணீரைக் கண்ட சாரதாவும், ‘உண்மைதான், நல்ல பையன்’ என்று பெருமிதத்துடன் தலையசைத்தார்,…

ரிதன்யாவோ, சிறிது நேரத்திற்கு முன் தன்னோடு தடுமாறி நின்றவனா, இவ்வளவு பெரிய விழாவின் நாயகன் என்று மிகவும் ஆச்சரியமாக மேடையைப் பார்த்தாள்…

​அவள் அருகில் இருந்த சரண்யா, “ரொம்ப பாசக்காரர் போல,” என்று கிசுகிசுக்க,… ​”ம்ம்,” என்று தலையசைத்தாள் ரிதன்யா…

இப்படி நேரடியாக, இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு மகன் தன் பெற்றோருக்குத் திருமண விழாவைக் கொண்டாடியதை அவள் பார்த்ததே இல்லை. இந்த நிகழ்வு அவளுக்கு மிகவும் வித்தியாசமாகவும், பார்க்க மிகவும் அழகாகவும் இருந்தது…

சற்று நேரத்திற்குப் பிறகு, விழா முடிந்து விருந்தாளிகள் ஒவ்வொருவராகக் கலைந்து, உணவருந்தும் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினர்…

​மாணிக்கமும்  இனி கிளம்பலாம்  என்ற எண்ணத்தில், தன் மனைவி சாரதா மற்றும் மகள்கள் ரிதன்யா, சரண்யா ஆகியோருடன், சித்தார்த்தின் பெற்றோரின் அருகில் வந்தனர் அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெறுவதற்காக,…

​”வாசு அண்ணா… மிக அற்புதமான ஏற்பாடு. உங்களுக்கும் அண்ணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் மாணிக்கம்…

​வாசுதேவன் முகத்தில் புன்னகை விரிய, “நன்றி மாணிக்கம். நீங்க எல்லோரும் வந்து வாழ்த்தியது பெரிய சந்தோஷம், அப்புறம் இவன் தான் என் மகன் சித்தார்த்” என்று கூறியபடி, மகனை அறிமுகம் செய்து வைக்க அருகில் அழைத்தார்….

அப்போது, ரிதன்யா தன் தந்தையின் பின்னால் தான் நின்று கொண்டிருந்தாள். தந்தையின் அழைப்பைக் கேட்டு அருகில் வந்த சித்தார்த், மாணிக்கத்தின் குடும்பத்தைப் பார்க்க… அவன் விழிகளும், ரிதன்யாவின் விழிகளும் ஒரு நொடி கூட விலகாமல் மீண்டும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டன…

இருவரின் முகத்திலும் இப்போது அதிர்ச்சி இல்லை, மாறாக, தவிர்க்க முடியாத ஏதோ ஒன்று ஒருவருக்கொருவர் மீண்டும் சந்திப்பதைத் தூண்டிய விசித்திரமான விதியின் புரிதல் இருந்தது….

முன்னர் நிகழ்ந்த அந்த சில வினாடித் தொடுதலின் அனல், மீண்டும் இருவர் கண்களின் வழியே மின்சாரமாய் ஊடுருவியது. ஒருவருக்கொருவர் யார்? இந்த இடத்தில் ஏன் நிற்கிறார்கள்? என்ற நிஜத்தின் எல்லைகள் ஒரு கணம் மறைந்தன…

அந்தப் பார்வையே ஒரு நீண்ட உரையாடலாக அவர்களுக்குள் நிகழ்ந்தது. அங்கே, தன் தந்தையின் அறிமுகம் கூட அவர்களுக்குச் சற்றும் கேட்கவில்லை. அந்த உணர்வுகளின் பாரம் தாங்காமல், ரிதன்யா தான் முதலில் பார்வையை விலக்க முற்பட்டாள். ஆனால், அவளது இமைகளைக் கடந்து சித்தார்த்தின் கண்கள் அவளைப் பிடித்து இழுப்பது போலத் தோன்றியது…

​​வாசுதேவன் தன் அருகில் நின்றிருந்த மகனிடம்.. “சித்து இவர்தான் மாணிக்கம்” என்று ஆரம்பித்து அவரின் குடும்பத்தையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்,…

​வாசுதேவனின் குரல் கேட்டதும், சுயம் திரும்பிய சித்தார்த், ஒரு கனத்த மூச்சுடன் தன் பார்வையை அவசரமாய் விலக்கிக் கொண்டு, மாணிக்கத்தின் பக்கம் திரும்பினான். அந்த இடத்தில் இருந்த மற்றவர்கள் அறியாத, அந்தப் பார்வைப் பரிமாற்றத்தின் வெப்பம் மட்டும் இன்னும் இருவருக்குள்ளும் கனன்றது….

