இதழ் – 15

வெளியில் சென்று இரண்டு மணி நேரம் கழித்து வந்தவன், அறையில் வந்து பார்க்க, அழுது அழுது ஓய்ந்து போயிருந்தாள் அருவி.

“இப்படி அழுது சீன் போடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத… உன் நடிப்பைப் பார்த்து நான் மயங்க மாட்டேன்… ஒழுங்கா சீக்கிரம் கிளம்பு… ஊருக்கு போகணும்” என்றான்.

அவள் அப்போதும் அசையாமல் இருக்க, “உன்னைத்தான் சொல்றேன்… கிளம்பு” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான் ராகவன்.

அவன் கத்தியதில் அரண்டவள் மெதுவாக எழுந்து குளியல் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து உடை மாற்றி, சாதாரணமாக ஒரு சுடிதார் அணிந்து கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அழுது அழுது அவள் முகம் சிவந்து இருந்தது. அறையிலிருந்து வெளியே வந்த ராகவனும் அருவியையும் பார்த்த சுப்பையாவும் கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கி நின்றனர்.

“என்ன? என்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” எனக் கேட்டான் ராகவன்.

“அது வந்து… சின்னையா… அருவிம்மா இன்னும் சாப்பிடல” எனப் பயந்தபடி கூறினாள் கண்ணம்மா.

“நான் போற வழியில அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துக்குறேன்… நாங்க கிளம்புறோம்” என்றவன் அவளை அழைத்துச் சென்றான்.

அவனுக்கு அவள் மேல் கோபம்தான் வந்தது. 

“இவளா எப்படி? அவ இஷ்டத்துக்கு முடிவு எடுக்கலாம்… அவ்ளோ தைரியமா? நான் அவளை வெறுக்கிறேன்… ஆனால் அவ என்னடான்னா இந்த அளவுக்கு போயிட்டு இருக்கா… என்னைப் பத்தி இவ என்ன நெனச்சுக்கிட்டு இருக்கா?… இவளோட அழகுல நான் மயங்கிடுவேன்… என்னை ஈசியா வளைச்சு போட்டுரலாம்னு நினைச்சுட்டாளா? நான் யாரு? கிரேட் ராகவன்… அப்படியெல்லாம் ஒரு பொண்ணோட கண்ணசைவிலயும், அவளோட பேச்சுலயும் மயங்குறவன் கிடையாது நான்” என நினைத்துக் கொண்டே காரை ஏர்போர்ட் நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தான் ராகவன்.

இவ்வளவு நாளும் காதலா? தனது குறிக்கோளா? என்று போட்டியில் இருந்தவனுக்கு, இப்போது அவன் காதலைப் பின்னால் தள்ளி, அவனது குறிக்கோள் முன்னுக்கு வந்து நின்றது. அதுவே ஜெயித்தது.

அவளைத் திரும்பிப் பார்த்தான். சோர்ந்தபடி பின்னால் அமர்ந்திருந்தவள், இப்போது உட்கார முடியாமல் படுத்திருந்தாள். அவளைப் பார்த்தவனுக்கு என்னவோ போல் இருந்தது.

“இருந்தாலும் வேண்டாம்… இவளுக்கு நம்ம பாவம் பார்க்கவே கூடாது… நம்ம பாவம் பார்த்து ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுத்தா, அப்புறம் நீங்க என் மேல பாசமா இருந்தீங்க, என் மேல காதலா இருந்தீங்கன்னு பாட்டு பாட ஆரம்பிச்சுருவா… இருக்கட்டும்” என்றவன் ஏர்போர்ட்டுக்கு சென்றான்.

விமானத்தில் ஏறி அமர்ந்தனர். வரும்போது பயந்து கொண்டே வந்தவள், இப்போது தைரியமாக ஏதோ ஒரு யோசனையில் அவனது கையைப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள். தன் கையை அவள் பிடிப்பாள் என நினைத்தான்.

தன் கண்களை இறுக மூடிக்கொண்டு சாதாரணமாகவே அமர்ந்திருந்தாள் அருவி. அவள் மனதில் பெரிய இடியே விழுந்திருந்தது. அப்படிப்பட்டவளுக்கு எந்த அதிர்வும் ஒன்றும் செய்யாது என்பதை அவன் அறியவில்லை.

ஏர் ஹோஸ்டர்ஸ் உணவு கொண்டு வந்து, “எக்ஸ்க்யூஸ் மீ மேம்” என அழைத்தார்.

மெல்லத்தான் கண்களைத் திறந்து பார்த்தாள்.

“உங்களுக்கு டிபன் எடுத்துக்கோங்க.”

அவள் வேண்டாம் எனத் தலையசைத்தாள்.

