“அதுக்கும் தான் அவர ஏத்தி விட்ருக்கீங்க. ஏதோ எனக்குப் போன் பண்ணா பிரஸ்டீஜ் குறையற மாதிரி?”
“அவ்வளவு ஏன்? உங்க போன்ல ஏதாவது பேசலாம்னு நினைச்சா கூட அம்மாட்ட கொடுன்னு மட்டும் தான் சொல்வாங்க. அப்படி இருக்கறப்ப என்ன சொல்றது?”
“நான் விஷம் இல்ல. உங்க குடும்பம் தான் விஷம். சாமி மேல் சத்தியம் பண்ணி சாமியையே ஏமாத்துறீங்க? அப்பறம் நீங்க அந்தச் சாமியவே எடுத்துட்டு வந்து கும்பிடற மாதிரி பில்டப் கொடுத்து என்ன பிரயோஜனம்?”
“இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. எங்களுக்குள்ள ஃபர்ஸ்ட் நாளே எதுவும் நடக்கல. அப்பவே உன் பையன் நடிக்கச் சொல்லி சொன்னான். உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுனு நானும் சொன்னேன்”
“கோயில்ல பரிகாரம் பண்ணிட்டு வந்தப்ப மனசு கேட்கல. அப்பயும் நான் தான் உண்மைய சொன்னேன்”
“ஒரு நாள் அவன் ஆஃபிஸ் போறப்ப பிரக்னன்ட் டெஸ்ட் செக் பண்ணே தானே? உன் பையனுக்கு முன்னாடியே அதுக்கான ரிசல்ட் தெரியும். அவன் தான் எல்லா இடத்திலயும் நடிச்சிட்டு இருக்கான்”
“நான் தான் எல்லாம் நல்லதுக்குனு நினைச்சு என் வாழ்க்கைய நாசம் பண்ணிட்டேன்” என்று அவள் கதறி அழ ஆரம்பித்தாள்.
“ஏய் என்ன பத்தி சொல்ல உனக்கு எந்த ரைட்ஸும் இல்லடி”
“அதைத் தான் நானும் இவ்ளோ நேரம் சொல்லிட்டிருக்கேன்” என்றவள்…
“உங்க பெரியப்பா எனக்குத் தப்பு தப்பா மெஸேஜ் பண்ணாங்கனு சொன்னேனே. அந்த ஆளை ஒரு வார்த்த கேட்டீங்களா?” என்று சொல்ல ஒரு நிமிடம் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
“என்ன பாக்குறீங்க? அந்த ஆள் எனக்கு எவ்ளோ டார்ச்சர் கொடுத்தான் தெரியுமா? எங்கம்மாவ எப்படி தப்புத் தப்பா பேசினான்னு தெரியுமா?”
“இதெல்லாம் சொன்னா உன் மகன் மெஸேஜ் டெலிட் பண்ணுனு சொல்றான். இல்லேனா யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு சொல்றான்?”
“ஏன் உன் தங்கச்சி தான் மனுசியா? நாங்க மனுசங்க இல்லையா? அவன் உன் தங்கச்சிய ஏதோ சொன்னானு இப்போ டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றீங்க? அப்போ நான் யாரு உனக்கு?”
“எங்கம்மா அந்த ஆள் அவ்ளோ பேசியும் உங்களுக்காகத் தான் அவங்க மகன் மேரேஜ்க்கு வந்தாங்க. அதுக்கு நீ எங்கம்மாக்கு என்ன செஞ்ச?”
“பாட்டிமா இறந்ததுக்கு அப்புறம் எங்கம்மா எத்தனை முறை என்ன ஊருக்கு வர சொல்லிருப்பாங்க? நீ என்ன ஊருக்கு விட்டியா?”
“நீ உன் மக வீட்டுக்கு போய்ட்டு அவளை பத்தி கேட்கலன்னு அடிக்கற. ஆமா. என்னால் கேட்க முடியாது. எல்லாம் மரத்து போய் இருக்கற மைன்ட்ல என்னால எதுவும் கேட்க முடியாது”
“உனக்கு யார் இருக்காங்கன்னு பாட்டிமா இறந்ததுக்கு அப்புறம் சொல்லி அடிச்சில்ல? இப்போ சொல்றேன். எனக்கு எங்க அம்மா போதும். எனக்கு நல்லது நினைக்கறவங்க நாலு பேர் இருந்தா போதும்”
“எனக்கு வாழ்க்கையில நிம்மதி தான் வேணும். நீங்க எல்லாம் வேண்டாம்” என்று சொன்னவள்…
“ஒரு பொண்ணு அவளோட ஹஸ்பெண்ட்ட மாமானு ஆசையா சொல்லணும்னு நினைப்பா. ஆனா அப்படி சொல்றேன்னு சண்டை போட்ட ஆள பார்த்திருக்கீங்களா?”
