இதயம் 4

நேத்ராவிற்குச் சந்திரனை நினைக்க நினைக்கத் தீக்ஷித்தின் நியாபகம் வந்தது.

அவளது கல்யாணம் முடிவான சில நாட்களில் வீணாவிடம் இருந்து அமுதாவிற்குப் போன் வந்தது.

“ஹலோ”

“சொல்லு வீணா. நல்லாருக்கியா?”

“நல்லாருக்கேன் அக்கா”

“தீக்ஷித், முகிலன் எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“எல்லாம் நல்லா இருக்கோம்கா. உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் போன் பண்ணேன்கா”

“என்ன விஷயம் வீணா?”

“அக்கா தீக்ஷித்துக்குப் பொண்ணு செட் ஆகிடுச்சிக்கா”

“ரொம்பச் சந்தோஷம் வீணா. பொண்ணு எந்த ஊரு?”

“பொண்ணு டெல்லிக்கா”

“டெல்லியா? என்ன சொல்ற வீணா?”

“ஆமாக்கா. லவ் பண்றேனு சொன்னான். ஃபர்ஸ்ட் அவரு ஒத்துக்கல. நான் தான் கண்டிப்பா முடிக்கணும்னு தீக்ஷித் கிட்ட பேசி ஃபிக்ஸ் பண்ணிட்டோம்க்கா”

“சரி வீணா. எப்படியோ பிக்ஸ் ஆனா சரி”

“அவங்க வீட்ல இருந்து பொண்ணோட அம்மாவும், அப்பாவும் வந்தாங்க. எனக்கு ஹிந்தி தெரியும்ங்கறதால நான் தான் பேசினேன். பேசின வரையும் பிடிச்சிருந்ததுக்கா. அதான் நிச்சயத்துக்கு எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டோம்க்கா”

“எப்போ நிச்சயம்?”

“அடுத்த மாசத்துல. நிச்சயம் டெல்லில வைச்சிருக்கோம்”

“என்ன சொல்ற? டெல்லியா? நாங்க அவ்ளோ தூரம் எப்படி வரது?”

“இங்க இருந்து 15 பேர் போகலாம்னு இருக்கோம்க்கா”

“சரி. அப்போ கல்யாணம்?”

“கல்யாணம் பொள்ளாச்சில தான்க்கா வைக்கறோம்”

“சரி சரி. ரொம்பச் சந்தோஷம். பரவால்ல. நேத்ரா கல்யாணம் முடிவானவுடனே தீக்ஷித்க்கும் செட் ஆகிடுச்சு. அப்படியே நம்ம முகில்க்கும் சீக்கிரம் நடந்துட்டா பரவால்ல”

“ஆமாக்கா. நான் வெச்சிடறேன். அத்தைகிட்டயும் சொல்லிடுங்க” என்று போனை கட் செய்தாள்.

‘ஏன் இதை அத்தைகிட்ட சொன்னா ஆகாதாமா இவளுக்கு? இந்தத் திமிரு இருக்கக் கூடாது’ என யோசித்தவள் விஷயத்தைப் பத்மாவிடம் கூற அவர் அதிர்ச்சியானார்.

அவர் சொல்லிக் கொண்டிருந்த போது அவர்கள் பேசுவதைக் கேட்டபடி நேத்ரா வந்தாள்.

“என்னமா தீக்ஷி அண்ணாக்கு மேரேஜ் செட் ஆகிடுச்சா?”

“ஆமாடி”

“சூப்பர் மா. பொண்ணு எந்த ஊரு? யாரோ பொள்ளாச்சில கேட்டுட்டு இருந்தாங்கனு சொன்னீயே. அவங்களா?”

“இல்லடி. பொண்ணு டெல்லி”

“என்னது டெல்லியா? என்னமா சொல்ற?” என்றபடி பாட்டிமாவை பார்த்தாள்.

அவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவர் எதுவும் பேசவில்லை.

பத்மாவதிக்கு பழமையான விஷயங்களில் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரால் பேரனுக்கு வேறு மாநிலத்தில் இருந்து கல்யாணம் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் அவரது மகன் என்பதால் இதற்கும் சரி என்பது போல் அமைதியானார்.

“என்னமா ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?”

“அவன் பண்ணானா எல்லாம் சரியா தான் இருக்கும்” என்று சொல்ல நேத்ரா அமைதியாகச் சென்று விட்டாள்.

அவளுக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.

