“இது வரைக்கும் எந்த புருஷனும் பொண்டாட்டி கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தை நான் இப்ப உன் கிட்ட சொல்லப் போறேன்.”
“என்ன விஷயம்?” என சாதாரணமாகக் கேட்டாள் அருவி.
“நீ அம்மாவாகப் போற” என்றான் ராகவன். அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“நீங்க இப்ப என்ன சொன்னீங்க? ‘நான் அம்மா’னு?” என திக்கித் திக்கிக் கேட்டாள்.
“ஆமா!”
அருவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதே நேரம் அழுகையும் வந்தது. அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கதறி அழுதாள்.
எதற்காக அவள் அழுகிறாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஒரு பொண்ணு தன் தாயான செய்தியை புருஷன் கிட்ட சொல்லுவா. ஆனா அதே செய்தியை புருஷன் தன்கிட்ட சொல்றது கேட்டு அவளால் சந்தோஷம் தாங்க முடியவில்லை.
அவனும் தானும் எந்த மாதிரி சூழ்நிலையில் கணவன்-மனைவியா ஒண்ணு சேர்ந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தவளுக்கு அழுகை தாங்க முடியவில்லை. அவன் மார்பில் அடித்தாள்.
“ப்ளீஸ் டி, அழாத… எனக்கு உன்னோட பீலிங் புரியுது” என அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “எனக்கு இந்த பிறந்தநாள்ல நீ மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்திருக்க. ஐ லவ் யூ அருவி” என்றான்.
வேகமாக அவனை விட்டு விலகியவள்,
“நான் அம்மாவாகப் போறேன்… இது என்னோட குழந்தை… என்னோட குழந்தை!” எனக் கத்தினாள்.
“சரி சரி, இது உன்னோட குழந்தை தான். நீ டென்ஷன் ஆகாத” என்றவன் அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவிடம்,
“அவளை நீ கவனமா பார்த்துக்கோ” எனக் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
மறுநாள் காலையில் சோர்வாகப் படுத்திருந்தாள் அருவி.
“அருவி, கிளம்பு. ஆபீஸ் போகலாம்” என்றாள் சங்கீதா.
“இல்லடி, எனக்கு டல்லா இருக்கு.”
“இன்னைக்கு கண்டிப்பா எல்லாரும் வரணும்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு ராகவன் அண்ணனுக்கு பிறந்தநாள். வாடி…”
“சரி” என ஆபீஸ் சென்றாள். அன்று மாலை பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க எல்லாருக்கும் ரெண்டு மாசம் சம்பளத்தை சேர்த்துக் கொடுக்கிறேன்” என்றான் ராகவன்.
சந்தோஷமாக அனைவரும், “ஹாப்பி பர்த்டே சார்! தேங்க் யூ!” எனக் கத்தினார்கள்.
பிறந்தநாள் கேக்கை வெட்டியவன் அவளைப் பாவமாகப் பார்க்க, வேறு புறம் திரும்பிக்கொண்டாள் அருவி.
விக்னேஷுக்கு ஊட்டிவிட்டான். சற்று நேரத்தில் பார்ட்டியில் அனைவரும் சந்தோஷமாக ஆடிப் பாடிக் கொண்டிருக்க, அருவி மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு என்னவோ போல் இருக்க, காலார நடக்கலாம் என இரண்டு எட்டு நடந்து கொண்டிருந்தாள். திடீரென அவள் வாயை யாரோ பொத்தி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திடுக்கிட்டு திமிறியவள் திரும்பிப் பார்க்க, சிரித்தபடி நின்றிருந்தான் ராகவன்.
“இப்படி வாயைப் பொத்தி கூட்டிட்டு வரீங்க… உங்களுக்கு வெக்கமா இல்ல?”
“நீ என் பொண்டாட்டி டி. நான் ஏன் வெக்கப்படணும்? ஆமா! சங்கீதா கேக் கொடுத்ததுக்கு சாப்பிட மாட்டேன்னு சொன்னியாமே.”
“ஆமா! எனக்குப் பிடிக்கல.”
“கேக் பிடிக்கலையா… இல்ல என்னைப் பிடிக்கலையா?”
“ஆமா! எனக்கு உங்களைப் பிடிக்கல. போதுமா?” என்றாள்.
“இப்ப நீ கேக் சாப்பிடுவ.”
“சாப்பிட மாட்டேன்.”
“சாப்பிடுவ” என அவளருகில் வந்தான்.
“எப்படி?” என புரியாமல் கேட்டாள்.
“இப்படித்தான்” என்றவன் கையில் வைத்திருந்த கேக்கைத் தன் வாயில் வைத்து, அப்படியே அவளுக்கு ஊட்டினான்.
