இதழ் – 16
அருவியின் தோளில் கை போட்டபடி வந்த ராகவன், சட்டென வேண்டுமென்றே அவள் இடையோடு சேர்த்து கையைப் பட்டும் படாமலும் வைத்தான். அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
அவனது ஒவ்வொரு செய்கையிலும் அவள் துடித்தாள். அவள் விலகிப் போக முயன்றபோது, வேண்டுமென்றே அவளைத் தன்னோடு இறுக்கமாகப் பிடித்தபடி நடந்து வந்தான்.
“நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ தலையை ஆட்டணும்… புரியுதா?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக.
“சரிங்க” என்றபடி அவள் வர,
“ஓகே அருவி… நீ சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்… ஓகே உன் இஷ்டம்… உன் பேச்சை கண்டிப்பா மீறவே மாட்டேன்… சத்தியமா” என ராகவன் கூறிக்கொண்டே வந்தான்.
அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த சரஸ்வதி மிகவும் சந்தோஷப்பட்டார்.
“என்னங்க!!”
“என்ன?” எனக் கேட்டார் சேதுராமன்.
“நம்ம பையன் நம்மளுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டானோ… அந்தப் பொண்ணு கூட அவன் சந்தோஷமா வாழ மாட்டான்னு நான் நினைச்சேன்… ஆனா ராகவன் பரவால்ல… வந்த கொஞ்ச நாள்லயே நம்ம மருமக நம்ம பையனை ரொம்ப மாத்திட்டா பாத்தீங்களா!! அவன் ‘உன் இஷ்டம்… உன் இஷ்டம்’னு பொண்டாட்டி கிட்ட சொல்லிக்கொண்டே வரான்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்றார் சரஸ்வதி.
“இனிமே நம்ம ராகவன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என அவர் கூறினார்.
“என்னங்க!!”
“என்ன?”
“இந்த சந்தோஷத்தோட நம்ம ஒரு டூர் போலாமா?”
“அப்படியா… போகலாமே” என சேதுராமன் சரஸ்வதி கையைப் பிடித்தார்.
“உங்களுக்கு வேற வேலை இல்ல… எப்ப பாத்தாலும் இந்த நினைப்புதான்” என்றவர் கூறிக்கொண்டிருக்கையில்,
டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர் அருவியும் ராகவனும்.
அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன், “ரொம்ப தான் பண்றா உங்க மருமக… நானே கெஞ்சணும்னு நினைக்கிறா… ஏதாவது ஒண்ணு சொன்னா உடனே கோவிச்சுக்கிறா… அவளை சமாதானப்படுத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் அவளைப் பார்த்தபடி.
அருவியும் அவனை எதார்த்தமாகப் பார்க்க, தாய் தந்தை பார்க்காத வண்ணம் அவளைப் பார்த்து ஆமாம் எனத் தலையாட்டும் படி கண் ஜாடை செய்தான்.
அவள் எதுவும் பேசாமல் இருக்க, “அவளும் ஆமாம்” எனத் தலையசைத்தாள்.
“இப்ப தெரியுதா என்னோட கஷ்டம்? உன் அம்மாகிட்ட மாட்டிக்கிட்டு நான் எப்படி முழிக்கிறேன்னு” என்றார் சேதுராமன்.
“சும்மா இருங்க” என்றார் சரஸ்வதி.
பேசிக்கொண்டே இரவு உணவை முடித்தார்கள்.
“அம்மா… எனக்கு ஆபீஸ் வேலை ரொம்ப இருக்கு… அதனால நான் இங்க இருந்து வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றான் ராகவன்.
“ஏன்?”
“அது வந்து…” என்ற ராகவன் அழகாக வெட்கப்பட்டான்.