“இத்தனைக்கும் நான் வாய் விட்டு சொல்ல கூட இல்ல. கிப்ட்ல தான் எழுதி கொடுத்தேன்”
“அது கூட எங்கம்மா எப்படி கூப்பிடறாங்களோ அப்படி தான் கூப்பிடணும்னா? உங்க மகனுக்குச் சுயமா சிந்திக்கத் தெரியாதா?”
“இந்த மாதிரி ஒரு சைக்கோ கூட என்னால வாழ முடியாது”
“ஏய் என்னடி விட்டா ரொம்பப் பேசிட்டு போற?” எனச் சந்திரன் அவளை அடிக்க வர அதைப் பார்த்த அனைவரும் திடுக்கிட நேத்ராவோ அசராமல்…
“இது தான் இவங்களோட உண்மையான முகம். ரொம்ப நன்றி மிஸ்டர். சந்திரன். எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்கீங்க” எனக் கையெடுத்து கும்பிட்டு…
“எல்லாம் கிளம்பறீங்களா? நான் பேசி டயர்ட் ஆகிட்டேன். ம்மா ஜூஸ் குடு” என உள்ளே செல்ல அமுதா அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல அவர்கள் அவமானத்துடன் அங்கிருந்து வெளியேறினார்கள்.
நேத்ரா அமுதாவின் பக்கத்தில் வர, “அவங்களுக்குச் சொன்னது தான் உனக்கும். இந்த விஷயத்தில யாரையும் நம்பற மாதிரி இல்ல” என்றவள் தனது போனை நோண்ட ஆரம்பித்தவள் அப்படியே போன் செய்து பேச ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் பேசி வைத்தவள், “ம்மா மேகலாட்ட பேசினேன்மா. அவ ரெஸ்யூம் அனுப்ப சொல்லிருக்கா” என்ற தகவலை கூற அமுதா சரி எனத் தலையாட்டினாள்.
மேகலா நேத்ராவின் கல்லூரி தோழி. பொறியியல் பட்டப்படிப்பில் அவளுடன் படித்தவள். இப்போது சாப்ட்வேரில் வேலை செய்து கொண்டிருப்பவள். அவள் வழிகாட்டுதலில் நேத்ரா வேலைக்கு முயற்சித்தாள்.
அடுத்த இரு மாதங்களில் மேகலா அவளுக்கு ரெஃபர் செய்து இன்டர்வியூ அட்டன்ட் செய்ய வைத்து வேலையும் அவளுக்குக் கிடைக்க அப்போது தான் நேத்ரா கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.
அமுதாவிடம் உற்சாகமாக வந்தவள் “ம்மா வேலை கிடைச்சிடுச்சி” என்றவள்…
“நாம சென்னைக்கே போயிடலாம்மா” எனச் சொல்ல அமுதா சரி என்று தலையாட்ட இருவரும் அவர்கள் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டுச் சென்னையில் குடியேறினார்கள்.
பொள்ளாச்சியில் பசுமையும், இயற்கையும் சென்னையில் உள்ள சூழ்நிலையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.
அன்று காலையில் நேத்ரா வேலைக்காகக் கிளம்பி கொண்டிருந்த சமயம் அவளது வீட்டின் மணி அடிக்கக் கதவை திறக்க அங்கே ஒருவன் வாட்ட சாட்டமாகக் கையில் சின்னக் குடத்துடன் சாமியார் போல உடையை அணிந்து நின்றான்.
அவனைப் பார்த்து எரிச்சல் ஆனவள் என்ன என்பது போல் புருவம் உயர்த்த ஒரு நிமிடம் அவளைப் பார்த்து அதிர்ந்தவன் பின்
“கோவிலுக்குப் போகணும். உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க” என்று புன்னகை முகமாகக் கேட்க
‘எரும மாடு மாறி இருக்கான். இதுல கோல்கேட் விளம்பரம் மாதிரி சிரிப்பு வேற’ என்று மனதிற்குள் திட்டியவள்
“ம்மா” எனக் கத்திய அவள் அலறல் குரல் கேட்டு
“என்னடி?” என்று அவள் அருகில் வந்தவள் வாசலில் நின்றவனைக் கவனித்தாள்.
“நம்ம ஊர்ல தான் இப்படி ஏமாத்தறாங்கனா… சென்னைல கூடவா. காலங்காத்தாலேயே வந்துட்டானுங்க” எனக் கத்த
“ஏய் கம்முனு இருடி. பக்தியோட வேண்டுதலுக்கு வந்திருக்காங்க. கத்தாம நீ உன் வேலைய பாரு” என்றவள்
“இருங்க தம்பி. எடுத்துட்டு வரேன்” என்றவள் உள்ளே சென்று எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கியவன்,
“தாங்க்யூமா” எனச் சொல்ல அமுதா அவனை வியப்பாகப் பார்க்க அவனோ புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்றான்.