கோவத்தில் அவள் அவன் உதட்டைக் கடித்தாள்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, “ம்ம்…” என்றவளின் நிலை கருதி அவளை விட்டு விலகியவன்,
“ராட்சசி! உதட்டை கடிக்கிற” என்றான் தன் உதட்டைப் பார்த்து.
அவன் கூறியதைக் கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தாலும் அமைதியாக இருந்தாள்.
ஒரு வாரம் ஓடியது. ராகவன் போன் அடித்தது.
“ஹலோ, அப்பா.”
“ராகவா, அம்மாக்கு ரெண்டாவது அட்டாக் வந்திருக்கு. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்” என்றார் சேதுராமன்.
வேகமாக மருத்துவமனைக்குச் சென்றான். இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த சரஸ்வதி, “நான் யாரையும் பார்க்க விரும்பல. அவனை இங்கிருந்து போகச் சொல்லுங்க” என்றாள்.
அறை வாசலில் நின்று, “அம்மா, ப்ளீஸ்மா… என்கிட்ட பேசுங்க” என்றான் ராகவன்.
“நான் யாரையும் பார்க்க விரும்பல, பேச விரும்பல. நீ யாருன்னு எனக்குத் தெரியாது.”
அப்பொழுது அறைக்குள் வந்தாள் அருவி.
அவளைப் பார்த்தவர், “அருவி…” என்றார் பாசமாக.
வேகமாக அவர் அருகில் சென்றாள். அவளைக் கட்டிக்கொண்டவர், “அருவி, இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு என்னை மன்னிச்சுடு. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டானா?”
“இல்லைங்க அத்தை… அவரை நான் மன்னிச்சிட்டேன். நாங்க இப்ப சந்தோஷமாதான் இருக்கோம். நானும் அவர் கூடவே… அவர் ஆபீஸ்லதான் வேலை பார்க்குறேன்.”
“என்னதான் இருந்தாலும் இப்படிப்பட்ட பிள்ளையைப் பெத்த எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் செத்துப் போறேன்” என்றார் சரஸ்வதி.
“நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. நீங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும். உங்க பேரன்-பேத்தியை நீங்கதான் வளர்க்கணும்.”
“நீ என்ன சொல்ற அருவி?” என அவள் கையைப் பிடித்துக் கேட்டாள்.
“ஆமா அத்தை… நீங்களும் மாமாவும் தாத்தா-பாட்டி ஆகப் போறீங்க.”
“ரொம்ப சந்தோஷம்… ராகவா, இங்க வா” என்றாள்.
வேகமாக வந்து தன் தாயை அணைத்துக்கொண்டான். இப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
சற்று நேரத்தில் வெளியே வந்த அருவிக்கு பின்னாலே வந்தவன், “அருவி” என்றான்.
திரும்பிப் பார்த்தவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, “தேங்க்ஸ் டி” என்றான். அவள் எதுவும் பேசவில்லை.
மறுநாள் சங்கீதா ஆபீஸ் வரவில்லை. அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது.
அது முடிந்ததும், “நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றான் அருவியிடம்.
“பரவாயில்லை.”
“உன்னைப் போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்” என்றான்.
தன் டேபிளில் வந்து அமர்ந்தவளுக்கு தாகம் எடுக்க, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். சற்று நேரத்தில் அவளுக்கு ஏதோ போல் இருக்க, ரெஸ்ட் ரூம் சென்றாள். அங்கே சீலாவும் ரூபாவும் தயாராக இருந்தனர்.
அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு வெளியில் மறைவாக நின்றிருந்த காரில் ஏற்றிவிட்டனர். மீண்டும் ஆபீஸுக்குள் வந்து எதுவும் தெரியாதது போல் தங்கள் வேலையைத் தொடங்கினர்.
அப்பொழுது லேட்டாக வந்த சங்கீதா அருவியைக் காணாமல் ராகவனிடம் சென்றாள்.
“அண்ணா, அருவியைக் காணோம்.”
“மீட்டிங் முடிஞ்சதும் நான் அவளை ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்.”
ஆபீஸ் முழுவதும் அவளைத் தேடினார்கள். அவளைத் தேடுவதைப் பார்த்து ரூபாவும் சீலாவும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
“எனக்கு என்னமோ இவங்க மேலதான் டவுட்டா இருக்கு” என்றாள் சங்கீதா. சீலாவையும் ரூபாவையும் காட்டி.
“நீ என்ன சொல்ற?”
“ஆமா, இவங்க தான். அவ கிட்ட வம்பிழுத்துட்டே இருந்தாங்க. அதனால இவங்களைப் புடிச்சு விசாரிச்சா, அருவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியும்.”
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, “எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.
