இது சரியா?.. தவறா?..

நிலா,

அப்படி எல்லாம் நீ என்னை விட்டுப் போக முடியாது. நீ என்னுடையவள்.

இந்த கடவுள் இதுவரைக்கும் எனக்கு எதுவுமே கொடுத்தது இல்லை. ஆனா நான் கேட்காம உன்னை என்கிட்ட வர வச்சுருக்காரு. இது ஒரு வழி பாதை. இங்கு வரத்தான் முடியும். இங்க இருந்து போக முடியாது நிலா… யார் என்ன சொன்னாலும் நீயே என்னை விட்டு போகணும்னு நினைச்சாலும் உன்னை நான் போக விட மாட்டேன். இந்த உலகத்துடைய கடைசி புள்ளியில் கூட நீ இருந்தாலும் உன்ன வந்து நான் கண்டுபிடிச்சு என்னோட அள்ளி அணைச்சுப்பேன். இப்படி எல்லாம் அவன் மனசுக்குள் நினைத்தபடி நிலாவை பார்த்தான்.

நான் கிளம்பிட்டேன்.

நீயும் போய் fresh ஆகிட்டு வா,

நம்ம கடைக்கு போயிட்டு வரலாம். முக்கியமா சார்ஜர் வாங்கணும்னு அவள் விக்ரம் கிட்ட சொல்லிக்கிட்டு ஒரு இடத்துல போய் உட்கார,

அவன் வேகமாக freshup ஆகிட்டு அவளை அழைத்துக் கொண்டு இப்போ வீட்டின் பின்புறம் கூட்டிட்டு வந்தான்.

அங்கே ஒரு செட் போட்டு அதுக்குள்ள ஒரு பைக் நின்னுட்டு இருந்துச்சு கவர் பண்ணி, அதுக்கு பக்கத்துல ஒரு காரும் இருந்துச்சு.

அந்த கவர் அவன் ஓபன் பண்ணதுமே, ஒரு பழைய மாடல் பைக் ஆனா ரொம்ப பேமஸான ஒரு புல்லட் ஒன்னு இருந்துச்சு. அதை அவன் துணியை வைத்து ஃபுல்லா தொடச்சிட்டு,

பெட்ரோல் இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிட்டு, போலாமா?… இப்படி அவளை பார்த்து கேட்கும் போது, பைக்லயா?..

ஆமா…

கார் எடுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால அது என்ன கண்டிஷன்ல இருக்குன்னு தெரியல, அடிக்கடி ஆட்டோவில் இல்லை டாக்ஸியில் போயிட்டு வந்துட்டு இருக்க முடியாது.

நம்ம ஊரு டிராபிக் பத்தி உனக்கு தெரியாதா?…

பெஸ்ட் ஆப்ஷன் இது மட்டும் தான். வந்து ஏறுன்னு சொன்னான்.

அதெல்லாம் சரிதான். ஆனால் நான் பைக்ல உட்கார்ந்ததே இல்லையே…

இதுல எப்படி உட்காரனும்னு கூட எனக்கு தெரியாது. பக்கத்துல இருந்தா சொல்லு நம்ம நடந்து போகலாம் என்று அவள் சொன்னதுமே,

உண்மையாவா சொல்ற?..

ஒரு தடவை கூட பைக்ல போகலையா?..

இல்லை,

நான் பைக்ல போனதே இல்லை.

என்ன சொல்ற?…. இப்போ ஒரு வீட்ல ஒரு ஆள் இருந்தாலே ரெண்டு பைக் இருக்கு. அப்படி இருக்கும்போது நீ எப்படி பைக்ல போகாம இருந்திருப்ப, நீ சொல்றது ரொம்ப ஆச்சரியமா இருக்கு அதிர்ச்சியா இருக்கு.

