இதழ் – 7
“என்னங்க!!” என்றாள் அருவி நெளிந்தபடி.
“என்ன பொண்டாட்டி?”
“என்னை விடுங்க.”
“மாட்டேன்.”
“யாராவது வந்துடுவாங்க.”
“வரட்டும்” என்றான்.
“பார்த்துடுவாங்க.”
“பார்க்கட்டும்” என அடம் பிடித்தான் ராகவன்.
அவன் கூறியதை கேட்டு பத்மா மெல்ல புன்னகைத்துக் கொண்டு நாகரீகமாக அங்கிருந்து நகர்ந்து மீண்டும் சோபாவில் அமர்ந்து கொண்டார்.
அவர் சென்றதை கவனிக்காத ராகவன் இன்னும் அவளை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டிருந்தான்.
“சொல்றதை கேளுங்க… யாராவது வரப் போறாங்க… என்னை விடுங்க” என சிணுங்கினாள் அருவி.
“யாராவது வந்தா என்ன? பாத்தா என்ன?” என தன்னை அறியாமல் அவளிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவன் அப்பொழுதுதான் கவனித்தான் பத்மா அங்கு இல்லாததை.
“அவங்க எப்ப போனாங்கன்னு தெரியலயே? நம்ம வேற இவ கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்றவன் சட்டென்று அவளை விட்டு விலக.
“என்னாச்சுங்க?”
“இல்ல… போறேன் நான்… யாராவது வர போறாங்க” என உளறியவன் வந்த வழியே செல்ல.
அவன் செய்கையில் தனக்குள் சிரித்துக் கொண்டாள் அருவி.
அப்பொழுதுதான் சரஸ்வதி திருமண புகைப்படத்தை எடுத்து வந்து, “இந்தா பத்மா பாரு… நம்ம பிரெண்ட்ஸ் எல்லாருமே இந்த போட்டோல இருக்காங்க… நீ மட்டும் தான் இல்ல… அடுத்த மாசம் நம்ம கலாவோட பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னா… கண்டிப்பா அதையாவது மிஸ் பண்ணாம வந்துடு.”
“வரேன்” என பத்மா கூறிக் கொண்டிருக்க அப்போதுதான் வீட்டிற்குள் வருவது போல் முன் வாசல் வழியாக வந்தான் ராகவன்.
பத்மாவை பார்த்து “ஹாய்!! ஆண்ட்டி எப்ப வந்தீங்க?” என கேட்டான்.
“இப்பதான் வந்தேன்.”
“நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன். நீ இப்பதான் வரியா?” என பத்மா கேட்க.
“ஆமா! ஆண்டி நான் ஆபீஸ்ல இருந்து இப்பதான் வரேன்” என்றவன் வேகமாக தன் அறைக்கு சென்றான்.
அப்பொழுது சரஸ்வதி, “என்ன ஆச்சு இவனுக்கு? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எதுக்கு உன்ன பார்த்து இப்படி வெக்கப்படறான்?”
“அது வந்து கையும் களவுமாக மாட்டிக்கிட்டான். அதனாலதான் இப்படி வெட்கப்படறான்.”
“நீ என்ன சொல்ற?” என பத்மா கேட்டார் சரஸ்வதி.
“இல்ல உன் பையனும் மருமகளும் பொருத்தமான ஜோடி தான். அவங்க ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடு. என் கண்ணே பட்டுடுச்சு.”
“அவங்க ரெண்டு பேரையும் நீ எப்ப சேர்த்து வச்சு பார்த்த?”
“பார்த்தேன்… உன் பையன் அமைதியா இருந்தாலும் பொண்டாட்டி மேல ரொம்ப பாசமா தான் இருக்கான். எப்படியோ இன்னும் பத்து மாசத்துல நீ பாட்டி ஆகிறது ஆகிடுவ. சரி எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்” என எழுந்தார் பத்மா.
“இரு சாப்பிட்டு போகலாம்” என சரஸ்வதி கூற.
“இல்ல! எனக்கு வயிறும் மனசும் நிறைந்த மாதிரி இருக்கு. இன்னொரு நாள் நம்ம பார்க்கலாம்” என பத்மா விடை பெற்று சென்றதும்,
“இவளுக்கு என்ன ஆச்சு? உன் மருமகள் சந்தோஷமா இல்லனுட்டு, இப்போ ராகவனை பார்த்து இப்படி சொல்லிட்டு போறா” என சரஸ்வதி யோசித்துக் கொண்டிருக்க.
“என்ன மாம் என்ன யோசனை பண்றீங்க!! பத்மா ஆண்டி ஏதாவது சொன்னாங்களா!!”
“உன்னை கொஞ்சம் நல்ல பையன்னு சொல்லிட்டு போற… அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு” என கூற.
