உயிராக வந்த உறவு – அத்தியாயம் 12
இப்படியே தீரன் கண்ணால் மட்டும் அவளை ரசித்துக் கொண்டு இருக்க ஒரு மாலை நேர கல்லூரி வளாகம்.
சூரியன் மறைய தயாராகி வானம் ஆரஞ்சு நிறத்தில் கரைந்து கொண்டிருந்தது. மாணவர்கள் மெதுவாக வீடு தேடி செல்ல, வளாகம் சற்று அமைதியாகி இருந்தது. அந்த மரத்தடியில் தாரணி நின்றிருந்தாள். கைப்பையில் புத்தகங்கள், காற்றில் அசையும் தலைமுடி, சற்று சிந்தனையில் மூழ்கிய கண்கள்.
தன் தோழியுடன் போனில்,” எங்க அம்மா டூர் போறதுக்கு காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க டி,என்ன பண்றதுன்னு தெரியல. சும்மாவே ஹாஸ்டல் ஃபீஸ் அதிகமா இருக்கு,அதான் நான் உன் கூட ரூம்ல தங்கி இருக்கேன்” என்று போனில் பேசிக்கொண்டு இருக்க
“தாரணி…” என்று அந்த பூவை விட மென்மையாக அழைக்கும் குரல் கேட்டு,”இருடி கூப்பிடுறேன்” என்று காதில் இருந்து போனை எடுத்தவள் அதை கட் பண்ணி விட்டு மெதுவாக திரும்ப
அங்கே தீரன் நின்று கொண்டு இருக்க,
அவனுக்கு எப்போதும் இருந்த அந்த நம்பிக்கை முகம் இப்போது சற்றே பதட்டமாக இருந்தது. கை விரல்களை ஒன்றோடு ஒன்று அழுத்திக் கொண்டே பேச வேண்டிய வார்த்தைகள் தொண்டையில் நின்றது போல.
“ஒரு நிமிஷம் பேசணும்…” என்றான் மெதுவாக.
அவள் “சொல்லுங்க…”என சொல்ல
“இல்ல தரணி அது வந்து..”என்று அவன் நகத்தை கடித்த படி அவன் கால்கள் படபடக்க ஒரு ஆண் மகன் வெக்கப்படுவது எவ்வளவு அழகாகத் தான் இருக்கும் என்பதை தாரணி அப்போது தான் பார்த்து ரசித்தாள்.
அவனைப் பார்த்து மெதுவாக “புன்னகைத்தபடி என்னாச்சு தீரன் சொல்லுங்க”என திரும்பவும் கேட்க
அந்த சிரிப்பே அவன் இதயத் துடிப்பை வேகமாக்க,“நான்… உன்னிடம்… actually…”என்று அவன் தலையை சற்று கீழே குனிய,
அவனுக்கு பாடத்தில் செமினார் எடுக்கும் போது பேசுவது எளிது.
ஆனா இப்போ இந்த ஒரு பெண்ணிடம் உண்மையை சொல்லுவது தான் கடினம்.
“நான் usually இப்படி தயங்க மாட்டேன்,” என்று சிரித்தபடி அவன் சொல்ல
ஹம்ம்.. என அவளும் ஆர்வமாக தலையசைத்தபடி கேட்க
“ஆனா உன் முன்னாடி நிற்கும்போது என்னவோ வார்த்தை கிடைக்கல.”என தீரன் சொல்ல
தாரணி அவனை கவனமாக பார்த்தாள்.
அந்த பார்வை அவனுக்கு தைரியம் கொடுத்தது.
அவன் மெதுவாக “நீ first day classல வந்த நாளே…”என அவன் மெதுவாக ஆரம்பிக்க,
மிஸ்டர் என்ன சொல்ல வரீங்க என அவள் கொஞ்சம் அவன் முகத்தை பார்த்தபடி கோபமாக கேட்க
“என்னோட mindல ஏதோ change ஆயிடுச்சு. உன் சிரிப்பு… நீ பேசுற விதம்… நான் அதை எக்ஸ்பிரஸ் பண்ண முடியல.” என சொல்லி அவன் ஒரு நிமிடம் மூச்சை இழுக்க
“நான் உன்னை பார்க்காம ஒரு நாள் போகுறது கூட கொஞ்சம் வெறுமையா இருக்கு. நீ இல்லாத இடம் வெறுமையா தோணுது. நான் உன்னை like பண்ணுறேன்னு first நினைச்சேன்… ஆனா இப்போ அது அதைக் கடந்துருச்சு.”என அவன் சொல்ல
அவள் இதயம் வேகமாக துடிக்க
அவன் நேராக அவள் கண்களை பார்த்தபடி, அது வந்து என சொல்ல வர
இங்க பாருங்க தீரன் என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க என்ன தாரணி கோவமாக சொல்ல
“நான் உன்னை காதலிக்கிறேன், தாரணி…இது இப்போ தோணுனது இல்ல. தினமும் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தது. நீ உடனே எஸ் சொல்லணும் என்ற அவசியம் கிடையாது. ஆனா இந்த உண்மையை நான் சொல்லாம இருக்க முடியல”என அவன் சொல்ல
அந்த நேரத்தில் காற்று வேகமாக வீச
மர இலைகள் சலசலத்தது. அதை விட தாரணி அவனை முறைத்தப்படி கோபமாக பார்க்க
“ஹே இத எல்லாம் நம்பிட்டியா அங்க பாரு “என தூரத்தில் நண்பன் ஒருவன் வீடியோ எடுப்பதை அவன் கை நீட்டி காட்டவும்
அவள் திரும்பிப் பார்க்க ஒருவன் கையில் மொபைலை வைத்தபடி,”ரீல்ஸ் போடுவதற்காக எடுத்துட்டு இருக்கோம், மச்சான் கலக்கிட்டடா” என்று நண்பன் சொல்லிவிட்டு மொபைலை அவன் அருகில் கொண்டு
இடியட் என்று அவள் கோபமாக திட்டி விட்டு செல்லவும்
“இப்ப எதுக்கு இடியட்னு திட்டுற?நீ இப்படி பொய்யா உன் காதலை சொன்ன திட்டுனாலா? இல்லனா உண்மையா சொல்லலைன்னு திட்டினாலா?”என நண்பன் ஒருவன் அவனை ஏத்தி விட,
தீரனும் தன் இரண்டு புருவத்தை சுருக்கியபடி தாரணி கோவமாக நடந்து போவதை பார்த்துக் கொண்டிருந்தான்..
