இதழ் – 26
இப்ப இவ கண்ணு முன்னாடி நம்ம போய் நின்னா, நம்ம மேல இருக்கிற கோவத்துல கண்டிப்பா நம்ம கிட்ட பேச மாட்டா. இந்த இடத்தை விட்டும் போய்டுவா. அதனால நம்ம பொறுமையாதான் இவகிட்ட போகணும் என்று நினைத்த ராகவன் மீண்டும் வீட்டிற்குச் சென்றான்.
அவன் இன்னும் ஆபீஸுக்கு வராததால் அவனுக்கு போன் செய்தான் விக்னேஷ்.
“ஹலோ, சொல்லுடா.”
“எங்கடா இருக்க? மீட்டிங்கு டைம் ஆயிடுச்சு. இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு.”
“நான் இன்னைக்கு மீட்டிங்கு வரல.”
“என்னடா? சொல்ற. கண்டிப்பா நீ இருக்கணும்னு சொன்னேன்ல.”
“நான் வீடியோ கால்ல இருந்து அட்டென்ட் பண்ணிக்கிறேன் டா.”
“ராகவ், நான் என்ன சொல்றேன்னா…”
“நான் சொல்றத மட்டும் செய் டா. புரிஞ்சுக்கோ” என்றான் ராகவன்.
“சரி, உன் இஷ்டம். இதுக்கு மேல நான் ஒண்ணும் கம்பெல் பண்ணல” என்றான். மீட்டிங் ஆரம்பமானது.
இன்னைக்கு புது MD வருவார்னு சொன்னாங்க. அவர ஆளை காணோம் என்று அந்த ஆபீஸில் வேலை செய்யும் ஷீலாவும் ரூபாவும் பேசிக் கொண்டார்கள்.
உள்ளே வந்தான் விக்னேஷ்.
“குட் மார்னிங் சார்” என்றார்கள் அனைவரும்.
“மார்னிங். நம்ம புது MD-அவரால இங்க வர முடியல. அதனால அவர் வீடியோ கால்ல மீட்டிங் அட்டெண்ட் பண்ணுவார்.”
சரியென அனைவரும் தலையசைத்தனர். வீடியோவில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். அவளது ஒவ்வொரு அசைவையும் பார்க்கையில் அவனுக்கு ஏதோ செய்தது. எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பவள் இப்பொழுது அமைதியாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு மனது வலித்தது.
“என்னாலதான் நீ இப்படி அமைதியா ஆகிட்ட. உன்னை பழையபடி நான் கொண்டு வருவேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.
இப்பொழுது அருவி அவனிடம் ஒரு சந்தேகம் கேட்க, தன் குரலை மாற்றி அவளுக்கு அழகாகப் பதில் அளித்தான் ராகவன்.
மறுநாள் அனைவரிடமும் ஒரு டாகுமென்ட் கொடுக்கப்பட்டது.
“என்ன சார் இது?”
“நீங்க எல்லாம் சைன் பண்ணனும். அடுத்த மூணு வருஷத்துக்கு இங்கதான் நீங்க வேலை செஞ்சாகணும்.”
சந்தோஷமாக அதில் கையெழுத்திட்டாள் அருவி. ஆபீஸுக்கு வராமலே மறைவாக நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். அவளிடம் பேச வேண்டும் என்று மனம் துடித்தாலும் அமைதியாகத் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“டேய், நீ சொன்ன மாதிரி எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டேன்.”
“தேங்க்ஸ் டா.”
“ராகவ், நான் ஒண்ணு சொல்லவா?”
“சொல்லு டா.”
“இப்பதான் உன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்குறேன். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.”
அன்று சங்கீதா தனியாக மொட்டை மாடியில் அமர்ந்து நிலாவைப் பார்த்தபடி தனக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, அவள் அருகில் மெதுவாக அமர்ந்தாள் அருவி. சங்கீதா கவனிக்கவில்லை.
மெல்ல அவள் தோளில் கை வைத்தவுடன், “சும்மா இருங்க சார்” என்றாள்.
“என்னது? சாரா!!” என்றாள் அருவி.
சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தவள்,
“நீயா!” எனக் கேட்டாள்.
“ஆமா, நானே தான். நீ சார்-னு சொன்ன மாதிரி எனக்குக் கேட்டுச்சு.”
“நான் அப்படிச் சொல்லல” என்று நெளிந்தாள்.
“ரொம்ப நெளியாத. உண்மையைச் சொல்லு. யாரு அது?”
“என்ன? உண்மை?”
“உன் அவர் யாருனு சொல்லு.”
“அது வந்து… அவர்…”
“ரொம்ப வெட்கப்படாம சொல்லு டி.”
“நான் சொன்னா நீ என்னைத் திட்டக்கூடாது.”