“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? அவங்க சொன்னது போல் நான் ரொம்ப ரொம்ப நல்ல பையன். உங்களுக்கு தான் தெரில” என்றான்.
அப்பொழுது அகிலா துணிகளை துவைத்து விட்டு கிச்சனுக்கு வர அளவுக்கு அதிகமான மாவை கலந்து கொண்டிருந்தாள் அருவி ஏதோ யோசனையில்.
“உனக்கு என்ன ஆச்சு அருவி?” என கேட்டாள் அகிலா.
“ஏன் அப்டி கேட்குற? எனக்கு ஒண்ணுமில்ல” என்றாள் அருவி.
“என்ன ஆச்சு உனக்கு? நைட் மட்டும் தான் டிபன். நீ எதுக்கு இவ்வளவு மாவு கலக்குற? நைட்டுக்கு தோசை தான ஊத்த போறோம்” என அகிலா கேட்க.
“அது வந்து!” என்றவள் அடுத்து மிளகாய் பொடி டப்பாவை எடுத்தாள்.
“ஏய்! அதை எதுக்கு எடுக்குற?” என அகிலா பதறி கேட்க.
“மாவில் கலக்க…”
“எதை? மிளகாய் பொடியவா!!” என அருவி கையில் இருந்த மிளகாய் பொடி டப்பாவை வாங்கி அவள் கேட்க.
“ஆமா! இல்லை” என உளறினாள் அருவி.
“நான் பார்க்கலைன்னா இந்நேரம் இவ்ளோ மிளகாய் பொடியவும் மாவில் கொட்டி கலந்து மிளகாய் பொடி தோசை தான் இன்னக்கி எல்லாருக்கும். ஆமா!! உனக்கு என்னாச்சு?” என அருவியின் முகத்தை பார்த்து கேட்டாள் அகிலா.
“எனக்கு ஒன்னும் இல்ல” என நகம் கடித்தாள் அருவி.
“இன்னைக்கு நீ நீயா இல்லை. உனக்கு என்னமோ ஆயிடுச்சு. அம்மா தாயே இன்னைக்கு நீ சமைக்க வேண்டாம். நானே சமையல பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றாள் கேலியாக.
“இல்ல அகிலா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.”
“ஒன்னும் வேணாம். நீ செய்யறத பார்த்தா நானே தப்பு தப்பா பண்ணிடுவேன் போல. அண்ணா வந்துட்டாரு. நீ போய் அண்ணனை கவனி” என கூறி அகிலா சிரிக்க.
“ச்சீ போடி” என வெட்கப்பட்டுக் கொண்டே ஓடினாள் அருவி.
“என்ன டா இது! இந்த ஒரு வாரமா இல்லாத இந்த வெட்கம் இன்னக்கி புதுசா இருக்கே. நான் இங்க இல்லாத கொஞ்ச நேரம் அதுக்குள்ள என்ன நடந்திருக்கும்?” என தனக்குள் கேட்டுக் கொண்டாள் அகிலா.
சரஸ்வதியும் ராகவனும் பேசிக் கொண்டிருக்க ராகவனை பார்த்ததும் மெதுவாக அவன் பார்க்காத வண்ணம் வேகமாக அறைக்கு ஓடினாள் அருவி.
அதை கவனித்த சரஸ்வதி, “இவளுக்கு என்ன ஆச்சு? எப்பவும் கலகலன்னு இருப்பா… இன்னைக்கு இப்படி வெட்கப்பட்டு ஓடுறா!!” என நினைத்துக் கொண்டார்.
“சரிம்மா எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்.”
“சரி சரி” என தலையசைத்து சென்றான்.
இங்கு அருவிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதன்முதலில் அவன் அவளை அணைத்தது, அவள் இடையில் கை வைத்தது என ஒவ்வொன்றாய் நினைக்க நினைக்க அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
“அச்சோ” என தன்னை அறியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.
இரவு 8 மணி ஆனது. அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
அறைக்கு வந்த அகிலா, “அருவி வாங்க சாப்பிட” என அழைக்க.
“எனக்கு வேணாம்” என்றாள் அருவி.
“எப்பவும் 8 மணிக்கெல்லாம் சாப்பிடுவீங்களே.”
“சாப்பிடுவேன் தான் ஆனா இன்னைக்கு எனக்கு வேண்டாம். அது வந்து ஏன்னு தெரியல பசிக்கல.”
“ஏன் பசிக்கல?”
“தெரியல!! நீ என்ன சும்மா சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்க… போ” என்றாள் அருவி.
“காரணம் எனக்கு தெரியும்!” என்றாள் அகிலா.
“என்ன காரணம் சொல்லு.”
“இன்னைக்கு புதுசா உங்க முகத்தில் ஒன்னு இருக்கே. அது தான் காரணம்.”