ஒண்ணுமே புரியல,

உண்மையாவா?… எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் உண்மை. எங்க அப்பா கிட்ட பைக் இருந்ததே இல்லையே… அப்படி இருந்தா தானே பைக்ல போய் நான் பழகி இருக்க முடியும். அதெல்லாம் சரி ஒரு பிரண்ட்ஸ் கூட போனது இல்லையா அப்படி இல்லன்னா உன்னோட சொந்தக்காரங்க இப்படி யார் கூடவும் நீ பைக்ல போகலையா,

போகல,

நான் அந்த அளவுக்கு யாருகிட்டயும் பேச மாட்டேன். வாழ்க்கையிலேயே உன்கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன்.

இல்லனா, நான் தனியா நாலு சுவரை பார்த்துட்டு தான் உட்கார்ந்து இருப்பேன். அப்படி இல்லன்னா வேலை,

சமையல் வேலையாக இருந்தாலும் இப்போ நான் பார்க்கிற வேலையா இருந்தாலும் ஏதோ ஒன்னு,

இப்படி அவள் சொன்னதுமே,

சரி விடு. ட்ரை பண்ணு. கால இங்க வச்சு மிதிச்சு அப்படியே டக்குனு மேல ஏறி உக்காந்துக்கோ,

இப்படி சொல்ல, அவளும் எந்தெந்த பக்கமும் கால வச்சு பார்க்கிறாள் இப்படி வைக்கவா அப்படி வைக்கவா?…? எப்படி ஏறுனாலும் இந்த saree ரொம்ப தடுக்குது.

நான் சைஸ் சொல்றேன் நீயே போய் வாங்கிட்டு வந்துடுறியா?…

முன்ன பின்ன உனக்கு இது மாதிரி வாங்கி பழக்கம் இருக்கா?.. இப்படி அவள் பேசிக்கொண்டே இருக்க அவன் டக்குனு டபுள் ஸ்டாண்ட் போட்டுட்டு,

அவள் இடுப்பை பிடிச்சு அந்த பைக்கில் தூக்கி உட்கார வைத்து விட்டான். உடம்பு எல்லாம் புல்லரிசி போயிடுச்சு அவளுக்கு..

ஒரு செகண்ட்ல என்ன நடந்துச்சு என்பது அவளால நம்பவே முடியல, உடம்பெல்லாம் பயங்கரமாக கூச,

அவ்வளவுதான். இதுக்கு இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு இருக்க ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிட்டு அந்த முந்தானை நுனியைப் பிடித்து அவள் கையில் கொடுத்து இதை மட்டும் விட்றாத சக்கரத்தில் எதையாவது மாட்டிக்கும்.

அப்படி அசையாம உக்காருன்னு சொல்லி மெதுவா அந்த ஸ்டாண்டை எடுத்து அவள் மேல கால் இடிக்காமல் அவன் உட்கார்ந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணி அங்க இருந்து கிளம்ப,

என்னோட தோள்பட்டையை இறுக்கமாக பிடிச்சுக்க, கீழே விழுந்துறாத,

முடிஞ்ச அளவுக்கு நல்லா டைட்டா புடிச்சுக்கோ,

இப்படி சொல்லிக்கிட்டு அவன் பைக்கை நகர்த்தும்போது அவளுக்கு தோள் பட்ட அந்த அளவுக்கு வசதியா இல்லாம அவனுடைய இடுப்புக்கு பக்கத்துல இருக்கிற அந்த சட்டையை இறுக்கி கசக்கி பிடித்தாள்.

அவனுக்கு இடுப்ப தொட்ட பயங்கரமாக கூசும். அவன் ஒரு நிலை நெளிஞ்சுகிட்டே அவளை திரும்பி பார்த்து உனக்கு புடிக்க வேற இடமே இல்லையான்னு கேட்க?..

சாரி…

உனக்கு ரொம்ப கூசுமா?..

எனக்கு உன்னோட உயரம் எட்டல, இதான் கொஞ்சம் வசதியா இருக்கு இப்படி அவள் சிரிச்சுக்கிட்டே அவன் கிட்ட பேசும்போது,

எப்போதும் அமைதியாக பார்த்த அந்த முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை பார்த்ததும் நந்தவனத்தில் பூக்கள் குலுங்கியது போல அவ்வளவு அழகாக இருந்தது. அவனும் வானத்தில் பறப்பது போல இந்த நொடி இந்த நிமிடங்கள் எப்போதுமே என் கூடவே இருக்கணும்னு அவன் மனசு சொல்ல ஆரம்பித்தது.

