இதழ் – 22

தன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த அருவியைப் பார்த்த ராகவனுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது.  

“அருவி!” எனக் கத்தினான்.

அவன் கத்தலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், போர்வையைத் தன் மேல் போர்த்தியபடி அமர்ந்திருந்தாள்.

கோபத்தில் பல்லைக் கடித்தபடி அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். அவளுக்கு பேச்சே வரவில்லை. அவனைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சுங்க?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“பளார்!” என அவள் கன்னத்தில் அறைந்தான்.

அவன் அறைந்ததில் அவளது காதில் ‘கொய்’ என்று ஒலித்தது.

“என்னடி பண்ணி வச்சிருக்க?”  

“நான் என்னங்க பண்ணேன்?”

“இதைத்தான் கேட்கிறேன்” என்றான். தங்கள் இருவரும் இருந்த கோலத்தைக் காட்டினான்.

“நைட்டு நீ என்ன…?” என்றவன் சற்று நேரம் பல்லைக் கடித்து,  

“நைட்டு எனக்கு நீ என்னத்தைக் கலந்து கொடுத்த?”

“நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்கலங்க” என்றாள் பயத்துடன்.

“பொய் சொல்லாதடி… நீ எனக்கு சாப்பாட்டில் ஏதோ கலந்து கொடுத்திருக்க. அதனாலதான்…” என்றான்.

“இல்லங்க! நைட்டு நீங்க வீட்ல சாப்பிடல. உங்களுக்கு நான் எதுவுமே கொடுக்கல. நீங்க வரும்போது…” என அவள் கூற, 

மீண்டும் “பளார்! பளார்!” என அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்.

“மறுபடியும் சொன்னதையே சொல்லாதடி உன்ன…” என்றவன் சற்று யோசித்து கண்ணை மூடி யோசித்தான்.  

“முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்குமான்னு கேட்டு ஒண்ணுமே தெரியாத வெகுளி பொண்ணு மாதிரி பேசினயே…”

“நான் சொல்றதை நம்புங்க… எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் பண்ணல.”

“வாயை மூடு… ஒண்ணும் தெரியாத பொண்ணு பண்ற வேலையா இதெல்லாம்? புருஷனுக்கே தெரியாம சாப்பாட்டில் ஏதோ கலந்து கொடுத்து என்கூட நீ இப்படி இருந்திருக்கியே… நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என்றான்.

“இல்லைங்க… நான்…” என அவளைப் பேச விடாமல் மீண்டும் அவள் கன்னத்தில் அறைந்தான்.

ஏற்கனவே இரவெல்லாம் அவன் கொடுத்த பாட்டில் உடலெல்லாம் வலி எடுக்க, அவனைப் பார்த்து,  

“என்னை நம்புங்க…” என்றாள் அழுதபடி.

“மறுபடியும் சொன்னதையே சொல்லாத… ‘நான் எதுவும் செய்யல, நான் எதுவும் செய்யல’ன்னு… இப்ப நீ என்ன நெனச்சிட்டு இருக்க? நான் உன்னைத் தொட்டா உனக்கு குழந்தை உண்டாகும்… அதுக்கப்புறம் நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன்… கண்டிப்பா உன்ன ஏத்துக்கிட்டு உன்கூட வாழுவேன்னு நெனச்சு திட்டம் போட்டுத்தானே டி இப்படி கேவலமான ஒரு வேலையைச் செஞ்சிருக்க?”

“வேண்டாங்க… இப்படி எல்லாம் பேசாதீங்க… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என கஷ்டப்பட்டு அழுதாள் அருவி.

அவள் கையைப் பிடித்து வேகமாக இழுத்தான்.

அவன் மார்பில் மோதியவள்,  

“என்னை விடுங்க… எனக்கு பயமா இருக்கு…”

“பயமா? உனக்கா?! நடிக்காத டி… இதுக்குத்தானே நீ ஆசப்பட்ட… இப்ப எதுக்கு வேணாம்னு சொல்ற? வாடி…” என அவளை இறுக்கி அணைத்தான்.

“இல்லைங்க நீங்க…” என மேலும் பேச விடாமல் அவளை கற்பழிப்பது போல் நடந்து கொண்டான்.

“என்னால வலி தாங்க முடியல… உங்கள கெஞ்சிக் கேட்கிறேன்… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க…” என கதறித் துடித்தாள் பெண்ணவள்.

அவளது கதறல்கள் அவன் காதில் கேட்கவில்லை. தன் மனைவி என்றும் பார்க்காமல், அவளது விருப்பமின்றி அவளோடு கூடினான் ராகவன்.

அவன் தந்த உடல் வலியை விட, அவன் பேசிய வார்த்தைகளை கேட்டுதான் அதிகம் துடிதுடித்துப் போனாள் அருவி.

முழுமையாக அவளோடு இணைந்து, அவளுக்குள் மீண்டும் மீண்டும் யுத்தம் செய்து விலகினான்.

