இதயம் 17

 

நேத்ரா அந்தக் கணிப்பொறி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.

அவள் வேலைக்குச் சேர்ந்த போது அவளுடைய டிஎல் லீவில் இருந்ததால் அவனைப் பார்க்க வரும்படி சொன்னதாக மெஸேஜ் கிடைக்க நேத்ரா அவனைப் பார்க்க சென்றவள் அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக அவனோ

“வாவ்… பேபி… வாட் எ சப்ரைஸ்?” என ஆனந்த கூச்சலிட்டவனை…

‘இந்த ஃபிராடு இங்க எங்க வந்தான்?’ என அவள் திகைத்து விழிப்பதை பார்த்தவன்…

“என்ன பேபி அப்படி பார்க்கற? அன்னைக்கு உன் வீட்ல திருவோடு ஏந்தினவன் இன்னைக்கு உன் முன்னாடி இப்படி இருக்கறது பார்த்துக் கன்ஃபியூஸ் ஆயிட்டியோ?” அவள் அதிர்ச்சியின் காரணம் அறிந்து கேட்டவன்…

“எனக்கு உடம்பு சரியில்லாம போனப்ப அம்மா குல தெய்வத்துக்கு வேண்டுதல் வச்சிட்டாங்க. அவங்க வேண்டுதல் நிறவேத்தறப்போ என்ன வெச்சு செஞ்சிட்டாங்க. பார்க்கறவன்லா பரம்பரை திருடன் மாதிரியே லுக் விடறான்” என அன்றைய தன் நிலையினை எடுத்து கூறியவனை எனக்கென்ன என்றது போல் கைக் கட்டி நின்றவள் மனதிலோ…

‘இவன் யாரு? ஏதோ ரொம்ப நாள் தெரிஞ்சவன் மாதிரி பேசிட்டே போறானே?’ என யோசிக்க…

“பேபி ஏன் நிக்கற? சிட் டவுன். நீ நின்னா எனக்குக் கால் வலிக்குது” என உபசரித்தவன்

“ஹௌ ஆர் யூ பேபி? ஹௌவ் ஈஸ் யுவர் ஹஸ்பெண்ட்?” எனக் கேட்க நேத்ராவுக்குப் பதட்டம் ஆகியது.

அவள் முகமாறுதலை கவனித்தவனுக்கு என்ன தோன்றியதோ…

“சில் பேபி. நான் ஒண்ணும் கேட்கல. நீ டென்ஷனா இருக்கப் போல. ஃபர்ஸ்ட் தண்ணி குடி!” எனக் கொடுக்க அவளுக்கும் அது தற்சமயம் தேவைப்பட்டதைப் போல அதை வாங்கி அவசரமாகக் குடித்தவளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்ததைப் போல உணர்ந்தவள்

“சார் எதுனாலும் ஆஃபிஸ் சம்பந்தமா கேளுங்க. நான் பதில் சொல்றேன்” எனக் கறாராகச் சொல்ல

“ஓகே. கூல் பேபி. எம் கதிர்நிலவன். கால் மீ கேட். ஓகே?” என்றவன்..

“இப்போ ஏன் டென்ஷன் ஆகற பேபி? கூல்டா” என அதிக உரிமை எடுத்துப் பேசியவனிடம் சினம் கொண்டவள்,

“வில் யு ப்ளீஸ் ஸ்டாப் இட்!. நீங்க யார்னே தெரியாது. ரொம்ப ஓவரா பேசிட்டே போறீங்க” எனக் கத்தியவளின் கூச்சலில் அதிர்ச்சியானவன்…

“பேபி…” எனச் சமாதானம் செய்ய அவளை நெருங்கியவனை அங்கேயே நில் என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தவள்…

“டோன்ட் கால் மீ பேபி!. மேனர்ஸ்னா என்னனு தெரிஞ்சிட்டு வந்து பேசுங்க. அப்புறம் முக்கியமா நான் சாமியாரெல்லாம் நம்பறதில்ல” என அவள் கடைசியாகச் சொன்னதில்,

“அடிப்பாவி. முடிவே பண்ணிட்டியா?” எனச் சிரித்தவன்…

“என்ன பார்த்தா சாமியார் மாதிரியா இருக்கு? நான் அக்மார்க் பேச்சுலர் பேபி. டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணி சிக்ஸ் பேக் டிரை பண்ணா ஒரே வார்த்தைல சாமியாருனு சொல்லிட்டியே?”

“எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல” என அவன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு புலம்ப அவளுக்கு உதடுகள் புன்னகையில் துடித்தது.

அதை அவனிடமிருந்து மறைத்தவளின் திருட்டுத்தனம் அறிந்து,

“சிரிப்பு வந்தா சிரிச்சிடணும் பேபி. அப்போ தான் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்” எனச் சொன்னவனை அவள் முறைத்தாள்.

