உயிராக வந்த உறவு – அத்தியாயம் 19

அடுத்த நாள் காலை நகரம் மெதுவாக வேலைக்கான பரபரப்பில் விழித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் தாரணி தன் மனதுடன் போராடிக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தாள். முகத்தில் அமைதி இருந்தாலும் உள்ளே ஒரு தெரியாத பதற்றம் ஓடிக் கொண்டிருந்தது.அவள் வழக்கம் போல் ரிசப்ஷனை கடந்து தன் பிரிவிற்கு நடந்தாள். அலுவலகம் ஏற்கனவே வேலை சத்தத்தால் நிரம்பியிருந்தது. கீபோர்டு ஒலிகள், தொலைபேசி அழைப்புகள், ஊழியர்கள் பேசும் குரல்கள்.ஆனால் அந்த எல்லா சத்தங்களுக்குள்ளும் தாரணியின் மனம் மட்டும் ஒரே ஒரு விஷயத்தை தேடிக் கொண்டிருந்தது.தீரன்…


அவள் தெரியாமல் அவன் அறை இருக்கும் திசையை பார்த்தாள்.

அந்த கண்ணாடி கதவு இன்று மூடியிருந்தது.சாதாரணமாக அந்த நேரத்தில் அவன் ஏற்கனவே அலுவலகத்தில் இருப்பான். ஆனால் இன்று அந்த அறை வெறுமையாக இருந்தது.தாரணியின் புருவம் சற்றே சுருங்கியது.“இன்னும் வரலையா…?” என்று அவள் மனதில் நினைத்தாள்.

அவள் தன் மேசையில் அமர்ந்தாலும் மனம் வேலைக்கு செல்லவில்லை. கண்கள் தானாகவே மீண்டும் மீண்டும் அந்த அறையை நோக்கி திரும்பின.


சில நிமிடங்கள் கழித்து அவள் எழுந்து அருகில் இருந்த ஒருவரிடம் கேட்டாள்.

“சார் இன்னும் வரலையா?”என கேட்க


அவர் தலை தூக்கி பார்த்தார்.

“யாரு… தீரன் சார் ஆ?”

“ஆமாம்.”

“இல்ல… இன்னைக்கு வர மாட்டாங்க போல.”அந்த பதில் கேட்டவுடன் தாரணியின் மனம் ஒரு நொடி தள்ளாடியது.


“ஏன்?” என்று அவள் தெரியாமல் கேட்டாள்.


“அது தெரியல… காலைலிருந்து வரல.”

அவள் மெதுவாக தலை அசைத்து மீண்டும் தன் இடத்திற்கு நடந்தாள்.

ஆனால் அந்த பதில் அவளின் மனதில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றது.

“வர மாட்டாரா…?”அவள் தன்னைத்தானே கண்டித்துக் கொண்டாள்.


“அவனைப் பற்றி யோசிக்கிறதே ஏன்…?

என்ன சம்பந்தம் இப்போ…?”

ஆனால் மனம் அதை கேட்கவில்லை.

அவள் வேலை செய்ய முயன்றாலும் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது.

ஒரு நேரத்தில் அவள் தன்னையும் மறந்து மீண்டும் அவன் அறை கதவை பார்த்தாள்.அந்த வெறுமையான அறை அவளுக்கு ஒரு விசித்திரமான உணர்ச்சியை கொடுத்தது.

கோபமா…?கவலையா…?

அல்லது இன்னும் உள்ளே மறைந்திருக்கும் காதலா?


அவள் தன்னுடைய கண்களை தட்டிக் கொண்டாள்.”போதும் தாரணி… நீ இங்கே வேலைக்காக தான் வந்திருக்க.”

அவள் மீண்டும் கணினி திரையை பார்த்தாள்.


ஆனால் அந்த நேரத்தில் அவள் மனதில் ஓடியது ஒரு கேள்வி.

“தீரன் எங்கே போயிருக்கான்?”

