இதழ் – 24
இங்கு தன் வீட்டை விட்டு வெளியேறிய அருவி ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தவள் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
தன் விதியை நினைத்து அழுதபடி இருந்தபோது யாரோ தன் தோளில் கை வைக்க, திரும்பிப் பார்த்தாள் அருவி.
“ஹேய்! எப்படிடி இருக்க?” எனக் கேட்டாள் அவளுடன் கல்லூரியில் படித்த தோழி சங்கீதா.
வேகமாக எழுந்த அருவி அவளைப் பார்த்தாள்.
“என்னை யாருன்னு தெரியலையாடி? நான்தான் சங்கீதா. காலேஜ்ல உன்னோட பின்னாடி பெஞ்சில் உக்காந்திருந்தவ. நீயும் நானும் எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்போம்” என்றாள்.
இப்போதுதான் அருவிக்கும் அவளை அடையாளம் தெரிந்தது. லேசாகத் தலையசைத்தாள்.
“என்னடி? டல்லா இருக்க. நீ நல்லா இருக்கியா?” எனக் கேட்டாள்.
“ஆமாம்” எனத் தலையசைத்தாள் அருவி கண்களைத் துடைத்தபடி.
“நீ எங்க இருக்க? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஆமாம்” எனத் தலையசைத்தாள் அருவி.
“உன் ஹஸ்பண்ட் எங்க?” என சங்கீதா சுற்றிப் பார்த்தபடி கேட்டாள்.
அதற்குப் பதில் கூற முடியாமல் அவளை இறுக்கி அணைத்து கதறி அழுதாள் அருவி.
“அழாத டி” என அவளது கண்களைத் துடைத்தாள் சங்கீதா.
“இப்ப நீ எங்க போற?” என அருவி கேட்டாள்.
“நான் பெங்களூர் போறேன். அங்கதான் நான் வேலை பாக்குறேன். இப்போ நான் என்னோட அக்கா கல்யாணத்துக்கு தான் லீவு போட்டு வந்தேன். இப்ப மறுபடியும் ஊருக்கு போறேன்.”
“நானும் உன் கூட வரட்டுமா?” எனக் கேட்டாள் அருவி.
“அது வந்து…”
“ப்ளீஸ் சங்கீதா, முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத. எனக்கு எங்க போறதுன்னு தெரியலை.”
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது சங்கீதாவிற்கு.
“சரி வா,” என்று அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றாள் சங்கீதா.
இங்கு தன் காலில் விழுந்து கதறி அழுத மகனைப் பார்த்தவர்கள், ஏன் இவன் இப்படி அழுகிறான் என ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.
சேதுராமன் அவன் தோளைத் தொட்டு தூக்கி, “என்னாச்சு ராகவா? எதுக்காக இப்ப அழுற?” எனக் கேட்டார்.
“அப்பா… என்னை மன்னிச்சிடுங்க” என்றவன் அவர் கையைப் பிடித்து தன் கன்னத்தில் மாறி மாறி அவனே அடித்துக் கொண்டான்.
“ஏன் டா இப்படி பண்ற?”
“எனக்கு உயிர் வாழவே தகுதி இல்லப்பா. நான் மனுஷனே கிடையாதுப்பா. என்னை அடிச்சு கொன்னுருங்க. நான் உங்களுக்கு மகனாவே பொறந்திருக்கக் கூடாது” என்றான் கதறி அழுதபடி.
“நீ பேசுறது ஒண்ணும் எங்களுக்கு புரியல. என்னனு சொல்லு ராகவா” எனக் கேட்டார் சரஸ்வதி.
“அம்மா… நீங்க எனக்கு நல்லது தான் சொல்லி வளத்தீங்க. ஆனா!! நான் உங்களுக்கு கெட்ட பேர உண்டாக்கிட்டேன். நான் மனுசனே இல்ல. என்னை கொன்னுருங்க… கொன்னுருங்க…” என அவர் கையைப் பிடித்து தன் கழுத்தில் வைத்து நெரித்தான்.
அவன் தலையை ஆதரவாக வருடியவர்,
“என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பண்ற ராகவா?” என்றார்.
“என்னங்க!! என்ன இது? இவன் என்னமோ பண்றான். எனக்கு பயமா இருக்கு” என்றாள் சரஸ்வதி.
“நீ பயப்படாத… நீ பயப்படாத சரஸ்வதி. இரு, அவன் கிட்ட என்னனு கேட்போம்” என அவனை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தனர்.
அவன் கண்ணீரைத் துடைத்து விட்டாள் சரஸ்வதி. டம்ளரில் தண்ணீர் ஊற்றி அவனுக்கு குடிக்கக் கொடுத்தார் சேதுராமன்.
“இப்ப சொல்லு. என்ன நடந்துச்சு? அருவி எங்க? நீ ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க? உங்களுக்குள்ள சண்டை இன்னும் சரியாகலையா?” என அவர் கேட்டார்.