“ஓகே… ஓகே… நம்ம பஞ்சாயத்த இத்தோட நிறுத்திக்கலாம். இப்போ கொஞ்சம் நம்ம ஆஃபிஸ் வொர்க்கும் பார்ப்போம். எந்த டவுட்னாலும் கால் மீ. ஐ ஹெல்ப் யு” எனச் சொல்ல தலையாட்டியவள் அங்கிருந்து யோசனையுடனே சென்றாள்.

தனது இருக்கையில் அமர்ந்த நேத்ராவுக்குக் கதிரை பற்றிக் குழப்பமாகவே இருந்தது.

‘இவன் என்ன நம்மள தெரிஞ்ச மாதிரியே பேசறான்’ எனக் குழம்ப…

“நேத்ரா என்னடி ஆச்சு? கேட்ட பார்த்த தானே” என அபிநயா கேட்க அவளோ,

“கதிர் எப்படிடி?” எனத் திருப்பிக் கேட்டாள்.

“என்னடி ஆச்சு உனக்கு? ரொம்ப யோசிக்காத. அப்புறம் அங்க வொர்க் பண்ண களிமண்ணு தான் இருக்கும்” எனக் கலாய்க்க

“அடியே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” எனக் கத்த

“அவர் மிஸ்டர். கூல்டி. எதுனாலும் சிரிச்சுகிட்டே ஹேண்டில் பண்ணுவாரு. பட் வொர்க் கரெக்ட் டைம்ல முடிச்சிடணும். சிரிச்சிட்டே வேலை வாங்கிட்டுவாரு” எனச் சொல்ல நேத்ரா அதிசயமாய் அவளைப் பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்கற?”

“இப்படிலா கூலா இருப்பாங்களான்னு ஆச்சரியமா இருக்கு” என எண்ணியவளின் மனம் சந்திரனிடம் போய் நின்றது.

அவன் எதற்கெடுத்தாலும் திட்டுவது அவள் மனக்கண்ணில் வர அவளறியமால் தனக்குள் அமிழ்ந்து போனாள்.

“ஹேய் என்ன ஆச்சு?” என நேத்ராவின் முக மாற்றத்தை கவனித்த அபிநயா கேட்க ஒன்றும் இல்லை எனத் தலையாட்டினாள்.

“ஓகே. வொர்க் பாருடி. அப்புறம் பேசலாம்” என்றவள் நகர அவளும் வேலையைப் பார்க்க தொடங்கினாள்.

மேகலா வேறு ஒரு புரொஜக்டில் வேலை செய்வதால் அபிநயாவை அவள் அறிமுகப்படுத்த இப்போது இரண்டு பேரும் தோழிகளாயினர்.

ஆனால் நேத்ராவோ யாரிடமும் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசுவதில்லை.

தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

அன்று மதியம் நேத்ரா, அபிநயா மற்றும் மேகலா சாப்பிட செல்ல அப்போது அங்குக் கதிர் வந்தான்.

மேகலாவும், அபிநயாவும் பேச நேத்ராவோ அவர்களைக் கவனித்தவாறு உணவை அளந்து கொண்டிருந்தாள்.

“ஹாய் மேகி”

“ஹாய் டா” என்றவள்…

“என்னடா நியூ கம்மர்ஸ் கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கறியாமே?” என விசாரிக்க…

“அடப்பாவி. யாரு உன்னோட ஸ்லீப்பர் செல் சொன்னாளா?” என அபிநயாவை பார்த்தபடி அவன் கேட்க…

“ஐயோ. நான் இல்ல கேட்” என்று அவள் பதற…

“கூல் அபி. ஐ நோ அபவுட் யூ”

“டேய் ரொம்பச் சீன் போடாத. அதான் உன் மூஞ்சில ஒரு ஒளிவட்டம் தெரியுதே”

“எனக்கென்னடி!. நாங்க எப்பயும் ஒளி வட்டத்தோட இருப்போம். அது இருக்கட்டும். நீ ஏன் இப்படி ப்யூஸ் போன பல்ப் மாறி இருக்க?” என அவன் சீரியஸாக யோசிக்க…

“டேய்” என அவள் அடிக்க வர நேத்ரா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

அவளைக் கவனித்தவன், “என்ன உன் பிரண்ட் ஒண்ணுமே பேச மாட்டேங்கறாங்க?”

“யாருக்கு தெரியும்டா!. அவளோட டிஎல்ல போய்ப் பார்த்தவ. அப்போ இருந்து சைலண்ட்” எனக் கூற

‘அப்படி இருக்கக் கூடாதே’ என யோசிக்க

“என்ன பேசி வைச்ச பக்கி?”

“நான் என்னடி பேசினேன்?” என்றவன் திருப்பி அவளைக் கேள்வி கேட்க

“ஹேய் உன் பிரண்ட் ஏன் திருதிருனு முழிக்கறாங்க?”

“என்னடி பார்க்கறே? நாங்க இப்படி பேசிக்கறோம்னா. அவன் என் கசின்டி” என்றவள்

“அதெல்லாம் சூடு சுரணை இல்லாத ஜென்மம்” என மேகி வார…

“ஏன்டி அழகான பொண்ணு முன்னாடி என் இமேஜ டேமேஜ் பண்ற?”