அவளை முறைத்துப் பார்த்த ராகவன், “எடுத்துக்கோ” என்றான் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

பயந்தபடியே தோசையை வாங்கிக் கொண்டவள் மெதுவாக ஒன்றை மட்டும் சாப்பிட்டாள்.

“ஒழுங்கா சாப்பிடு… வீட்டுக்கு போறதுக்குள்ள உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் யாரு பதில் சொல்றது அம்மா அப்பாவுக்கு?” என்றான் ராகவன்.

அவள் மெதுவாகக் கஷ்டப்பட்டு சாப்பிட்டாள். அந்த உணவு அவளுக்கு விஷமாகவே அவள் தொண்டைக்குள் செல்ல மறுத்தது.

அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நடந்தது எல்லாம் கனவா நனவா என்பதை உணர முடியாத நிலை. அவன் பேசிய வார்த்தைகளே அவள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தன.

காரில் வீட்டுக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வண்டி நிறுத்தியவன், அவளிடம் திரும்பி,

“இங்க பாரு… நான் சொல்றதை உன் மனசுல நல்லா நியாபகம் வச்சுக்கோ… நமக்குள்ள நடந்த இந்தப் பிரச்சனையைப் பத்தி என் அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரியக் கூடாது… அவங்களுக்கு நம்ம மேல சின்ன சந்தேகம் கூட வரக் கூடாது… நான் என்ன பண்ணுனாலும் நீ பொறுமையா இருக்கணும்… நான் சொல்றதைத்தான் நீ செய்யணும்… எனக்குத் தெரியாம இந்த விஷயத்தைப் பத்தி யார்கிட்டயாவது நீ சொன்னேன்னு எனக்குத் தெரிஞ்சது… அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்… ஜாக்கிரதை” என அருவியை மிரட்டினான் ராகவன்.

அருவி வீட்டிற்கு வந்ததும் அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்த சரஸ்வதி, “என்ன ஆச்சு அருவி? ஏன் டயர்டா இருக்க?” எனக் கேட்டார்.

“அவ பிளைட்ல வந்ததுனால அவளுக்கு டயர்டா இருக்கு… இதுதான் அவள் முதல் தடவை பிளைட்ல போறது… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா அம்மா? போகும் போதும் வரும் போதும் ‘எனக்குப் பயமா இருக்குன்னு’ கத்தி என் கையை இறுக்கமா புடிச்சுக்கிட்டா தெரியுமா!!” என அவளை கிண்டலடித்து, தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சாதாரணமாகச் சிரித்தபடி கூறினான் ராகவன்.

“அவனா! இவன்!” என நம்ப மாட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.

“இவரால் எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடியுது? இவ்வளவு நேரம் என்கிட்டே இருந்தப்ப இருந்த முகம் வேற… ஆனா இப்போ இவ்வளவு சாதாரணமா இவங்க அம்மா கிட்ட சின்ன பையன் மாதிரி இப்படிப் பேசி சிரிக்கிறாரே!! இதுல எது நடிப்பு? என்னை அடிச்சது நடிப்பா!! இல்ல இப்ப இவங்க அம்மாகிட்ட பாசமா பேசுறாரே… இது நடிப்பா?” எனத் தெரியாமல் குழம்பி நின்றவள் அருகில் வந்தார் சரஸ்வதி.

அவள் ஏதோ கூற வர, “எனக்குப் புரியுதும்மா… நீ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு… நான் உனக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வரேன்” எனக் கூறினார்.

“சரிங்க அத்தை” எனத் தலையசைத்தபடி அறைக்கு வந்தவள் பெட்டில் அமர்ந்து கொண்டு காலை மடக்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் பின்னாலேயே வந்தவன் அறை கதவைச் சாத்திவிட்டு வேகமாக அவள் அருகில் வந்து அவளது கையைப் பிடித்து தூக்கி நிறுத்தினான்.

அவள் பயந்தபடி எழுந்து நிற்க, “உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நமக்குள்ள நடக்கிற விஷயம் அம்மாக்கு தெரியக் கூடாதுன்னு… ஆனா நீ அவங்க முன்னாடியே முகத்தை சோகமா வச்சுட்டு இருக்க… இங்க பாரு… நான் சொல்றத ஒழுங்கா கேட்டேன்னா உனக்கு நல்லது… இல்லைன்னு வை… உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே நாள்ல நீ காரியம் பண்ண வேண்டி இருக்கும்… புரிஞ்சுதா?” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து எழுந்தவள், “ஐயோ! வேண்டாம்… அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க… நீங்க சொல்ற மாதிரியே நான் செய்றேன்” என்றவள் வேகமாகக் கண்களைத் துடைத்தாள்.

“இனிமே நான் சொல்றபடி தான் நீ நடக்கணும்… சரியா!!”

“சரி” எனத் தலையசைத்தாள் அருவி அரண்டபடி.

