இதழ் – 10

அத்தியாயம் – 10

“நாங்க கோவாக்கு ஹனிமூன் போகல” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான் ராகவன்.

அவன் கூறியதைக் கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.

“எனக்கு தெரியும்… தெரியும்… இவன் நெனச்சது தான் சாதிக்கணும்னு நினைக்கிறான்… அவனுக்கு என்ன பத்தி அக்கறையே இல்லை!” என சரஸ்வதி அழ ஆரம்பிக்க.

“நான் சொல்றதை கேளு சரஸ்… அவன் அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க மாட்டான்… இப்பதான் மூணு நாள் வேலை பார்த்துட்டு வந்துருக்கான்… டயர்டா இருக்கும்… அதனால இப்ப வேணாம்னு சொல்லி இருப்பான்… மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல” என தன் மனைவியை சேது ராமன் சமாதானம் செய்ய.

“ஆமாங்க அத்தை… மாமா சொல்ற மாதிரி அவர் வேலை அதிகமா இருக்கறதுனால தான் அப்படி சொல்றாரு… நீங்க ஏதும் நினைச்சுக்காதீங்க… கவலைப்படாதீங்க” என்றாள் அருவி.

இங்கு அறைக்கு வந்த ராகவன் தன்னையே திட்டிக் கொண்டிருந்தான்.

“நாம கோவத்துல அப்டி சொல்லிட்டு வந்துட்டோம்… ஏற்கனவே அம்மாவுக்கு ஃபர்ஸ்ட் அட்டாக் வந்திருக்கு… இப்ப நம்ம இப்படி சொல்லிட்டு வந்ததுனால அருவி கூட நாம சந்தோஷமா இல்லனா அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துரும்… என்னடா ராகவா இப்படி பண்ணிட்ட… சரி போய் சமாளிக்கலாம்” என கூறியபடி வேகமாக அவர்களிடம் வந்தான்.

“அம்மா… நான் வந்து…” என ராகவன் கூற வர,

“ஒன்னும் வேண்டாம்! எங்களுக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம்… போய் அவங்க அவங்க வேலையை பாருங்க… உங்களுக்கு உங்க வேலைதான முக்கியம்… நான் எப்படி போனா உனக்கு என்ன? வேணாம்ப்பா!! எனக்காக நீ எதுவும் சகிச்சுக்கிட்டு போக வேண்டாம்… எனக்காக நீ எங்கயும் போக வேணாம்… அருவி இங்கே இருக்கட்டும்… நீ போய் வேலைனு… வெளிநாடுனு சுத்து” என்றார் கோவமாக சரஸ்வதி.

“ஐயோ!! அம்மா… நான் அந்த அர்த்தத்துல சொல்லலா… எனக்கு டயர்டா இருந்ததுனால தான் அப்டி சொன்னேன்… மத்தபடி வேற ஒன்னும் கிடையாது… இப்ப என்ன? உங்களுக்கு நானும் அருவியும் கோவா போகணும்… அவ்வளவு தானே!!”

“ஆமா!” என சரஸ்வதி தலையசைக்க.

“கண்டிப்பா!! நாங்க போறோம்… நாளைக்கே… சரியா!”

“நிஜமாவா!!”

“நிஜமா… நாங்க போறோம்.”

சேதுராமன், “அதுக்கு முன்னாடி அருவியை கூட்டிட்டு போய் அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடு.”

“சரிங்கப்பா!! நீங்க சொல்ற மாதிரியே செய்றேன்… இப்போ ஓகேவா!! இப்போ சிரிங்கம்மா” என்றான்.

இப்பொது சந்தோஷமாக சிரித்தார் சரஸ்வதி. மறுநாள் அருவியை கடைக்கு அழைத்துச் சென்றவன், “அருவி… உனக்கு என்ன டிரஸ் புடிச்சிருக்கோ எடுத்துக்கோ… விலையை பத்தி கவலைப்படாத… சரியா?” என்றதும்,

“சரிங்க” என்றாள்.

சிறிது நேரத்தில், “என்னங்க… எனக்கு புடிச்சதெல்லாம் எடுத்துட்டேன்” என்றாள்.

பில் போடும் போது, “என்ன? சேலையா இருக்கு?” என கேட்டான்.

“ஆமா! எனக்கு சேலை தான் பிடிக்கும்.”

