இதழ் – 1

காலையில் திருமணம் முடிந்த அந்த மணப்பெண்ணுக்கு, இரவில் அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள்- முதலிரவுக்காக அவள் வயதுடைய 5 பெண்கள்.

 

“அருவி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி” என்றாள் ஒருத்தி.

 

“இல்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்று அழகா கொஞ்சி கொஞ்சி பேசினாள் நம் நாயகி அருவி.

 

சிவந்த நிறம், ஒல்லியான மெல்லிடை தேகம், வானவில் போன்ற வளைந்த புருவம், அழகான மூக்கு, மீன் போன்ற அழகான கண்கள், பன் போன்ற கண்ணம் அந்த கன்னத்தில் விழும் குழியில் விழாதவர்களே இல்லை எனலாம். பாசிமணிகளை கோர்த்து எடுத்தது போல் அழகான பல்வரிசை, கோவை பழங்கள் போல் எப்பொழுதும் சிவந்து இருக்கும் அவளது உதடு, பெயருக்கேற்றார் போல் பேச ஆரம்பித்தாள் நிற்காமல் ஓடும் அருவி போல் பேசிக்கொண்டே இருப்பாள், மொத்தத்தில் கிராமத்தில் பூத்த பாரிஜாத மலர் அவள்…

 

“அருவி, இன்னக்கி உன் கன்னம் ரொம்ப சிவப்பா இருக்கு செவந்து இருக்கு டி” என்றாள் ஒருத்தி.

 

“அதுவா! நீ கவனிக்கலையா இன்னைக்கு சாயந்தரம் ரிசப்ஷன் அப்போ இவ வீட்டுக்காரர் இவளை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கிட்டே இருந்தார், அதை நினைச்சு நினைச்சு தான் இப்போ இவ கண்ணம் சிவந்து இருக்கு!” என்றாள் மற்றவள்.

 

“சும்மா இருங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல” என அருவி வெக்கப்பட.

 

“ரொம்ப வெட்கபடாத கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ, உன் புருஷன் முன்னாடியே வெட்கப்படனும்ல” என்றாள்.

 

மற்ற பெண்கள் சிரிக்க.

 

“பாருங்க அக்கா இவங்களை” என்றாள் அருவி பக்கத்து வீட்டு ராதாவிடம்.

 

“சும்மா இருங்க, சரி டைம் ஆயிடுச்சு நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க” என அவர்களை அனுப்பிவிட்டு இப்பொழுது அருவிக்கு அழகாக தலை சீவி கொண்டிருந்தாள் ராதா.

 

“அருவி.”

 

“என்னங்க அக்கா.”

 

“நான் சொல்றத நல்லா ஞாபகம் வச்சுக்கோ.”

 

“சொல்லுங்க அக்கா.”

 

“நீ இப்ப சின்ன பொண்ணு இல்ல, பெரிய பொண்ணு.”

 

“சரிக்கா.”

 

“நம்ம வீட்ல இருந்த மாதிரி விளையாட்டு தனமா இருக்கக்கூடாது, இங்க நீ உன் மாமனார் மாமியாரை நல்லா கவனிச்சுக்கணும்.”

 

“ம்.”

 

“அவங்க சொல்ற எந்த வேலையும் முகம் சுழிக்காமல் செஞ்சு அவங்ககிட்ட நல்ல மருமகள் னு பேரு வாங்கணும்.”

 

“சரிக்கா.”

 

“அப்புறம், இன்னொரு விசயம், உன் வீட்டுக்காரர் கிட்ட நல்ல பேரு எடுக்கணும்.”

 

“சரிக்கா.”

 

“அங்க தூங்குற மாதிரி இங்க காலைல 8 மணி வரையும் தூங்க கூடாது, உன் வீட்டுக்காரருக்கு முன்னாடியே சீக்கிரம் நீ எழுந்திருச்சு, அவருக்கு காலையில் டீ கொடுக்கிறதுல இருந்து அவரை வேலைக்கு அனுப்பறதுல இருந்து எல்லா வேலையும் பார்த்து கவனமா செய்யணும்.”

 

“சரிங்க அக்கா.”

 

“அப்புறம் அவருக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா சமைச்சு கொடுக்கணும்.”

 

“ம் சரி, சமையல் தான் எனக்கு அத்துபடி ஆச்சே.”

 

“அது எனக்கு தெரியும்டி, செல்லம்” என அவள் கன்னத்தை கிள்ளி ராதா, “அப்புறம் ஒரு விஷயம்.”

 

“சொல்லுங்க அக்கா.”

 

“இன்னைக்கு உனக்கு முதலிரவு.”

 

“ஆமாக்கா பஸ்ட் நைட்.”

 

“இதை பத்தி உனக்கு தெரியுமோ தெரியாதானே, எனக்கு தெரியலையே! இத, எப்படி சொல்லி உனக்கு விளக்கமா புரிய வைக்கிறதுன்னும் எனக்கு தெரியல.”

 

“இதுல, என்னக்கா இருக்கு, உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.”