அவளுக்கு தெரியாமல்…

அந்த நேரத்தில் தீரன் ஒரு மருத்துவமனை அறையில் நின்று கொண்டிருந்தான்.அவன் பார்வை அர்ச்சனாவை நோக்கி இருந்தது.

அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒரு தெரியாத நூல் இன்னும் கிழியாமல் இணைத்துக் கொண்டிருந்தது.அந்த நூல் எப்போது மீண்டும் இழுக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது.


அலுவலகத்தில் அந்த நாள் முழுவதும் தாரணியின் மனம் அமைதியாக இல்லை. கணினி திரையை பார்த்துக்கொண்டே இருந்தாலும் அவள் விரல்கள் கீபோர்டை சரியாக தொடவே இல்லை. மனம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டு கொண்டிருந்தது.

“தீரன் எங்கே போயிருக்கான்…?”

அவள் தன்னைத்தானே கண்டித்துக் கொண்டாள்.“எனக்கு என்ன சம்பந்தம்…? அவன் வந்த வரட்டும்…”என்று மனதில் சொல்லிக்கொண்டாலும் அந்த எண்ணம் அவளை விட்டுவிடவில்லை.


மதியம் சுமார் ஒரு மணிக்கு அலுவலகத்தில் இருந்த சில ஊழியர்கள் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். தாரணி தண்ணீர் எடுக்க எழுந்தபோது அவர்களது பேச்சு அவள் காதில் விழுந்தது.


“கேள்விப்பட்டீங்களா…? நேற்று இரவு பெரிய விபத்து நடந்திருக்காம்.”

“யாருக்கு?”


அந்த பெரிய தொழிலதிபர் அருணாசலம் சார் மகள்… அர்ச்சனா.”

அந்த பெயர் தாரணியின் காதில் விழுந்த நொடியில் அவள் கால்கள் அங்கேயே நின்றுவிட்டது.

அர்ச்சனாவா…அவள் மெதுவாக திரும்பி அவர்களை பார்த்தாள்.

“அவங்க தான் மருத்துவமனைல இருக்காங்க… நம்ம தீரன் சார் கூட அங்கத்தான் இருக்காராம், கட்டிக்க போற பொண்ணுக்கு சார் தான துணையாக இருக்கணும்” என சொல்ல


அந்த ஒரு வார்த்தை தாரணியின் இதயத்தில் கூர்மையான கத்தி போல குத்தியது. “தீரன்… மருத்துவமனையிலா…?

அர்ச்சனாவுடன்…?”

அவள் முகத்தில் அந்த அதிர்ச்சி வெளியில் தெரியாமல் இருக்க அவள் முயன்றாள்.


நேத்து தான என்ன பார்க்க வந்தாள் இப்போ எந்த  மருத்துவமனைல இருக்க தெரியலையே என்று யோசித்தபடி அங்கு இருக்கும் நபரிடம் சாதாரணமாக கேட்டாள்.


“City Care Hospitalல.”அவர்கள் சொல்லிவிட்டு மீண்டும் தங்கள் வேலையில் மூழ்கினர்.ஆனால் தாரணியின் உலகம் அந்த நொடியில் மாறிவிட்டது.அவள் கையில் இருந்த கண்ணாடி கப் சற்று நடுங்கியது.

அவள் உடனே அதை மேசையில் வைத்து மெதுவாக தன் இடத்திற்கு நடந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் கணினி திரையை பார்த்தாள். ஆனால் அந்த எழுத்துகள் எதுவும் அவள் கண்களுக்கு படவில்லை.

மனதில் ஓடியது ஒரே ஒரு காட்சி.

தீரன்…அர்ச்சனா அருகில் நின்று கொண்டிருப்பான்…அவள் தன்னைத்தானே கோபமாக கேட்டாள்.

“இதெல்லாம் எனக்கு என்ன…?”

