இதழ் – 11

அத்தியாயம் – 11

போன் பேசிக்கொண்டு குளியலறையில் “மஞ்சள் கலர் சுவிட்ச்” என்று மட்டும் கூறினான் ராகவன்.

உள்ளே சென்ற அருவி அந்த சுவிட்சை ஆன் செய்ய சாக் அடித்தது. “ஆ…” என கத்தினாள்.

அவள் சத்தம் கேட்டதும் வேகமாக கதவை தட்டினான். கதவு திறக்காமல் இருக்க வேகமாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தான் ராகவன்.

சாக் அடித்ததில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தாள் அருவி. அவள் உடலில் ஆடைகள் இல்லை. பிறந்த மேனியாக கிடந்தாள். அங்கிருந்த டவலை எடுத்து அவளது உடலை சுற்றியவன் அவளை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்து கை, கால்களை தேய்த்து விட்டான்.

“அருவி… கண்ணை திறந்து என்னை பாரு” என அவள் கன்னத்தை தட்டினான்.

அவள் கண் திறக்காமல் அப்படியே இருக்க “அருவி… அருவி…” என கத்தினான்.

அப்பொழுது அவள் அசையாமல் இருக்க அவளுக்கு ஒரு குப்புற படுக்க வைத்து அவள் முதுகிலும் தேய்த்து விட்டு யோசித்தவன், அவள் வாயோடு தன் வாயை வைத்து தன் மூச்சு காற்றை அவளுக்கு கொடுத்தான். அப்பொழுதும் அவள் கண் திறக்காமல் இருக்க மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்து கொண்டிருந்தான் ராகவன்.

சற்று நேரத்தில் கண்விழித்தவள் தன் எதிரில் அமர்ந்திருந்தவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள்.

“உனக்கு ஒன்னும் இல்ல” என அவளது முதுகை தடவிக் கொடுத்தான்.

“என்னங்க!! நீங்க சொன்னது போல நான் அந்த மஞ்சள் சுவிட்சு தான் தொட்டேன்… கரண்ட் அடிச்சுருச்சு… எனக்கு பயமா போயிடுச்சு” என்றாள் அழுதபடி.

“ஒன்னும் இல்ல… நான்தான் கவனிக்காம அப்படி சொல்லிட்டேன்… பரவாயில்ல விடு” என்றான்.

அப்பொழுதுதான் அவளும் கவனித்தாள் தான் டவல் மட்டும் கட்டி இருப்பதை. மெல்ல அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

“நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ… நான் வெளியில இருக்கேன்.”

“இல்ல… எனக்கு பயமா இருக்கு… நீங்களும் என்கூடவே இருங்க.”

“நான் கூட இருந்தா நீ எப்படி?” என அவன் கேட்க.

“இல்ல… நான் உங்கள விட மாட்டேன்” என்றவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

“அப்போ சரி… நான் கண்ண மூடிக்கிறேன்… நீ டிரஸ் மாத்திக்கோ” என்றான் ராகவன்.

“சரி” என அவன் கண்ணை மூடிக்கொள்ள அவள் நைட்டியை மாட்டிக் கொண்டாள்.

கண்ணம்மா வந்து கதவை தட்டி, “ஐயா உங்களுக்கும் சின்னம்மாவுக்கும் டிபன் ரெடி பண்ணி இருக்கேன்” என கூற.

“நாங்க இதோ வரோம்” என்றவன், கண்ணம்மா சென்றதும் “வா அருவி… போய் சாப்பிடலாம்” என அழைக்க,

“வேண்டாங்க… எனக்கு எதுவும் வேணாம்” என்றாள் அருவி.

“அப்படி சொல்லக்கூடாது… நைட் நேரம் பட்டினியா படுக்கக் கூடாது… வா” என்று டைனிங் டேபிளில் அமர்ந்ததும் அவள் சாப்பிடாமல் இருக்க அவளின் பயத்தை புரிந்தவன் அவனே அவளுக்கு ஊட்டி விட்டான்.

“நீ தைரியமான பொண்ணு தானே!! இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.”

“சரிங்க” என்றாள்.

இரவு பெட்டின் ஓரத்தில் படுத்தவள், “என்னங்க!!” என அவனை அழைக்க.

“என்ன அருவி?”

“அது வந்து…”

“என்ன? சொல்லு.”

“எனக்கு தூக்கம் வரல… நான் உங்க கைய புடிச்சுக்கவா?” என கேட்டாள்.

“என்னமோ என்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் டெய்லி நைட் என் பக்கத்துல படுக்குற மாதிரியும்… என் கைய புடிச்சுக்கிறது மாதிரியும் கேட்கிறா… இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் முழுசா என் மேல கையும் காலையும் போட்டு போட்டு தான் தூங்க போற” என அவன் தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க.