பட்டப் படிப்பை முடித்ததும் வேலை தேட சென்னை செல்லலாம் என்று நினைக்க அவரது குடும்பப் பிரச்சனையில் அவளைச் சென்னை வர விடாமல் தடுத்தான்.

நேத்ராவும் அமைதியாக உள்ளூரிலேயே வேலை செய்தாள். வீட்டின் பொருளாதார நிலை காரணமாக வீட்டினரையும் அவளுக்குக் கேட்க பிடிக்கவில்லை.

மறுபடியும் 2 வருடம் கழித்துப் போராடி சாந்தமூர்த்திக்குத் தெரியாமல் சென்னை சென்றாள்.

அங்கு ஒரு வருடம் இருந்தவள் சரியான வேலை கிடைக்காமல் திரும்ப வீட்டிற்கு வந்தாள்.

பிறகு உள்ளூரிலேயே வேலை செய்யத் தொடங்கினாள்.

அந்த நினைவுகளில் அவள் அமைதியாக இருந்தாள்.

பத்மாவும், அமுதாவும் பேசி கொண்டிருந்தனர்.

பத்மா தனது பேரனை பற்றிய யோசனையிலேயே அன்றைய இரவை கழித்தார்.

தீக்ஷித்தும், முகிலும் வேலைக்குச் சென்றதில் இருந்து எப்போதும் அவருக்கு இந்தக் குறை உண்டு.

பேரன்கள் தன்னை விட்டு வெகுதூரம் செல்வதாகப் புலம்பிக் கொண்டிருப்பார்.

அதுவும் முகில் லண்டன் போனதிலிருந்து அவருக்கு வயதான காலத்தில் தன் மகனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற தவிப்பு.

எப்போதும் அவரது நினைவுகள் அவருடைய மகனை சுற்றியே இருக்கும்.

அன்று இரவு முழுவதும் இதைப் பற்றிய யோசனையிலேயே இருந்தார்.

நாட்கள் வேகமாகச் செல்ல நிச்சய நாளும் வந்தது.

இவர்கள் கோட்டூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து டெல்லி சென்றார்கள்.

மொத்தமாக நேத்ரா, அவளது அம்மா, அத்தை என 5 பேர் சென்று அங்கிருந்து வீணாவுடன் இரவு ரயிலில் புறப்பட்டார்கள்.

ரயில் ஒரு நாள் முழுவதும் பயணித்து அடுத்த நாள் காலையில் டெல்லி சென்றடைந்தது.

புது இடம் ஆதலால் நேத்ரா பரவசத்துடன் அனைத்து இடங்களையும் கவனித்தாள்.

இவர்கள் ரயிலில் இருந்து இறங்கியவுடன் பெண் வீட்டார் இவர்களை அழைக்க வந்தார்கள்.

வந்தவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார்கள்.

“ம்மா யாரும்மா அந்த மைதா மாவு?”

“ஏய் கொஞ்சம் அமைதியா இரு. அவங்க காதுல விழுந்துட போகுது” என்றவளை முறைத்தாள்.

“ஏன்டி முறைக்கிற?”

“ஏம்மா நம்ம பேசற தமிழும், அவங்க பேசற இந்தியும்… எப்படிமா புரியும்? எப்படியும் ஊமை படம் தான். இன்னும் ஒரு வாரத்துக்கு”

“ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா… பேய் மாதிரி இருக்கு. யார்மா அது?”

“யாரடி கேட்கற?”

“முகத்துக்கு வைட் பெயிண்டும், நல்லா அடிக்கற லிப்ஸ்டிக்கும்…”

“ஏம்மா எனக்கொரு டவுட். இந்த மேக் அப் பார்த்து தான் அண்ணா விழுந்தாங்களா? சோ சேட்மா”

“கொஞ்சம் அமைதியா இருக்கியா?”

இவர்கள் பேசி கொண்டே ரயில் நிலையத்தின் வெளியில் வந்து அவர்களுக்காக நிறுத்தப்பட்ட வண்டியில் ஏறினார்கள்.

“ம்மா… என்ன முன்னாடி கார் போகுது?”

“முன்னாடி கார் போகாம ஏரோப்ளேனா போகும். கொஞ்சம் அமைதியா வாயேன்டி” என்ற அமுதா தூங்க ஆரம்பித்தாள்.

‘இந்தம்மாக்கு அதுக்குள்ள தூக்கம்’ என்று திட்டியவள் ஜன்னல் வழியே டெல்லியை வேடிக்கை பார்த்தாள்.