“இங்க பாரு… நம்ம போறது பட்டிகாடு இல்லை… புரிஞ்சுக்கோ! இப்படி டிரஸ் எல்லாம் அங்க போட்டா உனக்கு செட் ஆகாது” என்றவன் அவனே அவளுக்கு ஆடைகளை தேர்வு செய்தான்.

வீட்டிற்கு வந்ததும் அந்த துணிகளை எல்லாம் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் அருவி யோசித்தபடி.

அவள் அருகில் வந்து அமர்ந்தவன், “ஹலோ! மேடம்… என்ன? ஏதோ யோசனையில இருக்கீங்க?”

“அது வந்து… இப்ப நம்ம கோவாக்கு ஹனிமூன் போகணுமா? வேண்டாம்” என்றாள்.

“ஏன் வேணாம்னு சொல்ற? கோவால சுத்தி பார்க்க நல்லா இருக்கும்… வா உனக்கு நான் நல்லா சுத்தி காட்டுறேன்” என்றான் அவனையறியாமல்.

“நாம முதலில் குழந்தை பெத்துக்கலாம்… அதுக்கப்புறம் அங்க போகலாம்.”

“என்னது? குழந்தை பெத்துட்டா?”

“ஆமா!” என்றாள்.

“அங்க போய்ட்டு வந்தா தான குழந்தை பொறக்கும்… இவ என்னைடான்னா? குழந்தை பெத்துட்டு போகலாம்னு சொல்றா” என அவன் யோசித்துக் கொண்டிருக்க.

“என்னங்க! அப்படி முழிக்கிறீங்க… நீங்க எனக்கு முத்தம் கொடுத்தீங்க இல்ல?”

“ஆமா!” என தலையசைத்தான்.

“இனிமே நீங்க எனக்கு முத்தம் கொடுக்காதீங்க.”

“எதுக்கு?”

“நீங்க முத்தம் கொடுத்த வரைக்கும் போதும்.”

“நீ என்ன சொல்ற?” என புரியாமல் கேட்டான் ராகவன்.

“அது வந்து… நீங்க எனக்கு ரெண்டு தடவை முத்தம் கொடுத்து இருக்கீங்க… அதனாலதான் நமக்கு குழந்தை பிறக்கப்போகுது… குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நீங்க எத்தனை முறை வேணுமானாலும் கொடுத்துக்கோங்க” என்றாள் வெட்கத்துடன்.

“என்னது? முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்குமா? யார் சொன்னது?” என அதிர்ந்து கேட்டான்.

“உங்களுக்கு இது கூட தெரியாதா!!”

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் பக்கத்து வீட்டு ராதா அக்கா கிட்ட எங்க அம்மா காசு கொடுத்துட்டு வர சொன்னாங்க… அப்ப நான் அவங்க வீட்டுக்கு காசு கொடுக்க போனேனா…”

“சரி… அப்புறம்?” என கேட்டான்.

“அந்த அக்காவும் அவங்க வீட்டுக்காரரும் முத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க… எதார்த்தமா போனேன்… பார்த்தேன்… அதுக்கப்புறம் அந்த அக்கா மாசமா இருக்கிறதா சொன்னாங்க… அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவங்களுக்கு குழந்தை பிறந்திருச்சு.”

“இப்ப நீ என்ன சொல்ல வர?” என கேட்டான் சிரிப்பை கட்டுப்படுத்தி.

“அவங்க முத்தம் கொடுத்ததினால தான குழந்தை பிறந்துச்சு… அதே மாதிரி நீங்களும் எனக்கு ரெண்டு தடவை முத்தம் கொடுத்து இருக்கீங்க… அப்ப சீக்கிரமா நமக்கும் குழந்தை பிறந்துரும்ல?” என்றாள் அருவி.

வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான் ராகவன்.

“இப்போ எதுக்கு சிரிக்கறீங்க?”

“இவளுக்கு உண்மையாவே தெரியாதா? இல்ல தெரியாத மாதிரியே நடிக்கிறாளா?” என அவன் நினைக்க.

“என்னங்க? இப்ப எதுக்கு சிரிக்கறீங்க? சொல்லுங்க.”

“முத்தம் கொடுத்தா மட்டும் குழந்தை பிறக்காது” என்றான்.

“அப்டியா?”

“ஆமா!”

“அப்போ!! எப்படி பிறக்கும்?”

“முத்தம் கொடுத்தா மட்டும் குழந்தை பிறக்காது.”

