இதழ் – 28
“இவர் நம்மளை எப்ப கட்டிப்பிடிப்பார், எப்ப முத்தம் கொடுப்பார் அப்டினுதான் நினைச்சிட்டு இருக்க” என்றான் ராகவன்.
அவன் கூறியதைக் கேட்ட அருவி,
“இல்லையே… நான் அப்டில்லாம் நினைக்கல… நினைக்கலையே!” என்றாள் வேகமாக.
‘சரி, அதை விடு. இன்னும் கொஞ்ச நாள்ல அப்படி நினைக்க வைக்கிறேன்’ என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில்…
“ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர சொல்லிட்டு கனவு காண்றதைப் பாரு” என அவனை வாய்க்குள் திட்டினாள்.
“எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு” என்றான் அவளை மேலும் கீழும் பார்த்தபடி.
“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் காட்டுறேன். அதுக்கு அப்புறம் என்னை நம்புவீங்களா?”
“கண்டிப்பா நம்புவேன்.”
வேகமாக ஐஸ்கிரீமை எடுத்தவள் அதைத் திறந்து வேக வேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.
பாதி அவள் சாப்பிட்டதும், “போதும்… எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுடாத” என அவள் கையிலிருந்து ஐஸ்கிரீமை வாங்கி டேபிளில் வைத்தான்.
அப்போது அவள் உதட்டில் கொஞ்சம் ஐஸ்கிரீம் ஒட்டியிருப்பதைப் பார்த்தான்.
“நான் போறேன்” என அவள் திரும்பினாள்.
“ஒரு நிமிஷம்” என்றான்.
“என்ன?” எனக் கேட்டவளை வேகமாக இழுத்தணைத்து, அவள் இதழில் இருந்த ஐஸ்கிரீமோடு சேர்த்து அவள் உதட்டின் சுவையையும் மொத்தமாகச் சுவைத்தெடுத்தான் ராகவன்.
அதிர்ந்தவள் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்து கண்ணடித்தபடியே அவள் இதழை விடாமல் சுவைத்துக் கொண்டிருந்தான் ராகவன்.
தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளிவிட்டவள், “பளார்” என அவன் கன்னத்தில் அறைந்து, முறைத்தபடி வெளியே சென்றாள் அருவி.
அவள் சென்றதும் அரைக்கதவைத் தட்டினாள் ரூபா.
“கமின்” என்றான் ராகவன், அவளை நிமிர்ந்து பார்க்காமல் லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டு.
“சார், நீங்க இந்த பைல்ல சைன் பண்ண வேண்டியது இருக்கு சார்” என்றவள் வேண்டுமென்றே குனிந்து பேசியபடி.
அவன் அந்த பைலைப் பார்த்துக் கொண்டிருக்க,
“சார்…”
“ம்.”
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள் மேலும் குனிந்து.
“என்ன பேச்சு… ஒரு மாதிரி இருக்கு” என்றவன் நிமிர்ந்து பார்க்க, அவள் அணிந்திருந்த டாப்பின் மேல் பட்டன் இரண்டு அவிழ்ந்திருந்தது.
அவன் முன்னால் வேண்டுமென்றே குனிந்தபடி நின்று குலைந்து பேசிக் கொண்டிருந்தவளை முறைத்துப் பார்த்தவன், “இங்க வா” என்றான் சைகையால்.
அவன் தன்னை ஆசையாக அழைக்கிறான் என நினைத்து வேகமாக அவன் அருகில் சென்றவளை, “பளார்” என கன்னத்தில் அறைந்தான்.
“இனிமே என் கிட்ட இந்த மாதிரி டிரெஸ் பண்ணிட்டு வந்தா பிச்சு போடுவேன். போ” என்றான் கோபமாக.
தன் கன்னத்தைத் தடவியபடி அறையை விட்டு வெளியே வந்தவளிடம் ஷீலா கேட்டாள்.
“போடி நீ வேற.”
“ஏன்? உன் பிளான் ஒர்க்அவுட் ஆகலையா?”
“இவன் ரொம்ப ஓவராதான் பண்றான்.”
“என்னாச்சுன்னு சொல்லு.”
“அந்த ராகவன் என்னை அடிச்சிட்டான்.”
“என்னது? அடிச்சிட்டாரா?”
“ஆமா! என் அழகைப் பார்த்து என் பின்னாடி சுத்தாத பசங்களே இல்ல. ஆனா இவர் ரொம்பதான் ஓவரா போறார். என்னை அடிச்சதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்” என்றாள் ரூபா கோபமாக.
“விடுடி… பார்த்துக்கலாம்” என்ற ஷீலாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம்.
(நல்லவேளை அடிவாங்கிட்டு தான் வந்திருக்கா… எங்க இவ அவரை வளைச்சுப் போட்டுடுவாளோன்னு பயந்துட்டேன்) எனத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் ஷீலா.
