விதி வரைந்த கோலத்திலே, நான்
விழுந்துவிட்ட புள்ளியானேன்…!
விலகிப் போகத் துணிகையில் உன் விழிகளில் ஏனோ விழுந்து தொலைகிறேன்…!
உன்னில் சிறையாகவே
உயிரோடு மெல்லச் சிதைகிறேன்…!
உன்னில் சிறையாகிறேன் – 16
“என் மகனுக்கு வேனா நீ மனைவியா இல்லாம இருக்கலாம், ஆனா என் பேரனுக்கு நீ அம்மா தானா, அந்த அதிகாரம் இன்னும் எங்கிட்ட தான் இருக்கு வசந்தா” என்றார் திருவாசகம்,
“என் பையனை கைக்குள்ள வச்சுட்டு தான என்னை ஆட்டிப் படைக்க திட்டம் போடுறீங்க, அவனும் உங்க தாளத்துக்கெல்லாம் ஆடுற தலையாட்டி பொம்மை ஆடிட்டு இருக்கான்” என்று ஆங்கரமாக சொன்னாள் வசந்த ராணி,
“ஆமா பெத்தவங்க இரண்டு பேரும் குத்துக்கல்லு மாதிரி இருந்தும் பெத்த பிள்ளை மேல அக்கறை இல்லாம எப்படியோ போன்னு விட்டுட்டீங்க, ஆனா நான் அப்படி இருக்க முடியுமா” என்று எதிர் வாதம் செய்தார் திருவாசகம்,
” அதான் உங்க அக்கறை என்னன்னு தெரியுதே, உங்களால தான் ஊர் உலகமே என்னைப் பார்த்து கை தட்டிச் சிரிக்குது” என்று கடுகடுத்தாள்,
“ஒன்னுமே இல்லாத பிரச்சனைக்கு சண்டை போட்டு கட்டுன புருஷனை வேண்டான்னு சொல்லி டிவோர்ஸ் கேட்டப்போ இந்த ஊர் சிரிக்கலயா, பெத்த பையனே வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சுட்டு,
இந்த வீட்டை விட்டு போனப்போ இந்த உலகம் உன்னப் பார்த்து சிரிக்கலையா, இப்ப மட்டும் என்ன நடந்திருச்சுன்னு நீ இப்படி காலங்காத்தால வந்து கத்திட்டு இருக்க வசந்தா” என்று ஓங்கி கணீரென ஒலிக்கும் குரலில் கேட்டார் திருவாசகம்,
“இப்ப எதுக்கு நீங்க முடிஞ்சு போன விஷயத்தை பேசிட்டு இருக்கீங்க, அது பழைய பஞ்சாங்கம் அது இப்ப தேவையில்ல, இவ யாரு, எங்கிருந்து திடீர்ன்னு வந்தா, இவளால தான என் மானம் மரியாதை அந்தஸ்த்து எல்லாமே போச்சு” என்று மகிழருவியை சாடினாள் வசந்தா ராணி,
“அருவியால உனக்கு என்ன பிரச்சனை, அக்னி விருப்பப்பட்டு தான் அருவியை கட்டிட்டான், ஒரு தாத்தாவா என் பேரனுக்கு நல்லா வாழ்க்கை துணை அமைஞ்சுதேன்னு,
சந்தோஷமா அர்ச்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணேன் இதுல என்ன இருக்கு” என்று சாதரணமாக தான் கேட்டார், அதுக்கே அவள் கோபத்தில் கொதித்தெழுந்தாள்,
“என்ன இருக்கா, இவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்காமே, ஒரு குழந்தையோட இருக்கிறவளை கட்டிக்கிற அளவுக்கு என் பையன் அவ்ளோ தரம் தாழ்ந்து போயிட்டானா,
அவன் இருக்கிற அழகுக்கும் ஸ்டைலுக்கும் இவ அவன் பக்கத்துல நிற்க இல்ல எட்ட நின்னு எட்டிப் பார்க்க கூட முடியாது, எங்கயோ திரிஞ்ச ஒருத்திய என் வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியாது” என்று கத்தினாள் வசந்தா ராணி,
“உன்னை யார் இப்ப ஏத்துக்க சொன்னா, அவ என் பேரனுக்கு தான் பொண்டாட்டி உனக்கு இல்ல, அவ கூட வாழப் போறதும் அவன் தான், இடையில கேள்வி கேட்கவும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்றதுக்கும் நீ யாரு” என்று ஆவேசமாக கேட்டார் திருவாசகம்,
அருவி தனக்காக மூச்சு வாங்க சண்டை போடு தாத்தாவைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது, கூடவே பாவமாகவும் இருந்தது, உடனே
“தாத்தா ப்ளீஸ் எனக்காக நீ சண்டை போடாதீங்க, அமைதியா இருக்க தாத்தா” என்றாள் மகிழருவி,
“ஏய்…. உன்னால தான்டி இவ்வளவு பிரச்சனையும் இப்ப நீயே சமாதனப்படுத்த வர்றியா, இங்க பாரு இன்னும் பத்து நிமிஷம் டைம் தர்றேன் அதுக்குள்ள நீயும் நீ பெத்த புள்ளையும் என் கண்ணுல படாம இந்த வீட்டை விட்டுப் போயாகனும்,
