உன்னில் சிறையாகிறேன் – 12

மோதலில் விளைந்த யுத்தம், 

காதலில் மடியட்டும்…! 

எனைச் சுடும் கோபமும் நீயே,

எனை அணைக்கும் அன்பும் நீயே…!

உன்னில் சிறையாகிறேன் – 12

தாத்தா…” அக்னியின் அந்தக் கர்ஜனை அந்தப் பிரம்மாண்டமான மாளிகையின் ஒவ்வொரு சுவரிலும் மோதி எதிரொலித்தது.

அவன் அருகில் இருந்த விலையுயர்ந்த பூ ஜாடிகளைத் தட்டி விட்டான். அது உடைந்த அந்தச் சத்தத்தில் அருவி அப்படியே சிலையாக உறைந்து போனாள். அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. 

மாடியில் தூங்கிக் கொண்டிருந்த யாழினி, அக்னியின் குரல் கேட்டு விக்கித்து எழுந்து மீண்டும் அழத் தொடங்கினாள், ஆனால் அருவியால் ஓடிப் போய் குழந்தையைத் தூக்கக் கூட முடியாத அளவுக்கு அக்னியின் பார்வை அவளைக் கட்டிப் போட்டிருந்தது.

​சத்தம் கேட்டுத் திருவாசகம் அவசர அவசரமாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்தார், அவருக்குப் பின்னால் தூக்கக் கலக்கத்துடன் அசோகனும், எப்போதும் போல முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வாசுதேவனும் வந்து நின்றனர்,

​​”என்னடா அக்னி விடியற்காலையில எதுக்கு இப்படி வீடே அதிரக் கத்துற” என்று திருவாசகம் கேட்டார், ​அக்னி சோபாவிலிருந்து எழுந்து பாய்ந்து வந்தான்,

“என்னோட இந்த நிலமைக்கு நீங்க தான காரணம், என்ன தாத்தா? இதெல்லாம் என் பெட்ரூம்ல ஒரு இந்தப் பொண்ணும் குழந்தையும் இருக்காங்க. இதுக்கு என்ன அர்த்தம்? 

“இந்த வீட்டில எனக்குன்னு ஒரு பிரைவசி கிடையாதா? போறவங்க வர்றவங்க தங்குறதுக்கு இது ஒன்னும் ஹோட்டல் இல்ல. முதல்ல இவளை யாரைக் கேட்டு வீட்டுக்குள்ள விட்டீங்க?” என்றவன் சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டான் அக்னி.

​திருவாசகம் நிதானமாக அருவியைப் பார்த்தார், அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவருக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ணியது, 

​”எதுவா இருந்தாலும் பார்த்து பேசு அக்னி, அவ இந்த வீட்டு மருமக, உன் பொண்டாட்டி, அவ உன் ரூம்ல இருக்காம வேற எங்க இருப்பா” என்று திருவாசகம் அழுத்தமாக கேட்க,

​”பொண்டாட்டியா, யாரு இவளா, ஒரு கோடி ரூபாய் செக்க வாங்கிக்கிட்டு வந்த இவ என் பொண்டாட்டியா,  நீங்க எங்கிட்ட எதுவுமே சொல்லலைனா எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க தாத்தா, எல்லாமே தெரியும், 

கேவலம் பணத்துக்காக இந்த வீட்டுக்குள்ள வந்தவ தான, அதே பணத்தை குடுத்து திருப்பி அனுப்புங்க, இனிமே இவ இந்த வீட்டு வாசல்ல கூட நிற்கக் கூடாது” என்று கத்தினான் அக்னி.

“நீ பேசுறது ரொம்ப தப்பு, வார்த்தைய அளந்து பேசு அக்னி. நீ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைனாலும் அருவி தான் உன் பொண்டாட்டி, அதை யாரும் மறுக்க முடியாது. 

இனிமே அவ இங்க இங்கதான் இருப்பா, இருக்கணும், அதையும் மீறி போகணும்னா அவ கூட சேர்ந்து நானும் இந்த வீட்டை விட்டு போயிருவேன்,” என்று கூற 

அக்னிக்கு கோபம் தலைக்கேறியது. தனக்கு பின்னால் இருந்த ஷோபாவை உதைத்தான். அது வேகமாக நகர்ந்து கீழே 

“இப்படி பிளாக் மெயில் பண்ணி பண்ணி தான், என்னை டார்ச்சர் பண்றீங்க தாத்தா, இவ யாரு இவளுக்காக எதுக்கு நீங்க இந்த வீட்டை விட்டு போகனும், 

எங்கிருந்தோ இவளைப் பிடிச்சுட்டு வந்து தாலி கட்டிச் சொல்லி பிளாக்மெயில் பண்ணீங்க. இப்ப அவளுக்காக வீட்டை விட்டுப் போறேன்னு சொல்றீங்க. இது எதுவுமே எனக்குப் புரியமாட்டேங்குது,”” என்று அக்னி கேட்ட கேள்விகள் அருவிக்குள்ளும் எழுந்தன. 