இப்போ ஒரு பெரிய டிரஸ் கடைக்கு கூட்டிட்டு போனதுமே, இங்கேயா?… எங்கே போனா எவ்வளவு செலவாகும் என்று தெரியாது இங்கே எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.

வேணாம் வேணாம்..

ஒரு சாதாரண கடைக்கு கூட்டிட்டு போ, அங்க போய் எனக்கு வேணும்ன்றது நான் வாங்கிக்குவேன். நான் சொல்ற கடைக்கு போலாமா?… கொஞ்சம் தூரம் தான் ஆனால் தூரத்தை பார்க்காமல் போனால் நிறைய காசு மிச்சம் பண்ணலாம்னு அவள் சொல்லும்போது,

அதெல்லாம் இருக்கட்டும் கீழ இறங்கு. கீழே இறங்கி விடுவாயா அல்லது நான் தான் பண்ணனுமா?..

அதெல்லாம் ஒன்னும் வேணாம்.

நானே இறங்கிப்பேன்.

வா போகலாம்னு அவள் கூப்பிட,

நீ இறங்கு நான் பைக் பார்க் பண்ணிட்டு வரேன்.

நீ பத்திரமா நில்லு., இப்படி சொல்லிட்டு அவன் அவளை இறக்கி விட்டுட்டு போயிட்டு வந்து பார்த்தால்,

அந்த சேலையை வைத்து நன்றாக இழுத்து போர்த்தி ஏதோ குளிருக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டு இருந்தா,

அவளைப் பார்த்தவன் வேகமாக வந்து என்ன கோலம் இது?…

முதல்ல அதை கீழே இறக்கு என்று சொன்னான்.. எதை கீழே இருக்க,

என்கிட்ட எதுவும் இல்லையே… இப்படி அவள் சொல்லும்போது மண்டையில ஓங்கி ஒரு கொட்டு வைத்தான். நீயா எதுக்கு உன்ன கொறச்சி மதிப்பு எனக்கு ஒன்னும் புரியவே இல்லை,

இந்த கைய முதல்ல கீழ இறக்கு. இந்த முந்தானையை கீழே படர விடு ஒன்னு இல்ல,

எப்ப பார்த்தாலும் இழுத்து பொத்தி என்ன செய்யப் போறன்னு எனக்கு ஒன்னும் புரியல,

இங்கே இருக்கிற யாரும் உன்னை குறுகுறுன்னு பாக்க மாட்டாங்க, உன்னை எதுக்கு நான் இவ்வளவு தூரம் தள்ளி கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா?.. உனக்கு தெரிஞ்ச ஆட்கள் இருந்தால் தானே நீ எப்படிப்பட்ட ஆள் என்று உன்னை கணிக்க முடியும். இங்கு இருக்கிற யாரும் அப்படிப்பட்டவங்க கிடையாது.

நீ உன் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி, யாரை பத்தியும் கவலைப்படாம நிம்மதியா மூச்சு விடலாம் சரியா?… இந்த மாதிரி சொல்லிக்கிட்டு அந்த முந்தானையை சரி செய்து அவளை உள்ளே கூட்டிட்டு போக,

இவன் எதுக்காக எனக்கு இவ்வளவு பண்றான்னு எனக்கு ஒன்னும் புரியல, இந்த அளவுக்கு உரிமை எதுக்காக இவன் எடுத்துக்கிறான்?..

எனக்கு இவன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி ரெண்டு மூணு இருக்கு. அதற்கான வாய்ப்பு எனக்கு அமைய மாட்டேங்குது, கண்டிப்பா அந்த கேள்வியை இன்னைக்கு நான் ராத்திரி கேட்டே ஆவேன்.

இவன் எப்படி என்னுடைய ஆஃபீஸ்க்குள்ள வந்து என்னை காப்பாற்றினான். அதேபோல அவனோட உயிரை பணயம் வைத்து என்னை காப்பாத்தணும்னு எந்த அவசியமும் இல்லை. அவன் கண்ணுல ஏதோ ஒரு வசியம் மாதிரி எனக்கு தெரியுது.