அவர்கள் வேன் ஹோட்டலை அடைந்த போது முன்னே காரில் இருந்து ஒரு பெண் இறங்கினாள்.

அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியானாள்.

“ம்மா… அந்த மைதா மாவு தான் ஓட்டிட்டு வந்துச்சா?”

“ஆமாம்டி. அவங்க தான் ஓட்டிட்டு வந்திருப்பாங்க. நீ வா” என்றபடி ஓட்டலின் உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவர்களுக்கு ஹோட்டலின் சாவியைக் கொடுத்தவர்கள் அவர்களை ரெஃபிரஷ் ஆகச் சொன்னார்கள்.

இவர்கள் ஹோட்டலை சென்றடைந்த நேரம் அவளுடைய சித்தப்பா ப்ளைட் மூலம் டெல்லி வந்தார்.

இவர்கள் ரெடியாகி காலை உணவு முடித்தவுடன் அங்கிருந்து குர்கான் சென்றனர்.

குர்கான் ஹரியான மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். டெல்லியிலிருந்து 3 மணி நேரத்தில் உள்ளது.

இவர்கள் செல்லும்போது ஸ்ருதியின் நண்பர்களும், தீக்ஷித்தின் நண்பர்களும் உடன் வந்தனர்.

வேனில் இந்தியும், தமிழுமாக இருக்கப் பெண்களின் மேக் அப்பும், ஆண்களின் ஹேர் ஸ்டைலும்… ஒவ்வொன்றும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியவுடன் வரவேற்றவர்கள் அவர்களை அணைத்தார்கள்.

அதிலேயே ஜெர்க் ஆனவளுக்குப் பின்னர் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது.

கோட்டூர் தாண்டி செல்லாதவள் ஒவ்வொன்றையும் பார்வையாளராக வியப்பாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அந்த வேன் குர்கானை அடைந்து அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றது.

அங்கிருந்தவர்கள் அவர்களைச் சிறப்பாக வரவேற்றார்கள்.

“ம்மா இதென்ன பிளேஸ்? ஹோட்டல் மாதிரி இருக்கு”

“இது ஸ்ருதியோட ஹோட்டல்”

“ஓஹோ” என்று யோசனையுடனே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘லவ் மேரேஜினு ஓகே பண்ணாங்களா? ஸ்டேட்டஸ்க்காகத் தான் ஓகேனு சொல்லிட்டாங்களா? ஏதோ நல்லது நடந்தா சரி’ என்று யோசித்தவள் அவர்களது ரூமை நோக்கி சென்றாள்.

அன்றைய பொழுது அமைதியாகச் சென்றது.

அடுத்த நாள் மாலை மெஹந்தி ஃபங்ஷன் ஆரம்பமாகியது.

நேத்ரா ஸ்ருதியிடம் பேசுவதற்குச் சென்றாள். அவளைச் சுற்றி 3 பெண்கள் இருக்க நேத்ரா தயங்கி கொண்டே அவளிடம் செல்ல அவள் “ஹாய் கம்” என்று கூறி வரவேற்றாள்.

“ஹாய் ஐ ஆம் தீக்ஷித்ஸ் சிஸ்டர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

ஸ்ருதி வெள்ளையாகக் கொழுக் மொழுக் என்று இருந்தாள்.

அவளது மேக் அப்பும், நுனி நாக்கு ஆங்கிலமும் நேத்ராவை திணறடித்தது.

திக்கித் திணறி பேசிவிட்டு வெளியே வந்தாள்.

பிறகு அவள் அம்மா, அத்தையோடு நேரம் சென்றது.

வேறு யாரோடும் அவளால் சேர முடியவில்லை. புது இடம், தெரியாத பாஷை என ரொம்பத் தவித்துப் போனாள்.

சிறிது நேரத்தில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ஸ்ருதி அவளை அழைக்க அங்குச் சென்றாள்.

“கம் ஆன் நேத்ரா. நௌ பார்ட்டி டைம். கம் வித் மீ” என அழைக்க

“ஒன் மினிட் பாபி. ஐ ஹேவ் டு டெல் டு மம்” என்றவள் அமுதாவிடம் சொல்லிவிட்டு அவளோடு சென்றாள்.

இவள் போகும் போது அங்கு இசைக்கேற்ப 2 பேர் ஆடிக் கொண்டிருந்தனர்.

முழங்கால் வரை ஆடை அணிந்து கொண்டிருந்த பெண் ஒரு அழகான இளைஞருடன் ஜோடியாக நடனம் ஆடி கொண்டிருந்தாள்.