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தாத்தா தான் தன்னைத் தேடி வந்து பெண் கேட்டார், அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறை. 

தன் பேரனுக்காக பெண் கேட்டவரை முதலில் நாசூக்காக மறுத்தவள், ஒரு கட்டத்தில் கரராக மறுத்துப் பேசி அனுப்பினாள். குழந்தைக்காக தாத்தாவை தொடர்பு கொண்ட போது,

அவரிடம் அவ்வளவு மகிழ்ச்சியும் பூரிப்பும் இருந்தது, ஆனால் அதே மகிழ்ச்சி தாலி கட்டியவனிடம் சிறிதும் இல்லை. அது ஒரு பெரிய விஷயமாக அப்போது தெரியவில்லை.

அவன் இப்ப பேசும்போதுதான்  முழுதாகப் புரிகிறது, அவனுக்கும் தன்மீது விருப்பம் இல்லை என்று. பிடிக்காத இருவரை சேர்த்து வைக்க இந்தத் தாத்தா ஏன் இவ்வளவு முனைப்பு காட்ட வேண்டும்?

யாரென்றே அறியாத, பெயர்கூட தெரியாத இருவரையும் இணைக்க இவர் ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்? தனக்காக தன்னுடன் வீட்டை விட்டு வருவேன் என்று பரிந்து பேசி மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் மகிழருவியின் மனதை அரித்தது. 

“இங்க பாருப்பா, கொஞ்சம் பொறுமையா இரு. அருவி ரொம்ப நல்ல பொண்ணு. அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்குமான்னு தோணுச்சு. அதான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்.

நானா விருப்பப்பட்டு தான் கூட்டிட்டு வந்தேன், மத்தபடி அருவிக்கும் நடத்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அவ மேல கோபப்படாத அக்னி” என்று தாத்தா இறங்கி வந்து பேச, தாத்தாவின் பேச்சில் சற்று நிதானம் பெற்று தன்னை ஆசுவாசப்படுத்திய அக்னி,

“நீங்க அவ இந்த வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டீங்க, இப்ப கூட்டிட்டும் வந்துட்டீங்க, அதுவரைக்கு கூட ஓகே, என் பெட்ரூமுக்கு வரணும்னு எந்த அவசியமும் இல்லல்ல, 

இப்ப சொல்றேன் தாத்தா, இவளையும் அந்தக் குழந்தையையும் என் ரூமை விட்டு வெளியே போகச் சொல்லுங்க, இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு பிசினஸ் பண்ணி வந்தவளுக்கு என் ரூம்ல இடமில்லை” என்று அக்னி சென்னதும், 

அருவியின் கண்கள் சிவந்தது​அதுவரை அக்னியின் வார்த்தை அம்புகளைத் தாங்கிக் கொண்டு மௌனமாக இருந்த அருவிக்கு, இப்போது பொறுமை எல்லை கடந்தது, தன் குழந்தையை ‘பிசினஸ்’ என்று அவன் சொன்னது அவளது தாய்மையைச் சீண்டியது,

​கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அக்னியின் முன்னே வந்து நின்றாள், அவனது உயரத்திற்கு அவளது தலை அவனது மார்பு வரைதான் இருந்தது, ஆனாலும், நிமிர்ந்து அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்,

“நிறுத்துங்க, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் அவ்ளோதானா? போனாப் போகுதேன்னு அமைதியா இருந்தா, என்னவோ ரொம்ப பேசுறீங்க. இனி ஒரு வார்த்தை கூட என் குழந்தையப் பத்தி பேசக்கூடாது,” என்றாள் அருவி. 

அவளது குரல் நடுங்கினாலும் அதில் ஒரு உறுதி இருந்தது.

​அக்னி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான், இந்த வீட்டில் அவன் முன்னால் நின்று பேச எவருக்கும் துணிச்சல் கிடையாது,

​”என்னை என்ன வேணாலும் சொல்லுங்க, பணத்துக்காக வந்தவன்னு சொல்லுங்க, அடிமைன்னு சொல்லுங்க, ஆனா என் குழந்தையை இழுக்காதீங்க. 

