இதழ் – 8

ராகவன் பிடித்து இழுத்ததில் அவன் மேல் வந்து விழுந்தாள் அருவி.

அவள் கழுத்தில் அவன் இதழ் பதிந்தது. அவள் மேல் மூச்சு கீழ் வாங்கினாள். அவன் நிலை சொல்லவே வேண்டாம். தடுமாறித்தான் போனான்.

அப்பொழுது அவன் போன் அடிக்க சட்டென இருவரும் விலகினார்கள். அவனை பார்த்து சிரித்தபடி ஓடினாள்.

போனை எடுத்தவன், “ஹலோ!! மச்சான் சொல்லுடா?”

“நாளைக்கு நீ ஃப்ரீயா?”

“ஆமாடா!!” என்றான் ராகவன்.

“நாளைக்கு வெளில போலாமா?” என்றான் அவன் நண்பன்.

“ஓகே டா” என்றவன் போன் பேசிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தான்.

இங்கு அருவி தலை குனிந்தபடி நின்று கொண்டிருக்க,

“அப்பா இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க?”

“உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என சேது ராமன் கூற.

“நீயும் சாப்பிடு அருவி.”

“முதல்ல அவங்களும் மாமாவும் சாப்பிடட்டும். அப்புறம் நம்ம சாப்பிடலாம் அத்தை.”

“என்ன ஆச்சு என் மருமகளுக்கு?” என கேலி கிண்டல் செய்தார் சரஸ்வதி.

“அது ஒன்னும் இல்ல அத்தை. இனிமே இப்படித்தான் இருக்கணும்னு நானாகவே தெரிஞ்சுக்கிட்டேன்.”

“நல்ல பழக்கம்” என்றார் சேது ராமன்.

அப்பொழுது அவள் முகத்தை பார்க்க ராகவனுக்கும் ஏதோ போல் இருக்க அவனும் அமைதியாக சாப்பிட்டான்.

“ராகவ்.”

“சொல்லுங்கப்பா!!”

“நாளைக்கு நீ ஆபீஸ் போறியா!!”

“இல்லப்பா லீவ் போட்டுட்டேன். பிரண்ட்ஸோட வெளில போறேன்.”

சரஸ்வதி, “ஏன்டா? கல்யாணத்துக்கு முன்னாடி தான் பிரண்ட்ஸோட சுத்திட்டு இருந்த… இப்ப கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமேல் உன் பொண்டாட்டி கூட தான் போகணும்.”

“அது வந்தும்மா.”

“நாங்க சொல்றத நீ கேட்கணும்” என்ற சரஸ்வதி தன் கணவனை பார்க்க.

“சரினு சொல்லு” என்றார் தன் மகனிடம் சேது ராமன்.

“சரி… சொல்லுங்க! நாளைக்கு நான் என்ன பண்ணனும்?”

சேது ராமன், “நாளைக்கு நீ அருவிய கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வா.”

“சரி… நான் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்றவன், சீக்கிரமாகவே அறைக்கு சென்று பெட்டில் அமர்ந்திருந்து யோசித்தான்.

“இவகிட்ட நாளுக்கு நாள் உண்மையை சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்… சொல்ல முடியாமலேயே போய்ட்டு இருக்கு. இது இப்படியே போறது நல்லதுக்கு இல்ல. அதனால நாளைக்கு கோயில்ல போய் கண்டிப்பா அருவி கிட்ட சொல்லிடனும்… இந்த விஷயத்தை” என ராகவன் நினைத்துக் கொண்டிருக்க…

“அருவி… நீ போ… நான் பார்த்துக்கறேன்” என்றார் சரஸ்வதி.

“நானும் உங்களுக்கு உதவியா கிச்சனை கிளீன் பண்ணிக்கிறேன்.”

“வேணாம்… நீ போ… நீ ராகவுக்கு பால் எடுத்துட்டு போ.”

“நானும் இருக்கேன்” என சிறிது நேரம் மாமியாருடன் சேர்ந்து அவருக்கு உதவியாக வேலை செய்தவள் மீண்டும் தயங்கி நிற்க.

“என்ன? எப்பவுமே எட்டு மணிக்கு தூக்கம் வருதுன்னு ஓடிடுவ… இன்னக்கி என்ன ஆச்சு… இப்படி தயங்குற?”

“அது வந்து” என வெக்கப்பட்டாள்.

“சரி சரி… எனக்கு டைம் ஆயிடுச்சு நான் போறேன். நீ இங்கே நின்னு வெட்கப்பட்டுட்டு இரு… இப்ப பெரிய பூனை வரும்… நான் கிளம்பிட்டேன்” என அவளை பார்த்து கூற.

“நானும் போறேன்” என பாலை எடுத்து வந்தாள். யோசனையில் இருந்தவன் அருகில் வந்தவள் தலை குனிந்த படி அவனிடம் பாலை நீட்ட.

“என்ன? எப்பவுமே பால் குடிக்கிறதுக்கு ஒரு பக்கம் கதை சொல்லுவ… இப்ப அமைதியா கொடுக்கிற?”

“எனக்கு தூக்கம் வருது” என்றாள் மெதுவாக.