ஆனால் அந்த கேள்விக்கு அவளுக்கே பதில் இல்லை.அவள் இதயம் மெதுவாக வலிக்க ஆரம்பித்தது.


மூன்று வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் இருந்து விலகி சென்றது அவளே.ஆனால் அவன் வேறொருவருடன் இருக்கிறான் என்று நினைத்தாலே ஏன் இவ்வளவு வலி?

அவள் கண்களில் தெரியாமல் கண்ணீர் தேங்கியது.


அவள் உடனே முகத்தை திருப்பிக் கொண்டாள்.“இது சரி இல்லை தாரணி… நீ இப்படி நினைக்க கூடாது…”

அவள் தன் மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.ஆனால் அந்த நேரத்தில் அவளது மொபைல் மெதுவாக ஒலித்தது.

அவள் எடுத்துப் பார்த்தாள்.

அறிமுகமில்லாத ஒரு எண்.

அவள் ஒரு நொடி தயங்கினாள்.

பிறகு மெதுவாக போனை எடுத்து அட்டென்ட் செய்தாள்.

“ஹலோ…”மறுபக்கம் சில நொடிகள் அமைதி.பிறகு ஒரு குரல்.

அந்த குரல் கேட்ட நொடியில் தாரணியின் உடம்பே உறைந்து போனது.

“தாரணி… நான் அர்ச்சனா பேசுறேன்.”

அவள் இதயம் ஒரே தடவை பலமாக துடித்தது.மறுபக்கம் அர்ச்சனாவின் குரல் மெதுவாக சிரித்தது.


“நான் மருத்துவமனைல இருக்கேன்… தீரன் என் பக்கத்துல இருக்கான்.”என சொல்ல


அந்த வார்த்தைகள் தாரணியின் மனதை முழுவதும் கிழித்தது.ஆனால் அது ஆரம்பம் மட்டும் தான்…

Lஅடுத்ததாக அர்ச்சனா சொல்லப் போகும் வார்த்தைகள் தாரணியின் வாழ்க்கையை மீண்டும் அதிரவைக்கப் போகிறது


அர்ச்சனாவின் குரல் போனின் மறுபுறம் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்த குரலில் ஒரு விதமான ஏளனமும் கலந்து இருந்தது.


உடனே தாரணி “அதுக்கு என்ன இப்போ?” என்று சுருக்கமாக கேட்டாள்.


அர்ச்சனா மெதுவாக சிரித்தபடி,

“எதுவும் இல்ல… உனக்கு தெரியணும்னு தான் சொன்னேன்.”என சொல்ல


பிறகு அவள் மீண்டும் பேசினாள்.

“நேத்து ஆக்சிடென்ட்ஆனப்போ… முதல் போன் பண்ணியது யாருக்கு தெரியுமா?”

தாரணி எதுவும் பேசவில்லை.

“தீரனுக்கு தான்…”

அந்த வார்த்தைகள் தாரணியின் மனதை இன்னும் வலியடைய செய்தது.

அர்ச்சனா தொடர்ந்து பேசினாள்.

“நான் மருத்துவமனைl வந்தப்போ இருந்துbஅவன் இங்க இருந்துகிட்டே இருக்கான். எனக்காக, என் பக்கத்துல.”

அந்த வார்த்தைகளில் ஒரு திட்டமிட்ட கூர்மை இருந்தது.


தாரணி கையை இறுக்கமாக பிடித்தாள்.

அவள் மனதில் பல நினைவுகள் ஓடின.

ஒரு காலத்தில் அவளுக்காக அப்படி ஓடி வந்தவன் தான் இப்போது இப்படி இருக்கிறான்.


அவள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அர்ச்சனா… இதெல்லாம் சொல்ல எனக்கு போன் பண்ணினியா?” என்று தாரணி கேட்க


அர்ச்சனா சிரித்து கொண்டே அப்படி தான் நினைச்சுக்கோ என சொல்லி, ஹா அப்புறம்  இன்னொரு விஷயமும் சொல்லணும்.


