உயிராக வந்த உறவு – அத்தியாயம் 14
மறுபக்கம் அனன்யாவின் வீடு, வெளியில் பார்த்தால் அமைதியான குடும்பம் போலத்தான் தோன்றும். காலையில் துளசி மாடத்தில் விளக்கு, சாமி அறையில் மணி ஒலி, சமையலறையில் காபி வாசனை. ஆனால் அந்த வீட்டின் சுவர்களுக்கு மட்டும் தெரியும் அனன்யாவின் அழுகை..
திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லை என்பதே மாமியாரின் தினசரி உரையாடலின் மையம்.“எங்கள் வீட்டில் இதுவரை இப்படி நடந்ததே இல்ல நான் எல்லாம் பத்தே மாசத்துல எண்ணி குழந்தை பெத்துகிட்டேன், ஆனா வந்து ரெண்டு வருஷம் ஆச்சு ஒரு விசேஷமும் இல்லை” என்று அனன்யாவின் மாமியார் சொல்லாத நாளில்லை..
இதில் அவள் போதாது என்று அக்கம் பக்கத்தில்“எல்லாம் நல்ல டாக்டர் கிட்ட காட்டினியா?”“பொண்ணுக்கு கர்ப்பப்பையில எதாவது பிரச்சனை இருக்கா?”என கேட்க
அந்த வார்த்தைகள் நேரடியாக குத்தவில்லை; ஆனால் தினமும் சொல்வதால் உள்ளத்தை சிதைத்தது.
அனன்யா முதலில் சிரித்தே தள்ளுவாள். “அம்மா, எல்லாம் நேரம் பார்த்து வரும்,” என்று மாமியாரிடம் மெதுவாகச் சொல்வாள். ஆனால் தனியாக அறைக்குள் சென்றவுடன் அவள் கண்கள் ஈரமாகிவிடும். தன் குறையா? விதியா? என்ற கேள்வி அவளை வாட்டும்.
ஒரு மாலை, சமையலறையில் நின்றபடி மாமியார் சற்றே கடுமையாகவே
“விக்ரம்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி இருந்தா இப்போ வீட்டுல குழந்தை சத்தம் கேட்கும்.”என சொல்ல
அந்த வாக்கியம் அனன்யாவை உள்ளுக்குள் உடைத்தது. அவள் கையில் இருந்த ஸ்டீல் டம்ளர் சற்று நடுங்க,ஆனால் அவள் பதில் சொல்லவில்லை.
அந்த நேரத்தில் விக்ரம் உள்ளே வர,
“அம்மா!”இப்படி பேசாதீங்க. இது எங்களுடைய விஷயம். அனன்யாவை இப்படி பிளேம் பண்ணாதீங்க.”என சொல்ல
“ஆமாப்பா இந்த பொண்டாட்டிக்கு இவ்வளவு சப்போர்ட் அவளை ஏதாச்சும் சொன்னா உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடுதியே,நான் உண்மைய தான் சொல்றேன், உன் பொண்டாட்டி குழந்தை பெற்றுக் கொடுக்க முடியலனா இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என அம்மா சொல்ல
விக்ரம் அமைதியாக“எங்களுக்கு குழந்தை வரணும்னு ஆசை இல்லன்னு நினைக்கிறீங்களா? ஆனா அது அவளோட தப்புன்னு யாரும் சொல்லக்கூடாது. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு குறையும் சொல்ல முடியாது.”என சொல்லி அனன்யாவை பார்த்தான்.
அவள் கண்களில் கண்ணீர் வழிய
“நாம் இருவரும் சேர்ந்து doctor consult பண்ணிக்கலாம். Whatever it is, we will face it together.”என சொல்ல
அந்த ஒரு வார்த்தை அனன்யாவுக்கு ஆயிரம் ஆறுதலாய் இருந்தது.
அந்த இரவு வீடு முழுக்க அமைதியாக இருந்தது. சமையலறை விளக்குகள் அணைந்து, ஹாலில் தொலைக்காட்சி சத்தம் கூட இல்லை. அனன்யா அறைக்குள் வந்து படுக்கையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்தாள். முகத்தில் சோர்வு. கண்களில் அடக்கி வைத்த கண்ணீர்.
விக்ரம் கதவை மெதுவாக மூடி உள்ளே வந்தான். அவளை பார்த்தவுடன் அவன் முகம் மென்மையாகி“அனு…” என்று அழைத்தான்.
அவள் தலை தூக்காமல்,“நான் சரிதான்…” என்றாள்.ஆனா அந்த குரல் சரியில்லை.அவன் அவள் அருகில் அமர்ந்தான்.“நீ சிரிக்கும் போது தான் இந்த வீடு வீடா இருக்கும். இப்படி அமைதியா இருந்தா எனக்கு பிடிக்காது.”
