உனக்கானது இல்லை

 

 

அய்யய்யோ… வயித்துக்குள்ள கூசுது.

ஆ…ஆ… இப்படி கத்துக்கிட்டு அவனுடைய நெஞ்சுக்குள்ள தன்னோட முகத்தை இறுக்கமாக புதைத்துக்கொண்டு அவளுடைய கைகளால் அவன் சட்டையில எல்லா இடமும் கசக்குற மாதிரி பயத்துல அவ்வளவு பாடுபடுத்தி டா,

ஆனா விக்ரமுக்கு அது எதுவுமே பெருசா தெரியல, தூரத்தில் இருந்து ரசிச்ச அவனுடைய தேவதை , இப்போ அவனுடைய பக்கத்துல

அவள் மூச்சு முழுவதும் அவன் சட்டை குள்ளே சூடாக இறங்க,. இது போதும்.. என் வாழ்நாள் முழுக்க,

இந்த அளவிற்கு அதை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

ரெண்டு பேர் இப்ப கீழ இறங்கினதுமே,. லூசு லூசு..

இப்படி சொல்லாம கொள்ளாம அதுல ஏத்தி விடுவ, உசுரே போயிடுச்சு, இப்ப வரைக்கும் என் கை கால் நடுக்கம் நிற்க மாட்டேங்குது.

எல்லாம் பழகிக்கோ,

இந்த பக்கம் வா ன்னு அவளை இப்போ கேர்ள்ஸ் ஷாப்புக்குள் அழைத்துக் கொண்டு போனான்.

இவ போடுற மாதிரியான டிரஸ் அங்க கொஞ்சம் கூட கிடையாது. ஒரு சாதாரண குர்தி செட் கூட அங்க இல்ல,

இங்கே இருக்கிற எதுவுமே எனக்கு செட்டாகாது.

இன்னும் அந்த மாதிரி எல்லாம் போட மாட்டேன். வேற மாதிரி கலெக்ஷன் இல்லையா இங்க?…

எப்படி?… நாலு பக்கம் பின் குத்தி அப்படியே சுடிதார் தைத்து தர சொல்லி விடலாமா?…

இப்பதான் நீ வீட்டில் இருந்து வெளியே வந்திருக்க, இனி உனக்கு புடிச்ச மாதிரி இரு.

மறுபடியும் சொல்ல வைக்காத பழைய ஆட்களா இருந்தா தான் நீ எப்படி இருந்தேன்னு அவங்க ஆராய்ச்சி பண்ணுவாங்க இங்க இருக்கிற யாருமே உன்னை கண்டுக்க கூட மாட்டாங்க நீ யார் நான் உங்களுக்கு தெரியவே தெரியாது நீ எப்படி இதுக்கு முன்னாடி டிரஸ் பண்ணனு தெரியாது.

அதனால, தைரியமா இதெல்லாம் எடுத்துக்கோ,

நீ ஒன்னும் எடுக்க மாட்ட, நானே செலக்ட் பண்ணி தரேன்னு சொல்லி அவன் எல்லாமே வெஸ்டர்ன் கலெக்ஷன் ஆக எடுத்துட்டு இருக்கும்போது,

இங்கே பாரு, திடீர்னு என்ன ரொம்ப ஓவரா வெஸ்டர்ன் கல்ச்சருக்கு மாற சொன்னா என்னால திடீர்னு எப்படி மாற முடியும்?…

நீ சொல்ற மாதிரி எனக்கு சுடிதார் வேணாம். ஆனா கொஞ்சம் டீசண்டாவது எனக்கு வாங்கி தரலாமே,

கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிறேன் ஒரே ஐடியா என்னால திடீர்னு மாற முடியாது ப்ளீஸ்…

இப்படி சொல்ல சரி அப்போ நம்ம ஃப்ராகு கலெக்ஷனுக்குள்ள போலாம்.

கவுன் மாதிரி போட்டுக்கோ, அது உனக்கு வசதியா இருக்கும்.

