இதழ் – 20

“கடவுளே… நான் என்ன தப்பு பண்ணேன்னு இவர் என்னை இவ்ளோ கொடுமைப்படுத்துறாருன்னே தெரியலையே… இன்னிக்கு நாம இப்படியே நனைஞ்சு ஏதாவது ஆகி, செத்துட்டா… அவர் வரும்போது நாம உயிரோட இருக்கக் கூடாது…” என்று அழுதாள் அருவி.

கடைசியாக ஒரு தடவை அம்மா, அப்பா, அத்தை, மாமா கிட்டப் பேசலாம் என்று எண்ணியவள், சவரை நிறுத்திவிட்டு ஒரு அடி நடந்தவள்… திடீரென மயக்கம் வந்து அப்படியே மயங்கி சரிந்தாள் அருவி.

ஒருவேளை ரூமில் இருப்பாளோ என்று “அருவி…” என்று அறைக்கு வந்து பார்த்தான். குளியலறைக் கதவு திறந்திருக்க, உள்ளே சென்று பார்த்தான். மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தாள்.

வேகமாக அவளைத் தூக்கி வந்து பெட் மீது படுக்க வைத்தவன், உடனே மருத்துவருக்கு போன் செய்தான்.

“அருவி… கண்ணைத் திறந்து என்னைப் பாரு…” என்று அவள் கன்னத்தைத் தட்டினான்.

அவள் கண்ணைத் திறக்கவில்லை. அப்போதுதான் கவனித்தான். ஷவரில் நனைந்து அவள் கட்டியிருந்த சேலை முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தது.

‘நாம இவளை சவரில் நிக்க வச்சோம்… ஒரு கட்டத்துக்கு மேல் அவளால தாங்க முடியாம அவளே சவரை நிறுத்தியிருக்கா… வெளிய வரும்போது நடக்க முடியாம மயங்கி விழுந்திருக்கா…’ என்று நடந்ததை யூகித்தான் ராகவன்.

அப்போது அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வேகமாக அவள் கபோர்டைத் திறந்து நைட்டியை எடுத்தவன், அவள் அருகில் வந்ததும் சற்று தயங்கினான்.

“நம்ம இவளுக்கு டிரஸ் மாத்தி விடுறதா…? இருந்தாலும் டாக்டர் வர்றதுக்குள்ள இவ டிரஸை நாமதான் மாத்தி ஆகணும்…” என்றவன் சேலையைக் கழட்டினான்.

அவள் பாவாடை, ஜாக்கெட்டுடன் இருக்க, சட்டெனத் தலையை வேறு புறம் திருப்பியவன், “நாமதான் இதைப் பண்ணி ஆகணும்” என்று சற்றும் தாமதிக்காமல் அவளது ஆடைகளை மொத்தமாகக் கழட்டிவிட்டு நைட்டியை மாற்றிவிட்டான். டவலை எடுத்து அவள் தலையைத் துவட்டினான்.

அதற்குள் மருத்துவர் வந்து காலிங் பெல் அடித்தார். கதவைத் திறந்து அவரை அறைக்கு அழைத்து வந்தான்.

“என்னாச்சு?” என்று கேட்டார்.

“சின்னப் பிள்ளை மாதிரி தண்ணில ரொம்ப நேரம் விளையாடிட்டு இருந்திருக்கா டாக்டர்… அதனாலதான். நான் இப்போதான் வந்து பார்த்தேன்…”

“சரி” என்றவர், “நீங்க வெளிய இருங்க. நான் அவங்களை செக் பண்ணிட்டு சொல்றேன்.”

“ஓகே” என்று அறை வாசலில் நின்றான்.

அருவியைப் பரிசோதித்துவிட்டு, அவளுக்குக் காய்ச்சலுக்கு ஊசி போட்டுவிட்டு, “அவங்க எழுந்ததும் ஒரு டம்ளர் பால் கொடுத்துட்டு இந்த டேப்லெட்டைக் கொடுங்க. நான் காலையில வந்து பார்க்கிறேன்” என்றார்.

“ஓகே டாக்டர்” என்றவன், அவர் சென்றதும் கிட்சனுக்குச் சென்று பால் காச்சினான். அவனுக்கும் பசி எடுக்க, ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, அவளுக்கு பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தான் ராகவன்.

‘நம்மளாலதான் இவளுக்கு காய்ச்சல் வந்துருச்சு… அதுக்காக நாமதான் இவளை கவனிச்சுக்கணும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அவளைப் பார்க்க மாத்திரையின் உதவியால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் அருவி.