என் குழந்தையோட உயிருக்காகத்தான் நான் இந்த நரகத்துக்குள்ள வந்திருக்கேன். உங்க ரூம்ல இருக்கணும்னு எனக்கு எந்த ஆசையும் இல்லை. உங்க பக்கத்துல நிற்கிறதைக் கூட நான் அருவருப்பா நினைக்கிறேன்” என்றாள் மகிழருவி.

​அக்னியின் முகம் கோபத்தில் கருத்தது, அவனது தாடை எலும்புகள் இறுகின, 

“என்ன சொன்ன, அருவருப்பா?” என்று அவளை நோக்கி ஒரு அடியெடுத்து வைத்தான்.

​”ஆமாம் பணமிருக்குங்கிற திமிர்ல பேசுற உங்களை விட, கையேந்தி நிக்கிற நான் எவ்வளவோ பரவாயில்ல” என்றவள் தாத்தாவிடம் வந்தாள்

“தாத்தா, அவர் என்ன சொல்றது நான் சொல்றேன். எனக்கு அவர் கூட அந்த ரூம்ல இருக்க பிடிக்கல. எனக்கு வேற ரூம் குடுங்க. அங்கே நான் என் குழந்தையோட இருந்துக்கிறேன்,” என்று திருவாசகத்தைப் பார்த்து ஆவேசமாகக் கேட்ட மகிழருவி, 

அசோகன் இதைப் பார்த்து மெல்லக் கண்மூடி ஜெபமாலை உருட்டினான், வாசுதேவன் ஒரு கேலிச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார், அக்னிக்கு ஒரே அசிங்கமாகிப் போனது, 

​திருவாசகம் நிலைமையைப் புரிந்துகொண்டார், அக்னியை இப்போதைக்கு அடக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும், அருவியும் இங்கு உள்ள சூழ்நிலைக்கு பழக வேண்டும் என்று எண்ணி அவளுக்காக ஒரு தனி அறையை ஏற்பாடு செய்தார்,

அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை, விறுவிறுவென மாடிக்குச் சென்று, அழுது கொண்டிருந்த யாழினியைத் தூக்கிக் கொண்டு, தன் பழைய துணிப் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்,

அக்னியும் தன்னறைக்கு வந்தான். அவன் உள்ளே வரவுமவெளியேறவும்,யேறவும் அவள் அக்னியைக் கடந்து செல்லும்போது, அவனது கண்கள் அவளைப் பின்தொடர்ந்தன. 

அவனது அனல் பார்வைக்கு ஈடாக,, அவளது கண்களில் இப்போது ஒரு வைராக்கியக் கனல் தெரிந்தது.

​அவள் சென்ற பிறகு, அக்னி கதவை இழுத்து மூடினான்,

​”என்கிட்டயே எதிர்த்துப் பேசுறாளா? இவளோட திமிரை எப்படி அடக்குறேன்னு பாரு” என்று பற்களைக் கடித்தான்,

​பெண் வாசனையே இல்லாத வேங்கையவன் மனதில் குடிகொள்ளப் போகும் வஞ்சியவள் என்று அறியாதவன் அக்னியன்,

அக்னியின் அறைக்கு நேர் எதிரே இருந்த ஒரு பிரம்மாண்டமான அறையின் கதவைத் திறந்தார்,

அது அக்னியின் அறையைப் போலவே வசதிகள் நிறைந்தது. 

​”இனி இதுதான் உன் அறை அருவி, நீ இங்க தான் இருக்கனும்” என்றார் திருவாசகம், அருவிக்கு நடுக்கமாக இருந்தது, 

“அச்சச்சோ இங்கயா, வேணாமே தாத்தா, தேவையில்லாம அவரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கும், அவரும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டே இருப்பார்” என்றாள் மகிழருவி.

​”வம்பு வந்தா தான் வாழ்க்கை மாறும் அருவிம்மா, பயப்படாம உள்ளே போம்மா, என்னை மீறி ஒரு பைய ஒன்னும் பண்ண முடியாது” என்று தைரியம் கூறி அவளை அந்த அறைக்குள் அனுப்பினார்,

​யாழினிக்குக் குளிப்பாட்டி, அவளுக்குத் தளர்வான உடைகளை அணிவித்தாள், தானும் குளித்து விட்டு வந்து தலையை உலர்த்திக் கொண்டு அறையின் கதவைத் திறந்தாள், அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது,