நேத்ரா மௌனமாக நடனத்தைக் கவனிக்க ஸ்ருதி அவளை ஆட சொல்லி வற்புறுத்தினாள்.

ஆனால் நேத்ரா அமைதியாக இருக்க அங்குச் சுற்றி நின்றவர்களும் ஆடத் தொடங்கினார்கள்.

வயதானவர்கள் முதல் தீக்ஷித்தின் நண்பர்கள் வரை ஆட தொடங்கினார்கள்.

ஸ்ருதியும், தீக்ஷித்தும் ஆட நேத்ரா அந்த நடனத்தை ரசித்தாள்.

இதற்கிடையில் மதுபானம் அங்கு வினியோகிக்கப்பட்டுக் குடிக்க ஆரம்பித்திருந்தனர்.

நடனத்தில் லயித்திருந்த நேத்ரா இதனைக் கவனிக்கவில்லை.

திடீரென்று ஒருவன் போதையுடன் அவள் முன்னால் வந்து நின்றான்.

“ஹேய் கேர்ள்… டான்ஸ் வித் மீ” என்க அவளுக்கு உள்ளூற நடுங்கியது.

அறையின் வாயிலில் நின்றவள் பதறியடித்து வெளியே ஓடி வரும் போது இடையில் ஒருவனை இடித்துக் கீழே விழுந்தாள்.

“சா… சாரி” என்று பயத்தில் உறைய அவனோ கை நீட்டினான்.

அதைத் தயக்கத்துடன் பார்த்தவள் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே அவளை நடனம் ஆட கேட்டவன் வந்து கொண்டிருந்தான்.

சட்டென்று கையைப் பிடித்தபடி எழுந்தவள் அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

அவன் புரியாமல் பார்க்க எதிரில் வந்தவனைக் காட்டினாள்.

அவள் கையை ஒரு முறை அழுத்தி விட்டுக் கண் மூடி திறந்தவன் “ஹேய் சைது… ஐ ஆம் சர்ச்சிங் யுடா… கம்… கம்…” என்று ஆர்ப்பாட்டமாக அவனை அழைத்தவன் கையோடு கூட்டி சென்றான்.

அவனுடன் சென்றவன் திரும்பி அவளிடம் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டினான்.

அவள் தலையாட்டியபடியே அங்கிருந்து சென்றவள் அறைக்குச் சென்றாள்.

அங்கே அவளுடைய அத்தையும், அம்மாவும் பேசி கொண்டிருக்க இவளும் சிறிது நேரம் அவர்களுடன் சேர்ந்து பேசி விட்டு படுத்து கொண்டாள்.

படுத்தவளுக்குச் சந்திரன் நியாபகம் வந்தது.

அவனது செல்லுக்குக் கூப்பிட அவனோ எடுக்கவில்லை.

தன்னுடைய தலையெழுத்தை எண்ணித் கொண்டே தூங்க சென்றாள்.

அடுத்த நாள் காலை நிச்சயம் தொடங்கியது.

இவர்கள் ரெடியாகி கொண்டிருக்கும் போது ஸ்ருதி வந்து அவளை மேக் அப்க்காக அவளை அழைத்துச் சென்றாள்.

அங்கே சென்றால் அங்கே மேக் அப் ஆண்கள் பெண்களுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

எல்லோரும் 2 கோட் அடிக்க இவளுக்கும் 2 கோட் அடித்து லிப்ஸ்டிக் நிறையப் போட்டு அவளை அனுப்ப அவள் நொந்து போய் வெளியே வந்தாள்.

நிச்சயம் அவர்களது ஹோட்டலின் ஒரு பகுதியில் ஆரம்பமாகியது.

மெல்ல மெல்ல அந்த ஹோட்டல் நிரம்பியது.

எல்லோருக்கும் டேபிள், நாற்காலிகள் போட்டு அதை அலங்கரித்திருந்தனர்.

டெல்லி குரூப் ஆட்டம் போட்டிருக்கச் சென்னை குரூப் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

செல்ஃபி, கேக் கட்டிங் என்று மேடை களை கட்டியிருந்தது.

நிச்சயம் முடிந்ததும் நடனம் ஆரம்பித்திருந்தது.

டீஜே பாட்டு போட வண்ணமயமான விளக்குகளுடன் நடனம் ஆரம்பமாகியது.

ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து நடனமாட அவளுக்குச் சந்திரன் நியாபகம் வந்தது.