“ராகவா… இதெல்லாம் ரொம்ப ஓவர்… கல்யாணம் முடிஞ்சிடுச்சு… ஹனிமூன் போய்ட்டு வந்துட்டு இப்ப வீட்லயே ஆபீஸ் ஃபைல் எல்லாம் பாப்பேன்னா… இது சரிப்பட்டு வராது… ஆபீஸ் கிளம்பு… உன் பொண்டாட்டிய நாங்க பத்திரமா பாத்துக்கறோம்” என சரஸ்வதி கூறினார்.
“அம்மா… என்னால அருவிய விட்டுட்டு இருக்கவே முடியல… ஆபீஸ்ல அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்கப் போறேன்.”
அவன் காதைப் பிடித்து சரஸ்வதி திருகினார்.
“ஆ… அம்மா… ப்ளீஸ் விடுங்க… காது வலிக்குது…”
“அம்மாகிட்ட பேசுறன்னு கொஞ்சமா நினைப்பு இருக்கா… பயம் இருக்கா?”
“நீங்க தானம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க…”
“கல்யாணம் பண்ணி வச்சேன் தான்… அதுக்காக இந்த அளவுக்கு எல்லாம் இருக்கக் கூடாது…”
“ஓவரா வா போறேன்.”
“ஆமா… ரொம்ப ஓவர்” என்றார் சரஸ்வதி.
“ஓகே மா… நாளைக்கு நான் ஆபீஸ் கிளம்புறேன்… நிறைய வேலை இருக்கு” என்றான் சீரியசாக.
“சரி” என்றார் சரஸ்வதி.
“அருவி… வா… போலாம்” என அவள் கையை மென்மையாகப் பிடித்தபடி அழைத்துச் சென்றான்.
“என் கையை விடுங்க… அத்தை ஏதாவது நினைக்கப் போறாங்க” என்றாள் அருவி மெதுவாக.
“அவங்க சந்தோஷம்தான் படுவாங்க… நீ அமைதியா வா” என்றான் சிரித்தபடி.
இங்கு மகன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி எதார்த்தமாகத் திரும்பி தன் கணவனைப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“இவர் எதுக்கு இப்ப இப்படிப் பாக்குறாரு?” என நினைத்தவர், “நீங்க எதுக்கு இப்படிப் பாக்குறீங்க?” எனக் கேட்டார்.
“இல்ல… நம்ம ரெண்டு பேரும் தனியா போகலாம்னு நீ சொன்ன அதனால… எங்க போகலாம்னு யோசிச்சேன்.”
“வயசான காலத்துல ஆசையா பாரு…”
“எனக்கு வயசாகிடுச்சா? என் கண்ணைப் பார்த்து சொல்லு” எனக் காதலுடன் கேட்டார்.
அவர் கண்ணைப் பார்த்த சரஸ்வதி வெட்கத்துடன் தலை குனிந்தார்.
தன்னவள் வெட்கத்தை ரசித்த சேதுராமன், தன் மனைவியின் கையை வருடினார்.
நிமிர்ந்து அவரைப் பார்த்த சரஸ்வதி, “நான் என்ன சொல்ல வரேன்னா… அவங்க ரெண்டு பேரும் வீட்டுல தனியா இருக்கட்டும்… நம்ம கொஞ்ச நாள்… அதாவது ஒரு பத்து நாள் வெளியில கோவில் அந்த மாதிரி போயிட்டு வரலாம்னு சொல்ல வந்தேங்க.”
“நானும் அதான்… சரஸ்… உன் கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன்… அவங்க ரெண்டு பேரும் வீட்ல ப்ரீயா இருக்கட்டும்… மனசு விட்டு பேசட்டும்… நம்ம கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்.”
“சரிங்க… நம்ம ரெண்டு நாள் கழிச்சு போகலாம்” என முடிவெடுத்தார்கள்.
காலையில் எழுந்து வேகமாக ஜாக்கிங் சென்றுவிட்டான் ராகவன்.