அடுத்த நாள், “சீக்கிரம் வாடி… டைம் ஆச்சு” எனக் கத்தினாள் அருவி.
“என் லவர்கிட்ட நைட் போன் பேசித் தூங்க லேட் ஆயிடுச்சு. நீ கிளம்பு… நான் வரேன்.”
“நீ ரொம்பதான்டி பண்ற” என்றபடி அருவி மட்டும் அலுவலகம் கிளம்பிச் சென்றாள்.
வரும் வழியில் அவளை காரில் வழிமறித்தான் ரகு. முதலில் அவனை அடையாளம் தெரியாமல் பார்த்தவள்,
“நீயா!” என்றாள்.
“ஆமா டியர்… நான்தான்.”
“ஒழுங்கா பேசு… இல்ல மரியாதை கெட்டுடும்.”
“அழகி… எனக்கு உன் அழகு ரொம்ப புடிச்சிருக்கு. இங்க பாரு… அவன் கிட்ட நீ வேலை பாக்குறதால உனக்கு எவ்வளவு சம்பளம் தர்றான்? என்கிட்ட வா… உன் அழகுக்காகவே நான் உனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன்.”
அவள் அவனை முறைத்தாள்.
“உனக்கு மாசம் நான் ஐம்பதாயிரம் சம்பளம் தரேன். நீ வேலை பார்க்கணும்னு கூட இல்ல… நான் சொல்ற வேலையை மட்டும் பாத்தா போதும்.”
அவன் கன்னத்தில் “பளார்” என அறைந்தவள், “பொறுக்கி… செருப்பு பிஞ்சிடும்” என்று ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.
“உன்னை கவனிச்சுக்க வேண்டிய விதத்தில் நான் பார்த்துக்கறேன். என்னையா பொறுக்கினு சொல்லிட்டு போற உன்ன என்ன பண்றேன்னு பாரு” எனக் கருவிக் கொண்டான்.
அருவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. “அவனை இன்னும் ரெண்டு அடி அடிச்சிருக்கணும்” என நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளை அழைத்தான் ராகவன்.
“இவருக்கு வேற வேலையே இல்லை” என்று வேகமாக வந்தவள்,
“உங்களுக்கு என்னதான் வேணும்? எப்ப பார்த்தாலும் சும்மா சும்மா கூப்பிட்டுட்டே இருக்கீங்க. பேசாம உங்க சீட்டு பக்கத்துல எனக்கு ஒரு சீட்டு போட்டுருங்க… நான் உங்க பக்கத்திலேயே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அப்பதான் உங்களுக்கு வாய் வலிக்காம இருக்கும்… நடக்குறதுக்கு எனக்கும் கால் வலிக்காம இருக்கும்” எனப் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளருகில் வந்தவனைத் தள்ளிவிட்டவள், “நான் தான் ஒதுங்கி வந்துட்டேன்ல… அப்புறம் ஏன் என்னைத் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க? உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?!” என அவள் பேசிக் கொண்டே போக, சட்டென அவள் இதழில் முத்தமிட்டான்.
இப்போது அவளால் அவனை விலக்க முடியவில்லை. ஒரு கையால் அவள் பின்னந்தலையிலும், ஒரு கையால் அவள் இடுப்பிலும் பிடித்திருந்தான் ராகவன்.
“ம்ம்…” என அவள் மூச்சுத்திணற, மனமில்லாமல் அவளை விடுவித்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.
“புருஷன்-பொண்டாட்டிக்குள்ள சாரி சொன்னா மன்னிச்சிடணும். நீ ஓவரா பேசிக்கிட்டே இருக்க. உன் பேச்சை நிப்பாட்ட எனக்கு வேற வழி தெரியல… அதான் கிஸ் பண்ணினேன். சாரி.”
இப்போது அவனை அடிக்க அவள் கை ஓங்க, அவள் கையைப் பிடித்தவன்,
“கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தால வேணும்… மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி” என்றான்.
மறுநாள் அழகாக அவனுக்கு பிடித்த ஊதா நிற சேலையை அணிந்து வந்திருந்தாள் அருவி. அந்த கலர் அவனுக்கு பிடிக்கும் என்று சங்கீதாவுக்குத் தெரியும். அதனால்தான் வலுக்கட்டாயமாக அந்த சேலையைக் கட்ட வைத்தாள்.
அறைக்குள் வந்த அருவி, “குட் மார்னிங் சார்” என்றாள்.
“நீ கொண்டு வர்ற டிசைன் எனக்கு சந்தேகமா இருக்கு.”
“அதனால?”
“என் முன்னாடியே நீ வரை… அதை நான் பாக்கணும்.”
“அதெல்லாம் முடியாது.”
“அப்போ நீ வரையல.”