வெளில பார்க்க ரொம்ப டீசன்டாகவும் இருக்கும். உனக்கும் சங்கடமா பீல் ஆகாது. அது மாதிரி பாத்துக்கலாம்னு அவன் டக்கு டக்குனு செலக்ட் பண்ணி எடுத்து பில் கவுண்டருக்கு கொண்டு போயிட்டான்.

இப்ப மறுபடியும் போய் அவகிட்ட காட்டாம ஒரு சில கலெக்சன் எடுத்துட்டு வந்து அதையும் பில் போட்டான் கிட்டத்தட்ட 25 ஆயிரத்தை தாண்டியது.

அவ பில்ல பார்த்ததுமே,

என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.

என் சம்பளமே அவ்வளவுதான்.

இதெல்லாம் வேணாம் நான் தான் சொன்னேன் இல்ல சின்ன கடைக்கு போகலாம்னு சொல்லி இப்போ இவங்க கிட்ட என்னன்னு சொல்லி ரிட்டர்ன் பண்ணுவது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நீயே பேசி எதாவது சொல்லிட்டு ஓடி வந்துரு நான் வெளியில நிக்கட்டுமா?…

கொஞ்சம் அமைதியா இரு.

நான் பார்த்துக்கிறேன். நான்தானே உன்னை கூட்டிட்டு வந்தேன். எனக்கு தெரியும் நீ அமைதியா இரு என்று அவன் எல்லாத்தையுமே வாங்கிட்டு மொத்த அமௌன்ட்டையும் ஒரே தாக செட்டில் பண்ணிட்டு வெளியில் கூட்டிட்டு வந்தான்.

எவ்வளவுன்னு கணக்கு வச்சுக்கோ நான் அப்புறம் உனக்கு தர்றேன். அடுத்த மாசம் வரும் இல்ல அப்போ கொஞ்சம் அதுக்கு அடுத்த மாசம் கொஞ்சம், அவனுக்கு ஓகே தானே.,

அப்ப வீட்டு வாடகை யார் தருவா?… கரண்ட் பில் தண்ணி பில்லு இப்படி எக்கச்சக்கமா இருக்கு. அதையெல்லாம் கணக்கு சேர்த்து மாதம் ஒரு 50 ஆயிரம் ரூபாய் கொடு என்று அவன் சிரிச்சுக்கிட்டே பைக்ல ஏற,

அவள் டக்குனு பைக்ல ஏறி உக்காந்துட்டா, எப்படி?…

அப்போ ஏற தெரியலன்னு சொன்னியே,

இப்போ எப்படி?…

டக்குனு உக்காந்துட்ட,

அதுவா… நீ அப்போ பைக் நிப்பாட்டு போறேன்னு சொல்லிட்டு போனேல்ல, அப்போ ஒருத்தவங்க பைக்ல ஏறினாங்க ஒன் சைடு ஆக,

அது அப்படியே பிக்கப் பண்ணிக்கிட்டேன். போன் சார்ஜர் மட்டும் எனக்கு வேணும் அது மட்டும் வாங்கி கொடு ப்ளீஸ்…

இப்படி சொல்லும் போது எதுக்காக?… யார்கிட்டயாவது போன் பேச போறியா?.. என்னோட போன் யூஸ் பண்ணிக்கோ இப்போதைக்கு,

நான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி தரேன். ஒரிஜினல் பிராண்ட் ஆக வாங்கி தரேன்னு அவன் சொல்லும்போது,

அதுக்கு இல்ல,

என்னோட ஆஃபீஸ்க்கு நான் இன்பார்ம் பண்ணவே இல்ல, ஒரு மெயில் போட்டு இருக்கணும். ஆனா அத நான் பண்ணவே இல்ல இப்ப ரொம்ப லேட் ஆயிடுச்சு இப்பவே பதினோரு மணிக்கு மேல ஆயிடுச்சு.

என்ன சொல்ல போறாங்கன்னு தெரியல, அதனாலதான்.