“போய் குளிச்சிட்டு பிரஷ் ஆகு… அம்மா கிட்ட எப்பவும் போல நார்மலா பேசு… பட் ஒன் மோர்… நம்ம ரெண்டு பேரும் ரொமான்ஸா இருக்குற மாதிரிதான் நீ காட்டிக்கணும்.”

அவள் அமைதியாக இருக்க, “உன்கிட்ட தான் சொல்றேன்” என்றவன் அவள் அருகில் வந்து அவள் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு சேர்த்து மேலே தூக்கினான்.

மூச்சு விட முடியாமல் திணறினாள். அப்போது வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்க அவளை கீழே விட்டான். கீழே விழுந்தவள் தடுமாறி எழுந்தாள்.

“அம்மா வந்துட்டாங்கனு நினைக்கிறேன்… போய் கதவைத் திற.”

அவள் செல்லப் போக, வேகமாக அவளை இழுத்து அணைத்து அவள் இதழில் முத்தமிட்டவன், “இப்ப போ” என்றான்.

“எதுக்கு இப்படிப் பண்றாரு?” எனப் புரியாமல் சென்றவள் கதவைத் திறந்தாள்.

அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்த சரஸ்வதி, அவள் உதட்டில் லிப்ஸ்டிக் லேசாக இழுத்திருப்பதைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டவர், அவள் கையில் ஜூஸைக் கொடுத்துவிட்டு,

“நீ குடிச்சிட்டு ரெஸ்ட் எடு… நான் வரேன்” என்று அப்படியே சென்றார்.

“கதவை சாத்து” எனக் கண் ஜாடை செய்தான்.

கதவைச் சாத்தியவள் அருகில் வந்தவன், “நான் இப்ப எதுக்கு உனக்கு முத்தம் கொடுத்தேன் தெரியுமா!! உன்னோட லிப்ஸ்டிக் உன்னோட உதட்டுக்கு மேலே இழுத்து இருக்கு… அதப் பாத்துட்டு தான் அம்மா நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்னு நினைச்சுட்டு போறாங்க… இப்ப தெரியுதா!! நான் அப்பப்ப இப்படித்தான் பண்ணுவேன்… நீ எதுவும் சொல்லக் கூடாது… நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் தான் செய்யணும்… புரிஞ்சுதா!!!”

“சரி” எனத் தலையசைத்தாள் அருவி மனதில் வலியுடன்.

“போ… உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல… எரிச்சலா இருக்கு” என்றவன் வேகமாக அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.

தன் விதியை நொந்து கொண்டு அழுது அழுது கரைந்தாள் அருவி.

இரவு ஆனது. அறை கதவைத் திறந்து கொண்டு ராகவன் வந்தான். கையில் தட்டில் இட்லி இருந்தது.

“மகாராணி ரூம்லயே இருக்கீங்க… சாயந்திரத்திலிருந்து வெளியே வரலையாம் அம்மா சொன்னாங்க.”

“இல்லைங்க… அது வந்து…” என்றவள் கன்னத்தில் “பளார்” என அறைந்தான்.

“இல்லைங்க… எனக்கு ரொம்ப டயர்டா இருந்துச்சு… அதான்…”

“என்ன மயக்குறதுக்காக என்னமோ பண்ண… ஆனா நீ நினைச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு… நீ என்ன நெனச்சேன்னு நான் சொல்லவா? நீ என் பெயரை நீ பச்சை குத்திருப்பதைப் பார்த்து நான் உன்னை என்னென்னமோ பண்ணுவேன்னு அப்படின்னு தானே நீ நெனச்ச?” என வேறு அர்த்தத்தில் கேட்டான்.

தன் காதுகளைப் பொத்திக் கொண்டவள், “எதுக்காக இப்படி மோசமா பேசுறீங்க? எனக்கு மனசு கஷ்டமா இருக்கு” என்றாள் அவன் வார்த்தையைக் கேட்டு துடித்தபடி.

“நடிக்காதடி!! பொண்ணுங்களுக்கு இந்த நடிப்பு மட்டும் எங்கிருந்து வருதுனே தெரியல… இந்த நடிப்புக்காக உங்களுக்கு அவார்டே கொடுக்கலாம்” என்றவன் அவள் கையை “தடார் தடார்” வெனப் பிடித்து மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

சேதுராமனும் சரஸ்வதியும் பேசிக்கொண்டே அவர்களைப் பார்க்க, அப்படியே அவள் கையோடு கை கோர்த்து அழகாகச் சிரித்தபடி வந்தான் ராகவன்.

பாவம் அருவி… இன்னும் என்ன நடக்கப் போகுதோ? 🤔  

நாளைக்கு எபிஸோட் மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ்! ❤️

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,344 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page