“எது?”
“கண்ணாடியை பாருங்க தெரியும்! நான் வரேன்” என கூறி சென்றாள்.
கண்ணாடியில் வந்து தன் முகத்தை பார்க்க அவளுக்கே புதிதாக இருந்தது. இன்றுதான் பூத்த புது மலர் போல் தன்னை உணர்ந்தாள். தன் முகத்தில் வெட்கம் இருப்பதை உணர்ந்தவள் அழகாக சிரித்தாள்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்தாள். ராகவன் தான் வந்திருந்தான்.
அவன் முகத்தை பார்க்க அவளால் முடியவில்லை. திரும்பி நின்று கொண்டாள்.
“அருவி” என்றான்.
“என்னங்க?” என கேட்டாள் தலை குனிந்த படி.
“நீ இன்னும் சாப்பிடலைன்னு அம்மா சொன்னாங்க!! ஏன்?” என கேட்டான்.
“இல்ல வேண்டாம்.”
“ஒருவேளை மத்தியானம் நான் அப்டி கட்டி புடிச்சதால தான் இவ கோவமா இருக்காளோ?” என நினைத்து “ஏன்?” என கேட்டான்.
“எனக்கு வேணாம்.”
“என் மேல கோவமா!!”
அவன் அப்படி கேட்டதும் அவளுக்கு உதடு துடித்தது.
“உங்க மேல நான் ஏன் கோவப்பட போறேன்? எனக்கு பசிக்கல… நீங்க போய் சாப்பிடுங்க” என்றவள் செல்லப் போக அவள் கையை பிடித்து இழுத்தான் ராகவன்.
“என்னை விடுங்க.”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நீ என் முகத்தை கூட பாக்க மாட்டேங்குற… அப்டினா என் மேல கோவம் தான.”
“இல்லை” என தலையசைத்தவள் அவனிடமிருந்து தன் கையை உருவி ஓட இப்போது அவள் சேலை முந்தானையை பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து அவன் மேல் விழுந்தாள் அருவி. அவன் தடுமாறி அவளை அணைத்தபடி பெட்டில் விழுந்தான். இருவரும் விழுந்த வேகத்தில் அவன் உதடு அவள் கன்னத்தில் பட்டு “இச்” என அருவியின் கன்னத்தில் முத்தம் வைத்தான் ராகவன்.
வேகமாக அவனை விட்டு விலகி எழுந்தாள்.
“சாரி! நான் வேணும்னு பண்ணல… தெரியாமா முத்தம்” என்றான்.
அவள் தன் சேலையை சரி செய்து கொண்டாள்.
“நான் எதுக்காக அப்படி செஞ்சேனா?” என விளக்கம் தர முயன்றான்.
“இல்ல… பரவால்ல… நீங்க என்கிட்ட சாரி கேக்க வேணாம்.”
“இல்லை… நான் எதுக்காக அப்படி பண்ணினேன்னு கேட்டுட்டு அப்புறம் நீ” என்றவனை இடைமறித்தவள்.
“இதுல நீங்க விளக்கமா சொல்ல என்ன இருக்கு!! நான் போறேன்” என செல்ல போனவள் மீண்டும் காலை இடறி கீழே விழ போக அவள் கையை பிடித்து தன் புறம் இழுத்தான். மீண்டும் அவன் மேலயே விழுந்தாள்.
இப்போது அவன் உதடு அவள் கழுத்தில் பதிந்தது.
இவ்வளவு நேரமாச்சு ரெண்டு பேரையும் காணாமல் அவர்களுக்காக சரஸ்வதி காத்துக் கொண்டிருக்க, அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்த சேது ராமன்.
“என்ன ஆச்சு மேடம்? யாருக்கு வெயிட் பண்றீங்க?”
“என்னன்னு தெரியல. ஆனா இன்னைக்கு மத்தியானத்திலிருந்து அருவி ரொம்ப சைலன்ட்டாவே இருக்கா. அதான் என்னன்னு எனக்கும் புரியல.”
“உடம்பு சரி இல்லையா? என்னனு நீ கேட்க வேண்டியதுதானே?”
“ராகவன் போயிருக்கான். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”
“சரி நானும் பிரெஷ் ஆகிட்டு வரேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என சேது ராமன் தன் அறைக்கு சென்றார்.
இங்கு தன் மேல் அருவி விழுந்ததும் அதிர்ச்சியில் கண் மூடி இருந்தான் ராகவன். அவள் நிலைமை சொல்லவே வேண்டாம். அவன் மூச்சு காற்று தன் கழுத்தில் பட்டதும் தவித்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள் அருவி…
💝💝💝💝💝
ஹாய் பிரண்ட்ஸ்! கதையை படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க… மிஸ் பண்ணாம எல்லா எபியும் படிங்க ♥️