“தேவை இல்லாம பேசாதீங்க. என்னை என்ன வேணா பேசுங்க… என்னோட திறமையைப் பத்தி நீங்க பேச வேண்டாம்.”
“அப்போ என் முன்னாடி வரைஞ்சு காட்டு.”
“இப்ப உங்களுக்கு என்ன? உங்க முன்னாடி இந்த டிராயிங் டிசைன் நான் வரையணும்… அவ்வளவுதான?”
“ஆமா! புது டிசைனா… அழகா இருக்கணும்.”
“சரி” என்றாள்.
தன்னருகே சேரைப் போட்டு, “உட்காரு” என்றான்.
“பரவாயில்ல… நான் நின்னுகிட்டே வரையிறேன்.”
“சரி… அதுக்கு மேல உன் இஷ்டம்.”
அவள் குனிந்தபடி டேபிளில் கையை ஊன்றி அழகாக வரைய ஆரம்பிக்க, வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தலையை அழகாகப் பின்னி முல்லைப்பூ வைத்திருந்தாள். காதோரத்தில் சுருள் முடி அழகாக இருக்க, நெற்றியில் சின்ன ஊதா நிற பொட்டு, நெற்றிவகிட்டில் குங்குமம். கழுத்தில் அவன் கட்டிய தாலியும் மெல்லிய செயினும் இருந்தது.
அவள் கன்னம் பன் போல் இருக்க, அதை கடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது.
‘கடிச்சா அடிப்பா… நமக்கு எதுக்கு வம்பு’ என அமைதியாக அமர்ந்திருந்தான்.
கண்களால் அவளை அளவெடுத்துக் கொண்டிருக்க, எதார்த்தமாக அவள் சேலை விலகி, பெண்ணின் எலுமிச்சை நிற இடுப்பு தெரிந்தது. அப்போது அவனுக்கு எங்கெல்லாமோ நினைவு சென்றது.
‘நம்ம பொண்டாட்டி இவ்ளோ அழகா இருக்கா… இந்த அழகை ரசிக்காம அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்’ என நினைத்தவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.
மீண்டும் சேலை விலகி அவன் கண்களுக்கு விருந்தாகத் தெரிய, ‘வேணாம் ராகவா… சொன்னா கேளு… பொறுமையா இரு’ எனத் தன்னை கட்டுப்படுத்தி வேறு எங்கோ பார்ப்பது போல் இருந்தான்.
“இது ஓகே-வா?” எனக் கேட்டாள் அருவி.
“நல்லா இருக்கு… இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லா இருக்கும்” என்றான்.
அதை மீண்டும் வரைய ஆரம்பித்தாள். இப்போது அவள் குனிந்திருக்கையில் அவளது கழுத்துக்கு கீழ் தெரிய,
‘ராகவா… என்னடா இன்னைக்கு உனக்கு வந்த சோதனை… மேலே பார்த்தா கழுத்துக்கு கீழே… கீழே சற்று இறக்கிப் பார்த்தா இடுப்பு தெரிஞ்சு மனுஷனை ரொம்ப படுத்துது’ என்றவனை பொறுமை தாங்க முடியாமல் அவனது ஆண்மை வேறு அவனை சோதனை செய்ய…
“அருவி… நீ டிசைன் வரைஞ்சது போதும். நீ போ” என்றான் மெதுவாக.
“ஏன்? நான் இன்னும் வரையல” என்றாள் அவனைப் பார்க்காமல்.
“சொன்னா கேளு… நீ வரைஞ்ச வரைக்கும் போதும். கிளம்பு.”
“உங்க இஷ்டத்துக்கு வா-னு சொல்றீங்க… உங்க இஷ்டத்துக்கு போ-னு சொல்றீங்க… நீங்க சொல்றதெல்லாம் நான் கேட்கணுமா? அதெல்லாம் முடியாது.”
“என்ன… ரொம்ப சோதிக்காதடி ப்ளீஸ்… முதல்ல நீ இந்த இடத்தை விட்டு போ.”
“எதுக்காக? இப்ப என்னை விரட்டிட்டு இருக்கீங்க… எப்பவுமே நீங்க சொல்றதுதான் நான் கேட்கணுமா? இந்தத் தடவ நீங்க என்ன சொன்னாலும் சரி… நான் போக மாட்டேன்.”
“இதுக்கு மேல என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லடி” என்றவன் செய்த செய்கையில் செய்வதெரியாது திகைத்து, அவள் அப்படியே அவன் பின்னந்தலையில் விரலை வைத்து கோர்த்துக் கொண்டு, தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
❤️ அவன் அப்படி என்ன பண்ணியிருப்பான் தெரியலையே…
தெரிஞ்சுக்க அடுத்த எபிஸோடை மிஸ் பண்ணாம படிங்க ♥️