அவனோடு நேற்று உதவியவன் நியாபகம் வர அவனைத் தேடினாள். அவனோ அவள் கண்களுக்குச் சிக்கவில்லை.

எப்படியோ நிச்சயம் முடிய அவளுக்குச் சந்திரனிடமிருந்து போன் வந்தது.

அவள் ஆச்சரியப்பட்டபடி போனை ஆன் செய்தாள்.

“ஹலோ”

“ஹலோ சொல்லுங்க”

“நிச்சயம் முடிஞ்சிடுச்சா?”

“இப்போ தாங்க முடிஞ்சது”

“நேத்து போன் பண்ணி இருந்தியா? நான் தூங்கிட்டேன்”

“பரவால்லங்க”

“நான் ஒரு வேலையா சென்னை வந்திருக்கேன். 4,5 நாள் வேலை இருக்கு இங்க”

“நாங்க நாளைக்கு நைட் இங்க இருந்து கிளம்பிடுவோம்ங்க. நீங்க சென்னைல இருப்பீங்களா?” என ஆர்வமுடன் கேட்க

“தெரியல. நான் இருக்கற மாதிரி இருந்தா சொல்றேன்” என்று அவன் சாதாரணமாக முடிக்க அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

“சரி” என்று அமைதியாகப் போனை வைத்து விட்டாள்.

அடுத்த நாள் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாகச் சென்னை கிளம்பினர்.

இவர்கள் சென்னையை அடையும் போது சந்திரனிடம் இருந்து போன் வந்தது.

அவன் வருவதை அறிந்தவள் சாந்தமூர்த்தியிடம் சொல்ல அவர் சந்திரனை தனது வீட்டுக்கு அழைத்தார்.

அவரது அழைப்பை ஏற்றுத் தனது நண்பனுடன் வந்தவன் அவளது சித்தப்பாவிடம் பேசி கொண்டிருந்தான்.

வழக்கம் போல அவளுடன் ஒன்றும் பேசவில்லை.

‘இதுக்கு நீ வராமயே இருந்திருக்கலாம்’ என்று நொந்து கொண்டாள்.

பின்னர்ச் சிறிது நேரத்தில் கிளம்பியவன் அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றான்.

அன்று மதியம் கொஞ்சம் ஓய்வு எடுத்தவர்கள் இரவு ஊருக்குக் கிளம்பினார்கள்.

நேத்ராவுக்கு டெல்லி நியாபகத்தில் அன்றைய இரவு சென்றது.

திருமண வேலைகளில் நாட்கள் ரொம்ப வேகமாக நகர்ந்தது.

திடிரென்று நாளை திருமணம் என்று நினைத்தவுடன் திகைத்தாள்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணத்திற்குப் பெண்ணை அழைக்க வந்திருந்தனர்.

அவர்களை வரவேற்றவர்கள் தாங்களும் நல்ல நேரத்தில் கிளம்புவதாகச் சொன்னார்கள்.

நேத்ரா மணப்பெண் அலங்காரத்துடன் புறப்பட அவளுடன் மலர்க் கொடியின் பெண் மாலதி, மலர்க்கொடி ஆகியோர் புறப்பட அவர்களுக்குப் பின் கிளம்பிய பஸ் கோவையை நோக்கி சென்றது.

அங்கு ஹோட்டல் ரூமில் நேத்ராவை அலங்கரித்துக் கொண்டிருக்க உபசரிக்கிறேன் பேர்வழி என்று பூபாலன் உள்ளே வந்தான்.

அவளைப் பார்த்ததும் நேத்ராவுக்கு அடி வயிறு கலங்கியது.

மாலதியிடம் ஏதோ முணுமுணுக்க அவள் பூபாலனிடம் சென்று “அங்கிள் மேக் அப் போட்டுட்டு இருக்கோம். அப்புறம் வாங்க” என்று சொல்ல நேத்ராவை முறைத்தபடியே வெளியேறினான்.

பின்னர்ப் பெண் அழைப்பு ஆரம்பமாகியது. ஒரு கோயிலிலிருந்து மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள்.

நேத்ரா சிகப்பு கலர் புடவையில் வைரம் போன்று ஜொலித்த நகைகளில் மின்னினாள்.

நிச்சயம் ஆரம்பமாக அவள் பக்கத்தில் சந்திரன் வந்தான்.

அவனைக் கண்டு நேத்ரா புன்னகைக்க அவன் அமைதியாக இருந்தான்.

‘ச்சே சிரிச்சது கூடத் தப்பா? ரோபோ’ எனத் திட்டி கொண்டே வெளியில் புன்னகை செய்தாள்.