காலையில் எழுந்தவள் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“இந்த ரெண்டு நாளும் தன்னோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல… வேற ஏதோ உலகத்துல இருக்குற மாதிரியே இருக்கு… கடவுளே! என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு தெரியல… பாசமா இருந்த புருஷன் திடீர்னு இப்படி மாறிட்டார்… கேட்டா ‘பொண்ணுங்களே பிடிக்காது… அம்மா அப்பாக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்’னு சொல்றாரு… என் வாழ்க்கையில் ஒரு விடிவுகாலமே கிடையாதா? இப்படியே அத்தை மாமா முன்னாடி நடிச்சிட்டு ரூமுக்குள் வந்தது யாரோ மாதிரி முகத்தைக் கொடுத்து பேச மாட்டேங்குறார்… நான் என் வாயைத் திறந்தாலே என்னைத் திட்டத்தான் செய்றாரு… ரொம்ப கோபப்படுகிறார்… என் வாழ்க்கை மாறுமா இல்லையா… இப்படியே போயிடுமா?” என அழுது கொண்டிருந்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டு குளித்துவிட்டு அப்பொழுதுதான் வந்து ஜாக்கெட் பாவாடையோடு நின்று சேலையைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
திடீரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ராகவன். அவனைப் பார்த்து பதறியவள் வேகமாக சேலையை எடுத்து மேலே போர்த்திக்கொண்டாள்.
“ஏய்!! ஓவரா சீன் போடாத… நான் ஒண்ணும் உடம்புக்கு அலையிறவன் கிடையாது… நீ டிரஸ் இல்லாமல் என் முன்னாடி நின்னா கூட என் சுண்டு விரல் கூட உன் மேல படாது… என் பார்வை உன் பக்கம் திரும்பாது… புரிஞ்சுதா? நீ அவ்வளவு தூரத்துக்கு ஒண்ணும் ஒர்த் கிடையாது… நீ என்கிட்ட என்ன செஞ்சாலும் நான் உன் கிட்ட மயங்க மாட்டேன்” என்றவன் குளியல் அறைக்குச் சென்றுவிட்டான்.
அவளுக்கு அவமானமாக இருந்தது.
“ஒரு புருஷன் பொண்டாட்டியைப் பார்த்து இவ்ளோ கேவலமாகக் கூட பேச முடியுமா?” என நினைத்துக் கொண்டவள் சிம்பிளாக ரெடியாகி கிச்சனுக்கு வந்தாள்.
அகிலா மிகவும் சந்தோஷமாகப் பாட்டுப் பாடியபடி சமைத்துக் கொண்டிருந்தாள்.
சரஸ்வதி தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார். மௌனமாகச் சோர்ந்த முகத்துடன் வந்த அருவியைப் பார்த்த அகிலா,
“என்ன மேடம்… நைட் எல்லாம் சரியா தூங்கல போல… அதான் இவ்வளவு டல்லா தெரியுறீங்க… என்ஜாய்” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்து, “என்ன சொன்ன?” எனக் கேட்டாள் அருவி.
“இல்ல… கண்ணெல்லாம் சிவந்து இருக்கு… நைட் எல்லாம் தூங்கலையான்னு கேட்டேன்.”
“ஆமா! நைட்லாம் தூங்கல… அது வந்து…” என அவள் கூற வர,
“இதெல்லாம் சொல்லுவ… ஆனா ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லுவ” என்றாள் அகிலா கிண்டலாக.
“நைட் என்ன நடந்துச்சு… நான் ஏன் நைட்டு தூங்கலன்னு உனக்குத் தெரியுமா?” என்றாள் அருவி.
“ச்சீ… போ… இதெல்லாமா என்கிட்ட சொல்லுவ… நான் கல்யாணம் முடிச்ச பொண்ணு தான்… இது கூட எனக்குத் தெரியாதா? என்ன நடந்திருக்கும்னு… நீ நல்லா சந்தோஷமா இருந்தா சரி” என்றாள் அகிலா வெட்கப்பட்டுக் கொண்டே.