என்னோட போன் வேணும்னு நான் கேட்கிறேன் அவள் சொல்லும் போது ,

நான் இதை மறந்துட்டேன் பாரு…

டைட்டா பிடிச்சுக்கோ,

இப்படி சொல்லிட்டு அவன் பைக் ரொம்ப ஸ்பீடாக ஓட்ட ஆரம்பித்தான்.

மெதுவா போ… மெதுவா போ ப்ளீஸ்… இப்படி அவள் கத்திகிட்டே இருக்க ஆனா அவன் பயங்கர ஸ்பீடாக போனான்.

இப்போ நேராக ஆபீஸ் வாசலுக்கு உள்ளேயே பைக் விட்டுட்டான் அவ்வளவு தூரம் யாருமே இதுவரைக்கும் பயக்க கொண்டு வந்ததே கிடையாது என்ட்ரன்ஸ்லையே பார்க்கிங் இருக்கு.

ஆனால் அவன் உள்ளவரைக்கும் கொண்டு வந்து அவளை இறங்க சொல்லி கையை புடிச்சு உள்ள கூட்டிட்டு போனான்.

அங்கே உட்கார்ந்து இருந்த அர்ஜுன் பக்கத்துல போய்,

ஏய்…

எழுந்திரு, இப்படி சொல்ல, விக்ரம் என்ன பண்ற?…

இங்க எதுக்கு நம்ம வந்தோம்?…

இது என்னுடைய ஆபீஸ் மேட் அர்ஜுன் இப்படி அவள் இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சுக்கிட்டு இருக்கும்போது,

அவனுடைய சட்டையை பிடித்து அவனை மேல தூக்கினான். சார் என்ன சார் இது?..

நான் என்ன சார் பண்ணேன்?.. இப்படி அவன் பதற்றத்தோடு கேட்கும் போது,,

நேத்து எதுக்கு நிலாவை பாத்ரூம்ல வச்சு பூட்டிட்டு போன, உன் கூட இன்னும் நாலு பேர் இருந்தாங்களே அவங்க எல்லாருமே இப்ப வரணும். எதுக்குடா இப்படி பண்ண?..

இப்படி சட்டையை பிடிச்சிட்டு கேட்கும் போது அந்த நாலு பேரும் சார்.. சார்.. விடுங்க சார்.

சாரி சார்..

ஏதோ தெரியாம விளையாட்டுக்கு பண்ணிட்டோம் இப்படி சொல்லிக்கிட்டு அவனுடைய பிரெண்ட்ஸ் அங்கே ஓடி வரும்போது, வெக்கமா இல்லையா உங்க எல்லாருக்கும்?..

இந்த பொண்ணு உங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பொண்ணு தானே இந்த பொண்ணு எப்படி நீங்க உள்ள வச்சு கூட்டிட்டு வரலாம்.

அவ்வளவு தைரியமா போச்சா உங்க எல்லாருக்கும்?..

எதுக்காக இப்படி பண்ணீங்க எனக்கு பிராப்பரான ரீசன் வேணும் அப்படி இல்லன்னா உங்கள் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அது மட்டும் இல்லாம உங்க வேலை காலியாகி வேறு எங்கேயுமே வேலை பார்க்க முடியாத அளவுக்கு நான் பண்ணிடுவேன்னு அவன் பயங்கர கோபமாக சொல்லும்போது,

சார் அதுக்கு நான் தான் காரணம்.

நிலா கூட நாங்க யாரும் பேசினது இல்ல அவள் கூடவும் யாரும் பேசுவது இல்லை, அர்ஜுன் மட்டும் தான் பேசுவாரு.

அதனால அர்ஜுனையும் அவங்களையும் சேர்த்து வச்சு கிண்டல் பண்ணினோம். அதுல கொஞ்சம் ட்ரிக்கர் ஆகிட்டாரு.