 

“சரி நான் சொல்றத மனசுல வச்சுக்கோ.”

 

“சொல்லுங்க அக்கா.”

 

“இப்ப நீ அந்த ரூம்குள்ள போனதும் உன் வீட்டுக்காரர் என்ன சொன்னாலும் நீ தட்டாமல் அவர் பேச்சை கேட்கணும்.”

 

“ம் சரி.”

 

“அவரு உனக்கு நிறைய டெஸ்ட் வைக்கிற மாதிரி நடிப்பார்.”

 

“எப்படி? அக்கா எனக்கு டெஸ்ட் வைப்பார்.”

 

“உன் கிட்ட அன்பா இருக்கிறது மாதிரி இருப்பார், கோவப்படுவார், அவர் என்ன செஞ்சாலும் நீ பொறுமையா அன்பா இருக்கணும் சரியா!!.”

 

“சரிங்க அக்கா.”

 

“அவர் எனக்கு எதுக்கு? டெஸ்ட் வைக்கிறார்.”

 

“அப்பதான் நீ அவருக்கு ஏத்த பொண்ணா இல்லையான்னு அவர் தெரிஞ்சுகிறதுக்காக இப்படி டெஸ்ட்.”

 

“ஓ சரிக்கா.”

 

“அப்புறம், நீ எப்பவும் சிரிச்ச முகத்தோட அன்பா இருக்கணும். கோவமே படக்கூடாது.”

 

“ஏன்?”

 

“அப்பதான் உன் வாழ்க்கை அழகா இருக்கும்.”

 

“சரிங்கக்கா நீ பொறுமையா இருந்தாதான் உன் வீட்டுக்காரருக்கும் அவங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் உன்னை பிடிக்கும்.”

 

“அக்கா, நான் ஒன்னு கேட்கவா!!.”

 

“கேளு.”

 

“எனக்கு பயமா இருக்கு அக்கா.”

 

“எதுக்கு?”

 

“இத்தனை நாளா நம்ம வீட்ல இருந்துட்டு இன்னைக்கு திடீர்னு இவ்ளோ பெரிய வீடு, இவங்க எல்லாம் பார்க்க ரொம்ப பணக்காரங்க மாதிரி இருக்காங்க எனக்கு பயமா இருக்கு, அதுவும் அவர் கூட தனியா இருக்க சொல்றீங்க, நான் வேணா இன்னைக்கு மட்டும் அம்மா அப்பா கூட தூங்கிட்டு நாளைக்கு இவங்க ரூமுக்கு போகவா!!” என அருவி கேட்க.

 

“என்னடி சொல்ற” என அவளை பார்த்து ராதா புரியாமல் கேட்க.

 

“ஆமாக்கா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

 

“பயமா இருக்கு, பயமா இருக்குனு சொல்லாத. எல்லா பொண்ணுங்களுக்கும் ஆரம்பத்தில் பயமா தான் இருக்கும்.”

 

“அப்புறம்!” என அருவி ஆர்வமாக கேட்க.

 

“அப்புறம் போக போக சரியாயிடும்” என்றாள் ராதா வெட்கப்பட்டு.

 

“ஆமா இப்ப நீங்க எதுக்கு வெட்கப்படுறீங்க?”

 

“நான் எதுக்கு வெட்கப்படுகிறேன்னு இன்னும் கொஞ்சம் நேரத்துல உனக்கே தெரியும்.”

 

“சரிக்கா” என அவள் பேசிக் கொண்டிருக்க இப்பொழுது சாப்பிட்டுவிட்டு மற்ற ஐந்து பெண்களும் வந்தனர்.

 

“அருவி, வானத்திலிருந்து இறங்கி வந்த நிலா மாதிரி எவ்வளவு அழகா இருக்கானு பாத்திங்களா டி.”

 

“ஆமாடி!” என்றனர்.

 

“ஏய் சும்மா இருங்கடி. கண்ணு வைக்காதீங்க” என கண் மை எடுத்து அவள் நாடியில் அழகாக திருஷ்டி போட்டு வைத்தாள் ராதா.

 

அப்பொழுது அங்கு வந்தார் அவள் மாமியார் சரஸ்வதி, “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்றார், அருவியை பார்த்து அவள் கன்னத்தை திருஷ்டி கழித்து.

 

“அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்றாள் ராதா.

 

“சரி” என சரஸ்வதி காலில் அருவி.

 

தன் காலில விழுந்தவளை தூக்கிய சரஸ்வதி அவள் தலையில் கை வைத்து, “தீர்க்க சுமங்கலியா குழந்தை குட்டியோட சந்தோசமா நீ இருக்கணும்.”

 

“சரிங்க அத்தை” என்றாள் அருவி.

 

“இந்தா” என அவள் கழுத்தில் 10 பவுன் செயினை போட்டுவிட.

 

“அத்தை எனக்கு இதெல்லாம் வேணாம்.”

 

“அப்டி சொல்லக்கூடாது, என் மாமியார் எனக்கு கொடுத்தாங்க அதை நான் உனக்கு கொடுக்கிறேன் வாங்கிக்கோ.”

