இதயம் 1 4.2

“உனக்கு எவ்ளோ அசால்ட்?” என அங்கேயே ஒரு மூச்சு பேசி முடித்த சமயத்தில் அமுதா வர…

“வாங்க” என வரவேற்றவள் செயினைப் பற்றிச் சொல்ல அமுதா செயின் தொலைந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவள் பின் நேத்ராவை திட்ட ஆரம்பித்தாள்.

“ஏன் நேத்ரா செயின் எவ்வளவு கேர்ஃபுல்லா பார்த்துக்கணும்னு தெரியாதா? அசால்ட்டா சொல்ற? எவ்ளோ அமௌண்ட்?”

“இல்லமா. செயின் கழட்டி வச்சிட்டு வந்து பார்த்தா காணோம்மா. இத்தன நாள்ல இப்படி தொலைஞ்சதே இல்ல. நான் கிடைச்சிடும்னு நினைச்சேன்” எனச் சொல்ல

“எதெதுல அசால்ட்டா இருக்கறதுனு உனக்கு விவஸ்தை இல்ல” என்று அமுதாவும் திட்டவும் நேத்ரா அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க

“நான் செயின் வாங்கிக் கொடுத்தடறேன் அண்ணி” என அமுதா சொல்ல இப்போது நேத்ரா அதிர்ந்து போய்ப் பார்க்க அதைச் சொன்னவுடன் தான் சந்திரன் வீட்டார் அமைதியாயினர்.

கோயிலில் அமுதாவுடன் சாமி கும்பிட்ட நேத்ரா அவளுடன் சிறிது நேரம் இருந்தவள் அவள் கிளம்ப இவளுக்கு அதற்கும் அழுகை வரும் போலிருக்க அமைதியாய் நின்றாள்.

அமுதா கிளம்பிய சிறிது நேரத்தில் சந்திரன் குடும்பத்தினரும் கிளம்பினர்.

அன்று இரவு சந்திரன் சரியாகச் சாப்பிடாததால் அவனை மைதிலி பால் குடிக்கச் சொல்ல அவனும் சரி எனத் தலையாட்டினான்.

சிறிது நேரம் கழித்து நேத்ரா பால் ஆற்ற போக அவளைக் கவனித்தவன்

“எதுக்கு இப்போ உள்ள போற?”

“அத்தை உங்களுக்குப் பால் ஆத்த சொன்னாங்களே?”

“நான் உன்னை கேட்டேனா? நீ ஆக்ட் பண்ண வரையும் போதும்” என அவன் சொல்ல நேத்ரா விக்கித்துப் போய் நின்றாள்.

‘நான் ஆக்ட் பண்றேனா? அப்புறம் உங்கம்மா முன்னாடி ஏன் ஒரு மாதிரி பேசற? ஏன் என்கிட்ட ஒரு மாதிரி பேசற?’ என யோசித்தவளுக்குத் திடுமென்று மணி அடிக்க அதில் அவள் அரண்டு போனாள்.

அவள் மனம் சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘நான் அவன் ஒய்ப் தான? என்கிட்டயே இப்படியா?’ என யோசித்தவள் சமீப காலமாகத் தங்களுக்குள் இருந்த உறவை பற்றிச் சிந்திக்க அவளுக்குத் தூக்கம் தூரப் போனது.

அடுத்த நாள் வழக்கம் போல வேலைகள் செல்ல அன்று இரவு அமுதா மைதிலியின் செல்லுக்குப் போன் செய்தாள்.

“அண்ணி நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கேன். நகை என்னாச்சு? அன்னைக்கு வாங்கிக் கொடுக்கறேனு சொன்னீங்க?”