வாசுதேவன் மற்றும் தெய்வானையின் பாசமிகு வற்புறுத்தலால் உணவு உண்டுவிட்டு செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு,..

அவர்களின் பாசமிகு வற்புறுத்தலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், மாணிக்கம் தன் குடும்பத்துடன் உணவருந்த சம்மதித்தார்…

உணவு நேரம் முழுவதும், ரிதன்யாவின் கவனம் முழுவதும் சித்தார்த்தை நோக்கியே இருந்தது. அவன் அருகிலோ அல்லது தூரத்திலோ நகர்ந்து சென்றாலும், அவனது ஒவ்வொரு அசைவையும் அவள் அறியாமலேயே அவள் கண்கள் பின்தொடர்ந்தன, அவனின் பார்வையும் அடிக்கடி அவள் மீது தான் விழுந்தது,…

உணவு உண்டு முடித்ததும்
சரண்யா முன்னே காருக்கு சென்று விட, மாணிக்கம் மற்றும் சாரதா விடைபெற்ற பிறகு, ரிதன்யா தன் தாய் தந்தையைப் பின்தொடர்ந்து வாசலை நோக்கி நடந்தாள். அவள் வாசலைத் தாண்டிச் செல்லும் அந்த இறுதித் தருணத்தில், சித்தார்த்தின் கண்களும் ரிதன்யாவின் கண்களும் மீண்டும் ஒருமுறை, ஒருவித இனம் புரியாத ஈர்ப்பையும் உணர்வையும் பரிமாறிக் கொண்டனர்,..

அவர்கள் இருவருக்குமே அது என்ன மாதிரியான உணர்வு என்று புரியவில்லை. இப்படி ஒரு உணர்வை அவர்கள் தங்கள் வாழ்வில் முதல்முறையாக உணர்ந்தார்கள். ‘ஏன் இப்படித் தோன்றுகிறது?’ என்ற கேள்வியும் அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அந்தப் பார்வை பிரிவதற்கு முன், ஆழமானதொரு சலனத்தை இருவர் மனதிலும் ஏற்படுத்தியது….

விழா முடிந்து நீண்ட நேரத்திற்குப் பிறகு, அன்றைய இரவு மிகுந்த சோர்வோடு தனது அறையில் வந்து படுத்தான் சித்தார்த்…

கண்கள் மூடியதும், எப்போதும் அவனுக்குத் தூங்கும்போதும் விழிக்கும்போதும் தன் ஜானுவின் நியாபகங்கள் மட்டுமே தான் வரும். அவளது சிரித்த முகம், அவளது குரல் இவை தான் அவனது உலகமாக இருந்தன…

ஆனால், இன்றோ அது புதிதாக இருந்தது. அவன் கண்களுக்கு முன் ரிதன்யாவின் முகம் வந்து நின்றது. அந்த எதிர்பாராதத் தொடுதலின் அதிர்வும், அவள் கண்களின் இனம் புரியாத ஈர்ப்பும் அவனது ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தின..

​அவனுக்கோ பெரும் அதிர்ச்சி! “என்னாச்சு எனக்கு?” என்று குழம்பியவனுக்கு, தன் ஜானுவின் நினைவுகளை மீறி வந்த ரிதன்யாவின் நினைவுகளால் எரிச்சல் வேறு வந்தது. அந்தக் குழப்பமும், எரிச்சலும் அவனது நித்திரையைத் தொலைத்தன…

இவனைப் போலவே, அன்று இரவு ரிதன்யாவிற்கும் சித்தார்த்தின் நினைவுகள் தான் வந்து போயின. அவளும் தனது கட்டிலில் படுத்திருந்தாள், ஆனால் கண்களை மூடினாலும், திறந்திருந்தாலும் அவள் முன் தெரிந்தது சித்தார்த்தின் முகம் தான்…

​ஏன் இந்த ஆடவனும், அந்த சில நிமிடத் தொடுதலும் தன்னை இப்படிப் பாடாய்படுத்துகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அவள் ஆழ்மனம் ஏற்கெனவே வைத்திருந்த சில கோட்பாடுகளை, இந்த உணர்வு மொத்தமாக உடைத்துப் போட்டிருந்தது.

​அவள் சித்தார்த்தைப் பற்றி யோசிப்பதைத் தடுக்க முயன்றும் முடியவில்லை. இந்த விசித்திரமான இனம் புரியாத ஈர்ப்பினால், அவளும் உறக்கத்தைத் தொலைத்தபடி விடிய விடிய குழப்பத்திலேயே இருந்தாள்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page