“மாட்டேன்.”
“நம்ம MD விக்கி.”
“விக்கியா? செல்லப் பேரு வைக்கிற அளவுக்கு லவ்வா?”
“ம்ம்” என்றாள் வெட்கத்துடன்.
“அவரும் உன்னை லவ் பண்றாரா?”
“தெரியல.”
“என்னடி சொல்லுற.”
“எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு. என்னோட காதல் கைகூடுமான்னு தெரியல. அவர் எனக்குக் கிடைக்காட்டாலும் பரவாயில்ல.”
“என்னடி இப்படிச் சொல்ற?”
“நான் என்னடி பண்ணேன்? பாழாப் போன மனசை என்னை அறியாம அவர்கிட்ட போய்ப் பறிகொடுத்துட்டேன். அவர் எங்க இருந்தாலும் என் கண்ணு அவரதான் தேடுது. அவர் ஒரு நாள் ஆபீஸ் வரலைன்னாலும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால அவரைப் பாக்காம இருக்கவே முடியல. அவர் பேசுறதைப் பார்த்து ரசிச்சுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.”
அவள் சொன்னதைக் கேட்ட அருவிக்கு ராகவனின் நினைவு வந்தது.
“ஒரு காலத்துல நானும் இப்படித்தான் ஒருத்தரை காதலிச்சேன்” என்றாள் தன்னை அறியாமல்.
“என்ன சொன்ன?” என வேகமாகக் கேட்டாள் சங்கீதா.
“ஒண்ணுமில்ல. நீ லேட் பண்ணாம நாளைக்கே உன் லவ்வை அவர் கிட்ட சொல்லிடு.”
இங்கு தன் அறையில் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான் விக்னேஷ். அவனைப் பிடித்து உலுப்பினான் ராகவன்.
“எதுக்கு டா என்னை இப்படி உலுக்குற?”
“நான் எத்தனை தடவ கூப்பிட்டேன்? கேட்காத அளவுக்கு அப்படி என்ன யோசனையில இருக்க?”
“அது வந்து… எனக்கு அவ மேல அது வந்திடுச்சு.”
“எவ மேல? எது வந்துடுச்சு? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு டா.”
“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.”
“டேய் மச்சான், யாரு டா அது?”
“நம்ம அருவி” என அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“என்னது! அருவிய லவ் பண்றியா?” என அதிர்ந்து எழுந்துவிட்டான் ராகவன்.
“அடச்சீ… சொல்றதை முழுசா கேளு டா. அருவி எனக்கு சிஸ்டர் மாதிரி. அவங்க பிரண்ட் சங்கீதாவைத்தான் நான் லவ் பண்றேன்.”
இப்போதுதான் ராகவனுக்கு மூச்சே வந்தது.
“சங்கீதாவா?” எனக் கேட்டபடி அவன் அருகில் மீண்டும் அமர்ந்தான்.
“ஆமா! உன் லவ்வ சொல்லிட்டியா?”
“இல்ல டா.”
“டேய், லவ் சொல்றதுல லேட் பண்ணக் கூடாது. நாளைக்கே உன் லவ்வ சொல்லிடு.”
“சரி மச்சான்” என்றான் விக்னேஷ்.
மறுநாள் சங்கீதா சாதாரணமாகத்தான் கிளம்பினாள். ஆனால் அன்று அவள் முகம் மிகவும் அழகாக இருந்தது.
ஆபீஸ் வந்ததும் இன்டர்காமில் அவளை அழைத்தான் விக்னேஷ். சங்கீதா தயங்கி நின்றாள்.
“பயப்படாம உன் லவ்வ சொல்லிடு” என்றாள் அருவி.
“சரி” எனத் தலையசைத்தபடி அறைக்குள் சென்றாள்.
தன் இருக்கையில் அமர்ந்தவள் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல் தோன்ற வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் அருவி.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவன் மறைந்து நின்று கொண்டான்.
“யாரோ நம்மை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்கு. யாருன்னு தெரிய மாட்டேங்குது. அவரெல்லாம் இங்க வர மாட்டார். ஒருவேளை அவரா இருக்குமோ? அவர் எதுக்கு நம்ம தேடப் போறார்?” என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் பத்து நாள் தான் இருக்கு அருவி. அப்புறம் உன் முன்னாடி வந்து நான் நிப்பேன். அதுவரைக்கும் உன்னை இப்படி மறைஞ்சு பார்க்கிறது கூட ஒரு சுகம்தான்” என்றான் ராகவன்.
விக்னேஷ் முன் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் சங்கீதா.
“சொல்லுங்க. உங்களைத்தான் கேட்கிறேன். கொஞ்ச நாளாவே உங்க மைண்டு சரியில்லனு நினைக்கிறேன்.”