அந்த நிமிடம் இருவருக்கும் மட்டும் சொந்தமானது.தாரணி கண்களில் ஒரு கோபம்.அவள் பேசாமல் மெதுவாக தன் மனதிற்குள்ளேயே புன்னகைத்தபடி சரியான இடியட் போடா என சொல்லிய படி சென்றாள்
அந்த சிரிப்பில் மறுப்பு இல்லை.
“நான் நினைத்தேன் அவன் என்ன உண்மையாகவே விரும்புகிறான் என்று…” என அவள் மெதுவாக மனதில் சொல்லியபடி கல்லூரியிலிருந்து வெளியே வந்து பேருந்தில் ஏறி அமர அதில் ஜன்னலோர இருக்க ஏனோ அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது..பேருந்து நகர ஆரம்பிக்க,
மாலை காற்று அவள் முகத்தில் மோத, காற்றில் கூந்தல் நெற்றியில் கோலமிட,வெளியே சாலையோர மரங்கள் வேகமாக பின்சென்றன. அவள் மனதில் இருந்த பதட்டம் மெதுவாக கரைய ஆரம்பித்தது.அந்த நேரத்தில்
“பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்ல நலிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே”என்று காதல் பாடல் ஒலித்தது.
மெதுவான இசை. அந்த பாடல் வரிகள் அவள் மனநிலைக்கு சரியாக பொருந்த,
“அவன் இப்படி லவ் சொன்னதே funnyஆ இருக்கே…”என அவள் நினைத்து சிரிக்க,
அந்த சிரிப்பு வெட்கம் கலந்தது.
அந்த சிரிப்பு சந்தோஷம் கலந்தது.
அந்த சிரிப்பு அவள் மறைக்க முயன்ற உண்மையை வெளிப்படுத்தியது.
அவள் கண்ணை மூடி காற்றை ரசித்தாள். பாடல் வரிகளோடு மனதில் அவன் முகம் தோன்றியது. அவன் தயங்கிய குரல்… “நான் உன்னை காதலிக்கிறேன்…” என்ற அந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“அடடா… ரொம்ப நல்ல ஆக்டிங் பண்ணிட்டாரே…”என
அவள் தன்னையே கிண்டல் செய்து சிரித்தாள்.
அந்த நேரம் பேருந்து ஒரு ஸ்டாப்பில் நிற்க,யாரோ அருகில் வந்து அமர்ந்ததை அவள் கவனிக்கவில்லை.
“புகைப்படம் எடுகையில் திணரும் புன்னைகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
ஹ்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே…”என்ற வரியில் மூழ்கியவள் அருகில் திடீரென “அவ்வளவு காமெடியா இருந்துதா என் லவ் பிரப்போஸ்” என்று கேட்க
அந்த குரல் அவள் காதில் விழுந்தவுடன், அவள் இதயம் ஒரு நொடி நின்றது.
மெதுவாக திரும்பி பார்த்தவள்
அவள் அருகில் தீரன்.அவன் கையில் மொபைல்,அவன் முகத்தில் ஒரு சிரிப்பு.
ஆனா அது கேலி இல்லை.
“நீ என்ன நினைச்சு சிரிக்கிற?”என
அவன் சற்று நெருங்கி கேட்டான்.
தாரணி முகம் சிவந்தது.நீங்க… prankக்காகத்தான் சொன்னீங்கல?”
அவள் துணிச்சலாக கேட்டாலும் குரலில் நடுக்கம் இருந்தது.