உண்மை என்னவென்றால், அவளைவிட அவன்தான் அவளை அதிகமாகக் காதலித்தான். இந்த உண்மையை அவனே அறியாததுதான் பரிதாபம். 

“அவளை வெறுக்கிறேன், கொடுமைப்படுத்துகிறேன்” என்ற பெயரில் அவளை அதிகம் நினைத்து நினைத்து, தன்னையறியாமல் அவளை அதிகமாகக் காதலிக்க ஆரம்பித்திருந்தான் ராகவன். அதை ஒத்துக்கொள்வதற்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

“நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்” என்று நண்பனுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை மனதில் நினைத்துக் கொண்டு, அவள் மீதான காதலை மறைத்து, அதை வெறுப்பாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தான் ராகவன்…

இப்போது அவளைப் பார்த்தவனுக்கு மனம் கவலைப்படத்தான் செய்தது.

“ஏன்டி… இப்படி என் வாழ்க்கையில வந்த…? நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தா கூட நல்லா இருந்திருப்ப… எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல ஆனா… இப்படி எல்லாம் பண்ணுனதாலதான் நீ என்னை விட்டு போவ… அதுக்காக மட்டும்தான் நான் இப்படி செஞ்சேன்… மத்தபடி உன்னைக் கொல்லணும்னு எண்ணம் எனக்கில்ல… இதுக்கு மேல நான் உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன்… நாளைக்கு உன்ன உங்க வீட்டுல கொண்டு போய் விட்டுடுறேன்…” என்று அவளை நினைத்தபடி லேசாகக் கண்ணீர் வடித்தான்.

திடீரென முனகல் சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்துப் பார்த்தான். அவள் உடல் நடுக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

வேகமாக எழுந்து அவள் அருகில் வந்தவன், “அருவி… அருவி…” என்று அழைத்தான். அவளால் அசையக்கூட முடியவில்லை.

மெல்ல அவளைத் தூக்கி கைத்தாங்கலாக அமர வைத்து, பாலை ஊற்றி அவள் வாயருகே வைத்தான். அவள் வாயைத் திறக்கவில்லை.

வேகமாகத் தான் அந்தப் பாலை ஒரு வாய் குடித்து, அவள் உதடு வழியாக அவளுக்குக் கொடுத்தான். அவள் உடல் சூடு குறைந்து, நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு போர்வையை நன்றாகப் போர்த்திவிட்டான். அவளது கை, கால்களைத் தேய்த்துவிட்டான்.

அப்போதுதான் சரஸ்வதி போன் செய்தாள்.

‘இப்ப நம்ம போனை எடுக்காம இருந்தா அம்மாக்கு நம்ம மேல ஏதாவது டவுட் வந்துரும்…’ என்று போனை எடுத்தான்.

“ஹலோ! அம்மா…”

“ஹலோ! ராகவா… நீ சீக்கிரம் வந்துட்டியா ஆபீஸ் விட்டு?”

“ஆமாம்மா…”

“சரி சரி… இதேபோல இந்த ஒரு அஞ்சு நாளும் அவ கூடவே இரு. தயவு செஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வா… அவ கிட்ட கோபப்படாத… என்ன சொன்னாலும் நீ பொறுமையா போ… ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.”

“சரிங்கம்மா…”

“அருவி எங்க?”

“அவ சமைக்கிறாம்மா…”

“சரி… நான் கேட்டேன்னு சொல்லு.”

“சரிம்மா…” என்று போனை வைத்தான்.

சரஸ்வதி முகத்தைப் பார்த்தபடி, “என்ன? மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல…” என்றார் சேதுராமன்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“நம்ம பையன் இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டான்.”

“அப்டியா! சந்தோஷம்… அப்போ சீக்கிரம் அவங்க சண்டை சரியாகிடுச்சு.”

“ஆமாங்க!”

“நாம வீட்டுக்கு போகும்போது அவங்க ரெண்டு பேரும் சிரிச்ச முகமா நம்மள வரவேற்பாங்க.”

“கண்டிப்பா…” என்றார் அவர்.

இங்கு தன்னை அறியாமல் முனங்கிக் கொண்டிருந்தாள் அருவி.

அவளைப் பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது.

அவள் உதடுகள் அசைய, அவள் உதட்டருகே குனிந்து கேட்டான்.

“ராகவ்… ராகவ்…” என்று அவள் உதடுகள் தந்தி அடித்தன.

அதைக் கேட்டவன் அதிர்ந்து நின்றான். ‘என்ன? இவ சுயநினைவு இல்லாத போதுகூட நம்ம பேரைத்தான் சொல்றா… அப்போ இவ நம்ம மேல இந்த அளவுக்கு பாசம் வச்சிருக்காளா…? இப்படி நடக்கவே கூடாது…’ என்று எண்ணியவன் விலகினான்.