“நான் ஆரம்பத்திலிருந்து சொன்னாதான் உங்களுக்கு புரியும்” என்றவன் தன் திருமணம் நடந்த அன்றிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.
அவன் கூறியதைக் கேட்டு சரஸ்வதியும் சேதுராமனும் திகைத்து நின்றனர்.
சரஸ்வதி அவன் கன்னத்தில் மாறி மாறி பளார் பளார் என அறைந்தவர்,
“டேய்! நீ உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? எதுக்காக அப்பாவி பொண்ண அவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்க? அதுவும் நாங்க இதே வீட்லதான் இருந்திருக்கோம். எங்களுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வராத அளவுக்கு நீ எவ்வளவு சித்திரவதைப்படுத்தி இருக்கயே?” என்றார் அழுதபடி.
தலை குனிந்து கண் கலங்கி நின்றான் ராகவன்.
“உன்ன நான் நல்லபடியா தான வளர்த்தேன். நீ எப்போ இருந்து இப்படி மிருகமா ஆன? சொல்லு டா” என அவனை மீண்டும் அடித்தாள்.
“என்னை மன்னிச்சிடுங்கம்மா.”
“சொல்லுடா! எதுக்காக அருவிய அப்படி சித்திரவதை பண்ண?” என சேதுராமன் அவன் சட்டையைப் பிடித்துக் கேட்டார்.
“அப்பா… என்னோட ஃப்ரெண்டு மாதவன் இருக்கான்ல. அவன ஒரு பொண்ணு ஏமாத்திட்டாப்பா. அவன் சூசைட் பண்ணிக்கிட்டான். அதனாலதான் நான் பொண்ணுங்கள வெறுக்க ஆரம்பிச்சேன்.”
“அதனாலதான் நீ கல்யாணம் வேணாம்னு எங்க கிட்ட சொல்லி தட்டி கழிச்சிட்டு இருந்தியா?” என சரஸ்வதி பொறுமையாகக் கேட்டாள்.
ஆமாம் எனத் தலையசைத்தான்.
அப்படியே அவன் முடியைப் பிடித்து சுற்றி முட்டியவர், “உன்னை பிள்ளையா பெத்ததுக்கு நான் வெட்கப்படுறேன் டா.”
“அம்மா…” எனக் கத்தினான்.
“இனி நீ என்னை அப்படி கூப்பிடாத. நீ எனக்கு பிள்ளையே இல்ல. உன்னை நான் அந்த மாதவன் கூட சேரக்கூடாதுனு காலேஜ் படிக்கும் போதே சொல்லிருக்கேன்ல.”
“அது வந்து… நான் பேசாம தான் இருந்தேன். அவன் தான் என்கிட்ட பேசாம இருக்க முடியலன்னு சொல்லி அழுதான். அதனால் தான் நான் பேசுனேன்.”
“அவன் எவ்வளவு கேடுகெட்டவன்னு உனக்கு தெரியுமா?”
“நீங்க என்னமா சொல்றீங்க?”
“நீ அவன வீட்டுக்கு அடிக்கடி கூட்டிட்டு வந்த. நானும் உன்னோட ஃப்ரண்டு தான் விட்டுட்டேன். ஒரு தடவை அவன் போனை நம்ம வீட்ல ஹால்ல சார்ஜ் போட்டுருந்தான். அவனுக்கு போன் வந்தது. சரி அவன் கிட்ட கொடுக்கலாமேன்னு நான் வந்து போன எடுத்து அட்டென்ட் பண்ணி பார்த்தபோது ஒரு பொண்ணு எப்படி கதறி அழுதா தெரியுமா?”
“நீங்க என்ன சொல்றீங்க…”
“தயவு செய்து என்ன விட்டுடு. என்னை ஆபாசமா எடுத்த போட்டோவ யாருக்கும் காட்டிடாத. நீ சொல்றபடி எல்லாம் நான் செய்றேன்னு அந்த பொண்ணு அவ்வளவு கதறி அழுதா. அப்போ நான் தான் ‘நீ அழாத, அவன் அப்படி எதும் பண்ண மாட்டான். அவன நான் பாத்துக்குறேன்’னு சொல்லி… அதுக்கப்புறம் அந்த போனை அவன்கிட்ட கொண்டு போய் கொடுக்கப் போனபோது…”
‘ஏதாவது போன் வந்துச்சா ஆன்ட்டி?’னு கேட்டான்.
அவன் கன்னத்தில் பளார் என அறைந்து,
‘இனிமே இப்படி கேவலமான வேலையெல்லாம் செஞ்சேனா நானே உன்ன போலீஸ்ல புடிச்சி குடுத்துடுவேன். அப்புறம் இனிமே என் பையன் கூடயும் சேர கூடாது’னு சொன்னேன்.