“இல்ல… நீங்க பொய் சொல்றீங்க…”

“உனக்கு ஒண்ணுமே தெரியல” என்றான்.

“எனக்கு தெரியும்… நீங்க தான் பொய் சொல்றீங்க… நான் வேணா போய் அத்தை கிட்ட கேட்டுடு வரேன்” என செல்ல போனவளின் கையை பிடித்தவன்,

“இதெல்லாம் அவங்க கிட்ட போய் கேட்க கூடாது.”

“பின்ன யார் கிட்ட கேட்குறது?”

“என்கிட்ட கேளு.”

“உங்களுக்கு எல்லாமே தெரியுமா!!”

“தெரியும்.”

“நிஜமாவே தெரியுமா!!”

“தெரியும்.”

“அப்ப சொல்லுங்க.”

“எப்படி குழந்தை பிறக்கும்?”

“குழந்தை முத்தம் கொடுத்தால் பிறக்காது… அதுக்கு…” என இழுத்தான்.

“அதுக்கு…” என அவளும் இழுத்தாள்.

“அருவி” என சரஸ்வதி அழைத்தார்.

“அத்தை கூப்பிடுறாங்க… நான் போயிட்டு வரேன்… நம்ம ஹனிமூன் போவோம்ல… அங்க நீங்க சொல்லுங்க” என்றவள் சென்றதும்,

“இவள வச்சுட்டு என்ன தான் பண்றது… நான் ஒன்னு சொல்ல நினைக்கிறேன்… ஆனா இவ என்னடானா இப்படி இருக்கா… சரி எதுவா இருந்தாலும் நாம கோவால போய் இவளுக்கு எடுத்து சொல்லி புரியவைக்கலாம்” என விட்டு விட்டான்.

மறுநாள், “எங்கேயும் போகக்கூடாது… ராகவன் கூடதான் இருக்கணும்.”

“சரிங்க அத்தை.”

“ராகவா… அருவிக்கு இடம் எதுவுமே தெரியாது… விவரம் தெரியாத பொண்ணு… நீ தான் அவளை பத்திரமா பாத்துக்கணும்.”

“சரிப்பா” என்றான்.

அவர்களிடம் விடை பெற்று காரில் ஏறினார்கள். வரும்போது “முருகா முருகா… என்னை நீ தான் காப்பாத்தணும்” என வேண்டிக் கொண்டான்.

“என்ன பண்ற அருவி?”

“இல்ல… நான் டிவில பாத்திருக்கேன்… நிறைய ஃபிளைட் வானத்தில் போகும்போதே வெடிச்சிடும்… அந்த மாதிரி பறக்கும் போதே நம்ம பிளைட் வெடிக்க கூடாதுன்னு வேண்டிக்குறேன்” என்றாள்.

“அடிப்பாவி!! இப்டில்லாமா வேண்டிக்குவ?” என ராகவன் சிரிக்க.

“என்னங்க! நீங்க பிளைட்ல போயிருக்கீங்களா?”

“வாரத்தில் மூணு… நாலு தடவை வெளிநாட்ல தான் சுத்திட்டு இருப்பேன்.”

“நான் போனதே இல்லை தெரியுமா!!”

“எனக்கு இப்ப ஜாலியா இருக்கு… சந்தோசமா இருக்கு… பயமா இருக்கு” என்றாள்.

“நீ பயப்படாத… என் கையை இறுக்கமா புடிச்சுக்கோ.”

“சரிங்க!!” என்றாள்.

அவர்கள் பிளைட் ஏறி அமர்ந்ததும், “ரொம்ப அழகா இருக்குங்க… இவ்வளவு பேரு உட்கார்ந்து இருக்காங்க… ஆமா! நமக்கு பசிச்சா யார் கிட்ட எப்படி கேட்கறது?”

“அவங்களே சாப்பாடு கொண்டு வந்து தருவாங்க…”

“நம்ம பாத்ரூம் போகணும்னா…”

“அங்க போகணும்” என்றான்.

சற்று நேரத்தில், “என்னங்க… எனக்கு வயித்துக்குள்ள என்னவோ போல இருக்குங்க” என்றாள் அருவி.

“கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும்… பிளைட் மேல போனதும் உனக்கு அப்படி இருக்காது… உனக்கு ரொம்ப பயமா இருந்தா என் கையை புடிச்சுக்கோ.”