“அவ அழகான பொண்ணா? அப்போ நாங்க எல்லாம் கெழவியா?”

“வாவ் டோலி. ஒத்துக்கிட்டியே… வெரி ஹேப்பி” என அவன் தலைகுனிந்து வணங்க அவளோ கதிர் தலை மேல் நான்கு அடி வைக்க அதைப் பார்த்து நேத்ரா சிரிக்க அவனோ அதை வாஞ்சையுடன் பார்த்தான்.

அவள் சிரிக்க அவள் கண்களோடு சேர்ந்து முகமும் சேர்ந்து சிரிக்க அதைப் படம் பிடித்துத் தனது மனதிற்குள் புதைத்துக் கொண்டான்.

நேத்ரா சிரித்துக் கொண்டிருந்தவள் ஏதேச்சையாகக் கதிரை பார்க்க அவன் பார்வையில் அவள் சிரிப்பு மறைய அது கதிருக்கு மனதை ஏதோ செய்தது.

“பேபி என்னாச்சு? ஏன் இவ்ளோ சைலண்ட்?” என் தீவிரமான குரலில் கேட்க

“ஒண்ணுமில்ல” என அவள் பதில் சொல்ல

“ஓகே என் கண்மணி” என்று பாட்டு பாட நேத்ரா திடுக்கிட்டு போய் அவனைப் பார்த்தாள்.

“டேய் பாட்டு பாடற மாறி இருந்தா முன்னாடியே சொல்லு. இப்படி ஜெர்க் ஆக வைக்காத”

“அப்படினா இனி அப்படித் தான்டி” என்றவன்

“இது காதல் கவிதைகள் படித்திடும் நேரம்” என்று இளையராஜா மோடுக்கு தாவ மேகியோ…

“இது புரோஜக்ட் டெஸ்டிங் செய்திடும் நேரம்” என ஆரம்பிக்க

“ஓஎம்ஜி” என்றவன், “நேத்ரா சீக்கிரம் சாப்டுட்டு வொர்க் பார்க்க வாங்க” என்று சொன்னவன் உடனடியாக அங்கிருந்து கிளம்ப நேத்ரா ஆச்சரியமாக அவனைப் பார்க்க…

“என்ன பார்க்கற? சார் வொர்க்னா கரெக்ட் டைமுக்கு போய்டுவாரு” என்றவள் மற்ற இருவரையும் சீக்கிரமாகச் சாப்பிட சொல்லி அவ்விடத்திலிருந்து விரைவில் அகன்றனர்.

அன்று இரவு நேத்ராவுக்குக் கதிர் நியாபகமாகவே இருந்தது.

அவனது சிரிக்கச் சிரிக்கப் பேசும் குணமும், எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் குணமும் அவளை ஈர்த்தது.

நானும் இப்படி மாற வேண்டும் என நினைத்தவளுக்கு மேகலாவுடனான அவனது உரையாடல் சிரிப்பை வரவழைத்தது.

ஏதேதோ யோசித்தவளின் சிந்தனை கடைசியில் சந்திரனில் வந்து நிலைக்க அவளுக்குத் தூக்கம் தூரம் போனது.

புரண்டு புரண்டு படுத்தவள் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

அப்போது வாட்சப்பில் அவளது செல்லுக்கு மெஸேஜ் வந்தது.

முதலில் புதிய எண் என்பதால் அழிக்க நினைத்தவள் ஏதோ தோன்றி மெஸேஜை படிக்க அதில் மனதை குழப்பிக் கொள்ளாமல் அமைதியாகத் தூங்கும்படி இருக்க ‘இதென்ன நம்ம மைன்ட்செட்டுக்கு தகுந்த மாதிரி மெஸேஜ் வருது. யாராவது மாத்தி சென்ட் பண்ணிருப்பாங்களோ?’ என யோசித்தவளின் மனம் தன்னையறியாமல் அமைதியுற அவள் அமைதியாக உறங்கினாள்.

ஏறக்குறைய இதே ரீதியில் ஒரு மாதம் சென்றது.

கதிர்நிலவன் அவ்வப்போது அவர்களுடன் வந்து பேசி சிரித்து விட்டு செல்வான்.

நேத்ராவும், மேகலாவின் உறவினர் என்ற முறையில் பேசினாலும் அளவோடு பேசுவாள்.

ஆனால் அவள் மற்ற ஆண்களிடம் தேவை இல்லாமல் வைத்து கொள்வதில்லை.

அதற்கும் அவளுக்குத் தலைக்கனம் எனப் பெயர் வர அவள் பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் அவள் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அமுதாவின் முகம் சரியில்லாதது போல் இருக்க “என்னம்மா?” என்று கேட்க அவள் காட்டிய கடிதத்தில் நேத்ரா கல்லாய் சமைந்து நின்றாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page