இல்லைன்னு வை அப்புறம் உன்னையும் உன் புள்ளையையும் உயிரோட இங்கயே வச்சு புதைச்சிடுவேன்” என்று வசந்தா கூறிய அடுத்த நொடி அருவிக்கு கோபம் வந்தது,
“என்னையும் என் புள்ளையையும் கொன்னு புதைச்சிடுவீங்களா, அப்புறம் வேற என்ன எல்லாம் பண்ணுவீங்க” என்று கேட்டாள் அருவி,
“என்னடி என்னையே எதிர்த்து பேசுறியா, உனக்கு அவ்ளோ தைரியம் வந்திடுச்சா, என் முன்னாடி நிற்க கூட தகுதி இல்லாதவ எனக்கு மருமகளா” என்று கூறி சட்டென அவள் கழுத்தைப் பிடித்து நெரித்தாள்,
அதை சற்றும் எதிர்பாராத அருவியோ அதிர்ந்தாள், வசந்த ராணியை பற்றி தெரிந்த திருவாசகம் கூட திகைத்தார்,
“வசந்தா நீ என்ன பண்ணிட்டு இருக்க, அருவியை விடு, அவ பாவம் விட்டிரு வசந்தா” என்று அவளை தடுக்க வேகமாக வந்தவர் கால் தடுக்கி கீழே விழுந்தார்,
வசந்த ராணியின் ராட்ஷச பிடியில் சிக்கிய அருவியின் சங்கு கழுத்தில் நகங்கள் பதிந்து ரத்தமே வழிய ஆரம்பித்தது, மூச்சு விட முடியாமல் கண்கள் பிதுங்கி நாக்கு வெளிய வந்தது,
இன்னும் சில நிமிடங்கள் அவள் உயிர் உடலை விட்டு வலுக்கட்டாயமாக பிரிந்து போய்விடும் என்ற நிலையில் அந்த நொடியில், வசந்த ராணியின் மணிக்கட்டை வாசுதேவனின் இரும்புக் கரம் பற்றி அழுத்த வலியில் அவள் பிடி தளர்ந்தது,
ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த அருவியின் சுவாக்குழாயில் புது காற்றின் பாய்ச்சலில் பெரிய பெரிய மூச்சுகள் வாங்கி தடுமாறி நின்றவள் அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்,
அவள் நின்ற இடம் படிக்கட்டு என்பதால் விழுந்த வேகத்தில் கீழே இருந்த படிக்கட்டில் உருண்டு வந்து பளிங்குத் தரையில் விழுந்தாள்,
திருவாசகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, தவழ்ந்தே அருவியின் அருகில் வந்தார்,
“அம்மாடி அருவி, கண்ணைத் திறந்து பாரும்மா, தாத்தா கூப்பிடுறேன் இல்ல கண்ணைத் திறம்மா” என்று அவள் கன்னத்தை தட்டினார்,
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, ஏன் இப்படி ராட்ஷசி மாதிரி நடந்துக்கிற” என்று கேட்டார் வாசுதேவன், அவரிடம் இருந்த தன் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டாள் வசந்தராணி,
“எனக்கு பைத்தியம் பிடிக்கல, உனக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்கு வாசு, யார் இவ, இவளுக்காக ஏன் எல்லாரும் பரிஞ்சு பேசிட்டு வர்றீங்க, இப்ப எதுக்கு என் கையை பிடிச்சு தடுத்த வாசு” என்று
“மனுஷ தன்மை இருக்கிற யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பாங்க, உனக்கு பிடிக்கிதோ பிடிக்கலையோ எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணனும், இல்லையா நீ உன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போகனும்,
அதை விட்டுட்டு அந்த பொண்ணோட கழுத்தை பிடிச்சு நெரிச்சு, அதனால ஒன்னு கெடக்க ஒன்னு ஆகி ஒரு உயிர் போனா எல்லாமே சரியாகிடுமா” என்று கேட்டார் வாசுதேவன்,
“உயிர் போனா போகட்டும், என்னோட மானம் மரியாதை எல்லாம் போயிடுச்சே அதை விடவா அவ உயிரு பெருசு” என்று மனசாட்சியே இல்லாமல் பேசினாள் வசந்த ராணி,
(இப்படி ஒரு மிருகத்திற்கு மகனாக பிறந்தால் பெண்கள் மீது எப்படி மதிப்பும் மரியாதையும் வரும்)
“மானம் மரியாதைக்கிறது அவரவர் எண்ணிதுலயும் செயல்லயும் தான் இருக்கு, இப்படி கொலை பண்ணா உனக்கு விருது குடுத்து கௌரவப்படுத்த மாட்டாங்க,
உன்னை புடிச்சு ஜெயில்ல போட்டிருவாங்க அப்போ போன மானம் மரியாதை எல்லாம் திரும்ப வந்திடுமா, வயசாகியும் இன்னும் அப்படியே அதே வசந்த ராணியா அடி முட்டாளாவே இருக்கியே” என்றார் வாசுதேவன்,