​”டமால்” அக்னியின் அறைக் கதவும் பலமாகத் திறக்கப்பட்டது,

​அக்னி அலுவலகம் கிளம்பத் தயாராகி வெளியே வந்தான், கறுப்பு நிறச் சட்டையும், கையில் விலையுயர்ந்த கடிகாரமும் அவனது கம்பீரத்தை இன்னும் கூட்டியிருந்தது,

அவன் வெளியே வந்ததும் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ​நேர் எதிரே இருந்த அறையில் அருவி நின்றிருந்தாள், அவள் ஈரம் காயாத கூந்தலில் நீர் சொட்ட, 

எட்டிப் பார்த்தால் உள்ளே யாழினி கட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள், ​அக்னியின் கண்கள் அனலாகத் தகித்தன, விறுவிறுவென அவளின் அருகில் வந்தவன்,

​”என்ன நினைச்சுட்டு இருக்க நீ, தாத்தா சொன்னார்னு நேத்து என் ரூம்ல இருந்த, இன்னைக்கு எனக்கு எதிர்லயே வந்து இருப்பியா” என்று அவன் பல்லைக் கடித்தான்,

​அருவி மெல்லத் திரும்பினாள், அவள் கண்களில் இப்போது பயம் இல்லை,

“இது தாத்தா எனக்கு குடுத்த ரூம். உங்களுக்குத் தொந்தரவா இருந்தா நீங்க தாராளமா உங்க கதவைப் பூட்டிக்கலாம், இல்லன்னா வேற ரூம் கூட மாத்திக்கலாம். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல” என்று மிக நிதானமாகச் சொன்னாள்.

​”ஏய்! என்னைப் பார்த்துப் பேசுற அளவுக்கு உனக்குத் தைரியம் வந்துடுச்சா, இங்க பாரு என் கண்ணு முன்னாடி நீ நடமாடுறதை என்னால சகிச்சுக்க முடியாது, மரியாதையா இந்த ரூமை போயிடு, முடிஞ்சா இந்த வீட்டை விட்டே போனாலும் நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்” என்றான் அக்னி

​”நீங்க சந்தோஷப்படுவீங்கன்னா அப்போ நான் நிச்சயமா, இந்த வீட்டை விட்டு மட்டும் இல்ல இந்த ரூமை விட்டும் போக மாட்ட, இங்க தான் இருப்ப, உங்காளல முடிஞ்சதை பார்த்துக்கோங்க” என்று கூறி திமிராக அவன் முன் வந்து நின்றாள்,

​அக்னி நிலைகுலைந்தான், அவளது துணிச்சலும், அவள் உடலில் இருந்து வந்த அந்த மெல்லிய சந்தன வாசமும் அவனது ஆண்மையைத் தீண்டியது,

​”அதிகமா பேசாதடி இது என்னோட வீடு, இங்க இருந்து உன்ன எப்படி ஓட வைக்கிறேன் பாரு” என்று கத்தியவன், அவளைக் கடந்து விறுவிறுவெனப் படிகளில் இறங்கிச் சென்றான்,

அக்னிபிறகு,ற பிறகு அவளது இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. என்னதான் தான் துணிச்பேசினாலும்,ினாலும் அவளுக்கு உள்ளே உதறல் எடுக்க எடுக்கத்தான் செய்தது. அதை மறைக்க வெகுபாடு பட்டாள். 

அவள் மெல்ல எட்டிப் பார்க்க அவன் வீட்டின் வாசற்படியைக் கடந்து விட்டான். இப்போதுதான் தான் மகிழருவிக்கு மூச்சே வந்தது. பெருமூச்சு விட்டபடி திரும்பிப் பார்த்தாள். அங்கே யாழினி விளையாடிக் கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்து புன்னகைத்தவளுக்கு இன்று நடந்த யுத்தம் ஒன்றும் பெரிதல்ல என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி மனதைத் தேற்றினாள் மகிழருவி.

அக்னிக்கும் அருவிக்கும் இடையில் போர் தொடங்கியது. போரின் முடிவில் வெல்லப் போவது யார்?

அக்னியின் பிடிவாதமா?

அருவியின் நிதானமா?

அல்லது இருவரையும் வைத்து தாத்தா போடும் திட்டமா?

எதுவாயினும் திருமணம் எனும் முற்றுப்பெற முடியா பந்தத்தில் இணைந்தவர்கள், தங்கள் வாழ்விலும் இணைபிரியாமல் வாழ வேண்டுமென வாழ்த்திச் செல்லுங்கள்…!

தொடர்ந்து வாசிப்போம், வாங்க. 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page