அவள் மெதுவாக அவனை பார்த்தாள்.
“எல்லாருக்கும் ஒரு expectation இருக்கும் இல்ல… நான் மட்டும் fulfill பண்ண முடியல போல இருக்குது…”அந்த ஒரு வாக்கியத்தில் அவள் மனக்காயம் முழுக்க இருந்தது.
விக்ரம் உடனே அவள் கையை பிடித்து
“Expectationன்னு யாரு fix பண்ணுறது இல்ல?”“நம்ம வாழ்க்கை நம்மது. மற்றவர்களோடது இல்ல.”புரிஞ்சுக்கோ என சொல்லி அவன் சற்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.
“குழந்தை வரணும்னு ஆசை எனக்கும் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி என்ன இருக்குன்னு தெரியுமா டி? நீ..”என சொல்ல
அவள் கண்கள் கலங்க,“நான் உன்னை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன். ஒரு குழந்தைக்காக இல்ல.
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு கற்பனை கூட பண்ண முடியாது.”என சொல்லி
அவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.
அவள் அமைதியாக இருக்க விக்ரம் அவள் கையை பிடித்து “நீ தனியா இல்ல,உனக்கு நான் இருக்கேன்,” என்றான் மெதுவாக.
“எனக்கு குழந்தை வரணும் என்ற ஆசை இருக்கலாம். ஆனா அதைவிட நீ எனக்கு முக்கியம்.”அந்த வார்த்தைகள் அவள் இதயத்தில் ஒரு பாதுகாப்பு சுவராக நின்றது.
வீட்டில் இன்னும் சில நேரம் குற்றச்சாட்டு வார்த்தைகள் வரலாம்.ஆனால் நீ உறுதியா இருக்கணும் உன் மனசுல உன்ன மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ, அனன்யா தனியாக இல்லை.அவள் அருகில் இந்த விக்ரம் இருக்காங்க என்று சொல்லியபடி அவளை இறுக்கமாக அணைத்து அவள் நெற்றியில் இருந்து அவள் இதழோடு தன் இதழ்களை பதிக்க
சில காயங்கள் வார்த்தைகளால் வரலாம்,ஆனா சில காதல்கள் அந்த காயங்களை மெதுவாக ஆற்றிவிடும் என அவள் புரிந்து கொண்டாள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவளின் இதழ்களை சுவைத்த பின், “Doctor consult பண்ணலாம். Treatment எடுக்கலாம். வேண்டாம்னா adopt கூட பண்ணலாம். ஆனா ஒரு விஷயம் இந்த வீட்டுல உன்னை யாரும் குறை சொல்லக் கூடாது. யாராவது சொன்னா,உனக்கு நான் இருக்க” என்று சொல்லி
அனன்யா தலையை அவன் தோளில் சாய்த்தாள்.
அவன் அவள் கண்ணீரை துடைத்தபடி,
“இனிமேல இப்படி தனியா கஷ்டப்படாதே. Whatever it is… we will face it together. நீ என் மனைவி மட்டும் இல்ல… என் வாழ்க்கை.”அந்த வார்த்தைகள் அவள் உள்ளத்தில் நிம்மதியை பரப்பியது. வெளியுலக வார்த்தைகள் காயப்படுத்தலாம்; ஆனால் அந்த அறைக்குள் அவளுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது.
அந்த இரவு, அனன்யா அழுதுகொண்டே தூங்கவில்லை.அவள் கண்களை மூட,
ஏனெனில் அவளுக்கு தெரிந்தது
குழந்தை வருவது ஒரு ஆசை.
ஆனால் அவள் வாழ்க்கையில் கிடைத்த காதல்…அது ஒரு வரம் என்று..
அடுத்த நாள் காலை வழக்கம் போல் விடிய, விக்ரம் அணுவுடன் மருத்துவமனை கிளம்ப ரெடி ஆகி கொண்டு இருந்தான்.. இரண்டு பேரும் செல்லும் போது விக்ரமின் அம்மா அவனைப் பார்த்துக் கொண்டு இருக்க, அவன் அப்பா,”தயவு செய்து கிளம்பும் போது எதுவும் சொல்லிறாத” என அவர் தன் மனைவியை பார்த்து சொல்ல
“நான் என்ன சொல்ல போற ஹம்”.. என்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்
மருத்துவமனை வழித்தடம் அந்த காலை அசாதாரணமாக அமைதியாக இருந்தது. சுவற்றில் தொங்கியிருந்த குழந்தை புகைப்படங்கள் அனன்யாவின் மனதை மெதுவாக நெருடின. அவள் கை விக்ரமின் கையை இறுக்கமாக பிடிக்க, “எதுவாக இருந்தாலும் அமைதியா இரு,” என்று அவன் மெதுவாக சொல்லவும்
அவள் தலையசைத்தாள். இதுவரை எல்லா குற்றச்சாட்டும் அவள் மீது விழுந்திருந்தது. மாமியார் தினமும் பேசும் அந்த வார்த்தைகள் “பெண்ணுக்கு பிரச்சனை இருக்குமோ?”இன்று அது அனைத்திற்கும் ஒரு பதில் கிடைக்கப் போகிறது.