“சார்.”
“இப்ப வர வர உங்க கவனம் எங்க இருக்குனு தெரியல. எல்லாம் தப்புத் தப்பா பண்ணிட்டு வரீங்க. சொல்லுங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?”
“நான் எதுவும் நினைக்கல சார்.”
“பின்ன ஏன் இவ்ளோ மிஸ்டேக்? சொல்லுங்க.”
சட்டெனக் கோவம் வந்து, “உங்களைத்தான் நினைச்சிட்டு இருக்கேன். போதுமா?” என்றாள்.
அவள் பேசியதைக் கேட்டவன் இன்ப அதிர்ச்சியில் அவளைப் பார்த்தான்.
முகத்தைத் தன் கைகளால் மூடிக் கொண்டாள். மெல்ல அவள் அருகில் வந்தவன் அவள் கைகளை விலக்கினான்.
கண்ணை மூடிக் கொண்டாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்டான் விக்னேஷ். ஆச்சரியத்தில் விழிவிரித்து அவனைப் பார்த்தாள்.
அவளை விட்டு விலகியவன், “நானும் உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றேன் சங்கீதா. I love you. உன்கிட்ட எப்படியாவது சொல்லிடணும்னு முடிவு எடுத்தேன். ஆனா இதை நான் எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான்.
அவனைத் தள்ளிவிட்டு வெட்கப்பட்டுக் கொண்டே அறையிலிருந்து வேகமாக ஓடி வந்த சங்கீதா, அருவியை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளிடம் நடந்ததைச் சொன்னாள்.
“எனக்கு எங்க ட்ரீட்?”
“கண்டிப்பா தாரேன் ஈவினிங்.”
“இங்க சிலர் ஆம்பளைகளை மயக்கவே வேலைக்கு வராங்க” என்றாள் ஷீலா.
“ஆமா” என்றாள் ரூபா.
“அதெல்லாம் நீங்க பண்ற வேலை. இப்ப என்ன சொன்னீங்க?”
“நாங்க உண்மையைத்தான் சொன்னோம்” என ரூபா கூறினாள்.
“நேத்து நைட் நீ எங்க இருந்தீங்கனு நான் உண்மையைச் சொல்லவா?”
“நீ ரொம்ப பேசுற.”
“வாயை மூடுங்க” என்றாள் சங்கீதா.
அப்போது அருவியை விக்னேஷ் அழைத்தான்.
“சொல்லுங்க சார்.”
“அருவி, உங்களை புது MD-க்கு PA-வா அப்பாயிண்ட் பண்ணிருக்கேன்.”
“சார், எனக்கு…”
“இந்த ஒரு மாசத்தில் நீங்க நல்லா வேலையைக் கத்துக்கிட்டீங்க. உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு.”
“தேங்க்யூ சார்.”
“அப்புறம் புது MD இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்துருவார்.”
“சரி சார்” என்றவள் வெளியே வந்தாள்.
சங்கீதா அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்னடி விஷயம்?”
அவளிடம் கூறினாள்.
“உன் திறமைக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு.”
“என்னால இதை நம்பவே முடியல. எப்படி இதெல்லாம் நடக்குதுன்னு தெரியல” என்றாள் அருவி சந்தோஷத்துடன்.
மறுநாள் காலையில் இருவரும் சீக்கிரமாகக் கிளம்பி அலுவலகம் வந்தார்கள்.
“அருவி, நீங்கதான் புது MD-யை வெல்கம் பண்ணனும்.”
“சரிங்க சார்” என்றாள் அருவி சிரித்த முகமாக. இன்று அவள் இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள்.
“அருவி, இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க” என்றாள் சங்கீதா அவள் காதில் மெதுவாக.
“அப்டிலாம் இல்ல. நான் எப்பவும் போலதான் இருக்கேன்.”
“இன்னக்கி உன்னைப் பார்க்கும்போது எனக்கே முத்தம் கொடுக்கணும் போல தோணுதே.”
“ச்சீ போடி” என வெட்கத்துடன் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தாள் அருவி.
அவர்கள் முன்னால் கருப்பு நிற கார் வந்து நின்றது. அதிலிருந்து சாக்லேட் கலர் கோட் சூட் அணிந்து, கண்ணில் கூலிங் கிளாஸ் போட்டு அழகாக இறங்கினார் அவன்.
“அவர் என்…” என்று அருவி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் வந்து நின்றவன் கூலிங் கிளாஸை கழட்டி அவளைப் பார்த்து அழகாகச் சிரித்தான் ராகவன்.
அவனைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றாள் அருவி.
♥️ அருவி ராகவனை மன்னிப்பாளா?!
தெரிஞ்சுக்க அடுத்த எபிஸோடை மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