“அடுத்த வாரத்தில போலாம்னு இருக்கோம் அண்ணி” என்றவள் நேத்ரா எப்படி இருக்கிறாளோ என்ற பயத்தில் “அவ கொஞ்சம் பயப்படுவா. ஆனா எந்த வேலையும் செய்யாம இருக்க மாட்டா” எனச் சொல்ல

“அப்படியா. அன்னைக்கு இட்லி ஊத்த சொன்னா அதுல கூடச் சொதப்பி வெச்சிருக்கா”

“இல்ல அண்ணி. அவ நல்லா செய்வா. நீங்க அவளை நல்லா வேலை செய்யலேனா நைட் 10 மணி ஆனாலும் அனுப்பி விட்ருவிங்கனு நீங்க சொன்னதுல அவளுக்குப் பயம். அதனால அவ கரெக்டா செய்வா” என அமுதா உளற

“என்ன? நான் அவளை நைட் அனுப்பி விடுவேனு எப்போ சொன்னேன்?” என அப்படியே மாற்றிப் பேச நேத்ராவும், அமுதாவும் அதிர்ந்தார்கள்.

“உங்க குடும்பத்துக்குப் பொய்யத் தவிர எதுவும் தெரியாதா?” என்று திட்டியபடி போனை கட் செய்தவள் நேத்ராவை பிடித்துக் கொண்டாள்.

“உங்கம்மாட்ட என்ன சொன்ன?”

“என்னத்த?”

“நான் நைட்ல வீட்ட விட்டு அனுப்பிடுவேனு சொன்னியா?” என அதட்ட நேத்ரா அமைதியானாள்.

“பதில் சொல்லுடி. எப்போ பார்த்தாலும் அமைதியா இருந்து இரிடேட் பண்ற?” எனக் கத்த

“நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். இவளுக்கு அமாவாசை கிட்ட வந்தாலே ஏதோ ஆகி போய்டுது. அப்படியே நிக்கறா” எனச் சரவணன் சொல்ல சந்திரனோ…

“மீ நான் அன்னைக்கே சொன்னேன். 2 மாசத்துல எந்த வேலையும் செய்யலேன்னா வீட்ட விட்டு அனுப்பிறலாம்னு. நீ தான் கேட்கல”

“நான் என்னடா கண்டேன்? எப்போ பார்த்தாலும் ஏதாவது குளறுபடி பண்ணி விட்டுட்டே இருக்கா. நான் பாட்டிமாக்காகப் பார்க்கறேன்”

“நீ யாருக்காகவும் பார்க்க வேணாம். இவளை அப்படி அனுப்பி விட்டா தான் சரியா வரும்” என மிரட்ட நேத்ரா விழுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்ன பார்க்கற? கரெக்டா நடந்துக்கோ. இல்ல அப்படியே அவனை வேலைக்குப் போற இடத்துலயே ஒருத்திய கண்ணாலம் பண்ணி வெச்சுக்கோனு சொல்லிடுவேன். நான் சொன்னா தான் அவன் ரூமுக்கே வருவான். ஞாபகம் வச்சிக்கோ” என மைதிலி அவளிடம் வந்து குரலை உயர்த்தாமல் அழுத்தி சொல்ல அவள் பேசிய பேச்சில் நேத்ரா சிலையாக நிற்க சந்திரனோ அவளைப் புழு போலப் பார்த்தான்.

அடுத்த நாள் காலை வேலை செய்து கொண்டிருந்த போது நேத்ராவின் அருகில் வந்த மைதிலி…

“என்ன நைட்டு சந்தோஷமா இருந்தீங்களா?” எனக் கேட்க நேத்ரா விக்கித்துப் போய் அவளைப் பார்த்தாள்.

‘எப்படி நைட் அவ்ளோ சண்டை கிளப்பி விட்டுட்டு மனசாரச் சந்தோஷமா இருந்தியானு கேட்கறா’ என்று யோசித்தவள் ம்ம் என்று தலையாட்டினாள்.

அன்று இரவு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அமுதாவின் போன் வர அவள் சொன்ன செய்தியில் நேத்ரா தன்னை மறந்து கதற ஆரம்பித்தாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page