இப்படி ஒரு பொண்ண போய் நான் கல்யாணம் பண்ணுவேன் என்ற மாதிரி அவர் கொஞ்சம் கோபப்பட்டுட்டாரு அதே நேரத்துல கிண்டலுக்காகவும் இந்த மாதிரி செஞ்சுட்டாரு நாங்க எல்லாரும் தான் சார் உடந்தை நாங்க உண்மையை ஒத்துக்கிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் சார்.

இதுக்கு அப்புறம் இந்த மாதிரி நடக்காது. நிலா சாரி நிலா,

நாங்க அப்படி பண்ணி இருக்க கூடாது உன்னோட பர்சனல் டைரிய எடுத்து படிச்சிருக்க கூடாது.

We are sorry.sorry for everything.

நாங்க இனிமேல் உன்னை அந்த மாதிரி டீஸ் பண்ண மாட்டோம் சாரி. சார் நீங்களும் பெரிசா எடுத்துக்காதீங்க சார்..

இந்த பிரச்சனை இத்தோடு விட்டுடுங்க சார் நல்லா நீயாவது பேசு நிலான்னு அந்த பொண்ணு கையை இறுக்கமா புடிக்கும்போது,

அங்கே இருந்த எல்லாருமே மிரண்டு போயிட்டாங்க,

விக்ரம் சார் ரொம்ப நாள் கழிச்சு ஆபீஸ் வந்திருக்காரு.

அதுவும் போயும் போயும் இந்த நிலாவுக்காகவா வந்தாரு?…

இந்த நிலா அவருக்கு என்ன அப்படி ஸ்பெஷலா அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ரிலேஷன்ஷிப் இருக்கா?..

இங்க இருக்கும்போது அமுக்கணி மாதிரி இருப்பா, அவர் கூட இருக்கும்போது பாரு அவளுடைய கெட்டப்ப,

பயங்கரமா இருக்காலே…

இது உண்மையிலேயே இந்த பேக் நிலா தானா?..

இப்படி சிலர் முணுமுணுத்துக் கொண்டிருக்க,

இப்பொழுது அர்ஜுன் நேராக நிலா பக்கத்துல வந்து சாரி நிலா,

உனக்கு என் மேல ஒரு விதமான இன்ட்ரஸ்ட் இருக்குன்னு இவங்க எல்லாரும் சொன்னாங்க. நானும் அதை நம்பிட்டேன்.

உன்னோட டைரில நீ யாரைப் பத்தி எழுதி இருக்கன்னு எனக்கு தெரியல,

ஆனா என்னை பத்தி தான் எழுதி இருக்கன்னு எல்லாரும் சொன்னதுமே…

நானும் நம்பிட்டேன்.

எனக்கு உன் மேல் அந்த மாதிரி எந்த ஒரு ஈர்ப்பும் வந்தது இல்லை நீ என்னோட டைப் பொண்ணு கிடையாது.

உன்னை எல்லாரும் பட்டிக்காடு ன்னு தான் கூப்பிடுவாங்க. நிலாவுக்கு உன் மேல ஒரு விருப்பம் இருக்குன்னு சொல்லிட்டு என்னையும் சேர்த்து பட்டிக்காடு என்று சொல்லிட்டாங்க, என்னால அதை தாங்கிக்க முடியல அதனால தான் நான் இப்படி ஒரு வேலையை பார்த்துட்டேன்.

காலையில வந்ததுமே நான் உன்னை தான் தேடினேன். வாட்ச் மேன் கிட்ட விசாரிச்சேன். நைட் வாட்ச்மேன் தான் இப்ப இருக்குற வாட்ச்மேன் கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போயிருப்பார் போல அவர் சொல்லி தான் எனக்கே தெரிஞ்சது,

நீ நைட்டே கிளம்பிட்டேன்னு,

இப்படி அவள் கிட்ட சாரி கேட்கிற விதமாக அவன் பேசும்போது,

உன்னால நான் இப்போ என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று தெரியுமா அர்ஜுன்?..

நான் உன்கிட்ட வந்து சொன்னேனா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி, அப்படி இருக்கும்போது நீ நெனச்சதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?..