“என்னங்க!!” என கத்தினாள்.

“ம்.”

“நான் உங்க கைய புடிச்சுக்கவா?”

“சரி” என்றான்.

அவன் கையை பிடித்திருந்த போதும் அவள் கைவிரல்களின் நடுக்கத்தை உணர்ந்த ராகவன், “நான்தான் உன் பக்கத்துல இருக்கேன்ல்ல… பயப்படாம தூங்கு” என்றான்.

“இல்லங்க! கரண்ட் அடிச்சப்போ…” என தடுமாறினாள்.

“அடிச்சிருந்தப்போ” என கேட்டான் அவள் முகத்தை பார்த்தபடி.

“இல்ல… ஒன்னும் இல்ல” என்றாள் வெட்கத்துடன்.

அவள் எதை நினைத்து வெட்கப்படுகிறாள் என்பதை தெரிந்தவன், “சரி… தூங்கு” என அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுக்க நன்றாக உறங்கினாள் அருவி.

காலையில் எழுந்ததும் அவளை குளியல் அறைக்கு அழைத்து சென்றவன்,

“இது சுடுதண்ணீர்… இது பச்சை தண்ணிர்… இது சில் தண்ணீர்… புரிஞ்சுதா!! இந்த சுவிட்ச் ஆன் பண்ணனும்… இப்படித்தான் யூஸ் பண்ணனும்” என ஒவ்வொன்றையும் அவளுக்கு அவன் சொல்லிக் கொடுக்க, அவன் கூறியதை சிறுபிள்ளை போல் கேட்டுக் கொண்டவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சொல்றத கவனமா கேளு… இல்லனா உன் பாட்டுக்கு ஏதாவது சுவிட்சை தொட்டு மறுபடியும் சாக்கடிச்சுட போற” என கூறி அவன் சிரிக்க, இப்பொழுது அவனை முறைத்து பார்த்தாள் அருவி.

“சரி சரி… நான் வெளில போறேன்… நீ குளிச்சிட்டு வா… இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் சுத்தி பாக்க போகலாம்… அப்புறம் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”

“சரிங்க!” என்றவள் குளித்துக் கொண்டே, “இவர் என்னங்க எப்ப பார்த்தாலும் நம்ம கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொல்லிட்டு இருக்காரு!! அப்படி என்ன விஷயமா இருக்கும்… இன்னைக்கு அவர் சொல்லலனாலும் நம்மளாகவே கேட்டுடனும்” என நினைத்துக் கொண்டவள் குளித்துவிட்டு வெளியே வர,

“நான் குளிச்சிட்டு வரேன்” என்றவன் குளியல் அறைக்கு சென்றான்.

அவள் பெட்டில் பார்க்க அழகான சுடிதார் இருந்தது. அவன்தான் எடுத்து வைத்திருந்தான். சிரித்தபடியே அந்த சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டவள் அழகாக அலங்காரம் செய்து கொண்டாள். 

வெளியில் வந்து பார்த்தவன், “நைஸ்” என்றான் தன்னை மறந்து.

“சரிங்க! நான் டைனிங் டேபிள்ல இருக்கேன்… நீங்க வாங்க” என கூறி சென்றாள்.

“அவ கிட்ட கோவப்படுறதுக்கு பதில், நார்மலா பேசிட்டு இருக்காயே ராகவ்” என தன்னையே திட்டிக் கொண்டான்.

அவள் டைனிங் டேபிளுக்கு சென்றதும், “வா பாப்பா… நைட் நல்லா தூங்குனீங்களா!! அது ஒண்ணுமில்ல… புது இடம் உங்களுக்கு ஒத்துக்குமோனு தான் நான் கேட்டேன்… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் கண்ணம்மா.

“இதுல என்ன இருக்கு… நான் ஒன்னும் நினைக்கல” என்றாள் அருவி.

“கண்ணம்மா… அவங்க கிட்ட பேச்சைக் கொடுக்காம டிபன் எடுத்து வை… அம்மா பசியில் இருப்பாங்க” என்றார் சுப்பையா.

“சரிங்க” என இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தான் அவன்.

அழகாக சிவப்பு டிஷர்ட், பிளாக் ஜீன்ஸ், காற்றில் அலைந்த அவனது முடி, கண்ணில் கூலிங் கிளாஸ் போட்டு ஹேன்சம் ஹீரோவாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.

“என்ன? அப்டி பாக்குற?” என கேட்டபடி அவளருகில் அமர்ந்தான்.

