இதழ் – 9

காரம் தாங்காமல், “ஆ… ஊ… ரொம்ப காரமா இருக்கு… நாக்கு எல்லாம் எரியுது” என அவள் கத்த, சற்று யோசிக்காமல் சட்டென அவளை இழுத்து அவள் இதழில் முத்தமிட்டான் ராகவன்.

அவன் செயலில் அதிர்ந்தவள் அதிர்ச்சியில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்…

மெல்ல மெல்ல அவள் இதழில் நாக்கில் இருந்த காரத்தை தன் நாவினால் துடைத்து உரிஞ்சி எடுத்தவன், சற்று நேரத்தில் அவளை விட்டு விலகி, “இப்போ ஓகேவா!” என கேட்டான்.

அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்த படி, “ம்…” என்றாள் அருவி.

சற்று நேரம் அவன் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டு வர அவளும் அமைதியாகவே வந்தாள்.

எதற்காக அவளின் இந்த அமைதி என அவனுக்கு புரிந்தாலும், “அருவி… என்னாச்சு? அமைதியா வர?” என கேட்டான்.

“ஒன்னும் இல்லைங்க.”

“இன்னும் காரமா இருக்கா?”

அவள் பதில் கூறுவதற்கு முன் ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். அவள் நிமிர்ந்து பார்க்க அது ஐஸ்கிரீம் கடை. உள்ளே சென்று இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி வந்தவன் அவளிடம் ஐஸ்கிரீமை கொடுத்து, “இத சாப்பிடு… கொஞ்சம் பெட்டரா இருக்கும்” என்றான்.

அதை வாங்கி ஜன்னலை பார்த்தபடி சாப்பிட்டாள் அருவி.

எதார்த்தமாக அவன் அவளை பார்க்க அவளது உதட்டோரத்தில் ஐஸ்கிரீம் ஒட்டி இருந்தது. அவள் உதட்டில் இருந்த ஐஸ்கிரீமை தன் நாவினால் துடைக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது அவனுக்கு.

சட்டென தலை கோதி தன் எண்ணத்தை மாற்றியவன், “வேண்டாம் ராகவா… இவகிட்ட போகாத… நீ தள்ளியே இரு… இவ உன் கொள்கையை உடைக்க பார்க்கிறா… அது உனக்கு நல்லதல்ல… இனிமே இவ கிட்ட நீ கொஞ்சம் கோவமாக இருக்கிற மாதிரி காட்டிக்கோ” என அவன் தனக்குள் பேசிக் கொண்டிருக்க,

“என்னங்க?”

“ம்.”

“போகலாம்.”

“சரி” என்றவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்,

சரஸ்வதி அவளை தன் அருகில் அமர வைத்துக் கொண்டு, “நல்லபடியா சாமி கும்பிட்டீங்களா?” என்றார்.

“நல்லா சாமி கும்பிட்டோம் அத்தை.”

“சரி… நீ டயர்டா இருப்ப… கார்ல வந்ததுல… போய் ரெஸ்ட் எடு.”

“இல்லை அத்தை… நானும் உங்க கூட சமைக்க…”

“வேண்டாம்… நானும் அகிலாவும் பார்த்துக்கிறோம்… நீ போய் ரெஸ்ட் எடு.”

“சரிங்க அத்தை” என்றவள் அறைக்கு வர, ராகவன் தன் லேப்டாப்பில் ஆபீஸ் விஷயமாக பார்த்துக் கொண்டிருந்தான். பெட்டில் படுத்தவள் அப்படியே தன்னை மறந்து உறங்கி விட்டாள்.

“அருவி… அருவி” என சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தாள்… ராகவன் தான் எழுப்பினான்.

எழுந்தமர்ந்தாள் அருவி.

“என்ன? இப்படி தூங்கிட்டு இருக்க?”

“அது வந்து… கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்ங்க.”

“உனக்கு பசிக்கலையா? வா சாப்பிட.”

“இதோ வரேங்க” என்றவள் குளியலறைக்கு சென்று பிரெஷ் ஆகி வர,

“நீ கீழே எல்லாம் வர வேண்டாம்… நானே உனக்கு கொண்டு வந்துட்டேன்… சாப்பிட்டு அப்புறம் ரெஸ்ட் எடு.”

“சரிங்க” என்றவள் அவன் கொண்டு வந்த தோசையை சாப்பிட அவன் சென்று பெட்டில் ஓரத்தில் படுத்தவன் உறங்கி விட்டான்.

“இவர் நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்கார்… அன்பா பாத்துக்கிறார்… இப்படி ஒருத்தர் கிடைக்க நம்ம நிஜமாகவே கொடுத்து வச்சிருக்கணும்” என நினைத்துக் கொண்டவள் யோசித்தபடி அப்படியே உறங்கி விட்டாள்.

நடு இரவில் இருமல் சப்தம் கேட்டு கண் விழித்து பார்த்தான் ராகவன்… அவன் அருகில் அமர்ந்து வாயை பொத்தி இருமிக் கொண்டிருந்தாள்.