நேத்து என்ன பொண்ணு பாக்குறதுக்கு என் வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருந்தாங்க,

நான் இல்லன்னு தெரிஞ்சா என்னென்னெல்லாம் பேசி இருப்பாங்கன்னு உனக்கு புரியுதா?..

இப்ப என்ன வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. நான் இப்ப என்ன பண்ணனும்னு நீ சொல்லு நீ செஞ்ச ஒரு காரியத்தினால் இப்ப என் வாழ்க்கை நெருக்கடி ஆகி போய் நடுரோட்டில் வந்து நின்னுட்டு இருக்கேன்.

என் பேமிலி என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க என் பேச்சை ஒரு வார்த்தை கூட அவங்க கேட்கவே இல்ல அதுக்கு தகுந்த மாதிரி நானும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கிட்டேன்.

சரி, அதையும் மீறி எனக்கு உன் மேல விருப்பம் இருந்தாலுமே இப்போ என்ன அதுக்கு யாருக்கும் யார் மேல வேணாலும் விருப்பப்படறதுக்கு உரிமை இருக்கா இல்லையா?..

நீ என்கிட்ட நல்லா பேசுறன்றதுக்காக சிரிச்சேன் மத்தபடி இப்படி ஒரு ஆள போய் நான் விரும்புவேன் என்று அதற்கு அர்த்தம் கிடையாது நீ அதுக்கு தகுதி இல்லை,

ஒரு ஆளுடைய மனசு உடைக்கிற நீ..

எனக்கு எப்போதும் தகுதி கிடையாது இப்படி சொல்லிட்டு அங்கிருந்து அழுது கொண்டு வெளியில் ஓடிப் போக,

விக்ரமும்,

உங்க எல்லாரையும் நான் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுகிறேன். கொஞ்ச நாள் நான் ஆபீஸ்க்கு வராததுனால எல்லாருக்கும் குளிர் விட்டு போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

மேனேஜர் இங்க வாங்க,

இவங்க எல்லாருக்கும் சஸ்பெண்ட் ஆர்டர் ரெடி பண்ணி ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம் நிலா ஒரு வாரம் ஆபீஸ்க்கு வர மாட்டா,

அவளுக்கு பர்சனல் லீவு என்று சொல்லிட்டு ரெக்கார்ட்ல சேர்த்துருங்க,

இதுக்கு அப்புறம் இந்த ஆபீஸ்ல இருக்குற யாராவது யாரையாவது டீஸ் பண்ணா அவ்வளவுதான் இப்படி சொல்லிட்டு அவன் அங்கிருந்து வெளியில் வந்தான்.

அங்கே இருக்கிற ஒரு பெஞ்ச் ல அவள் உட்கார்ந்து பயங்கரமாக கதறி கதறி அழுதாள். நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று பாரு…

என்ன இவ்வளவு சீப்பா ஒருத்தன் நினைச்சுட்டு இருக்கான். இவனுக்கு போய் நான் எவ்வளவு உதவி பண்ணி இருக்கேன்னு தெரியுமா?..

எல்லா பொண்ணுங்க மாதிரியும் எனக்கும் யார் மேலும் ஆசை வர கூடாதா என்ன?..

ஏன் என்னை இப்படி சீப்பா நடத்துறாங்கன்னு எனக்கு இப்போ வரைக்கும் புரிய மாட்டேங்குதுன்னு சொல்லி அவள் பயங்கரமாக கதறி அழுக,

அப்படி அவங்க நினைக்கிறாங்கன்னா, அவங்க உனக்கானவங்க இல்லன்னு அர்த்தம். உனக்காகவே ஒரு ஆள் பிறந்து இருப்பாங்க. அவங்கள மட்டும் எப்போதும் விட்றாத கண்ட ஆட்களை பார்த்து, இப்படி சொல்லிட்டு அவளை தேற்றினான்.

இனி என்ன நடக்குதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page