இராவணன் 2

“என்னப்பா தம்பி எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? ஏன் அமைதியாவே இருக்கீங்க? உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தான? வீட்ல எதும் சொல்லிவிட்டாங்களா?” என்று விஜயா பாட்டி கேட்டதும் பாட்டியிருந்த திசையை நோக்கி மெதுவாக கழுத்தை திருப்பினான் ரித்திக்.

“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று அத்தனை கேள்விக்கும், தன்‌ கேள்வியை பதிலாக கொடுத்தான்.

“நான் ஒரு கூறு கெட்டவ. வந்த பிள்ளைக்கு ஒரு வாய் காபி தண்ணி கூட இன்னும் கொடுக்காம உட்கார வச்சி வெறுமனே பேசிகிட்டு இருக்கேன். இருங்க தம்பி ஒரே நிமிஷம் காப்பி போட்டு எடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக சமையலறையை நோக்கி ஓடினார் விஜயா பாட்டி.

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே ரித்திக் வேகவேகமாக ஒரு எண்ணுக்கு கைபேசி எண் வழியாக அழைப்பு விடுத்தான். எதிர்முனையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரித்திக்கிடம் இருந்து வந்து அழைப்பை ஏற்றார்.

“சார், நான் நீங்க சொன்ன ஏரியாக்கு பக்கத்துல வந்துட்டேன். இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்.”

“வேணாம், நான் கொடுத்த கேஸ வாப்பஸ் வாங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்த அக்யூஸ்ட்ட நானே டைரக்டா டீல் பண்ணிக்கிறேன். இனிமே உங்க ஹெல்ப் எனக்கு தேவைப்படாது.” 

“சார் இல்லீகலா எதும் செஞ்சுடாதீங்க சார். எதுனாலும் எங்கிட்ட சொல்லிடுங்க, நான் பார்த்து முடிச்சு தர்றேன்.”

“லீகலாவே இல்லீகல் வேலைய செய்யப் போறேன். நீங்க டென்ஷன் ஆகாம ஸ்டேஷனுக்கு திரும்பி போங்க” என்றான் கர்வக் குரலில். 

எதிர்முனையில் இருந்த அந்த இன்ஸ்பெக்டர் அடுத்தொரு வார்த்தை பேசும் முன்பே அந்த இணைப்பை துண்டித்திருந்தான் ரித்திக். அவன் பார்வை அந்த புகைப்படத்தை வெறித்திருந்த நேரம், வாசலில் ஏதோ அரவம் கேட்டது.

பலமாக பெய்த மழையில் தெப்பமாக நனைந்திருந்த வீணா, கோழிக்குஞ்சு போல் நடுங்கிக்கொண்டே வீட்டை வந்து சேர்ந்திருந்தாள். அடர்ந்த இருளில் அருகில் இருப்பது தூணா மனிதனா என்று கூட தெரியாத நிலை. புடவையின் முந்தானையை முழுதாய் எடுத்து பிழிந்துவிட்டாள். 

வளைந்து நெளிந்து போகும் அவளின் தேக வனப்பை அருகில் நின்றபடி ஒருவன் வேடிக்கை பார்த்திருப்பதை, பாவம் பேதை அப்போது அறிந்திருக்கவில்லை. முழங்காலுக்கு மேலே தெரியும் படி கீழ் பாதி உடையையும் முறுக்கி பிழிந்து கொண்டு இருந்தவள், தன்னை நோக்கி நெருங்கி வந்த ரித்திக் கால்களைப் பார்த்து 

மார்பின் மேல் முந்தானை இல்லை. கீழ் பாதி உடையும் சுருண்ட நிலையில் அவள் கையில் இருந்தது. வாயில் கதவை நன்றாக பூட்டியவள், தன் வீட்டினுள் இருந்து ஒருவன் வந்து நிற்பான் என்று யோசிக்காமல் இருக்க, அதிர்ந்து போய் நின்றாள். 

“அன்எக்ஸ்பெக்ட்டடு வியூ…” 

அவளை மேலும் அதிர்வுக்குள்ளாக்க விரும்பி, தரக்குறைவாய் பேசினான்.

முந்தானையை இழுத்து மூடியபடி, “பாட்டி…” என கத்தியபடி அவள் உள்ளே வருவதற்கும், பாட்டி காப்பியை ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு நடுக் கூடத்திற்கு வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

“அடடே! வீணாவே வந்துட்டா. நல்ல சமயத்துல வந்தடிம்மா. வா, இந்த காபியை தம்பிக்கு குடு.” 

“நானா? டிரஸ் மாத்திட்டு…” என்று அவள் சொல்லியதைக் கூட காதில் வாங்காமல்,

“நல்ல நேரம் முடிய முன்ன காபிய குடுத்துட்டு போடிம்மா” என்று அவள் வாயை அடைத்துவிட்டார்.

வீணா இருந்த இடத்தை விட்டு நகராமல், ரித்திக்கை பயந்த முகத்தோடு பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவனுக்கோ இப்போதே கன்னம் பழுக்க நான்கு அறை தரும் எண்ணம். அடக்கிக் கொண்டு நின்றான்!

ஆனால் அவன் என்ன ஓட்டம் அவளுக்கு ஓரளவு விளங்கியது. அந்த அளவுக்கு அவளை மிகவும் கடுமையாக முறைத்தக் கொண்டிருந்தான். இது போதாதென அவள் உட இருந்த புடவை வேறு அவன் கோபத்தை பன் மடங்காக்கி விட்டிருந்தது. 