“இவ… ஒருத்தி பைத்தியக்காரி… என்ன நடந்துச்சுனு… நான் சொல்ல வரதுக்குள்ள இவளா தப்புத் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கா” என நினைத்த அருவி தலையில் அடித்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
வேண்டுமென்றே கிச்சன் அருகே நின்றபடி, “அருவி… எனக்கு இன்னும் நீ காபி கொண்டு வரல” என்ற ராகவன் ஹாலில் அமர்ந்து போனைப் பேச ஆரம்பித்தான்.
“பாருடா அண்ணா… எப்பவுமே டைனிங் ஹால்ல நின்னு தான் கேப்பாங்க… இன்னைக்கு என்னடான்னா கிச்சனுக்கு வந்து கேக்குறாங்க” என அருவியின் கன்னத்தில் கிள்ளினாள்.
அப்படியே சப்பாத்தி கட்டையில் அகிலாவின் மண்டையில் ஒரு அடி போட வேண்டும் என்று தோன்றியது அருவிக்கு.
அவன் அறைக்கு காபி கொண்டு சென்றாள் அருவி.
அவள் அறைக்கு வந்ததும் கதவைச் சாத்தியவன், அந்த காப்பியை வாங்கி வாஷ்பேஷன் ஊற்றிவிட்டு அவள் கையில் கொடுத்தவன், “போ” என்றான்.
அவள் அவனைப் பார்த்தாள்.
“என்னடி? பாத்துட்டு இருக்க… நான் சொல்றத மட்டும் தான் நீ செய்யணும்… போ… இந்தப் பாக்குற வேலையெல்லாம் வச்சிக்காத… உன்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.
அவள் செல்லப் போக, “கொஞ்ச நேரம் இரு” என்றவன் அவள் சேலை முந்தானையின் பின்னூசியை அவிழ்த்துவிட்டான்.
அவளது சேலை கீழே விழ, அவள் பதறி தன் மார்பை மறைத்தாள்.
“கையை எடு” என்றவன் சேலையைக் கசக்கி அவள் தோளில் போட்டவன், “போ” என்க.
“இப்ப எதுக்குங்க? இப்படி எல்லாம் பண்றீங்க?” என அருவி மெதுவாகக் கேட்டாள்.
“சொல்றத மட்டும் செய்… போ.”
கிச்சனுக்கு வந்தவளைப் பார்த்த அகிலா, “இதெல்லாம் ரொம்ப ஓவர் அருவி” என்றாள்.
“எது ஓவர்?” என அவள் புரியாமல் கேட்டாள்.
“நடிக்காத” என அகிலா அவள் தோளில் இடித்தாள்.
அப்போது “அகிலா” என சரஸ்வதியின் குரல் கேட்க,
“இதோ வரேன்ம்மா” எனத் தோட்டத்திற்கு அவள் சென்றதும், அருவிக்கு வந்த ஆத்திரத்திற்கு சுவற்றில் போய் முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.
“அங்க ரூமுக்கு போனா அவன் என்னென்னவோ செய்றான்… இங்கே கிச்சனுக்கு வந்தா இவ என்னென்னவோ சொல்றா… ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு என்ன பண்றதுன்னு தெரியல” என அருவி நினைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ! என்னை எப்படி கவுக்கலாம்னு ஐடியா பண்ணிட்டு இருக்கயா?” எனக் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் அருவி.
மிக நெருக்கமாக அவளை உரசியபடி நின்றிருந்தான் ராகவன். அவனை அவ்வளவு அருகில் பார்த்தவள் தடுமாறி கீழே விழப் போக, அவளை இடையோடு சேர்த்து தூக்கி நிறுத்தினான்.
எதிர்பாராமல் இருவரின் இதழ்களும் உரசின.
அப்பொழுது வீட்டிற்குள் வந்த அகிலா அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து மீண்டும் தோட்டத்திற்கே ஓடினாள்.
♥️ இருந்தாலும் இந்த ராகவன்… அருவியை ரொம்ப பாடுபடுத்துறான்… பாவம் அருவி…
நாளைக்கு எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