“அழகா இருக்கீங்க” என கூறிய அருவி வெட்கப்பட.

அவள் கூறியதை கவனிக்காதவன் போல்,  “எனக்கு பசிக்குது… சாப்பிடலாமா!! ஆமா! என்ன டிபன்?” என கேட்டான்.

கண்ணம்மா சூடாக தோசை புதினா சட்னி வைத்திருக்க, இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். அவளை காரில் ஏற்றிக் கொண்டு வந்தவன் கோவாவில் சுற்றி காட்டிவிட்டு, மத்தியானம் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு இரவில் பீச்சுக்கு அழைத்து சென்றான்.

மாலை நேரம் அந்த பீச் மணலில் அழகாக குழந்தையை போல் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் அருகே சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்க ராகவன் அருகில் வந்தாள் அருவி.

“என்ன?”

“நானும் அந்த பசங்க கூட போய் பந்து விளையாடட்டுமா!!” என கேட்டாள்.

“அவங்க சின்ன பசங்க விளையாடுறாங்க… நீ என்ன சின்ன பொண்ணா!! அவங்க கூட விளையாட.”

“ப்ளீஸ்… எனக்கு ஆசையா இருக்கு” என்றாள்.

“சரி போ” என்றான்.

அவளும் அவர்களுடன் சேர்ந்து சிரித்து குதூகலத்துடன் குழந்தை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். 

அவளது குழந்தை முகத்தை பார்த்து, “இவகிட்ட நான் சொல்றது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்… இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும்… அதுதான் ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் நல்லது… அப்போதுதான் சீக்கிரமா இவகிட்ட டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்க முடியும்” என்றவன் தன் வாட்சை பார்க்க 7 மணி ஆனது.

“அருவி… டைம் ஆச்சு… வா.”

அவனை திரும்பி பார்த்தவள், “இன்னும் கொஞ்ச நேரம்” என்றாள். அமைதியானான்.

சற்று நேரம் கழித்து, “அருவி… 8 மணி ஆச்சு… வா… இவ்வளவு நேரம் தண்ணில விளையாடிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்றான்.

அந்த சிறுவர்களிடம் விடை பெற்று நடந்து வந்தாள் அருவி. அந்த சுடிதார் முழுவதும் நனைந்து அவள் உடலோடு ஒட்டி இருந்தது.

காரில் ஏறியதும் அவள் உடல் நடுங்க தொடங்கியது.

“என்ன ஆச்சு அருவி?” என கேட்டான்.

“எனக்கு ரொம்ப குளிருது” என்றாள்.

வேகமாக பின் சீட்டில் இருந்த டவலை எடுத்து அவளிடம் கொடுத்து, “இந்தா… தலையை துவட்டிக்கோ…” என்றான்.

“சரி” என்றவள் அந்த டவலை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டிருக்க.

எதார்த்தமாக அவளை திரும்பி பார்த்தான். அவள் கன்னத்தில் இருந்த நீர் துளி அவனை வா வா என அழைத்தது.

தன் எண்ணத்தை மாற்றி அமைதியாக காரை ஓட்டினான்.

“என்னங்க?”

“ம்” என்றான் அவளை பார்க்காமல்.

“நீங்க என்கிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னீங்க.”

“அதுவா!! அந்த விஷயத்தை சொல்ற நிலைமைல நானும் இல்ல… கேக்குற நிலைமைல நீயும் இல்லை… நாளைக்கு சொல்றேன்” என்றான். அதற்குள் பீச் ஹவுஸ் வந்தது.

அறைக்கு வந்தவள் வேகமாக உடையை மாற்றிக் கொண்டு பெட்டில் அமர்ந்து கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், “இதுக்கே இப்படி நடுங்குற?” என கேட்க.

“எனக்கு குளிர் தாங்காது” என்றாள்.

“இப்ப உன் குளிர் போய்டும்” என்றவன் அவளுக்கு குளிர் காய அந்த அறையிலேயே ஏற்பாடு செய்திருந்தான்.

அங்கு அமர்ந்தவள், “நீங்களும் வாங்க” என சாதாரணமாக அவன் கையை பிடித்து இழுக்க, பொத்தென அவள் மேல் வந்து விழுந்தான் சோபாவில். அவள் விழ அவன் மேல் விழுந்தான். 

இப்பொழுது இருவரின் இதழ்களும் எதிர்பாராமல் முத்தமிட்டுக் கொண்டன. அதிர்ச்சியில் இருவரும் கண்களை இறுக மூடிக்கொண்டனர்…

அடுத்து என்னாகும் 🤔… தெரிஞ்சுக்க… அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,356 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page