“அருவி… என்னாச்சு?”

“ரொம்ப இருமலா வருதுங்க… தொண்டை எல்லாம் வலிக்குது… மூச்சு கூட விட முடில” என்றாள் கஷ்டப்பட்டு.

எழுந்தவன், “வா ஹாஸ்பிடல் போலாம்” என கூற.

“வேணாம்” என்றாள் வேகமாக.

“ஏன் வேணாம்?”

“அது வந்து… தைலம் தேச்சா சரி ஆகிடும்.”

“இல்லை… நீ ரொம்ப இருமிட்டு இருக்க… இப்ப ஹாஸ்பிடல் போறதுனால உனக்கு என்ன பிரச்சனை?”

திருதிருவென விழிக்க…

“நீ இப்படி கூப்பிட்டா வர மாட்ட… என” அவளை அப்படியேயே தன் கைகளில் தூக்கினான்.

“ஊசினா பயம்” என கத்தினாள்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன், “இவ்ளோ பெரிய பொண்ணா இருக்க… ஊசிக்கு பயப்படுற” என அவளை கார் கதவை திறந்து முன் சீட்டில் அமர வைத்தான்.

“நான் வரல… வேணாம்” என்றாள் இருமியபடி.

“ஊசி எல்லாம் போட மாட்டாங்க… டேப்லெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுவோம்” என்றான் சிரித்தபடி.

“நிஜமாவா!!”

“ஆமா! ஒழுங்கா அடம் புடிக்காம வா… இல்லை டாக்டர் கிட்ட சொல்லி 2 ஊசி போட சொல்லிடுவேன்” என செல்லமாக மிரட்டினான்.

“சரி” என்றவள் அமைதியானாள்.

மருத்துவமனைக்குள் நுழைந்ததும் ராகவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அருவி.

“பயப்படாம வா” என்றான்.

அவளை பரிசோதித்த மருத்துவர், “நேத்து என்ன சாப்பிட்டீங்க?” என கேட்க.

“ரெண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்” என்றாள் வேகமாக.

“இன்பெக்சன் ஆகிருக்கு… நான் ஊசி போட்டு டேப்லெட் தரேன்… 2 டேஸ் சாப்பிடுங்க… சரி ஆகிடும்.”

“என்னது!! ஊசியா?” என அதிர்ந்து கேட்டாள் அருவி.

“என்னாச்சு?” என மருத்துவர் கேட்க.

“ஒண்ணுமில்ல” என அருவி கையை இப்போது ராகவன் இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

நைசாக எழுந்து ஓட போனவளை இடையோடு சேர்த்து இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

“ஊசி வேணாம்… வலிக்கும்… என்னை விடுங்க ப்ளீஸ்” என்றாள் கையையும் காலையும் உதறியபடி.

“உனக்கு வலிக்காம ஊசி போட சொல்றேன்” என ராகவன் அவளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள.

“சார்… இடுப்பில் தான் ஊசி போடணும்… நீங்க இறுக்கமா பிடிச்சிக்கோங்க” என மருத்துவர் அவளது சேலையை இறக்கி இடுப்பில் ஊசி போட.

“ஆஆ…” என கத்திய அருவி அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

கண்களில் கண்ணீர் வர அழுதாள்.

கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து காரில் உட்கார வைக்க.

“என்னால உட்கார முடில… ரொம்ப வலிக்கிது” என சிணுங்கினாள்.

“சரி… இரு” என்றவன் அவளை அணைத்து அவளது சேலையை இறக்கி ஊசி குத்திய இடத்தில் தேய்த்து விட்டான்.

சட்டென அவன் அவ்வாறு தேய்த்து விடவும் அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வு அவளுக்குள்… 

அவன் தோளில் சாய்ந்தவள் உதட்டை கடிக்க, “இப்ப ஓகேவா?” என கேட்டான்.

“ம்…” என்றவள் மெதுவாக விலக, “நீ என் தோளிலயே சாஞ்சிக்க” என்றான் அவள் தலையை வருடியபடி.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு மாத்திரையை கொடுத்து தன் மடியில் படுக்க வைத்து அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

அவன் செய்கையில் நெகிழ்ந்தவள் அப்படியே உறங்கினாள்.

காலையில் 6:00 மணிக்கு எல்லாம், “அருவி… அருவி” என சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தாள் அருவி.

அழகாக கிளம்பி ரெடியாகி இருந்தான் ராகவன்.

“ஒரு முக்கியமான வேலை… நான் வெளியூர் போக வேண்டியது இருக்கு… நான் கிளம்பறேன்.”

“என்னங்க? திடீர்னு?”

“இப்பதான் போன் வந்துச்சு… அதனால நான் கிளம்பறேன்… நான் போயிட்டு வரேன்… நீ அம்மா அப்பாவை கவனமா பாத்துக்கோ… முக்கியமா உன் ஹெல்த்தையும் பார்த்துக்கோ.”