“தூக்கம் வந்தா போய் தூங்கு.”

“நீங்க இதை வாங்கி குடிச்சா தான் நான் போய் தூங்க முடியும்.”

“அருவி… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“சொல்லுங்க?” என்றாள்.

“இப்படி உட்கார்.”

அவன் அருகில் உட்கார சொன்னதும் அவளுக்கு உடல் சிலிர்த்து அவன் உதடு தன் கழுத்தில் பட்டதை நினைத்து பார்த்தவள் “இல்லங்க… எனக்கு தூக்கம் வருது… நீங்க நாளைக்கு சொல்றீங்களா!!” என கேட்டாள்.

“சரி” என்றான்.

பெட்டின் ஒரு ஓரத்தில் படுத்தவள் “இவர் நம்ம கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல போறாரு… நம்ம நாளைக்கு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு இவர்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லுவோம். அதுக்கப்புறம் இவர் என்ன சொல்றாருனு பாப்போம். எப்படியும் இவர் நமக்கு ‘ஐ லவ் யூ’ தான் சொல்ல போறாரு… அதுக்கு முன்னாடி நம்ம சொல்லிடனும்” என்று நினைத்து சந்தோஷத்தில் உறங்கினாள் அருவி.

காலையில் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அவள். அப்பொழுது போன் அடிக்க அட்டன் செய்தவள் “ஹலோ!!” என்றாள்.

“அருவி… நான் ராதா பேசுறேன்.”

“சொல்லுங்க அக்கா.”

“எப்படி இருக்க? நல்லா இருக்கியா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க அக்கா. நீங்க சொன்ன மாதிரியே அவங்கள நான் நல்லா கவனமா பார்த்துக்கிறேன் அக்கா. அவங்களும் என்னை நல்லா பாத்துக்கிறாங்க… நான் சந்தோஷமா இருக்கேன்” என மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.

“சரி… இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு… இதே போல எப்போதும் நீ சந்தோஷமா இரு.”

“சரிக்கா… நான் வந்து கூப்பிடட்டுமா? கோவிலுக்கு கிளம்பிட்டேன்.”

“அப்படியா!”

“ஆமா அக்கா. சரி நான் போனை வைக்கட்டுமா!!”

“சரி” என்றாள் ராதா.

“அருவி… போலாமா! கிளம்பிட்டியா!!” என கேட்டபடி வந்தான் ராகவன்.

“ம்… கிளம்பிட்டேன்” என்றாள்.

அப்பொழுது அவள் உள்ளாடை தெரிந்ததை பார்த்தான்.

“வாங்க போலாம்” என்றவள் செல்லப் போக.

“ஒரு நிமிஷம்” என்றான்.

“என்ன ஆச்சுங்க?”

அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் நெற்றியைத் தேய்த்தான்.

“மேக்கப் எல்லாம் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன்.”

“நல்லா பாரு.”

“நான் சேலை நல்லா கட்டி பின் எல்லாம் கரெக்டா குத்திட்டேன்… சரி எனக்கு பசிக்குது வாங்க… சாப்பிட்டு கிளம்பலாம்.”

“அது வந்து!! எப்படி சொல்வது என தெரியாமல்… ஒரு நிமிஷம் கண்ணாடியை பாரு” என்றான்.

“கண்ணாடில என்ன தெரியுது?” என்றாள்.

“உன் ப்ளவுசை சரி பண்ணு” என கூறியவன் வெளியில் சென்றான்.

தன் ஜாக்கெட்டை தொட்டு பார்த்தாள். அப்போதுதான் கவனித்தாள் அவள் அணிந்திருந்த “ப்ரா” வெளியே தெரிந்தது. வெட்கத்துடன் ஜாக்கெட்டை சரி செய்து வெளியே வர…

வேட்டி சட்டையில் அழகாக இளவரசனை போல் வந்த தன் மகனை பார்த்து சரஸ்வதியும் சேது ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவன் பின்னாலயே வெட்கப்பட்டுக் கொண்டு வந்த மருமகளை பார்த்த சரஸ்வதிக்கு நிறைவாக இருந்தது.

“ரெண்டு பேரும் நல்லபடியா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வாங்க.”

“சரிங்க அம்மா.”

“ராகவா பார்த்து ட்ரை பண்ணு… எப்பவும் கார வேகமாக ஓட்ற மாதிரி ஓட்டாத.”

“சரிப்பா” என்றான்.

காரில் செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார் சரஸ்வதி.

“என்னாச்சு?” என சேது ராமன் கேட்டார்.

“என்னங்க! குழந்தையும் இவங்க கூட இதே மாதிரி போனா நல்லா இருக்கும்ல?” என்றார் கண்ணில் ஆசையுடன்.

“நல்லா தான் இருக்கும்… நீ கவலைப்படாத… கூடிய சீக்கிரம் உன் ஆசை நிறைவேறும்” என்றார்.

காரில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் அருவி.

“அருவி.”

“என்னங்க?”

“நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“சொல்லுங்க” என்றாள். அப்போது காரில் “பார்த்த முதல் நாளே… உன்னை பார்த்த முதல் நாளே” என சினிமா பாடல் ஒலிக்க அந்த பாடலோடு சேர்ந்து அருவியும் சேர்ந்து பாடினாள்.

அவள் குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது. அந்த பாட்டை முழுவதுமாக பாடினாள்.

கார் ஒட்டிக்கொண்டே இருந்தவன் கவனம் முழுவதும் அவள் பாட்டில் இருந்தது. தன்னை மறந்து பாட்டை ரசித்தவன் “செம்மையா பாடுற… சான்சே இல்ல… சூப்பர்… கை குடு” என அவள் கையை பிடித்து குலுக்கினான்.

அவன் பாராட்டியதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. அவன் கை தன் கையில் பட்டதும் பெண்ணவள் மனதில் மின்னல் வெட்டியது…

கோவில் வந்ததும் இருவரும் சாமி கும்பிட்டனர்.

“கடவுளே எப்பவுமே இவர் என் மேல் இதே மாதிரி பாசமா இருக்கனும்… நாங்க ரெண்டு பேரும் இதே போல சந்தோஷமா இருக்கணும்” என வேண்டிக் கொண்டாள் அருவி.

“கடவுளே இன்னைக்கு எப்படியாவது இவகிட்ட உண்மையை சொல்லிரனும்… இப்ப நான் உண்மைய சொன்னா தான் அவ விலகி இருப்பா… அது தான் ரெண்டு பேருக்கும் நல்லது” என அவன் நினைத்துக் கொண்டிருக்க…

“என்னங்க?”

“என்ன?”

“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம்.”

“நேரம் இல்ல… அது வந்து எனக்கு வேற வேலை இருக்கு… உன்ன வீட்ல விட்டுட்டு நான் போகணும்.”

“கொஞ்ச நேரம் உட்காரலாமே” என அவள் கேட்ட தோரணையில் “சரி” என தலையசைத்தான்.

இருவரும் படிகட்டில் அமர்ந்தனர். கோவிலில் பிரசாதம் கொடுக்க சென்று சிறு குழந்தை போல் அதை வாங்கி வந்தாள். அவனுக்கு அவளை பார்க்க ஆச்சரியமாக இருந்தது!! 

“நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்லணும்னு நினைச்சுட்டு இருக்கேன்… ஆனா இவ பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் என்ன அறியாம என் மனசு இவ கிட்ட போகுது… என்னன்னு தெரியல இது நல்லதுக்கு இல்லை… ஒருவேளை இவ என்னை மயக்க பாக்கிறாளா… அதுக்காக தான் இப்படி நடிக்கிறாளா!!!? அதையும் கண்டுபிடிக்கிறேன்” என்று நினைத்துக் கொண்டிருக்க,

“என்னங்க! இந்தாங்க சாப்பிடுங்க” என அவன் கையில் பொங்கலை நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம்” என்றான் ராகவன்.

“அச்சச்சோ!! கோவில் பிரசாதம் வேணாம்னு சொல்ல கூடாது” என அவன் சொல்ல சொல்ல கேட்காமல் அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்.

“சும்மா சாப்பிடுங்க” என்றாள்.

மறுக்க முடியாமல் அவனும் சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்தவள் கை கழுவி அவனுக்கு வாயையும் துடைத்து விட்டாள். அவள் செய்த ஒவ்வொன்றும் அவனுக்கு புது விதமாக இருந்தது. தான் அனுபவிக்காத ஒரு உணர்வாக அவனுக்கு தோன்றியது.

காரில் வரும் போது “என்னங்க? காரை ஒரு நிமிஷம் நிப்பாட்டுங்க.”

“ஏன்?”

“பாணி பூரி விக்கிறாங்க… எனக்கு வேணும்.”

“ரோடு சைடு விக்கிறதெல்லாம் சாப்பிட கூடாது… வேணாம்” என்றான்.

“ப்ளீஸ் எனக்கு வேணும்” என சிணுங்கினாள்.

“சரி… போய் வாங்கிக்கோ” என பணம் கொடுத்தான்.

வாங்கி வந்தவள் அவனிடம் நீட்ட, “எனக்கு வேணாம்… நீ சாப்பிடு…”

ஆசையாக ரசித்து ருசித்து சாப்பிட்டவள் திடீரென “ஆ…” என கத்தினாள்.

“என்னாச்சு அருவி?” என கேட்டான் பதறியபடி.

“ரொம்ப காரமா இருக்கு… ஆ… ஊ… காரம் தாங்க முடில” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

அவள் நிலை உணர்ந்தவன் சற்றும் யோசிக்காமல் அவளை இழுத்து அவளது தலையை சாய்த்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான் ராகவன்.

கண்களை இறுக மூடிக் கொண்டாள் அருவி.

♥️ அச்சச்சோ! எனக்கு வெட்க வெட்கமா வருதே!! அடுத்து என்ன நடக்கும் 🤔… அருவி கிட்ட ராகவன் சொல்லிடுவானா! தெரிஞ்சிக்க… நாளைக்கி எபி மறக்காம படிங்க பிரண்ட்ஸ்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,340 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page