வலி உயிர் போனது அவளுக்கு. கண்களில் கண்ணீருடன் அழுதபடி படுத்திருந்தாள்.

வேகமாக எழுந்தவன், தன் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

அவளால் அவன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அழுதவாறு கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

“இங்க பாரு டி” என்றான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. வேகமாக அவள் தலைமுடியைப் பிடித்து தூக்கி அமர வைத்தான். தன் கைகளால் அவள் முன்னழகை மறைத்துக் கொள்ள…

“இப்ப மறைச்சு என்னடி பிரயோஜனம்? நைட்டு எனக்கே தெரியாமல் நான் சுயநினைவு இல்லாத போது என்கூட நீ இருந்தல்ல… இப்போ நான் சுயநினைவோடுதான் உன்கூட இருந்தேன்… அதுவும் விருப்பம் இல்லாமதான் இருந்தேன். உன்னை எனக்கு பிடிக்கலன்னாலும் உடல் அளவில் உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு, மனசளவிலதான் உன்னை காயப்படுத்தினேன்…”

கண்களில் வேதனையோடு அவன் பேசுவதைக் கேட்டு கண்ணீர் வடித்தாள்.

“இது வரைக்கும் நான் உன்கிட்ட கூட வரல… நீ எப்ப இவ்வளவு தூரம் கேவலமா இறங்கினாயோ, இதுக்கப்புறம் உன்னை நான் சும்மா விட மாட்டேன் டி…”

அவன் பேசப் பேச அவள் அமைதியாகத் தலைகுனிந்தபடி அழுது கொண்டே இருந்தாள். அவன் பேசுவதை கேட்கக் கேட்க தன் காதில் ஈயத்தை ஊற்றுவது போல இருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு துடித்துப் போனாள் பெண்ணவள்.

“இங்க பாரு… உனக்கு உடம்பு சரியில்லாத போது நான் அன்பாதான உன்னை நான் பார்த்துகிட்டேன். அப்பகூட நான் நெனச்சிருந்தா உன்னை என்ன வேணா பண்ணிருக்கலாம்… ஆனா நான் அப்படிச் செய்யல. ஆனா!! இப்ப சொல்றேன் கேட்டுக்க டி… இனிமே டெய்லி நைட்டு நீ இந்த கொடுமையை அனுபவிப்ப… இன்னைக்கு நைட்டு இருக்கு… உனக்கு இனிமே தினம் தினம் இதே சித்திரவதைதான்… உன்னை நான் என்ன பண்றேன்னு பாரு… இனிமே தெரியும் டி உனக்கு நரகம்னா என்னனு…” என்று தன் வார்த்தைகளால் அவள் மேல் நெருப்பை அள்ளி வீசிவிட்டு குளியலறைக்குள் சென்றான்.

அவள் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள். குளித்து வந்தவன் அவள் முகத்தைப் பார்க்காமல் வேகமாகக் கிளம்பி வெளியே சென்றான்.

அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க,  

‘இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நம்ம இந்த வீட்ல இருக்கக் கூடாது’ என்று நினைத்தவள் எழ முயன்றாள். அவளால் முடியவில்லை. கை கால் உடம்பெல்லாம் நடுங்கியது.

மெதுவாகத் தட்டுத் தடுமாறி ஷவரில் நின்று குளித்தவள் வந்து சாதாரண சேலையை அணிந்து கொண்டாள். சரஸ்வதி கொடுத்த அந்த செயினையும் மற்ற நகைகளையும் கழட்டி டேபிளில் வைத்துவிட்டு,

“இனிமே உங்க வாழ்க்கையில நான் வரவே மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் எந்த தப்பும் பண்ணல” என எழுதி வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தவள், அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறினாள் அருவி.

இங்கு ஆபீஸ் வந்தவனுக்கு மனசே ஆறவில்லை.  

‘இப்படி பண்ணிட்டாளே… அவளை நம்ம நல்ல பொண்ணுனு நினைச்சோமே… இவ்வளவு கேவலமா மோசமானவளா இருந்திருக்காளே… நைட்டு புல்லா சுயநினைவு இல்லாம இருந்திருக்கோமே… அப்படி அவ என்ன கலந்திருப்பா? ஆனா நைட்டு வீட்ல சாப்பிட்ட மாதிரி நம்மளுக்கும் நினைவு இல்லையே… எப்படி? நம்மளுக்கு இவ கொடுத்திருப்பாளா? ஒருவேளை நைட்டு நாம குடிக்கிற பால்ல ஏதாவது கலந்து கொடுத்திருப்பாளா?!’ என யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வேலையில் எந்தக் கவனமும் செல்லவில்லை. தலையே வெடித்து விடுவது போல இருந்தது. அப்போது அவனுக்கு போன் செய்தான் அவன் நண்பன் ரகு.