அதுக்கு, ‘சாரி ஆன்ட்டி, என்னை மன்னிச்சிடுங்க. இனிமே நான் உங்க பையன் கூட சேர மாட்டேன்’னு சொன்னான். அதுக்கப்புறம் அவன் நம்ம வீட்டுக்கு வரவே இல்ல. சரி நான் சொன்னதை கேட்டு உன்கூட அவன் சேராம இருக்கான்னு நெனச்சேன். ஆனா!! எனக்கு தெரியாம எப்படி நீ அந்த பொறுக்கி கூட இவ்ளோ க்ளோஸ் ஆன?” என சரஸ்வதி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அவர் கூறியதைக் கேட்டவனுக்கு நெஞ்சே விடுத்து விடும் போல இருந்தது.
“என் தலையில நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேனே… அம்மா… அம்மா… சத்தியமா அவன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு எனக்கு தெரியாது மா. ப்ளீஸ்மா என்னை மன்னிச்சிடுங்க. இப்பதான் அனிதாவும் என்கிட்ட உண்மைய சொன்னா. அவன் கெட்டவன்னு தெரிஞ்சு… அவன் அம்மா அப்பாவே அவனுக்கு சாப்பாட்டுல விஷத்தை வச்சு கொடுத்துட்டாங்க.”
“பெத்தவங்களே அவன் சாகட்டும்னு இப்படி விஷத்தை குடுத்து இருக்காங்கனா அவன பத்தி நீ தெரிஞ்சிருக்க வேணாமா!! நீ அவனோட பெஸ்ட் பிரண்டுனு சொல்ற. அவனை நம்பி நீ உன் வாழ்க்கையயே கெடுத்திட்டயே…”
“அம்மா… நான்…”
“உன்னை நான் எவ்வளவு ஆசையா வளர்த்து, கல்யாணம் பண்ணி வச்சேன்? நீ அந்த பொண்ணு அருவி கூட சந்தோஷமா வாழுவ, உன் குழந்தைகளை கொஞ்சணும்னு நாங்க நினைச்சோம். ஆனா!! எல்லாத்தையும் கெடுத்து இப்படி பண்ணிட்டியே. நீ இனிமே எங்க பையன் இல்ல” என்றார் சேதுராமன்.
“அப்பா… தயவு செய்து அப்படி சொல்லாதீங்கப்பா. எனக்கு உங்களை விட்டா யாருப்பா இருக்கா” என அவர் காலில் விழுந்து அழுதான் ராகவன்.
அவனை விட்டு சற்று தள்ளி நின்றவர்,
“தயவு செய்து எங்கள அம்மா அப்பானு கூப்பிடாத. ஒரு பொண்ணு பூ மாதிரி. அதுவும் அருவிக்கு கொழந்த மனசு. அவ யார்கிட்டயும் சத்தமா கூட பேச மாட்டா. சூதுவாது தெரியாத அப்பாவி பொண்ணுடா. அவள போய் நீ இவ்ளோ மோசமா நடத்தி இருக்கியே!! அதை நினைக்கிறப்போ எங்களால உன்னை புள்ளையா நினைச்சு கூட பாக்க முடியல. உனக்கு இனிமே இந்த வீட்ல இடம் இல்ல. இப்பவே வீட்டை விட்டு வெளியில போயிடு” என்றார் அவன் முகத்தைப் பார்க்காமல்.
“அப்டி சொல்லாதீங்கப்பா.”
“உன் முகத்தை பார்க்கவே நாங்க விரும்பல. நீ வெளியில போயிரு. இனிமே எங்களுக்கு நீ யாரோ!! எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான் இருக்கா. அவ பேரு அருவி. நாங்க செத்தா கூட அவதான் எங்களுக்கு கொள்ளி வைக்கணும். இனிமே நீ எங்க மூஞ்சில முழிக்காத” என்றாள் சரஸ்வதி.
“அம்மா… நான் போகமாட்டேன். உங்களை விட்டு நான் போகவே மாட்டேன்” என தாய் தந்தையின் காலை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதான் ராகவன்.
“இப்போ நீ மட்டும் போகல நாங்க ரெண்டு பேரும் சூசைட் பண்ணிப்போம்” என்றாள் சரஸ்வதி.
“வேண்டாம்மா… என்னால நீங்க எதுவும் பண்ணிக்க வேணாம். நானே இந்த வீட்டு விட்டு போறேன். தயவு செய்து நீங்க எதுவும் பண்ணிக்காதீங்க.”
எழுந்தவன் கண்களில் கண்ணீருடன் தன் விதியை நொந்தபடி வீட்டை விட்டு வெளியேறினான் ராகவன்.
நம்ம கையில் இருக்கும் போது அந்த பொருளோட மதிப்பு நமக்கு தெரியாது. அது தொலைஞ்ச பிறகுதான் தெரியும். அந்த பொருள் தான் நம்ம உயிர்னு…
அதுக்கு ராகவன் உதாரணம்.
♥️ அருவியை ராகவன் கண்டுபிடிச்சிருவானா? தெரிஞ்சிக்க அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க ❤️