“சரி” என்றவள் அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அப்பொழுதும் அவளுக்கு பயமாக இருக்க, அவன் தோளில் சாய்ந்தாள். அவள் பயத்தில் தான் அவன் மேல் சாய்ந்தாள். அப்போது அவள் உதடு அவன் கழுத்தில் பட்டது.

இப்போது தன் உடலில் உண்டான அதிர்வை உணர்ந்தவன் தலை கோதி தன்னை சரி செய்தான்.

கோவா வந்து இறங்கியதும் அந்த பீச் ஹவுஸ்க்கு வந்தார்கள். வாசலில் நின்ற வேலைக்காரன் சுப்பையாவும் அவர் மனைவி கண்ணம்மாவும், “வாங்க சின்னய்யா… வாங்கமா” என அவர்களை வரவேற்றனர்.

“நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்?” என ராகவன் கேட்க.

“நல்லா இருக்கோம் சின்னய்யா… நான் உங்களுக்கு வித விதமா சமைச்சு தரேன்” என்றாள் கண்ணம்மா.

“சரி” என்றவன் சிரித்தபடி அருவியை பீச் ஹவுஸ் உள்ளே அழைத்து சென்றான்.

“என்னங்க?”

“என்ன அருவி?”

“நம்ம இவ்ளோ பெரிய ஹோட்டலுக்கு வந்திருக்கோமே… இந்த ஓட்டலுக்கு எவ்வளவு வாடகை கொடுக்கணும்?” என அருவி கேட்க.

“இது ஹோட்டல் இல்ல… நம்ம வீடு” என்றான்.

“நம்மளோடதா!! இவ்ளோ பெருசா இருக்கு” என சென்றாள்.

ராகவன் அவளை பால்கனிக்கு அழைத்து சென்றான். பார்த்தாள்… பீச் அழகாக தெரிந்தது.

“செம்மையா இருக்கு… அழகா இருக்கு” என்று குழந்தை போல் குதூகலித்தாள் அருவி.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “இது நிஜமாகவே இவளோட குணமா? இல்ல நடிக்கிறாளா? எப்படி ஒரு பொண்ணு இவ்வளவு வெகுளியா… மென்மையா இருக்க முடியுமா?” என நினைத்தான்.

“அருவி.”

“என்னங்க?”

“லவ் பத்தி நீ என்ன நெனைக்கிற?”

“நான் காலேஜ் படிச்சு இருக்கலாம்… ஆனா!! என்று நான் யாரையுமே லவ் பண்ணல… எனக்கு அதுல இன்ட்ரஸ்ட்டும் இல்லை” என்றாள்.

“சரி… உன்னுடைய பிரண்டு லவ் பண்ணி இருப்பாங்க இல்ல… அவங்கள பத்தி உன்கிட்ட சொல்லி இருப்பாங்கள்ல?”

“சொல்லுவாங்க… நான் அதெல்லாம் கேட்க மாட்டேன்… எனக்கு அதெல்லாம் பிடிக்காது” என்றாள்.

“சரி… இப்போ நைட் ஆயிடுச்சு… நம்ம சுத்தி பாக்க போக முடியாது… காலைல போகலாம்.”

“சரிங்க… எனக்கு அலுப்பா இருக்கு… நான் குளிக்கணும்” என்றவள் தன் மாற்று உடையை எடுத்துக் கொண்டிருக்க, ராகவன் தன் நண்பனிடம் போன் பேசிக் கொண்டிருந்தான். 

அவனருகில் வந்தவள், “என்னங்க… பாத்ரூம்ல மூணு சுவிட்ச் இருக்கு… எது சுடுதண்ணி?” என கேட்டாள்.

அவன் காதில் அவள் கேட்டது அரை குறையாக கேட்க “மஞ்சள்” என்றான்.

அவள் சென்று மஞ்சள் சுவிட்ச்ல கை வைத்ததும் அவளுக்கு சாக் அடிக்க,

“ஆ…” என கதறியபடி கீழே விழுந்தாள் அருவி.

அவள் சப்தம் கேட்டு வேகமாக குளியலறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து அருவியை பார்த்து அதிர்ந்தான் ராகவன். ❤️

அருவிக்கு என்னவாகி இருக்கும்… 🤔… தெரிஞ்சிக்க… நாளைக்கி எபி மறக்காம படிங்க பிரண்ட்ஸ்..

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,360 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page