ஒவ்வொருவராக வர அவர்களை வரவேற்று சந்திரன் பேசினான்.

‘ஓ… ஒரு வேளை இவன் நல்லா பேசுவானோ?’ என்ற யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.

“அக்கா என்ன யோசிக்கறீங்க?”

“ஒண்ணும் இல்லடி” என்றவள் பூபாலன் மேடையில் ஒரு பக்கம் நிற்க எரிச்சலுடன் நடப்பதை கவனித்தாள்.

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. சந்திரனின் உறவினர்கள் வர புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

பூபாலனின் குடும்பம் போட்டோவுக்குப் போஸ் கொடுத்த பின் அவளிடம் கிஃப்ட் கொடுத்தவன் “என்னடி ஆள மாத்திட்டியா? கொஞ்ச நாளா மெஸேஜ் பண்ண மாட்டேங்கிற?” என்று கேட்க அவள் நடுநடுங்கி போனாள்.

பக்கத்தில் சந்திரனை பார்க்க அவனோ அவனது பெரியம்மாவிடம் பேசி கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் கண் மூடி திறந்தவள் “ஆமா. எனக்கு யார்ட்ட பேசணும்னு தெரியும். உன் வேலைய பாருடா” என்று சிரித்துக் கொண்டே மிரட்ட அவனுக்கு முகம் கருத்தது.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் அடுத்து வந்தவர்களிடம் பேச ஒரு வழியாக அவன் அங்கிருந்து செல்ல அப்போது தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

இங்கே இந்தக் கூத்து நடக்கப் பக்கத்தில் நின்றவனோ என்ன ஏதென்று கேட்கவில்லை.

மண்டபத்தில் அவ்வளவு பேர் இருக்க அவளோ ரொம்பத் தனிமையாக உணர்ந்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த மாலதியின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

“என்னக்கா ஆச்சு?”

“ஒண்ணும் இல்ல மாலு. கொஞ்ச நேரம் எங்கயும் போகாம இங்கயே இருக்கியா? ப்ளீஸ்” என்று நேத்ரா கெஞ்ச

“இதுக்கு ஏக்கா ப்ளீஸ் போடற? இருன்னா இருக்கறேன்” என்று கண் சிமிட்டி சிரிக்க நேத்ராவும் புன்னகைத்தாள்.

முதல் நாள் இந்தக் கலவரங்களுடன் செல்ல அடுத்த நாள் என்ன நடக்குமோ என்ற பீதியுடன் நேத்ரா தயாராகிக் கொண்டிருந்தாள்.

அன்றைய தினத்தில் நல்ல நேரத்தில் சந்திரன் தாலி கட்ட அப்போதிருந்து நேத்ராவுக்குக் கெட்ட நேரம் ஆரம்பமாகியது.

தாலி கட்டியவுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்களை அழைத்துச் சென்றார்கள்.

அங்குப் பாலும், பழமும் ஊட்ட சொல்ல அங்கு அடுத்தக் கூத்து ஆரம்பமாகியது.

“அய்யோ பாலா?” என்ற அவனது முகச்சுளிப்பில் நேத்ரா திகைத்தாள்.

“என்ன இப்படிச் சொல்றீங்க அண்ணா? இனிமேல் அக்கா என்ன சொல்றாங்களோ அதைத் தான் செய்யணும். பாலை குடிங்க” என்று மாலதி சொல்ல அவளை முறைத்தவன் பாலை குடித்து விட்டு நேத்ராவிடம் தந்தான்.

“அக்கா அண்ணா ஏன் இவ்ளோ விரப்பா இருக்காரு?”

“அவரு டெய்லியும் காபியோட 2 டம்ளர் கஞ்சியும் உள்ள ஊத்திக்குவாராம். நான் என்ன பிராண்டுனு கேட்டு சொல்றேன்” என்று நேத்ரா சொல்ல மாலதி சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.

பிறகு மணமக்களைச் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்ல நேத்ரா ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தாள்.

2 நாள் அலைச்சலில் உடம்பு ஓய்வு கொடேன் எனக் கேட்க முதலிரவை பற்றிய பயத்தில் அவளுக்குத் தூக்கம் தூர போனது.

அமுதாவும், மலரும் உடனிருக்க அன்று இரவு அவளை அலங்கரித்துக் கையில் பால் சொம்புடன் சந்திரனது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உன் கையில் என்னை கொடுத்தேன்
407 13 1
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page