ஏதோ ஒரு உணர்வு அவன்கிட்ட இருந்து எனக்கு பிடிக்க முடியாத மாதிரி ஒன்னு இருக்கு அது என்னன்னு புரிய மாட்டேங்குது.

நேத்துல இருந்துதான் நாங்கள் பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆனா நான் யார்கிட்டயும் பேசாத அளவுக்கு இவன் கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு பேசுறேன்?..

எனக்கு ஏற்கனவே அர்ஜுன்னு ஒரு பையன பிடிச்சிருக்கு. அப்படி இருக்கும்போது நான் ஏன் இவன்கிட்ட இவ்வளவு உரிமை எடுத்துக்குறேன் அவனும் ஏன் என்கிட்ட இவ்வளவு உரிமை எடுப்பதற்கு விடுகிறேன்?..

இவன் கூட இருக்கும்போது எனக்கு அர்ஜுனுடைய முகம் கூட ஞாபகத்துக்கு வரவே இல்லையே, அர்ஜுன பத்தி நினைக்கும் போது என் மனசுக்குள்ள ஏதோ ஆயிரம் பூக்கள் பூப்பது போலவும் பட்டாம்பூச்சிகள் என்னை உடல் முழுவதும் சூழ்ந்து கூச வைப்பது போலவும் நிறைய தடவ தோணும்.

ஆனா இப்போ0.0001% கூட தோணவே இல்லை. அது ஏன்?… இந்த மாற்றம் சரியானதா?…

அப்ப நான் எப்படிப்பட்ட ஒரு பொண்ணு?..

ஏற்கனவே எனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்கு. இப்ப அவனையும் தாண்டி இவன் மேல எனக்கு ஏதோ ஒரு விதமான ஈர்ப்பு வருது. அப்ப அது சரியா?.. இப்படி பல யோசனைகளோடு அவள் உள்ளே வர,

எந்த பக்கம் போறோம்னு தெரியாம அவள் ஒரு பக்கம் திரும்பியதும், மேடம் அந்த பக்கம் இல்ல,

எங்க பார்த்து நடக்குறீங்க?..

இந்த பக்கம் வா என்று அவருடைய கையை பிடிச்சிட்டு அவளை Elevator க்கு, பக்கத்துல கூட்டிட்டு போனதும்,

ஐயையோ…

ஸ்டெப்ஸ்ல போகலாமா?… நான் என்னோட ஆஃபீஸ்ல இருக்குற லிஃப்ட் கூட யூஸ் பண்ண மாட்டேன். எனக்கு ரொம்ப பயம்.

நீ ஏதாவது விட்டா பேசிக்கிட்டே இருப்ப,

வா மா.. ஏய்,

இப்படி சொல்லிக்கிட்டு அவளை இடுப்போடு சேர்த்து அனைத்து டக்குனு கால்லை எடுத்து வைன்னு சொல்லி அவளை அதுல அழைத்துக் கொண்டு போக,

அதுல இருந்து இறங்குற வரைக்குமே அவனை இறுக்கி பிடித்துக் கொண்டு விடவே இல்லை,

அந்த ஸ்டெப்ஸ் என்னவோ 30 இருக்கும்.

அது போகும் போது அவள் மனசுக்குள்ள பயங்கர பீதி, ஆனா எங்க ஒருத்தனுக்கு அவளுக்கு எப்போதும் இருக்கிற அதே உணர்வு அவனுக்கு வர ஆரம்பித்தது பல பட்டாம்பூச்சிகள் அவனை சூழ்ந்து கூசச் செய்வது போல…

வெளி உலகத்துக்கு வராத ஒரு பொண்ணு, யாருகிட்டயும் பழகாத ஒரு பொண்ணு ஒரே ஒருத்தன் கிட்ட மட்டும் இந்த அளவுக்கு அட்டாச்மெண்டாகறதுக்கு காரணம் என்ன?..

அவளைப் பொறுத்த வரைக்கும் இது சரியா?.. தவறா?..

அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page