“சொல்லுடா” என்றான் ராகவன்.

“சாரி டா மச்சான்… என்ன மன்னிச்சிடுடா” என்றான் ரகு.

“எதுக்குடா சாரி கேக்குற?”

“இல்லடா நைட்டு…” என அவன் கூறுவதற்கு முன்,

“அதான்… நைட்டு உன்னோட பிரெண்ட்ஸ் என்னை நல்லா பாத்துக்கிட்டாங்களேடா… அவங்க கூட பேசிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்டா. சாரி… என்னால உன்கிட்ட சொல்ல முடியல. நீ உன் பியான்சி கூட பேசிட்டு இருப்ப… உன்ன தொந்தரவு பண்ண வேணாம்னுதான் உன்கிட்ட சொல்லாம நான் வந்துட்டேன்.”

“டேய் ராகவா…”

“நீ எதுவும் சொல்ல வேணாம்டா… கண்டிப்பா உன் மேரேஜ்க்கு நான் வந்திடுவேன்.”

“அது இல்லடா மச்சான்… அது வந்து நேத்து நைட்டு ஒரு தப்பு நடந்துருச்சு டா.”

“என்னடா? சொல்ற… எனக்கு புரியல.”

“நீ என் பிரெண்ட்ஸ்கிட்ட, நீ சரக்கு அடிக்க மாட்டேன்னு சொன்னியா?”

“ஆமா!”

“அதை அவனுங்க மனசுல வச்சுக்கிட்டு…”

“மனசுல வச்சுக்கிட்டு… என்னனு? சொல்லுடா ரகு.”

“நீ குடிக்கிற கூல்ட்ரிங்ஸ்ல உனக்கே தெரியாம போதை மாத்திரையைக் கலந்திட்டாங்க… அதை இப்பதான் என்கிட்ட ஒருத்தன் சொன்னான். அதை கேட்டதும் எனக்கு ஷாக் ஆயிடுச்சு டா… சாரி… என்ன மன்னிச்சிடுடா…” என்றான் ரகு வருத்தத்துடன்.

“ஓகே டா… நான் அப்புறம் கூப்பிடுறேன்” என போனை வைத்தான் ராகவன்.

இப்போது அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.  

‘என்ன நடந்துச்சுன்னு தெரியாம அவளைப் பேசிட்டோமே… இருந்தாலும் நம்ம பேசுனது தப்பு… அவள் மேல எந்த தப்பும் இல்ல… அப்ப முழுக்க முழுக்க நம்ம மேலதான் தப்பு… என்னடா ராகவா இப்படி பண்ணிட்டியே… ஒரு பக்கம் உடலால அவள கஷ்டப்படுத்திட்டு, வார்த்தையால வேற… நாம உடனே வீட்டுக்கு போய் அவ கிட்ட பேசிக்கலாம்…’ என காரை எடுத்துக் கொண்டு வந்தான்.

எதிரில் ஒரு பைக்கில் வந்து எடுத்து இடிக்க, சட்டென்று பிரேக் போட்டவன் வேகமாகக் காரிலிருந்து இறங்கியவன், பைக்கில் வந்த அந்த காதல் ஜோடியைப் பார்த்து திட்டினான்.

“உங்களுக்கெல்லாம் அறிவு இல்ல… ரோட்ல கொஞ்சமாவது கவனமா வர மாட்டீங்களா? பைக்குல வரும்போது கூட காதல் பண்ணிட்டுத் தான் வருவீங்களா?!” என்றவன் கத்திக் கொண்டிருக்க,

பைக்கில் இருந்தவன் பின்னால் இருந்த பெண் தன் ஹெல்மெட்டைக் கழட்டினாள். 

அப்போதுதான் அவளைப் பார்த்தவன் அதிர்ந்து, “நீயா?!” என அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான் ராகவன்.

“அண்ணா…” என்றாள் அனிதா.

“வாய மூடு… என் பிரண்ட் சாவுக்கு காரணமான நீ… என்ன அண்ணனு கூப்பிடாத… என் பிரண்டு உன்னாலதான் துடிதுடிச்சு செத்தான்… அதனாலதான் நான் பொண்ணுங்களயே வெறுக்கிறேன்… நீயெல்லாம் ஒரு பொண்ணா? காதலிச்சவனை ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண… உங்களுக்கு மனசாட்சி உறுத்தலயா?” என்றான் கோபமாக.

“போதும்… நிறுத்துங்க அண்ணா! உங்க வாய்க்கு வந்ததை பேசாதீங்க…” என்றவள் அடுத்து கூறிய விஷயத்தைக் கேட்டு, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ராகவன்.

❤️ அனிதா அப்படி என்ன சொல்லி இருப்பா… 🤔  

தெரிஞ்சுக்க மறக்காம அடுத்த எபி படிங்க பிரண்ட்ஸ் ♥️

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,339 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page