 

“சரிங்க! அத்தை.”

 

“அப்புறம் என் பையன் கொஞ்சம் கோவக்காரன், நீ தான் பொறுமையா இருக்கணும்.”

 

“நீங்க கவலையே படாதீங்க நான் அவர்கிட்ட அன்பா பேசி அவரை கோபப்படாத நல்லவராக்கிடறேன்” என்றாள் அருவி.

 

அவளின் வெகுளியான பேச்சை கேட்டு சிரித்தார் சரஸ்வதி, “சரிமா டைம் ஆயிடுச்சு நீங்க அருவிய.”

 

“நீங்க போங்கம்மா நாங்க இவள அவர் ரூம்ல போய் விட்டுடுறோம்” என்றனர் மற்ற பெண்கள்.

 

சரஸ்வதி சென்றதும் அருவியின் கையில் பால் சொம்பை கொடுத்தார்கள்.

 

“அருவி உனக்கு பால் னா ரொம்ப பிடிக்கும் தான.”

 

“ஆமா! எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

 

“நீ உள்ள போனதும் உன் வீட்டுக்காரர் கையில் இந்த பால் சொம்ப கொடுத்துட்டு அவர் கைல கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ.”

 

“ம்.”

 

“அவர் குடிச்சிட்டு கொடுத்த மிச்சப்பாலை தான் நீ குடிக்கணும்.”

 

“சரி” என்றாள்.

 

“இப்படி என் தலையில இவ்ளோ பூ வெச்சி இருக்கீங்க, இந்த பட்டு சேலை இந்த நகை இதெல்லாம் எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு அக்கா எப்ப அக்கா இதெல்லாம் கழட்டுவோம்?” என அருவி கேட்க.

 

இப்பொழுது ராதாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது, என்ன சொல்வது என்று தெரியவில்லை, “நீ ரூமுக்கு போ உன் வீட்டுக்காரர் பார்த்துக்குவார்.”

 

“அப்படியா! அவரு எனக்கு எல்லாத்தையும் கழட்டி விடுவாரா!” என அருவி கேட்க.

 

“ராதா அக்கா, ரொம்ப கஷ்டம் தான் இன்னைக்கு இவ வீட்டுக்காரரோட பாடு” என்றாள் ஒருத்தி.

 

“சும்மா இருங்கடி” என்றாள் ராதா சிரித்து வெக்கப்பட்டு கொண்டே.

 

“நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல” என சிணுங்கினாள் அருவி.

 

“ஒன்னும் புரியல புரியலனு சொல்றவ தான், எண்ணி பத்து மாதத்தில் குழந்தையோட நிக்க போற” என்றனர்.

 

அதற்குள் ராகவ் அறை வர அவளை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்கள் பெண்கள்.

 

நிமிந்து அந்த அறையைப் பார்த்து அசந்து நின்றாள் அருவி, வண்ண மலர்களால் அங்கங்கே தோரணம் தொங்கவிடப்பட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அழகாக இருந்தது, பெட்டில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

“எவ்ளோ!! பெரிய பெட்” என வாயை பிளந்தவள் பால் சோம்பை டேபிளில் வைத்து விட்டு, பெட்டில் அமர்ந்து, “ஆமா! நம்ம இங்க வந்துட்டோம். நம்ம புருஷனை காணோமே!! எங்க போயிருப்பார்” என பெட்டில் குனிந்து பார்க்க அவனை காணவில்லை.

 

“பாத்ரூம் போயிருப்பாரோ!” என சென்று தேடிப் பார்க்க அவனை காணவில்லை.

 

இப்போது கதவு திறக்கும் திறக்கும் சத்தம் கேட்டது வேகமாக எழுந்து நின்றாள் அருவி.

 

அறைக்கு வந்த ராகவனை பார்த்து இமைக்க மறந்து அசந்து நின்றாள்.

 

“அச்சோ நம்ம புருஷன் இவ்ளோ!! அழகா இருக்காரு, கடவுளே கடவுளே எனக்கு வெட்கமா வருது என்னென்னமோ பண்ணுதே நான் என்ன பண்ணுவேன்” என மனதிற்குள் கூறி சந்தோஷப்பட்டாள் அந்த பேதை.

 

அறைக்குள் வந்தவன் கதவை தாளிட்டு விட்டு மெல்ல அவள் அருகில் வந்தான்.

 

அவன் அருகில் வர வர அவளது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தாள் அருவி.

 

ஒரு கணம் அவள் முகத்தை கூர்ந்த பார்த்தான் ராகவன்,

 

அடுத்து அவன் செய்த செயலில் அதிர்ந்து நின்றாள் பெண்ணவள்.

❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

 அவன் என்ன? பண்ணிருப்பான்னு தெரியலையே!!

 என் கூட சேர்ந்து நீங்களும் வெயிட் பண்ணி பாருங்க,

 🤘 கண்டிப்பா நாளைக்கு எபி மிஸ் பண்ணாம படிங்க உங்களுக்கு இந்த காதல் கதை ரொம்ப பிடிக்கும். 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,338 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page