அப்போது அவன் கை அவளது கையில் உரச, சட்டென்று அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அருவி.

வேகமாக அவள் கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்டவன் சற்றுத் தள்ளி நின்றான். ‘இது என்ன? இவ கை என் கையை இறுக்கிப் பிடிச்சதும் எனக்குள்ள என்னென்னமோ பண்ணுது… ராகவா, இவ உன்னோட எதிரி… அதை மட்டும் நீ நல்லா மனசுல வச்சுக்கோ…’ என்றவன் மீண்டும் சோபாவில் அமர்ந்தான்.

அவள் நினைவில்லாத போது தன் பெயரை உச்சரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ராகவா… பொண்ணுங்களை நம்பாத… இந்த இடத்தில், இந்த நேரத்தில் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்…’ என்று அவள் மீதான காதலை ஒதுக்கி வைத்தான்.

சற்று நேரத்தில் மனம் கேட்காமல் வேகமாக அவள் அருகில் சென்று, “அருவி…” என்று அவள் தலையைத் தொட்டான்.

விடாமல் மீண்டும் அவன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“அருவி என்னை மன்னிச்சிடுடி… உன்னை காப்பாற்றுவதற்காகத்தான் இப்படி பண்றேன்… எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல…” என்று நினைத்தவன், தன் ஆடைகளை வேகமாகக் களைந்துவிட்டு போர்வைக்குள் நுழைந்து, அவளது ஆடைகளையும், நைட்டியையும் கழட்டினான். அவள் தன்னை அறியாமல் அவன் உடலோடு ஒட்டிக்கொண்டாள்.

அவள் செயலில் சட்டெனத் தன் கண்களை மூடிக்கொண்டான். இப்போது அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனுக்கு வியர்க்கத் தொடங்கியது. தன் தலையைக் கோதி தன்னை சமாளித்துக் கொண்டான் ராகவன்.

அவனுக்கு சர்வமும் அடங்கியது. அந்த ஆறடி ஆண்மகனுக்கு அவன் மீதான கோபம், ஆத்திரம், பழிவாங்கும் உணர்ச்சி அனைத்தும் தவிடுபடியாயின. இந்த இடத்தில் அவள் மீதான வெறுப்பு தோற்று, அவள் மீதான அவனது காதல் ஜெயித்து நின்றது.

மெல்ல அவள் தலையை மென்மையாக வருடினான். மீண்டும் அவள் உதடுகள் தந்தி அடித்துக் கொண்டிருக்க,

“நான் எங்கேயும் போகல… உன் பக்கத்துலயே தான் இருக்கேன்… உனக்கு ஒண்ணுமில்ல… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என்றான் மெதுவாக அவளது காதில்.

அவனது கைகள் தன்னை அறியாமல் அவளைக் கட்டிக்கொள்ள, மெதுவாக அவள் இதழில் முத்தமிட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நடுக்கம் குறையத் தொடங்கியது. அப்பொழுது அவனுக்குள் தோன்றிய உணர்வை காதல் என்று ஏற்றுக்கொள்ள அவன் மனம் முரண்டு பிடித்தது.

அவளைக் கட்டிப்பிடித்த போது அவனுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ‘இவள் என்னவள்… இவள் என் பொண்டாட்டி’ என்று ஒரு மனம் கூறியது.

“இவ்வளவுதானா உன் மன உறுதி?” என்று ஒரு மனம் அவனை கேலி செய்தது.

“இல்லை… நான் இவளை ஏத்துக்கல… இவளை நான் காதலிக்கவே இல்ல… என்னிக்கா இருந்தாலும் இவ என் எதிரிதான்… இவளை நான் அதிகமா வெறுக்கிறேன்… அதிகமா டார்ச்சர் பண்ணணும்னு நினைக்கிறேன்… அதுக்காகவாது உயிரோட இருக்கணும்ல… அதனாலதான் நான் இப்ப இவளைக் காப்பாத்துறேன்… மத்தபடி இவ மேல எனக்கு எந்த லவ்வும் கிடையாது” என்று அவன் திமிர் பிடித்த மனம் ஒரு புறம் கூறியது.

இரண்டு மனதின் பேச்சைக் கேட்டு குழம்பிக் கொண்டிருந்தவன், தன்னை அறியாமல் அவளை இறுக அணைத்தபடியே அவள் நெற்றியில் மீண்டும் முத்தமிட்டான் ராகவன்.

❤️ இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்துச்சு? படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க ♥️

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,349 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page