தீரன் புருவத்தை சற்று உயர்த்திய படி, “என்ன சொல்றீங்க தாரணி?”என கேட்க
“இல்ல இப்பவும் அதே மாதிரி பிராங் பண்ண வீடியோ எடுக்க வந்திருக்கீங்களான்னு கேட்டேன்”என அவள் சொல்ல
“Prankஆ?”அவன் மொபைலை காட்டினான்.“வீடியோ எடுக்கணும்னா கேமரா ஆன்ல இருக்கும். இல்லையா?”
அவள் பேச முடியாமல் அவனை பார்த்தாள்.
“ஓ அப்ப இப்ப ஏதும் வீடியோ எடுக்கல* என அவள் கேட்கவும்
ஹம் இல்ல என்று அவன் தலையசைத்தபடி,
“ஆமா என்னாச்சு நெக்ஸ்ட் வீக் ஊட்டி போறோமே நம்மா டிபார்ட்மெண்ட்ல எல்லாரும், நீ வரலையா” கேட்கவும்
அவள் சிரிப்பு மெதுவாக மங்கி, வரது ரொம்ப கஷ்டம் தான் என சோகமாக சொல்லவும்
“ஹம் நான் வேண அமௌன்ட் சேர்த்து பே பண்ணவா” என தீரன் கேட்க
“ ஹலோ நீங்க எதுக்கு எனக்காக பே பண்ணனும்” என அவள் மீண்டும் முறைக்கவும்
“ஹலோ ஹலோ உடனே கோவப்படாதீங்க ஜஸ்ட் கேட்டேன் அவ்வளவு தான்” என அவன் சொல்ல
பேருந்து வேகமாக ஒரு திருப்பத்தை எடுக்க,அடுத்த நொடி ஒரு சடன் பிரேக்.
உள்ளே இருந்தவர்கள் எல்லாம் சற்று முன் சாய, தாரணியும் சாய,அவள் கையை சீட்டை பிடிக்க முயன்றாலும் முடியவில்லை.
அடுத்த நொடியில் அவள் மெதுவாக தீரனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.
ஒரு நிமிடம். உலகம் முழுக்க சத்தம் இருந்தும், அவர்களுக்கு மட்டும் அமைதி.
அவள் இதயம் அவன் மார்பில் மோதுவது போல உணர,அவனின் இதயத் துடிப்பு அவள் காதில் தெளிவாக கேட்டது.
தீரன் அவள் தோள்களை மெதுவாக பிடித்தபடி,“Careful…” என்று மெதுவாக சொன்னான்
அவள் முகம் அவன் தோளருகே இருக்க,அவள் மூச்சின் சூடு அவன் கழுத்தை தொட்டது.அவள் தலைமுடி அவன் கன்னத்தை வருட,
தாரணி மெதுவாக தலையை உயர்த்த
அவள் கண்கள் அவன் கண்களோடு நேராக சந்தித்தது.அந்த பார்வையில் பயம் இல்லை.வெட்கம் மட்டும்.
“Sorry…” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
“Breakக்கு நான் blame வாங்கிக்கறேனா?”என்
அவன் சிரிக்க,
ஆனா அவன் கைகளோ இன்னும் அவள் தோள்களில் இருந்தது.அதை கவனித்தவுடன் அவள் இதயம் வேகமாய்த் துடித்தது.மெதுவாக அவள் நேராக அமர்ந்து ஜன்னல் பக்கம் திரும்பினாள்.ஆனா அவள் உதடுகளில் சிரிப்பு.“இப்போவும் prankன்னு நினைக்கிறியா?”என
அவன் மெதுவாக கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை.
ஆனா அவள் கையை சீட்டில் வைக்கும்போது, அவன் கைக்கு அருகில் வைத்தாள்.அவர்களுக்குள் ஒரு விரல் தூரம் மட்டுமே இருந்தது.பேருந்து மீண்டும் நகர,
ஆனா அந்த ஒரு சடன் பிரேக்
அவர்களின் இதயங்களை இன்னும் நெருக்கமாக இணைத்துவிட்டது.
அவள் இதயம் வேகமாக துடித்தது.
காற்று இருவருக்கும் நடுவே வீசியது. பாடல் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது.அவள் உதடுகளில் இன்னும் ஒரு சின்ன சிரிப்பு இருந்தது. இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? என தீரன் கேட்கவும்
அவள் ஒரு கணம் அவனைப் பார்த்தாள்
ஹா.. அது என தயங்க,
ஒரு விசில் சத்தம் கேட்டதும் அவள் இறங்க வேண்டிய இடம் வர,அவள் “ஓகே பாய் பார்க்கலாம்”என உருண்டை விழிகளை உருட்டியபடி அவனிடம் சொல்ல
அவன் மெதுவாக தலையசைத்தான். அவள் பேருந்தில் இருந்து இறங்கி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, அவன் கண்களோ அவளை மேய்ந்து கொண்டே இருந்தது..
“இதிகாசம் இது தானாஇவளோடு நடந்தேனா,இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா..
உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா..
உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா”என்ற பாடல் பேருந்தில் ஓடியதா இல்லை தீரன் மனதில் ஓடியதா என தெரியவில்லை