டாக்டர் முன் அவர்கள் அமர, ரிப்போர்ட் எல்லாம் மேசையில் மேல இருக்க, சில நொடிகள் அமைதியாக இருக்க,அந்த அமைதி தான் இருவரின் இதயத் துடிப்பையும் அதிகப்படுத்தியது.
“Mrs. அனன்யா ரிப்போர்ட் எல்லாம் நார்மல்” என்றார் மருத்துவர் தெளிவாக.
அனன்யா ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தாள்.
“நார்மல் ஆ…?”
“ஆம். எந்தப் பிரச்சனையும் இல்லை.”
அந்த வார்த்தைகள் அவள் மனதில் ஒரு இலகுவை கொடுத்தாலும், அடுத்த நொடி அவள் பார்வை விக்ரமிடம் திரும்பியது.
டாக்டர் மெதுவாக ரிப்போர்ட் ஒன்றை
திருப்பி, “மிஸ்டர் விக்ரம்… உங்கள் டெஸ்ட்ல சின்ன இசு இருக்கு. அது என தயங்க
விக்ரம் ஒரு நொடி அமைதியாக இருந்தான்.அவனுடைய முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை.ஆனா உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல இருக்க,அனன்யா அவனை பார்த்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் வடிய,
“Doctor… treatment இருக்கா?” என்று விக்ரம் தன்னைக் கட்டுப்படுத்தி கேட்டான்.
“இருக்கு. Medication, procedure options இருக்கு. Panic ஆக வேண்டாம். இது common. Couple support முக்கியம்.” என சொல்ல
“விக்ரம்…” என்று அவள் குரல் நடுங்க,
“இது எல்லாம்… நான் காரணம் இல்லன்னு…”அவள் சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
விக்ரம் உடனே அவள் கைகளை பிடித்து
“உஷ்… என்னடா இது?”யாரு காரணம் என்று பார்க்குறதுக்கு நாம கல்யாணம் பண்ணல.”என சொல்லிஅவன் சிரிக்க முயன்றான்.
“நேத்து வரை எல்லாரும் உன்னை குறை சொன்னாங்க. இப்போ ரிப்போர்ட் என்ன சொல்லுது?நாளைக்கு இதை வைத்து என்னை குறை சொன்னா… என்று அவன் சொல்ல
அவள் தலை அசைத்தபடி,”இல்ல உங்கள ஏன் குறை சொல்லக்கூடாது வாங்க இங்க இருந்து போலாம்” என்று அவன் கையை பிடித்து வேகமாக வெளியே இழுத்துச் செல்ல
“அனு… குழந்தை வராம இருக்கலாம். லேட்டா வரலாம். ட்ரீட்மென்ட் பண்ணலாம்.ஆனா ஒரு விஷயம் மட்டும் மாறாது,நீ என் மனைவி. அதுதான் என் பெரிய வரம்” என சொல்ல
அவள் கண்ணீரோடு சிரித்தபடி உங்க
“அம்மாவுக்கு எப்படி சொல்வது?” என்றாள் மெதுவாக.
விக்ரம் ஒரு நிமிடம் யோசித்தான்.
“ரிப்போர்ட் நான் ஹேண்டில் பண்ணிக்கறேன். உன்னைக் குறை சொல்ல யாருக்கும் உரிமையும் இல்ல. இது நம்ம இருவரோட விஷயம்.”
அவன் அவள் தலையை மெதுவாக வருட
“நீ தனியா சுமந்த காயம் இப்போ முடிஞ்சு. இனிமேல் எதுவாக இருந்தாலும் நாம சேர்ந்து சுமப்போம்.”என சொன்னதும்
அந்த நிமிடம் அனன்யாவுக்கு புரிந்தது,
காதல் என்பது குழந்தை பெற்றால் மட்டுமே முழுமை பெறுவது அல்ல.
ஒருவர் மற்றவருக்காக நிற்கும் அந்த உறுதி தான் உண்மையான முழுமை.
வீட்டில் இன்னும் சில புயல்கள் வரலாம்.
மாமியாரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது தெரியாது.ஆனால் இப்போது ஒரு உண்மை வெளிச்சம் பார்த்துவிட்டது.அந்த அறிக்கை அவர்களை பிரிக்கவில்லை.
அதை விட நெருக்கமாக இணைத்தது.