“ஒழுங்கா சொல்லுங்க. அருவி வேற யாரும் இல்ல… என் பொண்டாட்டி. நீங்க இப்ப உண்மையை சொல்லல… என்னோட ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்” என்றான் பல்லைக் கடித்தபடி ராகவன்.
“இல்ல… நாங்க எதுவும் பண்ணல” என்றனர் எச்சில் விழுங்கியபடி.
சட்டெனத் தன் துப்பாக்கியை எடுத்து சீலாவின் நெற்றியில் வைத்து, “உண்மையை சொல்றீங்களா இல்ல?” என உருமினான் புலியைப் போல்.
“சார், எங்களை மன்னிச்சிடுங்க… நாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆபீஸ் விட்டுப் போகும்போது ரகு சார் எங்களை சந்திச்சார்” என அவன் கூறியதைச் சொல்ல ஆரம்பித்தனர்.
“இங்க பாருங்க, உங்களுக்கு நான் அஞ்சு லட்சம் தரேன்.”
“எதுக்கு?” எனக் கேட்டாள் ரூபா.
“அந்த அருவி எனக்கு வேணும். அதுக்கு நீங்க உதவி பண்ணணும்.”
“நாங்க என்ன பண்ணணும் மட்டும் சொல்லுங்க” எனக் கேட்டாள் சீலா.
அவர்களிடம் ஒரு பொடியைக் கொடுத்தான். அது வெள்ளையாக இருந்தது.
“இது என்ன?”
“போதைப் பொடி.”
“புரியல.”
“இந்தப் பொடியை அருவி குடிக்கிற தண்ணில கலந்து கொடுத்துடுங்க.”
“குடுத்தா அவளுக்கு சந்தேகம் வராதா?”
“இல்ல… இதை தண்ணில கலந்தாலும் தண்ணி அதே கலர்லதான் இருக்கும். ஆனா குடிச்ச பத்து நிமிஷத்துலயே ஆளு சொர்க்கத்துக்கு போன மாதிரி போதை ஏறிடும். அப்புறம் அவளை என்கிட்ட கொடுங்க. அவளை நான் அனுபவிச்சு, அதை போட்டோ எடுத்து அவளை அசிங்கப்படுத்தணும். என்னை அடிச்சதுக்கு அவளுக்கு இதுதான் தண்டனை” என்றான் கொடூரமாகச் சிரித்தபடி. அவனோடு சேர்ந்து இவர்களும் சிரித்தனர்.
“இது தான் நடந்துச்சு.”
“அருவியை என்ன பண்ணுனீங்க? சொல்லுங்க!” என ஆவேசமாகக் கத்தினான் ராகவன்.
“அந்த போட்டோவை வச்சு அவளை அசிங்கப்படுத்தினா… அப்புறம் அருவி இந்த ஆபீஸ விட்டு போயிடுவா. உங்களை ஈஸியா வளச்சு போட்டுடலாம்னு நெனச்சோம். அதனால…”
“அதனால என்ன பண்றீங்க? சொல்லுங்க!”
“இன்னைக்கு அருவி குடிக்கிற தண்ணில நாங்க அந்தப் பொடியை கலந்துட்டோம்.”
“இப்போ அவ எங்க?” என இரு பெண்களின் கழுத்தில் கையை வைத்து அவர்களை சுவற்றோடு தூக்கினான்.
“அவ மயங்குனதும் கார்ல ஏத்தி விட்டுட்டோம்.”
“எங்க?”
“எங்களுக்கு தெரியாது” என அழுதனர்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரகுவின் போனை வைத்து அருவி இருந்த ஓட்டலுக்கு வேகமாகச் சென்றான் ராகவன். ரிசப்ஷன் பெண்ணிடம் அருவியின் போட்டோவைக் காட்டிக் கேட்டான்.
“ஆமா சார், இந்தப் பொண்ணு… இந்தப் பொண்ணை நாலு பேரு கூட்டிட்டுப் போனாங்க” என்றதும் வேகமாக அவள் கூறிய அறைக்குச் சென்றான்.
இங்கு அறையில் அரை மயக்க நிலையில் பெட்ஜில் படுத்திருந்தாள் அருவி.
“பேபி, இன்னைக்கு உனக்கு நான் தான் புருஷன்” என்றவன் அவள் கையைப் பிடித்தான்.
“என்னை விடு டா!” எனக் கத்தினாள்.
அவள் கன்னத்தில் அறைந்தவன் தன் சட்டையைக் கழட்டி, அவள் அருகில் சென்று அவளது சேலை மாறாப்பில் கை வைத்தான்.
♥️ அச்சச்சோ! ராகவன் அருவியை காப்பாத்திருவானா?
தெரிஞ்சுக்க அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க ❤️