 

ஆம்! அவனுக்கும் அவளுக்கும் பிரச்சனை நடந்த நாளில் உடுத்தியிருந்த அதே சேலையை தான் இன்றும் உடுத்தியிருந்தாள் வீணா. அதை பார்க்க பார்க்க ரித்திக்கிற்கு மேலும் மேலும் ஆத்திரம் வந்தது.

“ஏன்டி சொல்லிக்கிட்டே இருக்கேன்! காது கேட்காத மாதிரி நின்னுட்டு இருக்க. போ போய் மாப்பிளைக்கு காபி கொடு” என்று விஜயா பாட்டி வீணாவை அதட்டினார்.

“நான் பண்ண மாட்டேன், நீங்க கொடுங்க” என்று சிறு குழந்தை பயப்படுவது போல் பாட்டிக்கு பின்னால் ஒளிந்து நின்றாள் வீணா.

“என்ன வீணா குழந்தையாட்டம் பண்ணிட்டு இருக்க? இப்படியெல்லாம் பண்ணினா மாப்பிள்ளை உன்னை பத்தி என்ன நினைப்பாரு? முதல்தடவை வீட்டுக்கு வந்திருக்காரு, அவரு மனசு கோணாம நடந்துக்க வேண்டாமா நீ? சொல்றத கேளு. நல்ல புள்ளையா காப்பிய வாங்கிட்டு போய் அந்த தம்பிக் கிட்ட கொடு” என்று வீணாவின் காதில் சிறிது கடுமையாகவே கிசு கிசுத்தார் விஜயா பாட்டி. 

வேறு வழியில்லாமல் அவளும் அந்த ட்ரேயை கையில் வாங்கிக் கொண்டாள். நடுங்கியவாறே அதை எடுத்துக் கொண்டு தன்னை முறைத்து பார்த்திருக்கும் புலியின் அருகில் சென்று நின்றாள் வீணா. 

“காஃப்பி எடுத்துக்கோங்க” என்று பயம் கலந்த நடுக்கமான குரலில் கூறினாள். 

கையில் வாங்கிக் கொண்டவன், “நீ பாவம் வெறைச்சு போயிட்ட போல?” என்றான் வேண்டுமென்றே அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி. 

அவசரத்தில் போர்த்திக் கொண்ட மாராப்பு, நேராக நிற்கவில்லை. பிளவுஸின் விளிம்புகள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. பாட்டிக்கு வெளிச்சத்திலேயே சரியாக கண் தெரியாத காரணத்தால், முழு இருட்டில் அவள் இப்படி நிற்பது தெரிந்திருக்கவில்லை. விளக்கிச் சொல்லி விலகிப் போகும் பக்குவமும் இவளுக்கு இல்லை. அத்தனையும் சேர்ந்து அந்த அரக்கனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது!

தன் வீட்டில் அமர்ந்து கொண்டு, துணிச்சலாக தன்னையே விழிகளால் மேயும் ரித்திக்கின் பார்வை அவளுக்கு மேலும் மேலும் பயத்தை உண்டாக்கியது. 

இருவரையும் சிறிது நேரம் தனிமையில் விட்டால் மனம் விட்டு பேசிக்கொள்வார்கள் என்று நினைத்த விஜயா பாட்டி, “நேத்து முந்திரி பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தியே, எங்க வெச்ச? சமையல் கட்டுல தான் எங்கேயோ செல்ப்ல பார்த்த ஞாபகம். நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க, நான் போய் தேடி எடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டார். 

இவ்வளவு நேரம் அருகில் இருந்த பாட்டி, இவ்வாறு தனிமையில் விட்டு சென்றதும் வீணாவுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் பேசத் தொடங்கினாள் வீணா.

“என்னை மன்னிச்சிடுங்க, உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நீங்க எங்க இருந்து கிளம்புறது நல்லது” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அவன் இருந்த திசைக்கு எதிர் திசையில் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் வீணா.

ஆனால் அவள் பேச்சை ரித்திக் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எதுவும் பேசாமல் அவள் முதுகினை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான். தீ பார்வையில் படவில்லை என்றாலும், அருகில் இருந்தால் சுடும் இல்லையா? அப்படித்தான் அவளுக்கும் முதுகில் அவன் பார்வையால் சூடு பரவியது. 

எழுந்து ஓட வழியில்லாமல், காலில் விலங்கு மாட்டியது போல அமர்ந்திருந்தாள். சற்று நேரத்திலேயே சமையலறைக்குச் சென்ற விஜயா பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தார்.

பிஸ்கெட்டை அவர் நீட்ட வேண்டாமென கை காட்டி மறுத்துவிட்டான் அவன்.

“கரெண்ட் இருந்ததுனா சாப்பாடே சமைச்சிருப்பேன். இருட்டுல கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது தம்பி.”

“நேரடியா கல்யாண சாப்பாடே சாப்பிடுறேன். எனக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. எவ்ளோ சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிங்க! நகை நட்டு வரதட்சணைனு எனக்கு எதுவுமே வேண்டாம். வீட்டைக்கூட நீங்களே வச்சுக்கோங்க, எனக்கு உங்க பொண்ண கொடுத்தா மட்டும் போதும். அவள இனிமே நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிக் கொண்டே வீணாவை ஒரு மார்க்கமாய் முறைத்தான் ரித்திக். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
212 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page