உன் விழி தேடும் என் பிம்பம்
உன் விழி தேடும் என் பிம்பம்
ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது. அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.
ஆதவனுக்கு 15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான்.
“கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உண்மையான கல்யாணம் பண்ணி உன்னை என் கூடவே கூட்டிட்டு போறேன்” என்றவன் சத்தியம் செய்து கொடுக்கிறான்.
ஆனால், அவர்களின் வாழ்க்கையில் விளையாடிப் பார்க்க நினைத்த விதியோ, ஒரு கோர விபத்தில் ஆதவனின் மொத்த குடும்பம் விழுங்கியது. அனைவரும் ஆதவன் செத்து விட்டான் சென்று சொன்னபோது தியா மட்டும் அதை நம்ப மறுக்கிறாள். இப்படியே பல வருடங்கள் கடந்தும், அவன் கொடுத்த சத்தியம் அவளை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
அதே நேரம் தியாவின் கல்லூரியில் அவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் சீனியர் விக்ரம். மீராவின் பிடிவாதத்தைக் கண்டு வியக்கும் விக்ரம், அவளுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறான்.
“உனக்கு ரெண்டு வருஷம் டைம் கொடுக்கிறேன்… அதுக்குள்ள உன் ஆதவன் உன்னைத் தேடி வரலைன்னா, நீ எனக்குத்தான்!” என்றவன் கூற, தியாவும் தன் காதலின் மீதான நம்பிக்கையில் விக்ரமின் அந்தச் சவாலை ஏற்கிறாள்.
காலம் கடந்துவிட்ட நிலையில், உயிரோடு தான் இருக்கிறானா என்று கூடத் தெரியாத அந்த ஆதவன் திரும்ப வருவானா? தியாவின் அதீத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா அல்லது விக்ரமின் பிடிவாதமான காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்…
“உன் விழி தேடும் என் பிம்பம்…” (முக்கோண காதல் கதை)