“யாரு நான் அடி முட்டாளா, நான் அடி முட்டாள், நீ தான் சரியான அடி முட்டாளை விட வடிகட்டின முட்டாள்” என்று அவள் பதிலுக்கு வாசுதேவனைத் திட்டிக் கொண்டிருக்க,
“அடச்சே உங்க சண்டையை நிறுத்துங்க,இங்க ஒருத்தி மூச்சு பேச்சில்லாம இருக்காளே என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கவனிக்காம நீங்க பாட்டுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க,
அய்யோ கழுத்துல இருந்து ரத்தம் வேற வருதே, அருவி கண் முழிச்சு பாரும்மா” என்றபடியே தவித்துக் கொண்டிருந்தவர்,
தட்டுத் தடுமாறி எழுந்து, தன் டிரைவரை அழைத்தார், டிரைவர் வேகமாக உள்ளே வர, டிரைவரும் சமையல்காரரும் அருவியை தூக்கி கொண்டு போய் காரின் பின் சீட்டில் படுக்க வைத்தனர்,
“ரவி, அருவி ரூம்ல குழந்தை தனியா தூங்கிட்டு இருக்கா, அவளை பத்திரமா பாத்துக்க” என்று சமையல்காரரிடம் குழந்தையை பொறுப்பாக ஒப்படைத்து விட்டு காரில் ஏறினார் திருவாசகம்,
கார் வீட்டுக் கேட்டை கடந்து செல்லும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர், குழந்தை எழுந்தாள் அழுமே என்று அதற்கான உணவை தயாரிக்கச் சென்றார்,
“உன் அப்பா இப்ப எதுக்கு அவளை ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போய் சீன் கிரியேட் பண்றாரு, செத்தா சாகட்டும்ன்னு விட வேண்டியது தான” என்றாள் வசந்தா,
“மனுஷியா இருந்தா பேசலாம் மிருகம் அதுவும் ஆறறிவு படைச்ச மிருகத்துகிட்ட பேச முடியுமா, எப்படியோ ஒழிஞ்சு போ” என்ற,
வாசுதேவன் இனி அவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்ற முடிவோடு தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார், வசந்த ராணி மட்டும் ஹாலில் நடுவே போடப்பட்டிருந்த ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்,
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலில் திருவாசகம் தவிப்போடு அமர்ந்திருந்தார், ஒருமுறை அக்னிக்கு போன் செய்யலாமா? என்று கூட யோசித்தார்,
ஆனால் அவனும் அருவியைப் பற்றித் தவறாகப் பேசிவிடுவானோ என்று தயங்கினார், சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார்,
“பயப்பட ஒன்னுமில்ல சார், கழுத்து பகுதியில தான் சில கீறல்கள் கொஞ்சம் ஆழமா இருக்கு, அதுல இருந்து தான் அதிகப்படியான ரத்தம் வந்திருக்கு,
அதே போல தலையிலும் பலமான அடிபட்டிருக்கு, சொல்லப் போனா அதனால தான் மயக்கமே தெளியாம இருந்திருக்காங்க, ஸ்கேன் பண்ணியாச்சு ரிப்போர்ட் வந்ததும் தான் எதையுமே சொல்ல முடியும்” என்றார், டாக்டர்,
“நான் இப்ப பார்க்க முடியுமா டாக்டர்” என்று கேட்டார் திருவாசகம்,
“இப்ப அவங்க கொஞ்சம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும், மயக்கம் தெளிஞ்சு கண் முழிச்சதும் போய் பாருங்க, அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க சார்” என்று கூறிய டாக்டர் அடுத்த பேஷண்டை பார்க்க நகர்ந்தார்,
“நான் இருக்கேன், நான் உன்னை நல்லபடியா வாழப்பேன்னு சொன்னதை நம்பி வந்த பொண்ண, இப்படி கண் முன்னாடி கஷ்டப்பட விட்டு வேடிக்கை பார்த்துட்டேனே,
கடவுளே, இன்னும் என்ன எல்லாம் நடக்கப் போகுதோ, அதை எப்படி நான் சமாளிச்சு, என் பேரன் கூட அருவிங்கிற இந்த அப்பாவிப் பொண்ணை வாழ வைக்கப் போறேன்னோ தெரியலையே” என்று புலம்பியவர் கலக்கிப் போய் நின்றார்,
அதே சமயம், வீட்டில்…
என்ன நடக்கும்?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க,