“சரிங்க” என்றாள்.

அவன் சென்றதும் அவளுக்கு என்னவோ போல் இருந்தது… எதையோ பறிகொடுத்தவள் போல் இருந்தாள்… அவனுடனே தன் மனது சென்றது போல் உணர்ந்தாள்.

இரண்டு நாள் ஆனது… அவளால் சாப்பிட முடியவில்லை… தூங்க முடியவில்லை… மிகவும் அவதிப்பட்டாள். மூன்றாம் நாள் காலையில் அருவி கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தாள்… சரஸ்வதியும் சேது ராமனும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்று இருந்தனர்… அகிலா அன்று வரவில்லை.

“சரி… ஏதாவது சாப்பிடலாம்” என நினைத்தவள் உப்புமா செய்து கொண்டிருக்க திடீரென பின்னால் இருந்து, “அருவி” என சத்தம் கேட்டதும், வேகமாக திரும்பி பார்த்தவள் ஓடி வந்து அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

“அருவி… என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்லைங்க… திடீர்னு பார்த்ததும்” என்றவள் அவனை விட்டு விலகினாள்,

“அம்மா அப்பா எங்க?”

“கோவிலுக்கு போய் இருக்காங்க.”

“என்ன சமைக்கிற?”

“உப்புமா.”

“என்னோட பேவரைட்… எனக்கு ரொம்ப பசிக்குது… நான் பிரெஷ் ஆகிட்டு வரேன்.”

“ஒரு நிமிஷம்” என்றாள்.

“என்ன அருவி?”

“பசிக்குதுனு சொன்னீங்களே… இந்தாங்க” என உப்புமாவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அதை மறுக்க மனமில்லாமல் சாப்பிட்டான் ராகவன்.

சாப்பிட்டுக் கொண்டே யோசித்தான்…

“அவளை விட்டு விலகி இருக்கணும்னு நினைச்சுட்டு தான் மூணு நாள் வேலை விஷயமா போன!… ஆனா இப்ப மறுபடியும் வந்து நீ இவ கிட்ட இப்படி ஜாலியா பேசினா என்னடா அர்த்தம்?… நான் என்ன பண்றேன்னு எனக்கே புரியலையே…” என நினைத்துக் கொண்டிருந்தவன்,

“எனக்கு போதும்” என்றான்.

“இன்னும் கொஞ்சம்” என கெஞ்சி அவனுக்கு ஊட்டி விட்டாள். அப்பொழுது பேசிக்கொண்டே வீட்டிற்குள் வந்த சரஸ்வதியும் சேது ராமனும் இந்த காட்சியை பார்த்து சந்தோஷப்பட்டனர்.

எதார்த்தமாக வாசலை பார்த்த அருவி எழ,

“எப்ப வந்த ராகவா?” என கேட்டார் சேது ராமன்.

“இப்பதான் வந்தேன்.”

“நாங்க உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சோம்.”

“என்னம்மா?”

“நீ இல்லாத இந்த மூணு நாளு எங்க மருமக ரொம்ப தவிச்சு போயிட்டா… அவளை பார்க்கவே என்னவோ போல் ஆயிடுச்சு” என்றார் சரஸ்வதி.

ராகவன் அருவியை பார்க்க அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

“அதுக்கு என்னம்மா பண்றது? நான் அடிக்கடி பிசினஸ் விஷயமா வெளியில் போக வேண்டியது இருக்கும்… அப்போ இவளையும் கூட்டிட்டு போக முடியுமா? நீங்களே சொல்லுங்க!”

“நாங்க அப்படி கூட்டிட்டு போக சொல்லல.”

“பின்ன!!”

“நாங்க அதுக்கு வேற ஏற்பாடு பண்ணி இருக்கோம்” என்றனர்.

“என்ன?” என அவன் கேட்க.

“நீயும் அருவியும் ஹனிமூன் போக போறீங்க.”

“என்னது!! ஹனிமூனா?” என்றனர் இருவரும்.

“இடத்தையும் நாங்களே செலக்ட் பண்ணிட்டோம்.”

“எங்க?” என கேட்டான் ராகவன்.

“கோவா! அங்க இருக்கிற நம்ம பீட்ச் ஹவுஸ்ல நீங்க தாங்குறதுக்கான எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணிட்டோம்” என்றார் சரஸ்வதி.

“நாளை மறுநாள் நீங்க கிளம்பணும்” என்றார் சேது ராமன்.

“அப்போ எல்லா ஏற்பாடும் நீங்க பண்ணிட்டீங்க…”

“ஆமா!” என்றார் சரஸ்வதி.

“நாங்க கோவா போகல” என்றவன் வேகமாக தன் அறைக்கு சென்றான்.

அவன் அவ்வாறு கூறியதை கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.

❤️ ராகவன் எதுக்காக அப்டி சொன்னான்… தெரிலயே 🤔… தெரிஞ்சுக்க… கதையை தொடர்ந்து மிஸ் பண்ணாம படிங்க ❤️

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,351 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page