தாரணி எதுவும் பேசவில்லை.

“தீரன் இப்போ என் வாழ்க்கையில்தான் இருக்கான். மூணு வருடத்துக்கு முன்னாடியே நீ அவன் வாழ்க்கையிலிருந்து போயிட்ட.”

அந்த வார்த்தைகள் தாரணியின் இதயத்தை கிழித்தது.ஆனால் அவள் குரலில் அது தெரியவில்லை.


“அதெல்லாம் எனக்கு தெரியும்,” என்றாள் அமைதியாக.அந்த பதில் அர்ச்சனாவுக்கு எதிர்பாராத ஒன்று.


அவள் குரல் சற்று கடினமானது.

“அப்படின்னா நல்லா கேள் தாரணி… மீண்டும் தீரன் வாழ்க்கையில் வர நினைக்காதே.”அவன் இப்போ என்கிட்ட தான் இருக்கான்.என் கையை பிடிச்சுக்கிட்டு தான் இருக்கான்.”என சொல்ல


அந்த வார்த்தைகள் ஒரு விஷம் போல தாரணியின் மனத்தில் விழுந்தது.

ஆனால் தாரணி திடீரென சிரித்தாள்.

அர்ச்சனா சற்று குழம்பினாள்.

“எதுக்கு சிரிக்கிறே?”என கேட்க


தாரணி மெதுவாக சொன்னாள்.

“அர்ச்சனா… நான் யாருடைய வாழ்க்கையிலும் திரும்பி போகணும்னு நினைக்கல.தீரன் உன்னோட இருக்கான்னா… அது உன் வாழ்க்கை.”

அவள் குரல் அமைதியாக இருந்தாலும் உள்ளே கண்ணீர் வெடிக்க தயாராக இருந்தது.


“எனக்கு அவனோட எந்த சம்பந்தமும் இல்ல.”அந்த வார்த்தைகள் சொல்லி முடித்தவுடன் தாரணி போனை துண்டித்தாள்.போன் கையில் இருந்தபடியே அவள் சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் மெதுவாக வழிந்தது.மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும்.“உண்மையிலேயே…

எனக்கு தீரனோட எந்த சம்பந்தமும் இல்லையா?”


அந்த நேரத்தில்மருத்துவமனை அறையில் நின்றிருந்த தீரன் போனை எடுத்தான்.அவன் கண்களில் கோபம் எரிந்தது.ஏனெனில்,அவன் இப்போது தான் அறிந்தான்.அர்ச்சனா,

தாரணிக்கு போன் பண்ணியிருந்ததை.

அவன் மெதுவாக கேட்டான்.

“நீ ஏன் தாரணிக்கு போன் பண்ணின?”

அந்த கேள்வி கேட்ட நொடியில் அர்ச்சனா சிரித்தாள்.அந்த சிரிப்பின் பின்னால் இருந்த உண்மையை தீரன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.


ஆனால் அந்த ஒரு போன் கால்

மூன்று பேரின் வாழ்க்கையையும் மீண்டும் தீயில் தள்ளப்போகிறது.

அர்ச்சனா போனை வைத்து மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள்.அந்த சிரிப்பில் ஒரு விதமான வெற்றி உணர்வு இருந்தது.அவள் படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தபோது கதவு திறந்து தீரன் உள்ளே வந்தான்.அவன் முகத்தில் அமைதி இல்லை.கண்களில் ஒரு  கோபம்.அவன் நேராக அவள் அருகே வந்து நின்றான்.“நீ தாரணிக்கு போன் பண்ணினியா?” என்று அவன் மெதுவாக கேட்டான்.


அந்த குரலில் இருந்த கடுமையை அர்ச்சனா உடனே உணர்ந்தாள்.

ஆனால் அவள் எதுவும் நடக்காதது போல சிரித்தாள்.

“ஆமாம்… பண்ணேன்.” என சொல்ல


தீரன் புருவத்தை சுருக்கினான்.

“எதுக்காக?”

அர்ச்சனா அவனை நேராக பார்த்தாள்.

“அதுல என்ன தப்பு?”

“என்னோட விபத்து விஷயம் அவளுக்கும் தெரியணும்னு தான்.”


தீரன் முகம் கடினமானது.

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்.”

அந்த வார்த்தைகள் அர்ச்சனாவுக்கு பிடிக்கவில்லை.அவள் சற்று கோபமாக எழுந்து அமர்ந்தாள்.

“ஏன் தேவையில்லாதது?”

“அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் இல்லையா இப்போ?”என கேட்க

அந்த கேள்வி கேட்ட நொடியில் தீரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.


அவன் மனதில் தாரணியின் முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.

ஆனால் உடனே அவன் அந்த நினைவைக் தள்ளி வைத்தான்.

“நான் சொல்றதை கேள் அர்ச்சனா,” என்றான்.


“தாரணியையும்… இந்த விஷயத்தையும் இனிமேல் ஒன்றாக சேர்க்காதே.”

அர்ச்சனா அவனை ஆழமாக பார்த்தாள்.

“நீ இன்னும் அவளை பற்றி கவலைப்படுறியா?”என கேட்க


அந்த கேள்வி நேராக தீரனின் மனதை தட்டியது.அவன் உடனே பதில் சொல்லவில்லை.அந்த அமைதி அர்ச்சனாவுக்கு போதுமான பதிலாக இருந்தது.அவள் மெதுவாக

“நான் தெரிஞ்சுக்கிட்டேன் தீரன்…”

“நீ இன்னும் அவளை மறக்கல.”

அந்த வார்த்தைகள் தீரனின் கோபத்தை மேலும் தூண்டியது.


“Enough, Archana,” என்று அவன் கடுமையாக சொன்னான்.

அவன் திரும்பி ஜன்னலருகே நின்றான்.

அவன் மனதில் இப்போது இரண்டு விஷயங்கள் மட்டும்.

தாரணி…

அர்ச்சனா…

அந்த நேரத்தில் அர்ச்சனா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனதில் ஒரு தீர்மானம்.

“தீரன் என்னை விட்டுப் போகக்கூடாது.”

அவள் மெதுவாக சொன்னாள்.

“நான் இந்த accidentல almost உயிரை இழக்கப்போனேன்.”என சொல்லும் போதே அந்த குரல் மென்மையானது.

“அந்த நேரத்தில் எனக்கு ஒரே ஒரு பேர் தான் நினைவுக்கு வந்தான்…”

அவள் அவனை பார்த்தாள்.

“நீ.”தீரன் திரும்பி அவளை பார்த்தான்.


அர்ச்சனாவின் கண்களில் கண்ணீர் இருந்தது.நான் உன்னை இழக்க முடியாது தீரன்…என்று சொல்ல

அந்த வார்த்தைகள் அறையில் ஒரு அமைதியை உருவாக்கியது.

ஆனால்,அந்த அமைதியின் பின்னால் ஒரு உண்மை மறைந்திருந்தது.


அர்ச்சனா நினைத்தது ஒன்று.

தீரனை எப்படியாவது தன் வாழ்க்கையில் கட்டிப் போட வேண்டும்.


மறுபக்கம்…

அந்த நேரத்தில் அலுவலகத்தில் அமர்ந்திருந்த தாரணி கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனதில் ஒரு முடிவு உருவாகிக் கொண்டிருந்தது.

“இங்க வேலை பார்க்கிறதுதான் தவறு…”

“நான் மீண்டும் தீரன் வாழ்க்கைக்கு அருகில் வரக்கூடாது.”

அந்த முடிவு…அடுத்த சில நாட்களில்

மூன்று பேரின் வாழ்க்கையையும் பெரிய திருப்பத்திற்கு கொண்டு செல்லப் போகிறது.



 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
780 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page